Vizhiyin Mozhi
அத்தியாயம் 32
வர தாமதமாகும் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிடுவான். அவசர வேலை என்றால் தகவலாவது சொல்லி விடுவான். ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை, என்றும் இப்படி நடந்து கொண்டதுமில்லை.
விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. சிவகாமி பூஜை அறைக்குள் வேண்டுதலில் அமர்ந்து விட்டார். கயல் வெளிவாசல் திண்ணையில் இரும்புக்கேட்டை...
விழியின் மொழி - மித்ரா
அத்தியாயம் 01
கண்ணெதிரே கருமை எங்கும் சூழ்ந்திருக்க உருவமறியா உயிரை உருக்கும் குரல் ஒன்று "செல்லம்மா.. செல்லம்மா.. செல்லம்மா..." என எங்கோ தொலைவில் கேட்டது. அதன் முகம் பார்க்க வேண்டும், முயன்றும் முடியவில்லை.
மை இருளுக்கும் உருவம் தர இயலாத கருமை சிறு வெளிச்சமுமின்றி. ஆனால் செல்லம்மா என்ற அழைப்பு...
அத்தியாயம் 03
நண்பகலாகிய பின்னும் இன்னும் பேப்பரிலிருந்து கவனத்தைத் திருப்பாது அமர்ந்திருந்த சங்கரலிங்கத்தின் அருகே வந்த ருக்மணி, உணவுண்ண அழைத்தார்.
"இருக்கட்டும் ராகவன் (சந்திரனின் தந்தை) வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்" என்றார்.
லேசாக முறைத்தவர், "இது என்ன புதுசா? அவன் வரவரைக்கும் எதுக்குக் காத்திருக்கீங்க?"என்க,"இன்னைக்கு ஒரு டெண்டர் விஷயமா சந்திரன் போயிருக்கான். அதான் நமக்குக் கிடைச்சதா இல்ல, எதிர்...
அத்தியாயம் 24
அன்று கயல் தன் காதலைச் சொல்லிய பிறகு அதீத சந்தோஷத்தில் சுற்றினான் அன்பு. அவன் கல்லூரியிலும் வெளியிலும் சுற்றும் காதலர்களை பார்க்கும் போதெல்லாம் கயலின் ஞாபகம் தான்.
இதில் அவன் ரூம்மெட் மனோஜ் வேறு மொபைலில் இரவெல்லாம் அவன் காதலியோடு ஓயாது பேசிக்கொண்டே இருந்தான். காதல் தரும் சந்தோஷத்தை கயலோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும்,...
அத்தியாயம் 33
கோவிலுக்குள் நுழைந்ததும் கயல் உள்ளே பூஜைக்கும் ஸ்வேதாவை அழைக்க, "நீ போ கயல், நான் வந்ததே சுத்தி பார்க்கத் தான். பூஜைக்கு வரல" என்றாள்.
"இல்ல கோவிலுக்கு வந்துட்டு எப்படி சாமி கூம்பிடாம..." என்னும் போதே,"சாமி தானே, இங்க இருக்குற சாமியை கூப்பிடுறேன்" எனச் சுற்று மண்டபத்தில் இருக்கும் சன்னிதியைக் குறிப்பிட்டுக் கூறினாள்...
அத்தியாயம் 39
கயல், ஜெயந்தி, பூங்கோதை என தோழிகள் மூவரும் கல்லூரி முதல் வருடம் சென்று கொண்டிருந்தனர். கயல் தாவரவியலும்,ஜெயந்தி கணினி அறிவியலும், பூங்கோதை ஆங்கில இலக்கியம் என ஒரே கல்லூரியில் மூன்றுபேரும் வெவ்வேறு பாட பகுதியைத் தேர்வு செய்திருந்தனர்.
ஜெயந்தியைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும், அழைத்து வருவதும் செல்வா தான் உரிமையோடு செய்வான். சில சமயங்களில்...
அத்தியாயம் 28
கயலின் பெற்றோர்களால் மகளின் ஆசையை நிராகரிக்க வாய்ப்பின்றி போனது. கயல் அன்புவை காதலன் என்றில்லாது கணவன் என்று கூறி அனைவரின் முன்னிலையில் தாலியையும் காட்டிய பின் அவர்களாலும் தான் என்ன செய்ய இயலும்.
அன்புவிற்கும் சந்திரனுக்கும் பெரிதாக வித்தியாசம் என்பதில்லை. சந்திரன் சற்று நெருங்கிய சொந்தம் அவ்வளவே, இதில் அன்பு குடும்பத்தாருடன் தனிப்பட்ட பகை...
அத்தியாயம் 06
அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.
அவள் அருகில் வர, அவன் கோபப் பார்வையின் அனல் வீச்சு மேலும் கூடியது. "இங்கன உனக்கு என்ன வேல? வேண்டாதவங்க இடத்துல ஆகாத...
அத்தியாயம் 38
சற்று நேரத்திலே கோவிலில் எங்கும் சலசலப்பும், பேச்சுக் குரலிலும் மட்டுமே கேட்க, மேள வாத்தியங்களின் இன்னிசை நின்று விட்டது. முதலில் இராஜமணிக்கத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது பேசவும் இயலாது நின்றனர்.
இராஜமணிகத்தின் மச்சான், "ஏய் யாருடி நீ? எந்த ஊருக்காரி? நீ வந்து என் மாமா மேல பலி சொன்னா நம்பிடுவோமா? உன்னையெல்லாம் சும்மா விடலாமா?" என்றவாறு ஸ்வேதாவின் மீது கையோங்கினான்.
சட்டென ஓங்கிய அவன் கையை...
அத்தியாயம் 40
ரேஷன் கொள்ளையில் சந்திரனின் பெயர் லோக்கல் மீடியாக்களில் வெளிப்பட்டதில் உறவுகளின் முன்பு பெரிதும் அவமானமாக இருந்தது.
ரைஸ்மில்லில் சந்திரனின் புலம்பலும் வேதனையும் பார்த்த செல்வாவிற்கு அன்புவின் மேல் கோபம் வந்தது. அதிலும் அன்பு கயலை விரும்புவதாகவும், தன் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பான் என்றும் சந்திரன் பெரிதும் பயந்தான்.
சந்திரனுக்குக் கயலை திருமணம் செய்தாக வேண்டும் என்று...
அத்தியாயம் 27
காலையில் விழித்த பின் தன் இடையை அழுத்திக் கிடந்த அன்புவின் கரத்திலிருந்து அவன் உறக்கம் கலையாமல் மெல்ல விலகி எழுந்தாள். உடலெல்லாம் அழுத்தி, அசதியில் கணமாய் தெரிந்தது. இதமான சூட்டில் வெந்நீரில் குளித்ததில் சற்று அசதி நீங்கியது போலிருந்தது.
பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கி குங்குமம் இட்டுக்கொண்டாள். மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது....
அத்தியாயம் 43
ஜெயந்திக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து ஜெயந்தியையும் அழைத்து மனையில் அமர வைத்தனர். முதலில் நாத்தனார் தான் வெள்ளிக்காப்பு இட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, விக்னேஷை பார்த்தாள்.
விக்னேஷிற்கு சகோதரிகள் இல்லை என்பதால் திருமணத்தின் போது கயல் தான் நாத்தனார் முடிச்சிட்டாள். இப்போதும் கயலை தான் அவள் மனம் தேடியது.
அவள்...
அத்தியாயம் 09
விடுமுறை நாளில், வயலில் வேலை செய்யும் தந்தைக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு துப்பட்டாவைக் கைகளில் சுற்றியவாறு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள் கயல்.
வாழைத் தோப்பிலிருந்து வெளியே வந்து சாலையிலிருந்த புல்லட்டின் அருகே செல்ல, கயல் வருவதைக் கவனித்தான் அன்பு. சட்டெனத் தோப்புக்குள் சென்று மறைந்து நின்று கொண்டான்.
அவள் அருகே வரவே, சட்டென...
அத்தியாயம் 42
இராஜமணிக்கம் ஜாமினில் வெளியில் இருந்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஸ்வேதாவும் விடாது வழக்கை நடத்திக்கொண்டு இருந்தாள்.
அன்புவின் மேல் நடந்த கொலை முயற்சியை விட்டுவிடும் படி அன்பு கூறியதாலும், அன்பு புகார் கொடுக்காததாலும் ஸ்வேதா அதை விட்டு விட்டாள். இராஜமணிக்கமும் அவராகக் கூறி மாட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதில் செல்வான தன் மருமகன் மாட்டி விடக்கூடாது...
அத்தியாயம் 29
காலை உணவிற்குப் பின் வாசல் வரை வந்த அன்பு மீண்டும் கயலைக் காண அடுப்பறைக்குள் சென்றான். ஏதோ வேலையாக இருந்தவளை திடீரென பின்னிருந்து அணைத்தவன், "செல்லாம்மா உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். என் ஃப்ரண்ட் ஸ்வேதா வர, கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா. கீழ் ரூம்மை ரெடி பண்ணி வைக்க சொல்லும்மா"...
அத்தியாயம் 20
டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது.
டிரவல்ஸ் ரிஜெஸ்டரில் இருந்து தங்கராசுவின் புக்கிங் பதிவுகளை வழக்கறிஞர் கூறியபடி கவனமாக நீக்கினர். நீக்கவில்லை எனில் தங்கராசுவும் சந்திரனும் திருட்டில்...
அத்தியாயம் 26
ஏனோ சரியாக தூக்கமில்லாமல் அதிகாலையிலே விழித்துக் கொண்டான் சந்திரன். எழுந்து கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறு கீழே பார்க்க, எதிர்வீட்டில் கேட்டிற்கு வெளியே தலையில் கட்டிய டவலோடு குனிந்து ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.
முகம் பார்க்காமலே அது கயல் தான் என்பதை உணர்ந்து கொண்டான். அன்புவின் வீட்டில் அவன் மனைவி கோலமிடுகிறாள்.
பலமுறை அன்புவுடன்...
அத்தியாயம் 04
மருத்துவ மனைக்குள் சென்றதும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றான். அவனுக்கு முன்பே வந்திருந்த சிவகாமி அழுதவாறு அமர்ந்திருந்தார்.
அவர்கள் அருகே சென்றவன், அங்கிருந்த உறவுகளிடம் தந்தையின் நலம் விசாரிக்க, இருக்கும் சில நிமிடங்கள் அவரின் இறுதி நிமிடங்கள் என உணர்த்தப்பட்டது. மருத்துவர்களும் எந்தவிதப் பொய்யான நம்பிக்கையும் அளிக்கவில்லை.
இறுதியாக அவனைப் பார்க்க அனுமதிக்க, உள்ளே...
அத்தியாயம் 31
ஸ்வேதா சந்திரனுடன் வந்து இறங்கியதையும், பேசிச் செல்வதையும் தெருவிற்குள் நுழையும் போதே இராஜமாணிக்கம் பார்த்தார் ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை. பெரியவர்களிடம் பேசியவர் அழைப்பிதழில் யார் யார் பெயர்கள் அச்சிடவேண்டும் எனக் கேட்டு விட்டு, சந்திரனிடமும் பேசி விட்டுச் சென்றார்.
சந்திரனுக்கு வந்த அழைப்புகளை அவன் ஏற்காததால் அடுத்ததாக அனைவரும் செல்வாவை தான் அழைத்திருந்தனர்.
அவர் செல்லும்...
அத்தியாயம் 36
கயல் இன்னும் அந்த அதிர்விலிருந்து வெளிவரவில்லை. உடல் சோர்ந்து விட, மீண்டும் தலை சுற்றலாகத் தோன்றியது. அன்புவின் தோளில் தலை சாய்த்து விழி மூடியிருந்தவள், "மாமா பாப்பாவுக்கு எதுவும் ஆகாது தானே?" என மென்குரலில் கேட்டாள்.
மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் அவளிடமிருந்து, அப்போது தான் அவனும் உணர்ந்தான். மருத்துவமனைக்குக் கிளம்பும்...