இதயமே இதயமே
அவளது முகத்தில் ஒருவித வேதனை அப்பிக்கிடக்க கலக்கமாய் பார்வையை வெளியே பதித்திருந்தாள். மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை முக பாவனைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அமைதியாய் கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தான் சொன்னதும் ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த அடிப்பட்ட பாவனைகள் சற்றே சஞ்சயின் மனதை வருத்தியிருந்தது.
“பாவம்... அவள் மீது இதில் என்ன தப்பு, அப்படி...
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 2
கல்லூரிக் காலம் மிகவும் இனிமையாகச் சென்றது என்றால் அது மிகை அல்ல... இரண்டாம் வருடத்தில் முதல் செமெஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறந்திருக்க... கடைசி வரிசையில் இருந்த முகேன், ஆகாஷ், ஜெய், அருண், பிரவீன், நிவேதா, உமா , ஹேமா மற்றும் வினோதா நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்....
அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டவன், “ஹேய்... சும்மா... நைஸ் மீட்டிங் யூ... பை...” சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். அவனோடு சேர்ந்து அதுவரை அங்கே நிறைந்திருந்த பர்ப்யூம் மணமும், அவளது மனமும் செல்ல, சட்டென்று ஒரு வெறுமையை உணர்ந்தாள் வர்ஷா.
ஐந்தே நிமிடம்... ஐந்து நிமிடத்தில் அவளது தெளிவாய் இருந்த மனக் குளத்தில் கல்லை விட்டெறிந்து...
இதயம் – 25
இதயங்களில் அன்பையும் காதலையும்
பிரியங்களால் கோர்த்து வைக்கிறேன்....
மாலையாய் அணிகிறாயா – இல்லை
மாங்கல்யமாய் வாழ்கிறாயா...
மறுநாள் சஞ்சய், ஹர்ஷாவின் நிச்சயதார்த்த விழா பெரியவர்களின் ஆசியில் நல்லபடியாய் நடந்து, அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாண நாள் குறித்து, கல்யாண நாளும் வந்தது. மண்டபம் முழுதும் சொந்தங்களாலும், நட்புக்களாலும் நிறைந்திருக்க, அனைவரின் முகத்திலும் சந்தோசம் வழிந்தது.
ரேணுகாம்மா மனம் நிறைய சந்தோசத்துடன்...
“இந்த மாதிரி ஒரு குணவதியைப் பார்க்க முடியாது கண்ணு... ரொம்ப அன்பா, உரிமையா பழகுவாங்க... ஆனா உடம்புல இல்லாத வியாதி இல்லை... பெரியவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை... அந்தப் புள்ளை கல்யாணம்னாலே காதைப் பொத்திக்குது...”
“ம்ம்... ஏன், அவருக்கு ஏதாவது காதல் தோல்வியா...”
“அதெல்லாம் இல்ல கண்ணு... ஏனோ, பணம் சம்பாதிக்கறது...
“ஆண்ட்டி... கல்யாணத்தைப் பத்தி எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை.... நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு... அதுக்கு இந்த குடும்பம், குழந்தை எல்லாம் ஒரு தடங்கலா இருக்கும்கிறது என் அபிப்ராயம்... அதுனால அதைப் பத்தி பேசிப் பிரயோசனம் இல்லை ஆண்ட்டி... அதுக்கு தான் அம்மாவுக்கு ஒரு ஹோம் நர்ஸை ஏற்பாடு பண்ணலாம்னு...
இதயம் – 3
SV குரூப் ஆப் கம்பெனீஸ்.
நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடம் முகப்பில் பெரிய பெயர்ப் பலகையுடன் கம்பீரமாய் நின்றது. தங்க எழுத்துக்களைத் தாங்கி நின்ற பலகையின் கீழ் அந்த குரூப்பில் வரும் நிறுவனங்களின் பெயரும் அது கட்டிடத்தின் எந்த தளத்தில் செயல்படுகிறது என்ற விவரமும் இருந்தது.
SV ப்ரமோட்டர்ஸ் அலுவலகத்தில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்...
இதயம் – 4
“ராணி....”
பெரிய ஹாலில் நிறைந்திருந்த சோபாவில் உடம்பைக் கொடுத்திருந்த ரேணுகா தேவி அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க, உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவரிடம் வந்தார்.
“சொல்லுங்கம்மா...”
“எனக்கு சக்கரை கொஞ்சம் தூக்கலாப் போட்டு ஸ்ட்ராங்கா ஒரு காப்பி எடுத்திட்டு வா, குடிக்கணும் போலருக்கு...”
“அம்மா... சக்கரை போட்டா அய்யா திட்டுவாரே...”
“அவன்...
இதயம் – 8
சஞ்சயுடன் தனியாக காரில் செல்வதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் ரேணுகா சொன்னதற்கு ஒத்துக் கொண்டாள் ஹர்ஷா. தெரியாத ஏதோ ஒரு ஆட்டோக்காரனை விட தெரிந்த இந்த ஹிட்லர் மேல் என நினைத்து தன் பேகுடன் கிளம்பினாள்.
“டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்...” என்று மாடிக்கு சென்ற சஞ்சய், ஒரு டைட் டீஷர்ட்டும்,...
“சஞ்சய்... சாப்பிட்டியாப்பா...”
“ம்ம்... சாப்பிட கிளம்பிட்டேன் மா, நீங்க சாப்பிட்டிங்களா...”
“ம்ம்... இப்பதான் ஹர்ஷா, சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்திட்டுப் போனா...”
“ஹர்ஷாவா... அது யாரு...” என்றான் அவன் குழப்பத்துடன்.
“ஓ... உன்கிட்டே சொல்ல மறந்துட்டேன் டா, நம்ம சுகந்தி சொல்லியிருந்த நர்ஸ் இன்னைக்கு வந்துட்டா... அவ பேர் தான் ஹர்ஷா... ரொம்ப நல்ல பொண்ணு, எவ்ளோ அன்பா பழகுறா...
“அம்மாகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோடா...” என்று அவர் கூற அன்னையின் ஆசியையும், செல்ல அணைப்பையும் பெற்றுக் கொண்டாள் ஹர்ஷா.
“தீபா... என் மருமகளை அழைச்சிட்டுப் போயி ரூம்ல விட்டுட்டு வாம்மா...” பால் சொம்பை அவள் கையில் கொடுத்துவிட்டுக் கூற, அவளுடன் மாடிக்கு நடந்தாள் ஹர்ஷா. மனம் ஒருவிதப் பரவசத்திலும், சந்தோஷத்திலும் நிறைந்திருக்க, இதயம் துடிக்கும் ஓசையை அவளால்...
இதயம் – 5
ஹர்ஷாவின் முகம் அடிபட்ட குழந்தை போல சிறுத்துப் போய் சிவந்திருக்க, கண்களில் கரை தாண்டத் தயாராய் இரண்டு கண்ணீர் முத்துகள் உருண்டு நின்றன. அவனை ஏறிட முடியாமல் தலை தாழ்ந்து நின்றிருந்தாள்.
அதற்குள் வெளியே வந்த ரேணுகா, அவளது முகத்தைக் கண்டதும் வருந்தினார்.
ஆனால் சஞ்சய், சிறிதும் கம்பீரம் குறையாமல் அவளை ஏறிட்டான்.
“ஓ... நீதான்...
“அய்யா... நான் சொன்னதெல்லாம் உண்மைங்க... மழை வர்ற மாதிரி இருக்கு... எதாவது பண உதவி செய்தீங்கன்னா கிளம்பிருவேங்க...” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.
“சரி... உன் வீடு எங்கே...”
“இங்கே காந்திபுரம் பக்கத்துலங்க...”
“ஓ... சரி, முழு அட்ரஸ் சொல்லு...” என்றான் சஞ்சய்.
“சஞ்சு... ஏதாவது கொடுத்து அனுப்பிடேன் பா...” என்றார் ரேணுகா.
“இருங்கம்மா...” என்றவன், “நீ அட்ரஸ் சொல்லு...” என்றான்.
“அய்யா......
“என்ன இருந்தாலும் அவளை அழைத்து வராவிட்டால் அம்மா விட மாட்டார்கள், ஆனால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்... எந்தத் தப்பும் செய்யாதவளை எத்தனை கேவலமாய் பேசி விட்டேன், என்னை மன்னிப்பாளா... வேறு வழியில்லை... அம்மாவுக்காக அவளை அழைத்து வரத்தான் வேண்டும்... மாலை அவள் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்...” என நினைத்துக் கொண்டான்....
“ஏய்... இது ஒரு நல்ல சந்தர்ப்பம்... உன் மனசுல உள்ளதை விக்கி கிட்டே சொல்லிடு... ரெண்டு பெரும் மனசு விட்டுப் பேசிடுங்க...”
“ம்ம்... சரிடி, நீயும் பத்திரமாப் போ... அங்கே ரீச் ஆனதும் எனக்குக் கால் பண்ணு...”
“ம்ம்... நீயும் வீட்டுக்குப் போனதும் எனக்குக் கால் பண்ணு...” என்றவள் ட்ரெயின் வரும் ஹாரன் கேட்கவே திரும்பினாள்.
மதிய நேரமாதலால்...
இதயம் – 7
மீட்டிங் முடிந்து, மாலையில் வீடு திரும்பிய சஞ்சய், ராணியிடம் ஹர்ஷாவைப் பற்றிக் கேட்க, அவள் அன்று வரவில்லை எனத் தெரியவும், அன்னையின் அறைக்கு சென்றான்.
“அம்மா... மதியம் மாத்திரை போடலைன்னு ராணி சொன்னாங்க, கால் வேற வலிக்குதுனு சொன்னிங்களாமே... மலைக் கோவிலுக்குப் போக வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே.. சரி, இப்ப எப்படி...
“என்னது... அவர் உங்களுக்கு பிரண்டா, வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ்...” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் ஷீலா.
“அட... நம்ம சென்னை மச்சான்ஸ் கல்யாணத்துக்கு இங்கேயே வந்துட்டாங்களா... சூப்பர், அப்ப மண்டபமே களை கட்டப் போகுது...” என்று சிரித்தாள்.
“ஆமா... நீங்க வர்ஷூ கூட வரலியா, முன்னாடியே வந்துட்டிங்களா...”
“நான், கவி ஊருக்குக் கிளம்பும் போதே...
திரும்பியவள் திணறிப் போனாள். அவளுக்கு வெகு அருகாமையில் நின்றிருந்தான் சஞ்சய். அவனிடமிருந்து வீசிய பர்பியூமின் நறுமணம் அவளைத் திணறடிக்க, வழி மறைத்து நின்றவனை ஏறிட்டாள் அவள்.
“எ... என்ன இது, தள்ளுங்க... நான் போகணும்...” அவனது கண்களின் சக்தியைத் தாங்க முடியாமல் குனிந்து கொண்டே கூறினாள். அத்தனை அருகாமையில் நின்றது அவளுக்கு படபடப்பாய் இருந்தது.
“ஏன்... நான்...
“அ... அதுவந்துமா...” தயங்கியவள், அன்னையிடம் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாரோ எனத் தயங்கினாலும் சொன்னாள்.
“அம்மா... நம்ம ரேணும்மாக்கு கொஞ்சம் பிபி ஜாஸ்தி ஆகி நேத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க... நைட் அவங்களைப் பார்த்துக்க ஆளில்லை... அதான் நான் நைட் ஷிப்ட் எடுத்து பார்த்துகிட்டேன்... என்னைப் பொண்ணு போலப் பார்த்துக்குவாங்க, ரொம்ப அன்பானவங்க... அவங்களுக்கு ஒரு...
இதயம் – 9
காலையில் கல்யாண மண்டபமே பரபரப்பாய் இருக்க, விக்கியும், ராஜீவும் மாப்பிள்ளையைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர்.
“புது மாப்பிள்ளைக்கு ராபாப்பரி...
நல்ல யோகமடா... ராபாப்பரி...
அந்த மணமகள் தான்... ராபாப்பரி...
வந்த நேரமடா... ராபாப்பரி...”
பாடிக் கொண்டே சதீஷின் பட்டு வேஷ்டியை அவனுக்கு கட்டிவிடுவதற்காய் கையில் எடுத்தான் ராஜீவ். சதீஷ் அவன் பாடுவதை தலை விதியே என்று கேட்டுக் கொண்டு நின்றிருந்தான்.
“ஆஹா......