Ratchagan
எதுவும் பேசாமல் தலையைத் துவட்டியபடி இருந்தவனின் முகம் யோசனையைக் காட்ட, “நான் காபி கொண்டு வரேன்...” என நகர்ந்தாள் அவள். அவள் காபி கொண்டு வருகையில் பிரபஞ்சன் தயாராகி இருக்க, குடித்துவிட்டு இருவரும் கீழே வர மற்றவர்களும் தயாராகி இருந்தனர். டாக்ஸியும் வந்துவிட நல்லசிவத்திடம் சொல்லிவிட்டு மருதமலை கிளம்பினர்.
நல்லபடியாய் சாமி தரிசனம் முடிந்து காலை...
அத்தியாயம் – 3
சட்டென்று கணவனை விட்டு விலகி, “ச...சாரி...” என குனிந்தபடி சொல்ல, அவனோ “தேங்க்ஸ்...” என்றான்.
புரியாமல் நிமிர்ந்தவள் அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் புரிந்து கொள்ள சட்டென்று சிவந்த முகத்தைக் குனிந்து, “அத்தை உங்களை டிபன் சாப்பிட வர சொன்னாங்க...” என்றபடி அறைக்குள் சென்று விட்டாள்.
ஒரு மாதிரி படபடப்பாய் உணர கட்டிலில் அமர்ந்தாள்.
“அவனது...
அத்தியாயம் – 4
“ரஞ்சு மா, உன் புகுந்த வீடு பிடிச்சிருக்கா...? மாமியார், நாத்தனார் எல்லாம் நல்லா அன்பாப் பழகுறாங்களா...?” அடுக்களையை ஒதுக்கிக் கொண்டே தனிமையில் மகளிடம் விசாரித்தார் துர்கா.
“ம்ம்...”
“ஹூம், நீங்க சென்னை கிளம்பும்போது உங்க கூட வந்து வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வரணும்னு அப்பாக்கு ரொம்ப ஆசை, ஆனா அவர்...
“பரவால்லியே, வந்த வரை லாபம் என்று எண்ணாமல் இப்படி யோசிக்கிறாரே... அந்த வைஷூ போல அண்ணனுக்கு பேராசை இல்லை...” என அவனைப் பாராட்டினாள்.
“என்ன ரஞ்சுமா, அமைதியா இருக்க...”
“இல்ல பிரபா, அப்பாக்கு எனக்கு செய்ய வேண்டிய சீர் எல்லாம் எந்தக் குறையுமில்லாம செய்யணும்னு ஆசை... பணத்தைத் திருப்பிக் கொடுத்தா வாங்கிக்க மாட்டார், வருத்தப் பட தான்...
“ஹாஹா... கிரேஸி கேர்ள், இரு...! புக் தரேன்...” என்றவன் ஷெல்பில் இருந்த புக் ஒன்றை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவளிடம், “இப்ப உனக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா...?” என்றான் பிரபஞ்சன்.
“வேற வழி...? எனக்கு உங்களைப் பிடிச்சு என்ன பண்ண...? உங்களுக்கு என்னைப் பிடிக்கலியே, அதுக்காக உங்க லைப்ல வில்லியா வந்து ரெண்டு...
அத்தியாயம் – 5
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்...
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்...
இலை வடிவில் இதயம் இருக்கும்...
மலை வடிவில் அதுவும் கனக்கும்...
சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்...
ஹரிஹரனின் துள்ளலான குரலில் காதல் வழிந்து கொண்டிருக்க, இரவு நேரக் குளிர்ந்த காற்றைக் கிழித்தபடி சென்னைக்கான பாதையில் பாய்ந்து கொண்டிருந்தது அந்த சொகுசுப் பேருந்து.
பிரபஞ்சன், ரஞ்சனா இருவரும்...
அத்தியாயம் – 6
காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல் விழிப்பு வந்துவிட்டது பிரபஞ்சனுக்கு. கண்ணைத் திறந்தவன் தன் நெஞ்சில் பஞ்சுப் பொதியாய் தலை வைத்து உறங்கும் மனைவியைக் கண்டதும் மென்னகை கொண்டான். அவனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த வளைக்கையும், நெஞ்சில் பதிந்திருந்த மதிமுகமும் இது எனக்கான இடம் என்னும் உரிமையை சொல்ல ஆழ்ந்து உறங்கிக்...
அத்தியாயம் – 7
மொபைலில் அலாரத்தின் சத்தத்தில் கண்ணைச் சுருக்கிய ரஞ்சனா உறக்கம் போதவில்லை என்று கெஞ்சிய இமைகளை கஷ்டப்பட்டுப் பிரித்தாள். கணவனின் அணைப்புக்குள் இருந்தவளுக்கு முந்தைய இரவு நடந்தது நினைவில் வந்து முகத்தை செம்மையாக்கியது.
பிரபஞ்சனின் இதழ்கள் உறக்கத்திலும் புன்னகையை சுமந்திருக்க நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைக் காதலுடன் நோக்கினாள் அவன் மனைவி. அவள் அவனிடமிருந்து...
“நான் உன்கிட்ட தானே கேட்டேன், நீ எதுக்கு வேலை செய்துட்டு இருக்கவகிட்ட சொல்லுற...” என்று பேத்தியைக் கடிந்து கொள்ள, “போங்க பாட்டி, சீரியல்ல முக்கியமான ஸீன் ஓடிட்டிருக்கு...” என்றவள் திரும்பிக் கொண்டாள்.
“ம்ம்... என்ன பெரிய சீரியல்...? நல்லாருக்கற குடும்பத்தைக் கெடுக்க வீட்டுக்குள்ளயே வில்லன், வில்லியைக் கொண்டு வந்து குடி வைப்பாங்க, அவங்க பண்ணுறது எல்லாம்...
“இனி நீங்க போங்க பிரபா, நான் பார்த்துக்கறேன்...” சொன்னவள் அடுக்களையை ஒதுக்கிவிட்டு ஹாலுக்கு வந்து கணவன் அருகே அமர்ந்தாள். டீவியில் கண்ணைப் பதித்திருந்தவன் அவள் வந்ததும் அமைதியாய் தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவளும் மறுக்கவில்லை.
“இன்னிக்கு வொர்க் எப்படி இருந்துச்சு, வேலை ஜாஸ்தியா...?”
“எப்பவும் போல தான், ஆனா என்னால தான் முழு மனசோட வேலை...
“ஹேய்...! என்னமா இது... எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு இவ்ளோ தூரம் வரணும்னு ஆசையா, நான் சொன்னா நீ வருத்தப்படுவேன்னு தான் சொல்லல... உன்னைப் பார்க்காம பத்து நாள் எல்லாம் என்னாலயும் இருக்க முடியாது... எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்பிடணும்னு தான் இந்த நேரத்துல கூட ஓடிட்டு இருக்கேன்......
அத்தியாயம் – 9
“ரஞ்சு...”
“ம்ம்...” காதில் கிசுகிசுத்த கணவனின் குரலில் அவன் கைகளுக்குள் சுகமாய் கோழிக் குஞ்சு போல் கிடந்த ரஞ்சனா கண்ணைத் திறக்காமல் சிணுங்கினாள்.
“இன்னைக்கும் ரெண்டு பேரும் லீவு போட்டுடலாமா...?” கேள்வி காதில் விழவும் சட்டென்று அதிர்ந்து அவனை விலக்கி எழுந்து அமர்ந்தாள்.
இருவரும் முன்தினம் இரவு கோவையிலிருந்து கிளம்பி அதிகாலையில் சென்னை வந்து சற்று...
அத்தியாயம் – 8
காலை ஏழு மணி.
அந்தக் கல்யாண மண்டபம் முழுதும் பட்டும், பகட்டுமாய் ஜனங்களோடு நிறைந்திருக்க, முன்னில் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்த பிரபஞ்சன் வருபவர்களை கை கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தான். கணவன் அருகே மனதின் மகிழ்ச்சி முகத்தில் வழிய அணிந்திருந்த பொன்னகைக்குப் போட்டியிடும் அழகான புன்னகையோடு தேவதையாய் நின்றிருந்தாள் ரஞ்சனா.
வைஷாலியின் கல்யாணத்துக்கு வந்திருந்த ரஞ்சனாவின்...
அத்தியாயம் – 10
“ரஞ்சனா...”
உடன் பணிபுரியும் லாவண்யா சிஸ்டரின் அழைப்பில் திரும்பினாள் ரஞ்சனா.
“சொல்லுங்க லாவண்யா...”
“என்னாச்சு, நானும் நேத்திருந்து உங்களை கவனிக்கறேன்... எதையோ பறிகொடுத்த போல யோசனையாவே இருக்கீங்க...”
“அ..அப்படிலாம் எதுவும் இல்ல, லாவண்யா...”
“ஓகே, சொல்ல விருப்பமில்லைனா பரவால்ல... ஆனா, கொஞ்சம் கவனமா இருங்க... பேஷன்ட் ஹிஸ்டரில தப்பா மாத்தி எழுதி வச்சிருக்கிங்க, நான் பார்த்து சரி பண்ணிட்டேன்......
அத்தியாயம் – 13
ரஞ்சனா களைப்புடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். நொடிக்கு நொடி விழிகள் பேருந்து வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தன. மனம் வேகமாய் கணவனிடம் செல்ல துடித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே...! இன்னும் பஸ்ஸை காணமே... அவர் வேற என்னைக் காணோம்னு தவிச்சிட்டு இருப்பார்...” யோசித்தபடி தனியார் பேருந்து வந்தால் டிக்கட் எடுப்பதற்கு சில்லறையை பாகில்...
“ரஞ்சனா, இப்பதான் அவருக்கு உடைஞ்ச முதுகெலும்பை ஜாயின்ட் பண்ண ஆப்பரேஷன் பண்ணிருக்கோம்... ஸ்கேன் ரிப்போர்ட்ல இடுப்பு எலும்புல ஒரு விரிசல் தெரியுது, ஆனா அதுக்கான ஆப்பரேஷனை உடனே பண்ண முடியாது... முதுகெலும்பு செட் ஆகணும், அதுக்கு முன்னாடி அடுத்த ஆப்பரேஷனை உடம்பு தாங்காது... முதுகெலும்பு செட்டாக குறைஞ்சது மூணு மாசம் ஆகலாம், அதுவரை உக்காரவோ,...
அத்தியாயம் – 12
“இவர் டாக்டர் அர்ஜூன் கிஷோர், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்... நம்ம டாக்டர் செல்வராஜ் சீட்டுக்கு புதுசா வந்திருக்கார்... இவர் நார்த் இன்டியனா இருந்தாலும் தமிழ்நாட்டுல சில வருடங்கள் இருந்ததால நல்லாவே தமிழ் பேசுவார்... ஆல் தி பெஸ்ட் அர்ஜூன்...” சீப் டாக்டர் புதிதாய் வந்த டாக்டரை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவிட்டு தனக்கான நாற்காலியில்...
அத்தியாயம் – 11
கடிகாரத்தில் சின்ன முள் இரண்டைத் தாண்டி நகர்ந்து கொண்டிருக்க பெரிய முள் மெல்ல நொண்டியடித்து மூன்றை தாண்டிக் கொண்டிருந்தது.
அடிக்கொரு முறை சமயம் பார்த்து கலக்கத்துடன் அலைபேசியில் கணவனை அழைக்க முயன்று தோற்று பதட்டத்தில் நடை பயின்றாள் ரஞ்சனா. அவனது எண் பதில் எதுவுமின்றி டு டு டு என்ற ஓசையுடன் அழைப்பு...
அத்தியாயம் – 24
மேலும் இரண்டு வாரங்கள் ஓடியிருக்க பிரபஞ்சனைப் பரிசோதித்த அர்ஜூன், “யூ ஆர் பர்பக்ட்லி ஆல்ரைட்...” என்றான் சந்தோஷத்துடன். அதைக் கேட்டதும் பிரபஞ்சனின் முகம் பூவாய் மலர அருகே இருந்த மனைவியைக் காதலுடன் நோக்கினான்.
“அப்படின்னா நான் நார்மல் ஆகிட்டேனா... இனி எப்பவும் போல, எல்லாரையும் போல இருக்கலாமா...?”
“கண்டிப்பா... இனி எந்தத் தடையுமில்லாம பழைய...
அத்தியாயம் – 22
பிரபஞ்சனுக்கு மதியம் எளிய உணவு கொடுக்குமாறு கூறி இருந்ததால் ரஞ்சனா, கணவனுக்கு கஞ்சியைக் குடிக்க வைத்து மாத்திரை கொடுத்திருக்க, பெயின் கில்லரின் உதவியுடன் உறக்கத்தில் இருந்தான் பிரபஞ்சன். அவனையே பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் வெளியே அர்ஜூனின் குரல் கேட்கவும் எழுந்து வெளியே வந்தாள்.
அட்டண்டரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த அர்ஜூன் இவளைக்...