Advertisement

அத்தியாயம் 12

கயல் கூறியதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், அவள் கேட்டு அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லைஎனவே இராஜமாணிக்கத்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றான். 

உள்ளே செல்லவே, அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வந்த பூங்கோதை, “வாங்க…” ஒற்றைச் சொல்லில் வரவேற்று சமையலறைக்குள் சென்று கொண்டாள்.

‘அதிகம் பேசியதில்லை எனினும் சிறு வயதில் அன்பு மாமா என்றுதானே அழைப்பாள்? இப்போது ஏன்சரி எப்படியிருந்தால் என்ன? என்றெண்ணி அவன் அமரபக்கத்து அறையிலிருந்து அவள் அன்னை ரெங்கநாயகி வந்தார். பளபளக்கும் பட்டும்ஒளிவீசும் தங்க நகையுமென பெரிய வீட்டுப் பெண்மணிக்காக அடையாளத்துடன் வந்தார். 

அன்பு தம்பி வாங்கவாங்க... நல்லாயிருக்கீங்களாசிவகாமியம்மா நல்லா இருக்காங்களா?” என்றவாறு அடுப்பறையில் பக்கம் திரும்பி, “அம்மாடி பூவு, தம்பிக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..” என்றார். 

தம்பி மோர் சாப்புடுவீங்கதானே?” மீண்டும் அவனிடம் ஒரு கேள்வியை வைத்தார்.

லேசான புன்னகையுடன் தலையாட்டியவன், “அங்கிள் வீட்டுல இல்லையா?அவரைப் பார்க்கத்தான் இங்க வந்தேன்” என்றான்.

அவரு டவுன் வரை போயிருக்காரேகொஞ்ச நேரம் இருங்க, அவர் வந்திடுவாரு” எனும் போது பூங்கோதை கையில் மோர் டம்ளருடன் வந்து அவனிடம் நீட்டினாள். 

வாங்கிப் பருகியவன் தானும் டவுனுக்குச் செல்வதால் அங்கே அவரைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி விடைபெற்றுச் சென்றான்.

தான் சென்ற வேலைகளை முடித்துக் கொண்டு இராஜமாணிக்கத்தைப் பார்த்தவன் லைப்ரரியைப் பற்றிப் பேசினான்.

அங்கிள் லைப்ரரி எதுக்கு மூடிட்டீங்க?” என்க,”ஸ்டாஃப் இல்ல அன்புபடிக்குறதுக்கும் ஆள் வர்றதில்லை. அப்புறம் கட்டிடமும் பழைய கட்டிடம். பராமரிக்க முடியல்ல அதான் தம்பி” என்றார். 

திரும்பவும் புதுப்பித்து ஓப்பன் பண்ணா பசங்களுக்கு யூஸ் ஆகுமே” என்க,

புதுப்பிக்கணும்டெம்பரவரி ஸ்டாஃப் பார்க்கணும். அதுக்கெல்லாம் ஊர் பொது நிதியைத்தான் எடுக்கணும்பத்தாதே அன்பு” என்றவர் சற்று யோசனையுடன் நின்றார்.

அன்பு தயங்காது உடனே, “எவ்வளோவானாலும் நானே டொனேஷன் பண்ணுறேன் அங்கிள். லைப்ரரி திரும்பவும் திறக்கணும்” என்றான்.

லேசாகச் சிரித்தவர், அவன் தோள் தட்டி, “அப்படியே சுப்பிரமணி குணம் தான் தம்பி உனக்கும். கண்டிப்பா பண்ணலாம்நானும் என்னால முடிச்சதை பண்ணுறேன். சீக்கிரம் திறந்துடலாம்” என்றார்.

தலையாட்டியவன் “தேங்க்ஸ் அங்கிள். அப்புறம் ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு நீங்க தான் சிறப்பு விருந்தினர். கண்டிப்பா வரணும் அங்கிள்” என்க, “வந்திடலாம் தம்பிபுதன்கிழமை ஊர் பொதுக்கூட்டம் திருவிழா ஏற்பாடு பத்தி முடிவெடுப்பாங்க. ஊர் பெருசுக எல்லாம் வருவாங்க நீங்களும் வரணும்” என்று அழைக்கச் சரியென்று விடைபெற்றுச் சென்றான். 

சற்றே தாமதமாக எழுந்ததால் அனைத்து வேலைகளும் தாமதமாகி விடவேகவேகமாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள் கயல். 

நாற்று நடவிற்கு நல்ல நேரம் குறித்து வேலையாட்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார் சிவகாமி. நேரம் செல்லவே வேலையாட்கள் இன்னும் வாராமல் இருக்க, சம்பிரதாயத்திற்கு ஒரு கட்டு நற்றேனும் நட்டிவிட வேண்டுமென்று எண்ணியவர் கயல் செல்வதைப் பார்த்து அவளை அழைத்தார். 

‘ஏற்கனவே லேட்டாச்சு. இப்போது எதுக்கு இவங்க கூப்பிடுறாங்கன்னு தெரியலையே?’ நினைத்தவாறு அருகில் வர, “அம்மாடி, சேலையைத் தூக்கிச் சொருகிட்டு சேத்துல இறங்கு. சரவணா ரெண்டு நாத்துகட்ட எடுத்து கொடுடா” என்க, “எதுக்கு..?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள். 

அவர் காரணம் கூறவே மறுக்காமல் வயலில் இறங்கியவள் நாற்றுக்கட்டை எடுத்து கிழக்கு நோக்கிக் கைகூப்பி எல்லைக் காளியம்மனை வணங்கிக் கொண்டு கட்டுகளைப் பிரித்து இரண்டு இரண்டாகச் சேற்றில் உள்ளங்கை மூழ்குமாறு நட்டினாள்.

இரண்டு கட்டுகளை முழுதாக நட்டி முடித்துச் சேற்றோடு வெளியே வர, “இப்படியேவா ஸ்கூலுக்குப் போக முடியும்கயலு, கிணத்துக்கிட்ட போய் கழுவிட்டு வாம்மா” என்று அனுப்பி வைத்தார். 

‘என்னது இது புதுப்பாசம் எல்லாமே புதுசாயிருக்கே?’ நினைத்தவாறு கிணற்றின் அருகே சென்றாள்.

இரு கையிலும் சேறாக இருக்கவே யாரேனும் தண்ணீர் ஊற்றினால் உதவியாக இருக்குமென நினைத்தவள் சுற்றிப் பார்க்க, மரத்தடியில் அன்பு நின்று மொபைலில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

பேசி முடிக்கவே “மாமா..” என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்க்ககயல் இரு கையிலும் சேற்றுடன் தூக்கிச் சொருகிய புடவையில் லேசாக வெற்றிடை தெரியகணுக்கால்கள் இரண்டிலும் சேற்றோடு நின்று கொண்டிருந்தாள். 

உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் முறைத்தவாறு ‘என்ன?’ என்று ஒருபார்வை பார்த்தான்.  

கைகால் கழுவணும், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறீங்களா?” என அமைதியாகக் கேட்கஅவனின் முறைப்பு தான் கூடியது.

“சரி உங்களால முடியாதுன்னா விடுங்க நான் சரவணன் அண்ணன்னைக் கூப்பிட்டுக்கிடுறேன். சரவணன் அண்ணா.. அண்ணா..” அவள் அழைக்கவே, அவன் பார்வையில் கனல் கூடியது.  

அருகே வந்தவன், சிறு வாளியில் தொட்டியிலிருந்து நீர் எடுத்து முகத்தைத் திருப்பிக்கொண்டு ஊற்றினான்.

“போதுமா…?” என்கஇன்னும் கொஞ்சம் கொஞ்சமென்று அவள் கேட்டுக் கொண்டுடே இருந்தாள். 

‘எவ்வளோ நேரம் தான் ஆகுமோ..?’ என்று அவன் எரிச்சலோடு அவள் புறம் திரும்ப, இன்னும் அவள் சேற்றோடுதான் நின்று கொண்டிருந்தாள். 

அப்போதும் அவளை நேராகப் பார்த்து முறைக்கவே, “இந்த பக்கம் பார்த்துச் சரியா ஊத்தணும். அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கிட்டு கீழ ஊத்துனா நான் என்ன செய்யட்டுமாம்?” எனக் கொஞ்சலோடு கேட்டாள்.

மீண்டும் அவளைப் பார்த்து தண்ணீர் எடுத்து ஊற்ற,  இரு கைகளையும் கழுவிக் கொண்டு காலை நீட்டிக் கழுவினாள். சேறு விலக விலக அவள் பொன்னிறக் கால்களின் வெள்ளிக் கொலுசுகள் நீர்த் துளியோடு மின்னியது. 

அதை ரசித்தவனுக்குத் தொட்டுத் தடவி முத்தமிட வேண்டுமென்ற எண்ணம் அவனை வேகமூட்டியது. அவள் நுனி விரல் கூட அவனை போதையூட்டி மயக்கச் செய்யவேவேண்டாம்.. வேண்டுமென மனத்திற்குள் அலாரமடிக்க, பார்வையை உயர்த்தினான். என்னவோ அவனுக்கு வந்த சோதனையாகச் சேலை நழுவிய அவள் இடை தான் பார்வையில் விழுந்தது.

மனம் தடுமாறியது. அவள் இடையில் கரம் கோர்த்து அணைக்க தோன்றியது. தன்னிலையே மறந்தவனின் மறு கை அவளை நெருங்க, “போதும் மாமா.. போதும்..” என்றவாறு நிமிர்ந்தவள், கைகளை உதறிவிட்டு சென்றாள்.

நீட்டிய கைகளால் தான் நெற்றியை அழுத்தி தேய்த்துக் கொண்டவன் நீண்ட மூச்சினை விட்டுதான் மொபலில் இருந்த கயலின் புகைப்படத்தில் இதழ் பதித்தான். 

கயல் வரவே “இந்தாடி” என்றவாறு ஒரு ரூபாய் நோட்டை நீட்டினார் சிவகாமி.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” என முகம் திருப்பினாள். அவர் கட்டாயப்படுத்தியும் பிடிவாதமுடன் வாங்க மறுத்தாள். 

‘காசு கொடுத்தா வாங்கிக்காம வேண்டாம்னு சொல்லுதே இந்தப் புள்ள?’ எனச் சரவணன் நினைத்தவாறு நின்றார். வேலையாட்கள் அப்போது தான் வரவே அவர்களிடம் சரவணன் செல்லகிளம்பிய கயல் மீண்டும் அவர்களின் அருகே வந்தாள். 

என்ன ராக்காயி பாட்டி, இப்போ தான் உங்களுக்குப் பொழுது விடிச்சுருக்கோ? வள்ளியக்கா பையன் ஸ்கூலுக்குப் போய் ஒருமணி நேரமாச்சு. இதான் நீங்க வர்ற நேரமாஈஸ்வரி அத்தைகிட்ட சம்பளம் மட்டும் சரியா கேப்பீங்க.. சரியான நேரத்துக்கு வர மாட்டீங்களோ?” அனைவரையும் கேள்வி கேட்டவள், சரவணன் புறம் திரும்பி, “எல்லாருமே அரைமணி நேரம் லேட்டாத்தான் வந்துருக்காங்க. அரைமணி நேரம் கூட வேலை பார்க்கச் சொல்லுங்க” என்று கிளம்பினாள்.

‘என்னடா இந்தப் புள்ள காசு கொடுத்தாலும் வாங்க மாட்டிக்குலேட்டா வேலைக்கு வர்றவங்களையும் சொந்த வயலு மாதிரி அதட்டி அதிகாரம் பண்ணுது. இதுல எனக்கே எஜமானி அம்மா மாதிரி கட்டளை வேறஎன்னவோ சரியில்லை’ என்றெண்ணினான் சரவணன்.

பள்ளியில் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து, அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. ராஜமாணிக்கம் முக்கிய விருந்தினராய் இருக்க, அவரோடு பூங்கோதையும் சென்றிருந்தாள்.

கயலும் அங்கு தான் இருப்பாள் என்பதால் ஜெயந்தியும் செல்ல வேண்டுமென்று எண்ணினாள். ஆனால் வசந்தி செல்ல வேண்டாமென்று சொல்ல, ஜெயந்தி பிடிவாதம் பண்ணினாள். எனவே சந்திரனுடன் அனுப்பி வைத்தார் ருக்மணி.

கிட்டத்தட்ட இரண்டு வாரமாகப் பள்ளியின் பக்கமே வராமலிருந்த அன்பு, விழாவிற்காக வந்திருந்தான்.

ஊதா வண்ண பட்டுடுத்திநீண்ட பின்னலில் மல்லிகை வைத்திருக்க, அதில் கூடுதல் அழகோடு மிளிர்ந்தாள் கயல். மாணவர்களைத் தயார்ப்படுத்துவதுவிருந்தினரை வரவேற்பது எனப் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தவள் தோழியரை கவனிக்கவில்லை. 

அன்புவின் கண்கள் யாருமறியாது அவ்வப்போது அவள் அழகை ரசித்தது. விழா தொடங்கி வரவேற்பு, பேச்சு வார்த்தைகள் முடிந்த பின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது.

அன்பு, ராஜமாணிக்கம்பூங்கோதை மற்ற விருந்தினர் ஒருபுறம் அமர்ந்திருக்கஜெயச்சந்திரனும் ஜெயந்தியும் மற்றொருபுறம் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, தங்களைத் தாண்டிச் சென்ற கயலை ஜெயந்தி அழைக்க, சந்திரன் அவள் கையை பற்றியிழுத்து அருகே அமர வைத்தான். அவர்களோடு பேசியவாறு பார்த்துக் கொண்டிருக்க, அன்புவின் கண்கள் கோபம் பொங்க அவளைப் பார்த்தது.

சிறிது நேரத்தில் மாணவர்கள் அழைக்கவே கயல் எழுந்து சென்றுவிட்டாள். 

கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைய இருள் சூழ்ந்து இரவானது. பூங்கோதை அவள் தந்தையுடன் சென்றுவிடசந்திரனும் ஜெயந்தியும் கிளம்பினர்.

அண்ணா, கயலு மட்டும் எப்படி தனியா வருவா அவளையும் கூட்டிட்டு போலாம். நீ கொஞ்சம் வெயிட் பண்ணு நான் போய் அவளைக் கூட்டு வந்துடுறேன்” என்க, “இரு ஜெயந்தி நீ போய் கார்ல உக்காரு நான் போய் கூட்டு வர்றேன்” என்றான் சந்திரன்.

அவளும் சரியென்று செல்ல சந்திரன், கயலை தேடிச் சென்றான். இடையில் ஒரு மாணவனிடம், “ஏலேஉங்க கயல் மிஸ் எங்கடா இருக்காங்க?” என்கஅந்த மாணவன் தெரியாது என்று தலையாட்ட, அருகிலிருந்தவன், “மேலே மேக்கப் ரூம்கிட்ட பார்த்தேன் அண்ணா” என்றான். 

மேக்கப் ரூம் எங்கடா இருக்கு?” எனக் கேட்க, “முதல் மாடியில இரண்டாவது ரூம்” என்றவர்கள் விலகிச் சென்றனர்.

விழா முடிந்த பின் சிக்னல் கிடைக்காததால் மாடியிலிருந்து போன் பேசிவிட்டு அன்பு இறங்கஎதிரே வந்தாள் கயல். இரண்டு வாரமாகக் கண்ணில் படாமல் தன்னைத் தவிக்க விட்டதில் கொஞ்சம் கோபமுடன் இருந்தவள், அவனிடம் விளையாட எண்ணினாள். 

அவன் வலதுபுறம் நகர, மறித்து நின்றாள். விலகியவன் இடதுபுறம் நகர, இடுப்பில் கை வைத்துக் கொண்டு மீண்டும் மறித்து நின்றாள். அவளை இடித்தவாறு தாண்டிப் படிகளில் இறங்கிச் செல்ல, அவன் பின்னே வந்தவள் அவன் கைபிடித்து இழுத்தாள்.

இழுத்த வேகத்திற்கு அவள் சுவரில் சாயஅவள் மேல் விழவிருந்தவன், சுதாரித்து சுவரில் கையூன்றி நின்றான். மாடிப்படிகளின் அடியில் இருள் சூழ்ந்தவிளக்குகளற்றயாருமில்லாத இடத்தில் உரசிக் கொள்வதற்கு சிறு தொலைவில் நின்றிருந்தனர் இருவரும்.

அவள் செயலில் முற்றிலும் கோபம் கொண்டவன், “ஏய், பைத்தியமாடி நீ?” எனப் பற்களைக் கடித்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டு, விலக முயலஅவன் சட்டைக் காலரைப் பிடித்து மேலும் தன்னருகே இழுத்தவள், “பைத்தியம்னு சொல்லாத மாமாவேணா அன்பு மாமா மேல பைத்தியம்னு சொல்லிக்கோ” என்றாள்.

இவளிடம் பேசுவது வீண் என்று நினைத்து அவளிடமிருந்து விலக முயன்றான். ‘தன் மேல் விழுந்து விடக்கூடாது என்று கவனமுடன் இருக்கிறானே..’ நினைத்தவள், மேலும் பலமுடன் அவன் சட்டையை இழுத்து, “எப்ப தான் மாமா உங்க பிடிவாதத்தை விடுவீங்க?”என்க, “விட முடியாது விடவே முடியாதுடி…” என அழுத்தமுடன் கூறினான்.  

கயலைத் தேடி வந்த சந்திரன், அன்புவின் கடைசி வரிகளைக் கேட்டவாறு இவர்களைப் பார்த்தான். அவன் பார்வையில் கயலை நகரவிடாது இருபுறமும் கையூன்றி அவளை சிறை செய்த அன்புவிட முடியாதுடி என்று கூறுவதும், அவனை விலக்கிவிட அவன் சட்டையில் கைவைத்துக் கயல் தள்ளுவதும் போன்ற தோற்றத்தைத் தந்தது. 

தன் கயலிடம் அன்புவின் செயல் சந்திரனுக்குக் கோபத்தைக் கொடுத்தது. அன்புவை இழுத்து வந்து அறைய வேண்டும் போலிருந்தது. உள்ளுக்குள் எரிமலையாய் பொங்க, எல்லையில்லாக் கோபத்தை தன் மனதிற்குள் அடைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு விலகிச் சென்றான். ஆனால் அடக்கப்படும் கோபம் நல்லதற்கல்லவே!

Advertisement