Advertisement

அத்தியாயம் 35

ஜெயச்சந்திரன் உள்ளே வர, அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் ஸ்வேதா. அதைக் கவனிக்காதவன், மாட்டை கட்டிட்டேன் நீ போலாம்என்றான். 

அவ்வளவு தான் அதீத கோபத்தில் எழுந்து நின்றவள் கீழே இருந்த செம்பை தூக்கி எறிந்தாள். சற்று சுதாரித்தவன் சரியான நேரம் விலகிக் கொள்ள செம்பு கீழே விழுந்து உருண்டது. 

அடியே செம்புல இருந்த கள்ளேங்க, மொத்தமா குடிச்சிட்டியா?” எனக் கேட்டவன் மனதிற்குள் தென்னங்கள் அவ்வளவு போதையேராதே! இவ உடம்புக்கு ஒத்துகிடலையோ? சும்மாவே குதிப்பா இன்னைக்கு என்ன கூத்தெல்லாம் பண்ண போறாளோ? என எண்ணினான். 

அவளோ உதட்டைப் பிதுக்கி, ஆள்காட்டி விரலை முகத்தின் முன்பு இடது வலதாக ஆட்டிக் கொண்டு, “நோ, நோ அங்கிள் நான் மோர் குடிச்சேன். மோர் மட்டும் தான் குடிச்சேன்!என மழலை மொழி போல் போதையில் உலறினாள். 

அங்கிள்லா? ஐயா பாரதி நீ தீர்க்கதரிசி தான் இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சி தான் நான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிது எதுவும் இல்லன்னு சென்னையா? அன்னைக்கு மாமான்னு சொல்லும் போதே எம்புட்டு இனிச்சிச்சி! என நினைத்தான்.

இங்கு தனிமையில் அவளோடு இருப்பது நல்லதல்ல, என எண்ணி, “அம்மாடி உங்க வீட்டுக்கு கிளம்புறையா?” என்றான். 

அவ்வளவு தான் மீண்டும் கோபம் கொண்டவள் கீழே குனிந்து தவழ்ந்து எதையோ தேட, “என்னடி தேடுறா?”என்க, “ம்ம்…செம்பு…எனக் கத்தியவள் செம்பை எடுத்துக் கொண்டு நின்றாள். 

எங்கே மீண்டும் எறிந்து விடுவாளோ என்ற பயத்தில் நெருங்கி வந்து அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், “ஏன்டி கத்துறா? யாரவது பார்த்துட்ட என்ன நினைப்பாங்க?” என்றான். 

என்னதான் அவனை விட்டு விலகிச் சென்றாலும் வெறுத்துச் செல்லவில்லை அல்லாவா அவள்? காதல் கொண்ட மனதிற்கு நேசிக்க மட்டும் தானே தெரியும்!

நெருங்கி வந்த ஸ்வேதா அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் உயரத்திற்கு ஏங்கி மூக்கோடு மூக்கை உரசி நிற்க, இவ கொஞ்சுக்கிளியா? கோபக்கிளியானு தெரியலையே, என மனதில் நினைத்தான் சந்திரன். 

என்ன நினைப்பாங்க மாமூ, நாமா தப்பு பண்ணுறதா நினைப்பாங்களோ? நான் வேணா எல்லாரும் கூப்பிட்டு நாங்க தப்பு பண்ணலைன்னு சொல்லட்டுமா? எல்லாரும் வாங்க வாங்க, பெறுசுங்களே, சிறுசுங்களே, ஆண்டிஸ்களே, அங்கிள்ஸ்களே எல்லாரும் வாங்களே! லிஸ்ட் சரி தானா மாமூஊஊஊ… என இதழ் குவித்துக் கொண்டு அவன் இதழை நெருங்கி இருந்தாள். 

அவள் செயலில் அதிர்ந்தவன், இதழ் படும் முன் அவளை விலக்கிவிட்டு, “முதல்ல இங்கிருந்து கிளம்பு எனக் கோபத்தில் உரைத்தான். ஏதோ அவள் போதையில் இருப்பதாலே இத்தனை நேரம் அமைதியோடு பேசினான். 

அவள் ஆசை கொண்ட மனது அவன் அருகாமையை ஏங்கி ரசிக்க, அவனோ வந்ததிலிருந்து அவளைக் கிளம்புமாறு சொல்லிக் கொண்டே இருந்ததில் வேதனை உற்றவள், “ஏன் ஜெய் உன் மனசுல எனக்கு இடமில்லை. உன் வாழ்க்கையில எனக்கு இடமில்லை. இங்க கூட எனக்கு இடமில்லையா?” என அந்த போதையிலும் தன் மன வேதனையைத் தெளிவோடு கேட்டாள். 

அவள் கேள்வி ஏதோ புரிவது போலும் புரியாதது போலும் இருந்தது. அதை விட அவள் நீர் நிரம்பிய விழி, தீச்சுட்டார் அவனைத் தவிக்கச் செய்தது. அதில் மேலும் கோபம் அதிகரிக்க, “ஏன்டி என்ன நிம்மதியா இருக்கவே விட மாட்டீங்களா? அந்த அன்புவும் நீயும் என் உயிரை எடுக்குறதயே வேலையா வச்சி இருக்கீங்களா?” என்று கத்தினான். 

அன்புவை சொல்லியதில் அவளுக்குக் கோபம் வர, அதுவரை இருந்த பொறுமை எல்லாம் விட்டு விட்டு, “யாரு நாங்களா உயிரை எடுக்குறோம்? நீயும் உன் ப்ரண்ட் செல்வாவும் தான்டா அன்பு உயிரை எடுக்கிறீங்க! என்றாள்.

செல்வாவை கூறியதில் கோபமும் அதே நேரம் அவள் கூற்றில் ஏதோ விஷயம் இருப்பது போல் தோன்ற, “என்னடி போதையில உளருறையா?”என்றான். 

அவளும் கோபம் குறையாமல், “இல்லடா உண்மையத் தான் சொல்லுறேன். உன் உயிர் நண்பன் செல்வா அன்புவோட உயிரை எடுக்க முயற்சி பண்ணான். ஆனா அன்புவோட அதிஷ்டம் அவன் தப்பிச்சதோடு மட்டுமில்ல உண்மையும் கண்டு பிடிச்சிட்டான். அது மட்டுமில்ல ஆதாரமும் ரெடி பண்ணிட்டான்! உன் ப்ரண்ட் ஜெயிலுக்கு போறது உறுதி!எனச் சிரித்தவாறு கூறினாள். 

செல்வா ஏதோ தவறு செய்துள்ளான் என்பதை உணர்ந்து கொண்டவன் உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்றெண்ணினான். 

ஸ்வேதாவும் கோபம் குறைந்து தலைச் சுற்றலோடு தள்ளாட அவளைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தவன், அவளை இந்த நிலையில் இங்கு விட்டுச் செல்ல இயலாது என நினைத்தான். 

பூங்கோதைக்கு அழைத்து தங்கள் தோப்புக்குடிலில் இருக்கும் ஸ்வேதாவை அன்புவின் வீட்டில் விட்டு விடுமாறும், தாமதிக்காது உடனே வருமாறும் கூறினான். 

அவன் எண்ணம் பொய்யாகவில்லை செல்வா தற்போதும் ஒரு தவறு செய்திருந்தான். அன்புவின் டிரைவர் மணியிடம் செல்வா கொடுத்தது குவாரிக்கான வெடிமருந்தல்ல, டிமைர் உடன் செட் செய்யப்பட்ட சிறிய அளவிலான பாம்! அதை கொடுத்தனுப்பிய பின்னும் செல்வாவிற்கு படபடப்பு அடக்கவில்லை. 

செல்வாவின் முன், கோபம் பொங்க வந்து நின்ற சந்திரன், அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, “டேய் அன்புவை கொல்ல முயற்சி பண்ணியா? சொல்லுடா என்னலாம் பண்ண? ஏன்டா இப்படிப் பண்ண?” எனக் கத்தினான். 

அவனின் திடீர் வருகையும் கேள்வியும் திடுக்கிட வைத்தது. சற்று தடுமாறி, வார்த்தைக்குத் திணறிய செல்வா, “இப்போ எதுக்கு தேவையில்லாத இந்த பேச்செல்லாம்? யாரு என்ன சொன்னா?” என்றான். 

மேலும் அவன் சட்டையைக் கழுத்து நெறியும் அளவிற்கு இறுக்கிப் பிடித்தவன், “உண்மையா சொல்லுடா, இப்போ சொல்லல்ல மூஞ்சி முகரையெல்லாம் பேத்துருவேன்!எனச் சீற்றமுடன் கேட்டான். 

அவன் பிடியிலிருந்து சட்டையை உருவிக் கொண்டவன், அவனுக்கு இணையான கோபத்துடன்,”ஆமான்டா, ஒன்னில்ல ரெண்டு தடவை முயற்சி பண்ணேன், திருவிழால கடைசி நாள் அன்புவை போடச் சொன்னேன் ஆனா கயல் குறுக்க வந்து காப்பாத்திட்டா போல.

அன்பு டவுன்ல இருந்து வரும் போது லாரி விட்டு அடிக்கச் சொன்னதும் நான் தான். அவன் நேரம் சின்ன காயத்தோடு உயிர் தப்பிச்சிட்டான்! சரவணன் சரியான நேரத்துக்கு வந்து காப்பாத்திட்டான்.

ஆனா இன்னைக்கு வசமா மாடிக்கிட்டான். அந்த கடவுளே வந்தாலும் அவனை காப்பாத்த முடியாது. வெடிமருந்து அனுப்ப சொன்னேனே, அன்பு கார்ல தான் அனுப்பி இருக்கேன். இந்த நேரம் அவன் உயிர் சொர்க்கலோகம் போயிக்கிட்டு இருக்கும். என்ன கயலும், மணியும் தான் பாவம் அவனோட சேர்ந்து போக போறாங்க!என வெற்றிச் சிரிப்பு சிரித்தான். 

சந்திரன் தன் நண்பனின் மறுமுகம் கண்ட, அதிர்ச்சியில் உறைந்தே நின்றான் ஒரு நொடி. மறுநொடி கோபம் தலைக்கேற, அவனைக் கொன்று புதைக்கும் ஆத்திரத்துடன், இரு கன்னத்திலும் அறைந்தவன், “துரோகி என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்க? உன்ன முதல்ல கொல்லலும்டா, இரு வந்து உன்ன கவனிச்சிக்கிறேன்!என எட்டி உதைத்தான். 

அடுத்த நொடி தன் வண்டியை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்தான். ஊர் எல்லையைத் தாண்டும் ஒற்றையடிப் பாதையில் விரைந்தான். 

அவர்கள் காரில் சென்றுள்ளதால் எப்படியும் நேர் சாலை வழியாக தான் சென்றிருப்பார்கள், குறுக்குச் சாலை வலியாகச் சென்றால் அவர்களை வழி மறித்து விடலாம் என எண்ணி முழுவேகத்தில் சென்றான். 

தோப்பு குடிலுக்குள் வந்த பூங்கோதை, ஸ்வேதாவை எழுப்பினாள். தன்னிலை மறந்து போதையில் அரை மயக்க நிலையிலிருந்த போதும் பூங்கோதையை சரியாக அடையாளம் கண்டு கொண்டாள் ஸ்வேதா. 

ஏய் நீ ஏன் இங்க வந்த? ஜெய்ய என்கிட்ட இருந்து பிரிக்க போறியா? ஹாஹாஹா…உனக்கு ஒரு உண்மை தெரியுமா ஜெய் இங்கயில்ல. நீ வரதுக்கு முன்னாடியே அவன் ஓடிபோய்டானே! 

அந்த ஆங்கிரி பேட் மூஞ்சிக்கு, உன்ன மாதிரி பூவு, காயி தான் செட்டாகுமோ? என்ன மாதிரி ரசகுல்லா செட்டாகாதோ?

இருந்தாலும் அந்த மரமண்ட ரொம்ப தான் பண்ணுறான். நாமா ரெண்டுபேற விட ப்ரண்டு தான் முக்கியம்னு ஓடிப்போய்டான். இல்லையில்லை, நீ வந்ததால தான் ஓடிட்டான். நீ எதுக்குடி வந்த?

நீ என்ன தேவலோகத்து உழுந்தா? ரவையா? என்ன விட நீ அழகாடி. என் உயரம் என்னனு உனக்குத் தெரியுமா? கொஞ்சம் பொறு!ஏதேதோ பிதற்றியவள் எழுந்து தள்ளாடியவாறு பூங்கோதையின் அருகே தோளோடு உரசி நின்றாள். 

கைகளால் இருவரின் உயரத்தையும் அளந்தவாறு, “பார்த்தியா நான் தான் உயரம், இப்போ தெரியுதாடி என் உயரம் என்னன்னு!என்றாள். 

கால்கள் தரையிலிருந்தும் மிதப்பது போன்ற உணர்வில் தள்ளாடினாள். சிறிது நேரம் அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிய பூங்கோதை பின் முடியாது அவளைத் தாங்கி நடந்தவாறு அன்புவின் வீட்டிற்கு அழைத்து வந்தாள். வீட்டில் யாருமில்லாமல் இருக்க, வேலையாட்களிடம் விவரம் கூற இயலாது ஸ்வேதாவின் அறையில் அவளை படுக்க வைத்துவிட்டுச் சென்றாள். 

இவளுக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? இவள் எவ்வாறு அங்கு சென்றாள்? அவன் எங்கு சென்றான்? என்ற கேள்விகள் பூங்கோதையின் மனதிலும் தோன்றியது. 

ஊர் எல்லையை எட்டியிருக்க காரில் வரும் போதே, “என்ன பண்ணுதும்மா உடம்புக்கு? சொல்லு செல்லம்எனக் கொஞ்சலுடன் கேட்டான் அன்பு. கயலும் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என நினைத்தாலும் எவ்வாறு சொல்லுவது எனத் தயங்கினாள். 

அவன் முகம் நிமிர்ந்து பார்ப்பவள் சொல்ல முயன்றும் நாணம் தடையிட எந்த வார்த்தைகளை எவ்வாறு கோர்த்துப் பேச என்ற குழப்பத்தில் மீண்டும் முகம் திரும்பிக் கொள்வாள். ஹாஸ்பிட்டல் போற வரைக்கும் பேசமா அமைதியா வாங்கஎனக் கயல் அதட்டலோடு சொல்லிவிட அமைதியுடன் வந்தான். 

திடீரென அவர்கள் வண்டிக்குக் குறுக்கே சந்திரன் பைக்கில் வந்து வழிமறிக்க, மணி ஷடன் பிரேக்கிட்டு காரை நிறுத்தினான். பரபரப்பாக வேகமுடன் இறங்கிய சந்திரன், “மணி, செல்வா கொடுத்த பார்சல் எங்கடா? கொடு சீக்கிரம்!எனக் கேட்டவாறு ஓடிவந்தவன், பின் கதவைத் திறந்து கயலின் கைபிடித்து கீழே இறங்கிவிட்டவன், “கயல் அவன கூட்டிட்டு ஓடி, தூரமா போயிடுஎன்றான். 

முன் பக்கம் ஓடி வந்து மணி தருவதற்குள் அவன் கையிலிருந்த பார்சலை பிடிக் கொண்டு ஓடியவன், “மணி அவங்க ரெண்டு பேரையும் தூரமா கூட்டு ஓடுடா!எனக் கூறிக் கொண்டே பார்சலின் கவரை கிழிந்தெறிந்தவாறு மேலும் வேகமுடன் ஓடினான். 

அன்புவும், மணியும் விபரீதம் என்பதை உணர்ந்து கொள்ள, கயலோ உணர்வற்ற சிலையாக, அடிவயிற்றில் கைவைத்தவாறு உறைந்து நின்றிருந்தாள். நொடி கூட தாமதிக்காது சந்திரன் ஓடிய திசைக்கு எதிர்த் திசையில் கயலின் கையை பற்றி இழுத்துக் கொண்டு அன்பு ஓட, மணியும் ஓடினான். 

ஜெயசந்திரன் கைகளுக்குள் இருப்பதோ வெறும் பதினெட்டு நொடிகள் தான். சாலையிலிருந்து கீழிறங்கிக் காட்டு வழியாக ஓடினான். ஓயாது ஓடிய ஓட்டத்தால் உடல் ஓய்வு கேட்க, உடலில் உயிர் தங்க இருக்கும் நொடிகளோ பதினாறு தான். கண்கள் இருட்ட, கால்கள் தளர, கல், முள் பாதையில் காற்றின் வேகத்தில் ஓடினான். ஸ்வேதாவும், பூங்கோதையும் மனதில் மின்னி மறைந்தனர். 

மீதம் இருப்பதோ வெறும் ஏழு நொடிகள் தான் பெரியாற்றின் வடிகால் மணல் திட்டுகள் பகுதிக்கு வந்திருந்தான். சிறு சிறு மணல் மேடுகள் கண் காணும் தூரமெங்கும் காட்சியளிந்தது. 

இன்னும் இருப்பது இரண்டு நொடிகள் தான்! அசைந்தாடும் சிறு கிளையைக் கூட குறிபார்த்து வேல் ஏறிபவன், பெரிய மணல் மேட்டைக் குறிவைத்து பாமை தூக்கி எறிந்தான். 

தீச்சூவளைகள் கரும் புகைமூட்டத்துடன் மேலெழுந்து விண் தொட, இடியோசை போன்ற பேரொலி அப்பகுதி எங்கும் எதிரொலித்தது. மணல் புழுதியோடு கற்களும் உடைந்து சுற்றி எங்கிலும் தெரிந்தது. வெடிமருந்துகள் கலந்த புகை நெடி காற்றெங்கும் கலந்து வீசியது.

தாங்கள் நிற்கும் சாலையிலிருந்து கண்டகாட்சியும், அதன் அதிர்வுகளும் மூவரையும் உறையச் செய்தது. அன்புவின் கையணைப்பிற்குள் இருந்தும் கயலின் உடல் நடங்கியது. தன் அடிவயிற்றை அணைத்திருந்த அவள் கைகளை இன்னும் விலக்கவில்லை. 

சந்திரனின் நிலையைப் பார்த்து வருமாறு மணியை அனுப்பிய அன்பு சாலையோர மரத்தடியிலிருந்த கல்லில் கயலை அமர வந்து விட்டு தண்ணீர் எடுத்து வர காருக்குச் சென்றான். 

தண்ணீர் எடுத்து வந்து கயலுக்குப் புகட்டியவன் நிமிர, மணியும், சந்திரனும் நடந்து வந்து கொண்டிருந்தனர். சந்திரனுக்கு சிற்சில கீறல்களும்,நெற்றியில் சிறிதளவு இரத்தக் காயம் தானே இன்றி வேறெதுவும் பெரிய அடியில்லை. 

சந்திரன் நெருங்கி வந்து கொண்டிருக்க, அவன் எதிர் சென்றாள் கயல். கண்களில் நீரோடு, கரம் குவித்து, மண்டியிட்டவள் அவன் காலில் விழ முயல, அதற்குள் தடுத்துத் தூக்கி நிறுத்திய சந்திரன், “என்ன கயலு இதெல்லாம்?” என்றான் கண்டிப்புடன்.

ஒருவேளை அவன் வராமல் இருந்திருந்தாளோ, இல்லை வர தாமதமாகியிருந்தாளோ அவளின் ஆருயிர் கணவன் அன்பு, தன் வயிற்றில் உதித்த உலகறியா சிசுவின் நிலை! நினைத்துப் பார்க்கக் கூட அவள் தாயுள்ளம் பதறியது. அவர்கள் வம்சத்தின் ஒருதலைமுறையே இல்லாமல் போயிருக்கும். 

அன்பு கண்கள் சிவக்க, உடல் இறுக அடக்கப் பட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். போயும் போயும் அவன் காலில் மண்டியிடுகிறாளே எனக் கயலையும், அவள் எதிரே நிற்பவனையும் எரிப்பது போல் முறைத்தவாறு நின்றான்.

உங்களுக்குத் தெரியாது மாமா, என் உசுர விட நான் பெருசா நினைக்குற என் ரெட்ட உசுர நீங்க காப்பாத்திக் கொடுத்துட்டீங்க மாமா. நன்றின்னு ஒரு வார்த்தையில எப்படி சொல்லுவேன்!எனத் தளதளக்கும் குரலில் கூறினாள்.

சற்று தொலைவில் நிறுக்கும் அன்புவை ஒரு பார்வை பார்த்தவன், பின் கயலை நோக்கி, “பத்திரமா வீட்டுக்குப் போங்கஎன்று திரும்பிச் சென்றான். மனத்திற்குள்ளே நீ என்றும் நலமுடன் வாழவேண்டும் கயல் என நினைத்தான்.

Advertisement