Saturday, August 1, 2026

    இதயமே இதயமே

    இதயம் – 14 நாட்கள் நகரத் தொடங்க, பிரீத்தியும் ஹர்ஷாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். பிரீத்தியும் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்க வீடே கலகலத்தது. சஞ்சய் இருக்கும்போது மட்டும் அமைதியாய் இருக்கும். இளம் மாலை நேரத்தில் சிலுசிலுவென்று வீசிய காற்று இதமாய் தீண்டிச் செல்ல, தோட்டத்தில் நாற்காலி போட்டு அங்கே அமர்ந்திருந்தார் ரேணுகா. அவருக்கு அருகில்...
    “அது சரி... அவன் ஒரு முரட்டு முசுடன்னு பார்த்ததுமே புரிஞ்சுகிட்டியா நீ... என் மருமக கெட்டிக்காரிதான்...” என்று அவளது தலையில் கை வைத்து தடவினார் ரேணுகா. “உங்களை எல்லாம் பார்க்கும்போது, பேசி சிரிக்கும்போது நான் எவ்ளோ மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது அத்தை... என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்... அம்மா இல்லாத எனக்கு...
    இதயம் – 13 காலையில் நேரத்திலேயே பூஜையை முடித்துக் கொண்டு பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் ரேணுகா. “ராணி எனக்கு காபி எடுத்திட்டு வா...” “இதோ கொண்டு வரேன் மா...” என்ற ராணி சர்க்கரை இல்லாமல் காபி கலந்து அவரது அறைக்குக் கொண்டு போய் கொடுத்தார். “சஞ்சு ஜாகிங் முடிச்சு வந்துட்டானா...” “இன்னும் இல்லைம்மா, இப்ப வர்ற நேரம் தான்...” “ப்ரீத்தி எழுந்துட்டாளா......
    அழகான ஞாயிற்றுக் கிழமை மாலை. சூரியனின் மாலை வெயிலில் மெரீனா பீச்சில் அங்கங்கு சிலர் நடமாடிக் கொண்டிருக்க, நிழல் தேடி ஒதுங்கி இருந்தது பல காதல் ஜோடிகள். மிச்சம் இருந்த வெயிலும் மறைந்து விட்டால் அங்கு முழுவதும் பல தரப்பட்ட மக்களால் வண்ண மயமாய் காட்சியளிக்கத் தொடங்கிவிடும். சற்று தள்ளி ஓரமாக கடலைப் பார்த்து அமர்ந்திருந்தனர் விக்ரமும்,...
    இதயம் – 12 “டேய் சஞ்சு... காய்ச்சல் கொஞ்சம் விடறதுக்குள்ளே அந்த லாப்டாப்பை எடுத்துட்டு உக்கார்ந்துட்டியா, கண்ணெல்லாம் எரியப் போகுது... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன் டா...” சலிப்புடன் கூறினார் ரேணுகா. நன்றாக உறங்கி எழுந்தவனுக்கு காய்ச்சல் குறைந்திருந்தது. இரண்டு இட்லியை உள்ளே தள்ளிவிட்டு லாப்டாப்பை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான் சஞ்சய். அவனது அலைபேசியில் மாறி...
    “கொஞ்சம் முறுக்கும் அதிரசமும் வச்சிருக்கேன்... தீபாவுக்கும் ஆண்ட்டிக்கும் கொடு...” என்றவள், அவளது பாகில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். “நேரத்துக்கு சாப்பிடுடி... உடம்பைப் பார்த்துக்கோ, நல்லபடியா எக்சாமை முடிச்சிட்டு வா... எப்பவும் ஷாம்பூ போட்டுக் குளிக்காதே... முடியெல்லாம் கொட்டிடும், கொஞ்சம் எண்ணை காய்ச்சினது வச்சிருக்கேன்... தினம் தலைக்கு வச்சு குளி, குளிர்மையா இருக்கும்...” என்றார் உமா. “ம்ம்... நான்...
    இதயம் – 11 “விக்ரம்... இன்னைக்கு நீயும் என்னோட ஆபீஸ் வர்றே, ரெடியாகிடு...” காலையில் ஜாகிங் முடிந்து திரும்பி வந்த சஞ்சய், அப்போது தான் எழுந்து கொட்டாவியுடன் வெளியே வந்த தம்பியிடம் கூறி விட்டு மாடியேறினான். “ஆபீஸ்க்கா... ரெண்டு நாள் ஜாலியா வீட்டுல இருக்கலாம்னு நினைச்சா, இந்த அண்ணன் ஆபீஸ்ல கொண்டு போயி உக்கார வச்சிருவார் போலருக்கே...”...
    “ராணிம்மா கடைக்குப் போயிட்டு இன்னும் வரலை... அதான் நானே காப்பி போட்டுக் கொடுத்திட்டுக் கிளம்பலாம்னு...” தயங்கிக் கொண்டே சஞ்சயிடம் காப்பியை நீட்டினாள். அன்னை சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு அவன் கேட்காமலே அவள் காப்பி கொண்டு தரவும் அவள் நீட்டிய காப்பியை தயக்கத்துடனே வாங்கிக் கொண்டான் அவன். அதைக் கண்டதும் ரேணுகா, விக்கி இருவரும் ஒருவர் முகத்தை...
    இதயம் – 10 வர்ஷாவை அவளது வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி இறக்கி விட்டுவிட்டு அவனது வீட்டை நோக்கிக் காரை விட்டான் விக்கி. மனம் முழுதும் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. “ஓ... பட்டர்பிளை... பட்டர்பிளை உதடுகள் பாடிக் கொண்டே இருந்தன. அப்போது ராஜீவ் அவனை அலைபேசியில் அழைக்க, வண்டியை ஓரமாய் நிறுத்தி, எடுத்தவன் உற்சாகமாய் ஹலோவினான். “என்னடா மச்சி... பட்டர்பிளை...
    இதயம் – 9 காலையில் கல்யாண மண்டபமே பரபரப்பாய் இருக்க, விக்கியும், ராஜீவும் மாப்பிள்ளையைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர். “புது மாப்பிள்ளைக்கு ராபாப்பரி... நல்ல யோகமடா... ராபாப்பரி... அந்த மணமகள் தான்... ராபாப்பரி... வந்த நேரமடா... ராபாப்பரி...” பாடிக் கொண்டே சதீஷின் பட்டு வேஷ்டியை அவனுக்கு கட்டிவிடுவதற்காய் கையில் எடுத்தான் ராஜீவ். சதீஷ் அவன் பாடுவதை தலை விதியே என்று கேட்டுக் கொண்டு நின்றிருந்தான். “ஆஹா......
    “ஏய்... இது ஒரு நல்ல சந்தர்ப்பம்... உன் மனசுல உள்ளதை விக்கி கிட்டே சொல்லிடு... ரெண்டு பெரும் மனசு விட்டுப் பேசிடுங்க...” “ம்ம்... சரிடி, நீயும் பத்திரமாப் போ... அங்கே ரீச் ஆனதும் எனக்குக் கால் பண்ணு...” “ம்ம்... நீயும் வீட்டுக்குப் போனதும் எனக்குக் கால் பண்ணு...” என்றவள் ட்ரெயின் வரும் ஹாரன் கேட்கவே திரும்பினாள். மதிய நேரமாதலால்...
    “என்னது... அவர் உங்களுக்கு பிரண்டா, வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ்...” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் ஷீலா. “அட... நம்ம சென்னை மச்சான்ஸ் கல்யாணத்துக்கு இங்கேயே வந்துட்டாங்களா... சூப்பர், அப்ப மண்டபமே களை கட்டப் போகுது...” என்று சிரித்தாள். “ஆமா... நீங்க வர்ஷூ கூட வரலியா, முன்னாடியே வந்துட்டிங்களா...” “நான், கவி ஊருக்குக் கிளம்பும் போதே...
    இதயம் – 8 சஞ்சயுடன் தனியாக காரில் செல்வதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் ரேணுகா சொன்னதற்கு ஒத்துக் கொண்டாள் ஹர்ஷா. தெரியாத ஏதோ ஒரு ஆட்டோக்காரனை விட தெரிந்த இந்த ஹிட்லர் மேல் என நினைத்து தன் பேகுடன் கிளம்பினாள். “டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்...” என்று மாடிக்கு சென்ற சஞ்சய், ஒரு டைட் டீஷர்ட்டும்,...
    “அய்யா... நான் சொன்னதெல்லாம் உண்மைங்க... மழை வர்ற மாதிரி இருக்கு... எதாவது பண உதவி செய்தீங்கன்னா கிளம்பிருவேங்க...” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது. “சரி... உன் வீடு எங்கே...” “இங்கே காந்திபுரம் பக்கத்துலங்க...”  “ஓ... சரி, முழு அட்ரஸ் சொல்லு...” என்றான் சஞ்சய். “சஞ்சு... ஏதாவது கொடுத்து அனுப்பிடேன் பா...” என்றார் ரேணுகா. “இருங்கம்மா...” என்றவன், “நீ அட்ரஸ் சொல்லு...” என்றான். “அய்யா......
    இதயம் – 7 மீட்டிங் முடிந்து, மாலையில் வீடு திரும்பிய சஞ்சய், ராணியிடம் ஹர்ஷாவைப் பற்றிக் கேட்க, அவள் அன்று வரவில்லை எனத் தெரியவும், அன்னையின் அறைக்கு சென்றான். “அம்மா... மதியம் மாத்திரை போடலைன்னு ராணி சொன்னாங்க, கால் வேற வலிக்குதுனு சொன்னிங்களாமே... மலைக் கோவிலுக்குப் போக வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே.. சரி, இப்ப எப்படி...
    அவளது முகத்தில் ஒருவித வேதனை அப்பிக்கிடக்க கலக்கமாய் பார்வையை வெளியே பதித்திருந்தாள். மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை முக பாவனைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அமைதியாய் கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தான் சொன்னதும் ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த அடிப்பட்ட பாவனைகள் சற்றே சஞ்சயின் மனதை வருத்தியிருந்தது. “பாவம்... அவள் மீது இதில் என்ன தப்பு, அப்படி...
    இதயம் – 6 வெகு நாட்களுக்குப் பிறகு அந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்தான் சஞ்சய். ஹர்ஷா ரேணுகாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. ரேணுகாவின் அக்கறையான பேச்சும், சுபாவமும் மிகவும் பிடித்ததால் அவரை அன்புடன் சந்தோஷமாகவும் பார்த்துக் கொண்டாள். சஞ்சய் அதிகம் வீட்டில் இல்லாததால் அவளும் சுதந்திரமாய்...
    “இந்த மாதிரி ஒரு குணவதியைப் பார்க்க முடியாது கண்ணு... ரொம்ப அன்பா, உரிமையா பழகுவாங்க... ஆனா உடம்புல இல்லாத வியாதி இல்லை... பெரியவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை... அந்தப் புள்ளை கல்யாணம்னாலே காதைப் பொத்திக்குது...” “ம்ம்... ஏன், அவருக்கு ஏதாவது காதல் தோல்வியா...” “அதெல்லாம் இல்ல கண்ணு... ஏனோ, பணம் சம்பாதிக்கறது...
    இதயம் – 5 ஹர்ஷாவின் முகம் அடிபட்ட குழந்தை போல சிறுத்துப் போய் சிவந்திருக்க, கண்களில் கரை தாண்டத் தயாராய் இரண்டு கண்ணீர் முத்துகள் உருண்டு நின்றன. அவனை ஏறிட முடியாமல் தலை தாழ்ந்து நின்றிருந்தாள். அதற்குள் வெளியே வந்த ரேணுகா, அவளது முகத்தைக் கண்டதும் வருந்தினார். ஆனால் சஞ்சய், சிறிதும் கம்பீரம் குறையாமல் அவளை ஏறிட்டான். “ஓ... நீதான்...
    “சஞ்சய்... சாப்பிட்டியாப்பா...” “ம்ம்... சாப்பிட கிளம்பிட்டேன் மா, நீங்க சாப்பிட்டிங்களா...” “ம்ம்... இப்பதான் ஹர்ஷா, சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்திட்டுப் போனா...” “ஹர்ஷாவா... அது யாரு...” என்றான் அவன் குழப்பத்துடன். “ஓ... உன்கிட்டே சொல்ல மறந்துட்டேன் டா, நம்ம சுகந்தி சொல்லியிருந்த நர்ஸ் இன்னைக்கு வந்துட்டா... அவ பேர் தான் ஹர்ஷா... ரொம்ப நல்ல பொண்ணு, எவ்ளோ அன்பா பழகுறா...
    error: Content is protected !!