Ratchagan
அத்தியாயம் – 20
‘திருமணம் என்பது ஆணும், பெண்ணும் ஒரு கூரைக்கு கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்வது. இவர்கள் மனம் உணர்வுகளைப் பரிமாற சம்மதப்பட்டு விட்டது என்பதை ஊருக்கு அறிவிக்கும் விஷயம் திருமணம்...’ பாலகுமாரனின் வரிகளை மீண்டும் படித்தான்...
“வி..விடுங்க பிரபா, எனக்கு நிறைய வேலை இருக்கு...” சொல்லிவிட்டு கிட்டத்தட்ட அடுக்களைக்குள் ஓடி ஒளிந்து கொண்டவளை ஏமாற்றத்துடன் நோக்கினான் பிரபஞ்சன். மனமும், உடலும் தாம்பத்ய உறவின் அடுத்த கட்டத்துக்காய் ஏங்கத் தொடங்கியிருக்க ஆவலுடன் முன்னேறத் தொடங்கியவனை அந்த உதாசீனம், சம்மட்டியால் அடித்துத் தள்ளியது போல் ஒரு வெறுப்பு எழுந்தது.
ஆனால் அடுக்களைக்குள் நுழைந்து நீண்ட மூச்சுகளை...
அத்தியாயம் – 19
நாட்கள் நகர்ந்தது.
வைஷாலியின் வளைகாப்பு நல்லபடியாய் முடிந்தது. இன்சூரன்ஸ் ஆபீஸிலிருந்து கிடைத்த பணத்தில் ஒரு தொகையை தங்கையின் விசேஷ செலவுக்கு அனுப்பிக் கொடுத்தான் பிரபஞ்சன். மீதித் தொகையை மனைவியிடம் கொடுத்திருந்தான்.
ராதிகாவுக்கு மகனும், மருமகளும் வராதது குறையாய் இருந்தாலும் மகளின் விசேஷத்தை நல்லபடியாகவே முடித்திருந்தார். பாட்டி பரிமளம் பேரனைக் காண முடியாமல் வருத்தப்படவே அவரையும்,...
“சாரி...” என்றவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் திரும்பி வர காபிக் கோப்பையை நீட்டினான் அர்ஜூன்.
“சரி, நான் கிளம்பறேன்...” என்ற அர்ஜூன் விடைபெற வழியனுப்ப அவனுடன் வெளியே வந்த ரஞ்சனா, “தேங்க்ஸ் அர்ஜூன்...” என்றாள் நெகிழ்வுடன்.
“ஹேய்... எதுக்கு சனா...”
“எல்லாத்துக்கும்...” நெகிழ்வுடன் சொல்லிவிட்டு ரஞ்சனா வீட்டுக்குள் சென்றுவிட அவன் புன்னகைத்து நகர்ந்தான்.
லிப்டில் இறங்கி காரை எடுத்தவன்...
அத்தியாயம் – 18
பிரபாவுக்கு மட்டுமின்றி அர்ஜூனுக்கும் சேர்த்தே சமைப்பதாய் சொன்னார் தியாவின் அன்னை. அவன் வந்திருப்பது தெரிந்ததும் சாப்பிட்டு செல்ல வேண்டுமென்று அன்புக் கட்டளையிட அவனால் மறுக்க முடியவில்லை. அன்று அர்ஜூனுக்கு ஆசுபத்திரியில் பெரிதாய் வேலையும் இல்லாதிருக்க சம்மதித்து விட்டான்.
“ஏன் டாக்டர், நீங்களும் ரஞ்சனாவும் திக் பிரண்ட்ஸ் தானே... அப்புறம் ஏன் அவங்க கல்யாணத்துக்கு...
“ரஞ்சு, எழுந்திருமா...! மணி ஏழாயிடுச்சு...” வெகு நேர முயற்சிக்குப் பின் கண்ணைத் திறந்தவள் அவசரமாய் கடிகாரத்தைப் பார்த்து வேகமாய எழ முயல தடுமாறினாள்.
“ஹேய்...! மெதுவா... என்னாச்சு, உடம்பு முடியலயா...?” அவன் பதைப்புடன் கேட்க சோர்வுடன் அவனை நோக்கியவள், “ப்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல பிரபா... டைம் ஆயிருச்சு, இதோ வந்துடறேன்...” என்றவள் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது...
அத்தியாயம் – 17
மேகமில்லா வானம் தெளிந்திருந்தது. ஆனால் மனதுக்குள் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்ததால் பிரபஞ்சனின் முகமும் மனமும் கறுத்து இறுகிக் கிடந்தன. அதற்குக் காரணம் சற்று முன் அலைபேசியில் அவனுக்கு வந்த தகவல்.
அவனை அழைத்திருந்த இன்சூரன்ஸ் அலுவலக நண்பர் அவனுக்கான காப்பீடு தொகை “இரு நாளில் உங்கள் வங்கி எண்ணுக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார்கள்...”...
“போயிட்டு வா, ரஞ்சு...” என்றான் அவன்.
அர்ஜூனைப் பார்த்த ரஞ்சனாவின் பார்வையில் சிறு எரிச்சல் இருந்ததோ...? என்று தோன்றியது பிரபாவுக்கு.
அவர்கள் சென்றதும் சட்டென்று ஒரு பேரமைதி வந்து சூழ்ந்து கொண்டது போல் தோன்றியது பிரபஞ்சனுக்கு. அர்ஜூன் இருக்கும் இடம் கலகலப்பாய் நிறைந்திருப்பது போல் இருந்தது. அமைதியாய் கண்ணை மூடி அப்படியே சாய்ந்து கொண்டான் பிரபஞ்சன்.
சிறிது நேரம்...
அத்தியாயம் – 16
அன்று ஞாயிற்றுக் கிழமை.
ஓயாமல் உழைக்கும் கதிரவனுக்கும் அன்று வேலை செய்ய மனமில்லையோ என்னவோ, கறுத்த மேகத்துக்குள் ஒளிந்து ஓய்வெடுத்தபடி சுணங்கிக் கொண்டிருந்தான்.
கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாய் அன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற வானிலை அறிக்கையை மெய்யாக்குவது போல் வானம் மப்பும், மந்தாரமுமாய் கறுத்து பெய்யலாமா வேண்டாமா என்று குழம்பி...
அத்தியாயம் – 15
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த ரஞ்சனா, கண்டக்டரின் விசிலைத் தொடர்ந்து ‘சீக்கிரம் இறங்குங்க...’ என்ற உரத்த குரலில் கலைந்தாள். சட்டென்று பார்வையை வெளியே பதித்தவள் பேருந்து அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நிற்கவே பதட்டமாய் எழுந்து இறங்க சென்றாள்.
வழியில் அடுத்த நாளுக்கு வேண்டிய காய்கறி, பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்....
“ஹேய் குலாபி... ஆப் பீ யஹீங் ஹே...!” நீயும் இங்கே தான் இருக்கிறாயா...? எனக் கேட்டவனின் கழுத்தை கையால் சுற்றி இருந்த குழந்தை, “கிஷோ, யே கௌன் ஹே...?” என்று அவளைக் கை நீட்டி யாரென்று கேட்டது.
“யே, தும் சாச்சி ஹே...” என்றவன் குறும்புடன் அவளை நோக்க அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
“ஹேய்...! என்ன...
அத்தியாயம் – 14
நாட்கள் அழகாய் நகரத் தொடங்கின.
ரஞ்சனா கையில் காபிக் கோப்பையுடன் ஜன்னலோரமாய் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். தலையிலிருந்து துளித்துளியாய் சொட்டிய நீர்த்துளிகள் அவள் அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்றது.
அன்று அவளுக்கு இரவு ஷிப்ட் என்பதால் காலையில் மெதுவாய் எழுந்து நிதானமாய் குளித்து கையில் காபியுடன் ரசித்து குடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்து நின்றாள்.
தோழியர்...
அத்தியாயம் – 13
ரஞ்சனா களைப்புடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். நொடிக்கு நொடி விழிகள் பேருந்து வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தன. மனம் வேகமாய் கணவனிடம் செல்ல துடித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே...! இன்னும் பஸ்ஸை காணமே... அவர் வேற என்னைக் காணோம்னு தவிச்சிட்டு இருப்பார்...” யோசித்தபடி தனியார் பேருந்து வந்தால் டிக்கட் எடுப்பதற்கு சில்லறையை பாகில்...
அத்தியாயம் – 12
“இவர் டாக்டர் அர்ஜூன் கிஷோர், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்... நம்ம டாக்டர் செல்வராஜ் சீட்டுக்கு புதுசா வந்திருக்கார்... இவர் நார்த் இன்டியனா இருந்தாலும் தமிழ்நாட்டுல சில வருடங்கள் இருந்ததால நல்லாவே தமிழ் பேசுவார்... ஆல் தி பெஸ்ட் அர்ஜூன்...” சீப் டாக்டர் புதிதாய் வந்த டாக்டரை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவிட்டு தனக்கான நாற்காலியில்...
“ரஞ்சனா, இப்பதான் அவருக்கு உடைஞ்ச முதுகெலும்பை ஜாயின்ட் பண்ண ஆப்பரேஷன் பண்ணிருக்கோம்... ஸ்கேன் ரிப்போர்ட்ல இடுப்பு எலும்புல ஒரு விரிசல் தெரியுது, ஆனா அதுக்கான ஆப்பரேஷனை உடனே பண்ண முடியாது... முதுகெலும்பு செட் ஆகணும், அதுக்கு முன்னாடி அடுத்த ஆப்பரேஷனை உடம்பு தாங்காது... முதுகெலும்பு செட்டாக குறைஞ்சது மூணு மாசம் ஆகலாம், அதுவரை உக்காரவோ,...
அத்தியாயம் – 11
கடிகாரத்தில் சின்ன முள் இரண்டைத் தாண்டி நகர்ந்து கொண்டிருக்க பெரிய முள் மெல்ல நொண்டியடித்து மூன்றை தாண்டிக் கொண்டிருந்தது.
அடிக்கொரு முறை சமயம் பார்த்து கலக்கத்துடன் அலைபேசியில் கணவனை அழைக்க முயன்று தோற்று பதட்டத்தில் நடை பயின்றாள் ரஞ்சனா. அவனது எண் பதில் எதுவுமின்றி டு டு டு என்ற ஓசையுடன் அழைப்பு...
“ஹேய்...! என்னமா இது... எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு இவ்ளோ தூரம் வரணும்னு ஆசையா, நான் சொன்னா நீ வருத்தப்படுவேன்னு தான் சொல்லல... உன்னைப் பார்க்காம பத்து நாள் எல்லாம் என்னாலயும் இருக்க முடியாது... எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்பிடணும்னு தான் இந்த நேரத்துல கூட ஓடிட்டு இருக்கேன்......
அத்தியாயம் – 10
“ரஞ்சனா...”
உடன் பணிபுரியும் லாவண்யா சிஸ்டரின் அழைப்பில் திரும்பினாள் ரஞ்சனா.
“சொல்லுங்க லாவண்யா...”
“என்னாச்சு, நானும் நேத்திருந்து உங்களை கவனிக்கறேன்... எதையோ பறிகொடுத்த போல யோசனையாவே இருக்கீங்க...”
“அ..அப்படிலாம் எதுவும் இல்ல, லாவண்யா...”
“ஓகே, சொல்ல விருப்பமில்லைனா பரவால்ல... ஆனா, கொஞ்சம் கவனமா இருங்க... பேஷன்ட் ஹிஸ்டரில தப்பா மாத்தி எழுதி வச்சிருக்கிங்க, நான் பார்த்து சரி பண்ணிட்டேன்......
அத்தியாயம் – 9
“ரஞ்சு...”
“ம்ம்...” காதில் கிசுகிசுத்த கணவனின் குரலில் அவன் கைகளுக்குள் சுகமாய் கோழிக் குஞ்சு போல் கிடந்த ரஞ்சனா கண்ணைத் திறக்காமல் சிணுங்கினாள்.
“இன்னைக்கும் ரெண்டு பேரும் லீவு போட்டுடலாமா...?” கேள்வி காதில் விழவும் சட்டென்று அதிர்ந்து அவனை விலக்கி எழுந்து அமர்ந்தாள்.
இருவரும் முன்தினம் இரவு கோவையிலிருந்து கிளம்பி அதிகாலையில் சென்னை வந்து சற்று...
“நான் உன்கிட்ட தானே கேட்டேன், நீ எதுக்கு வேலை செய்துட்டு இருக்கவகிட்ட சொல்லுற...” என்று பேத்தியைக் கடிந்து கொள்ள, “போங்க பாட்டி, சீரியல்ல முக்கியமான ஸீன் ஓடிட்டிருக்கு...” என்றவள் திரும்பிக் கொண்டாள்.
“ம்ம்... என்ன பெரிய சீரியல்...? நல்லாருக்கற குடும்பத்தைக் கெடுக்க வீட்டுக்குள்ளயே வில்லன், வில்லியைக் கொண்டு வந்து குடி வைப்பாங்க, அவங்க பண்ணுறது எல்லாம்...