Advertisement

“அம்மாகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோடா…” என்று அவர் கூற அன்னையின் ஆசியையும், செல்ல அணைப்பையும் பெற்றுக் கொண்டாள் ஹர்ஷா.

“தீபா… என் மருமகளை அழைச்சிட்டுப் போயி ரூம்ல விட்டுட்டு வாம்மா…” பால் சொம்பை அவள் கையில் கொடுத்துவிட்டுக் கூற, அவளுடன் மாடிக்கு நடந்தாள் ஹர்ஷா. மனம் ஒருவிதப் பரவசத்திலும், சந்தோஷத்திலும் நிறைந்திருக்க, இதயம் துடிக்கும் ஓசையை அவளால் உணர முடிந்தது.

அவளை அறைக்குள் அனுப்பிவிட்டு தீபா புன்னகையுடன் விடை பெற, தேகமெங்கும் சட்டென்று ஒரு அதிர்வு அலை பரவி, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத தயக்கத்தோடு இதயம் குதிப்பது போலத் தோன்றியது ஹர்ஷாவுக்கு. இதயத்தைத் தொட்டுக் கொண்டு நெஞ்சில் கிடந்த புத்தம் புது மாங்கல்யம் ஒருவிதப் பரவசத்தைக் கொடுக்க கையில் இருந்த பால் சொம்புடன் கதவைத் தாழிட்டவள், மெல்ல தலை நிமிர்ந்து பார்க்க சஞ்சயை அங்கு காணவில்லை.

திகைத்துக் கொண்டே பால் சொம்பை டீபாயின் மீது வைத்துவிட்டு நிமிர, சட்டென்று அவளது பின்னில் இருந்து ஒரு வலிய கை இறுக்கமாய் அணைத்தது. அவளது கழுத்தில் முத்தமிட்டு உரசிய மீசையில் தேகமெங்கும் குறுகுறுக்க, அவனது மூச்சுக் காற்று காது மடலில் உரசி சிலிர்க்க வைத்தது. பிரவாகமாய் தேகமெங்கும் எழுந்த உணர்வலைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்தது. அவளது இடுப்பை சுற்றி இருந்த அவனது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள் ஹர்ஷா. அவளது உடல் படபடத்து நடுங்குவதை உணர்ந்தவன் மெல்ல கையைத் தளர்த்தி அவளைக் கட்டிலில் அமர்த்தினான்.

அவளது கையைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டவன், சிறு நடுக்கத்துடன் அமைதியாய் அமர்ந்திருந்தவளை நோக்கி, “கொஞ்சம் ரொமாண்டிக்கா டிரை பண்ணலாம்னு நினைச்சா என் சிண்ட்ரல்லா பயப்படுதே…” என்றான். உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொண்டிருக்க பேச முடியாமல் தவித்தவளை ஆதரவாய் கையைத் தட்டிக் கொடுத்தான் சஞ்சய்.

“சரி… நீ ரொம்ப டயர்டா இருப்பே, தூங்குடா… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் முடிச்சிட்டு வரேன்…” எழுந்தான் சஞ்சய்.

“எ…என்ன வேலை…” என்றாள் அவள்.

“மெயில் செக் பண்ணனும்… பிரியா, வொர்க் அப்டேட் அனுப்பி இருப்பா, பார்க்கணும்…” என்றவனை முறைத்தாள் அவள்.

“என் செல்லம் ஏன் முறைக்குது…” என்றான் அவன் புரியாத போல.

“நான் ஒண்ணும் பயப்படலை… அதுக்காக ஒண்ணும் நீங்க உங்க வேலையைப் பார்க்க வேண்டாம்..” என்றாள் அவள்.

“ஹஹா… ஓ… அப்படின்னா, கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம்…. கொஞ்சிப் பேசி விளையாடுவோமா…” என்று அவளுக்கு நெருக்கமாய் அமர்ந்தான் அவன்.

சட்டென்று எழுந்தவள், டீப்பாயில் இருந்த பால் சொம்பை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“ச்சே… இந்தப் பால் குடிக்குற சம்பிரதாயத்தை எல்லாம் யார்தான் கண்டு பிடிச்சாங்களோ… இன்னும் பழைய காலம் போலவே டிரை பண்ணிட்டு, நீ இப்படி உக்காரு…” என்றான்.

“ஏன்… நீங்க புதுசா ஏதாவது கண்டு பிடிச்சு வச்சிருக்கிங்களா…”

“ஆமாம் கண்ணே…” என்றவன்,

“இந்த இதழ்களில் இதழ் வைத்து

இளைப்பாறவே விரும்புகிறேன்…

இணையாக வந்திடு துணையே…”

என்றவன் அவள் உதடுகளில் விரலால் கோலமிட்டான்.

அவனது தொடுதலில் சட்டென்று முகம் சிவந்தவளை ஆசையுடன் ரசித்துக் கொண்டே அவள் முகத்தை நெருங்கினான் அவன். அவளது இதயம் எகிறிக் குதித்து விழுந்து விடுவது போல வேகமாகத் துடிப்பதை அவளால் உணர முடிந்தது.

அவள் இதழ்களை அவனது ஆண்மை நிறைந்த உதடுகள் நெருங்க, அதை உணர்ந்த அவளது அல்லி விழிகள் மெல்ல மூடிக் கொண்டன. அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், கண், மூக்கு, கன்னம் என்று முன்னேறி இதழில் வந்து நின்றான். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ச்சி வெள்ளத்தில் மெய் மறந்து அமர்ந்திருந்தவள் மெல்லக் கண்ணைத் திறக்க, அவளது இதழில் அழுத்தமாய் முத்தமிடத் தொடங்கினான்.

அந்த முதல் முத்தத்தில் தன்னை மறந்தவள், அந்த நெருக்கத்தில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் நீண்ட முத்தத்தில், அவள் மூச்செடுக்க முயலுவது கண்டு மெல்ல அவளை விட்டு விலகினான் சஞ்சய். அவள் அப்போதும் கண்ணை மூடி அமர்ந்திருக்க, உதட்டில் அவனது பல் பட்டு லேசாய் ரத்தம் துளிர்த்திருந்தது.

சுகமா… வேதனையா, என்று புரியாத அந்த உணர்ச்சிகள் கட்டுப் பாடில்லாமல் தன்னைத் தளர்த்துவது அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் மொத்தமாய்க் குழைந்து அவன் மீது சரிய, அவளை இதமாய் அணைத்துக் கொண்டு அவள் பதட்டத்தைக் குறைத்தான்.

“ஹர்ஷூம்மா…” அவள் செவியில் அவனது குரல் சரசமாய் கிசுகிசுத்தது.

“ம்ம்…” கிறக்கத்துடன் ஒலித்தது அவளது குரல்.

“பிடிச்சிருக்கா…”

“ம்ம்…” அவனது நெஞ்சுக்குள் சுகமாய் புதைந்து கொண்டே முனங்கினாள் அவள்.

“நீ என்னை ஹிட்லர்ன்னு சொல்லுறது சரிதான், சாரிடா…” என்றான் அவன்.

“ப்ச்… பரவாயில்லை, ஆனா இந்த விஷயத்தில் நீங்க ஹிட்லரா இருக்கறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு…” என்றாள் குறும்புடன் அவள்.

“ஹஹா… அடிக் கள்ளி…” என்று அவளை விடுவித்தவன், “சரி… அந்தப் பால் சொம்பை எடு… இல்லாவிட்டால் நாளை ரேணுகா தேவியாரின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கி விடுமே…” என்றவன், பாலில் பாதியைக் குடித்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்தான். அவளும் அதைக் குடித்துவிட்டு சொம்பை அங்கு வைத்தாள்.

“என் சிண்ட்ரல்லா… செல்லக்குட்டி, நான் இன்னைக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா…” என்றவன் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

“ம்ம்… நானும் தான்… உங்க மேல நான் வச்ச நேசத்தை உங்ககிட்ட கூட சொல்ல முடியாமலே போயிடுமோன்னு தான் நினைச்சேன்… ஆனா நீங்க கட்டின தாலி இப்ப என் இதயத்தைத் தொட்டுகிட்டு இருக்கு…” என்றவள் மாங்கல்யத்தை காதலுடன் நெஞ்சோடு அமர்த்திக் கொண்டாள்.

“உன் கழுத்துத் தாலியாக

நான் மாற மாட்டேனா…

எப்போதும் உன் நெஞ்சம்

தொடும் பாக்கியம் கிடைக்காதா…” என்றான் புன்னகையுடன்.

அவன் மூக்கில் செல்லமாய் உரசியவள்,

“என் இதயத்தையே

உரசிக் கொண்டிருக்கிறாய்…

நெஞ்சம் உரசத்தான்

உரிமை இல்லையா…” என்றாள் சிரிப்புடன்.

“ஹஹா… கவிதைக்காரி…” என்றவன் அவள் வயிற்றில் முத்தமிட்டான்.

“முத்தத்தைப் பதித்துவிட்டேன்…

மொத்தமாய் நீ தருவாயா…

முத்துக்களால் நிறையட்டும்

அழகான வயிற்று சிப்பியுமே…” அவன் வாக்கில் திகைத்தவள்,

“இதயம் திறந்த கண்ணனுக்கு

என்னைத் திறக்க முடியாதா…

முத்துகளோடு இல்லறத்தை

இசைத்திருப்போம் எந்நாளும்…” என்றாள் பதிலுக்கு.

“ஹாஹா… அருமை, என் சிண்ட்ரல்லா…” என்றவன், எழுந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“ஹர்ஷூ… எனக்கு எத்தனை ஆச்சர்யமா இருக்கு தெரியுமா, இது நாந்தானான்னு அப்பப்போ டவுட் கூட வருது… காதல், கொஞ்சல், கவிதை இதெல்லாம் எனக்கு சாத்தியமான்னு இப்பவும் சந்தேகமாவே இருக்கு… என்னையும் ரசனையாய் மாற்றி விட்டாய்… வாழ்க்கையை ரசிக்கவும் சொல்லிக் கொடுத்துவிட்டாய்… என் அம்மா எப்பவுமே எனக்கு நல்லதைத் தான் தருவாங்க… அவங்க எனக்கு தர நினைச்சதிலேயே விலை மதிப்பில்லாத பரிசு நீ… உன் இதயத்தையே எனக்குத் தந்துவிட்டாய்…” என்றவன் அவள் கையில் மென்மையாய் முத்தமிட்டு எழுந்து அமர்ந்தான்.

“எனக்கு நீங்க கிடைச்சதும் பெரும் பாக்கியம் தான்… யாரையுமே நெருங்கக் கூட விடாத நீங்க என்கிட்ட நெருங்கி வந்தது என் பாக்கியம் தானே… இந்த இதயத்தை எனக்கே எனக்கு மட்டுமாய் கொடுத்திருக்கிங்க, இது எல்லாத்துக்கும் காரணம் என் அத்தையம்மா தான்… அவங்க ரொம்ப கிரேட்…” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

“ம்ம்… உண்மைதான்… ஒரு பிள்ளைக்கு நல்ல அம்மாவா இருக்கறது பெரிய விஷயமில்லை, ஒரு மருமகளுக்கு அம்மாவா இருக்கறது ரொம்பப் பெரிய விஷயம் தான்… நம்ம அம்மாவை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு ஹர்ஷூ… எப்பவும் அவங்க எதிர்பார்த்த போல நாம நடந்துக்கணும்…” என்றவனின் குரலும் கனிந்திருந்தது.

“நிச்சயமாங்க…” என்றாள் அவள்.

“ம்ம்… அப்ப நாம இதயத்தை மாத்திக்கலாமா…” என்றான் அவன்.

“நம்ம தான் இதயத்தை எப்பவோ மாத்தி கிட்டமே…” என்றாள் அவள்.

“இந்த இதயத்தைச் சொன்னேன்…” என்றவன் பாக்கெட்டில் இருந்து அந்த மோதிரப் பெட்டியை எடுத்தான்.

பிரீத்தியின் அன்பை சுமந்திருந்த அந்த குட்டி இதயத்தைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அதை எடுத்து ஹர்ஷாவின் கையில் கொடுக்க, அதை சஞ்சயின் விரலில் போட்டு விட்டாள் அவள். அவனும் அவளது விரலில் மோதிரத்தைப் போட்டு விட்டான்.

“நாம ரெண்டு பேரும் சேர்றதுக்கு முக்கிய காரணமே பிரீத்தி தான்… அவ கால் பண்ணி விஷ் பண்ணக் கூட இல்லையே…” வருத்தத்துடன் கூறினாள் அவள்.

“ம்ம்… அவ ஏதாவது சர்ப்ரைஸ் கொடுப்பா… ஒருவேளை காலைல இங்கே வந்து நின்னாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை…” என்றான் அவன் சிரிப்புடன்.

“ம்ம்… மனசு ரொம்ப நிறைவா இருக்குங்க, சுத்தி இருக்குற எல்லாருமே நல்லவங்களா இருக்கறதும் ஒரு வரம் தான் இல்லையா… நம்ம விக்கிக்கும் ஆப்பரேஷன் முடிஞ்சு அவங்க கல்யாணமும் நடந்துட்டா ரொம்ப நிறைவா இருக்கும், சீக்கிரமே அதுக்கான ஏற்பாட்டைப் பண்ணுங்க…” என்றாள் அவள்.

“ம்ம்… சரிடா மனசு நிறைஞ்சிருச்சு… அடுத்து…” என்றான் குறும்புடன் அவளை நோக்கி.

“அடுத்து என்ன… தூக்கம் தான், தூங்கலாமா…” என்றாள் அவளும் சிரிப்புடன்.

“என்னது தூங்கறதா… மவளே, இன்னைக்கு நமக்கு சிவராத்திரி தான்…” என்றவன், அவளைக் கட்டிலில் சாய்த்து மீண்டும் முத்தத்தில் தொடங்கினான்.

“ஏய் ஹிட்லர்… ஐ வான்ட் மோர் எமோஷன்…” என்றாள் அவள் கிசுகிசுப்புடன்.

“ஹாஹா… இப்ப பாரு, ஐயாவோட ஆட்டத்தை…” என்றவன், வேகமாய் அவளில் முன்னேறத் தொடங்கினான்.

அடுத்த நாள் மிகவும் அழகாய் விடிய காலையில் குளித்து முகமும், மனமும் நிறைந்த நாணப் புன்னகையுடன் பூஜை அறையில் விளக்கேற்ற வந்த மருமகளை சந்தோசத்துடன் எதிர்கொண்டார் ரேணுகா. அவருடன் உமாவும் இருந்தார். இரவு வெகு நேரம் வரை பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததில் இருவருக்குள்ளும் நல்ல தோழமை வந்திருந்தது. மகளின் தலையை சந்தோசத்துடன் தடவிக் கொடுத்தார் உமா.

ரேணுகாவிடம், “அம்மா… காபி எடுத்திட்டு வந்திடறேன்…” என்றவள், “தீபாவும் வர்ஷாவும் எழுந்துட்டாங்களாம்மா…” உமாவிடம் கேட்டுக் கொண்டே அடுக்களைக்கு நுழைய அவளைக் கண்ட ராணிம்மா புன்னகைத்தார்.

“ஹர்ஷுக் கண்ணு… காப்பி நான் போட்டுக்கறேன், உன்னை இப்படிப் பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா… மனசு நிறைஞ்சிருக்கு…” என்றவர் அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

Advertisement