Ratchagan
அத்தியாயம் – 8
காலை ஏழு மணி.
அந்தக் கல்யாண மண்டபம் முழுதும் பட்டும், பகட்டுமாய் ஜனங்களோடு நிறைந்திருக்க, முன்னில் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்த பிரபஞ்சன் வருபவர்களை கை கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தான். கணவன் அருகே மனதின் மகிழ்ச்சி முகத்தில் வழிய அணிந்திருந்த பொன்னகைக்குப் போட்டியிடும் அழகான புன்னகையோடு தேவதையாய் நின்றிருந்தாள் ரஞ்சனா.
வைஷாலியின் கல்யாணத்துக்கு வந்திருந்த ரஞ்சனாவின்...
“இனி நீங்க போங்க பிரபா, நான் பார்த்துக்கறேன்...” சொன்னவள் அடுக்களையை ஒதுக்கிவிட்டு ஹாலுக்கு வந்து கணவன் அருகே அமர்ந்தாள். டீவியில் கண்ணைப் பதித்திருந்தவன் அவள் வந்ததும் அமைதியாய் தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவளும் மறுக்கவில்லை.
“இன்னிக்கு வொர்க் எப்படி இருந்துச்சு, வேலை ஜாஸ்தியா...?”
“எப்பவும் போல தான், ஆனா என்னால தான் முழு மனசோட வேலை...
அத்தியாயம் – 7
மொபைலில் அலாரத்தின் சத்தத்தில் கண்ணைச் சுருக்கிய ரஞ்சனா உறக்கம் போதவில்லை என்று கெஞ்சிய இமைகளை கஷ்டப்பட்டுப் பிரித்தாள். கணவனின் அணைப்புக்குள் இருந்தவளுக்கு முந்தைய இரவு நடந்தது நினைவில் வந்து முகத்தை செம்மையாக்கியது.
பிரபஞ்சனின் இதழ்கள் உறக்கத்திலும் புன்னகையை சுமந்திருக்க நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைக் காதலுடன் நோக்கினாள் அவன் மனைவி. அவள் அவனிடமிருந்து...
“ஹாஹா... கிரேஸி கேர்ள், இரு...! புக் தரேன்...” என்றவன் ஷெல்பில் இருந்த புக் ஒன்றை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவளிடம், “இப்ப உனக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா...?” என்றான் பிரபஞ்சன்.
“வேற வழி...? எனக்கு உங்களைப் பிடிச்சு என்ன பண்ண...? உங்களுக்கு என்னைப் பிடிக்கலியே, அதுக்காக உங்க லைப்ல வில்லியா வந்து ரெண்டு...
அத்தியாயம் – 6
காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல் விழிப்பு வந்துவிட்டது பிரபஞ்சனுக்கு. கண்ணைத் திறந்தவன் தன் நெஞ்சில் பஞ்சுப் பொதியாய் தலை வைத்து உறங்கும் மனைவியைக் கண்டதும் மென்னகை கொண்டான். அவனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த வளைக்கையும், நெஞ்சில் பதிந்திருந்த மதிமுகமும் இது எனக்கான இடம் என்னும் உரிமையை சொல்ல ஆழ்ந்து உறங்கிக்...
“பரவால்லியே, வந்த வரை லாபம் என்று எண்ணாமல் இப்படி யோசிக்கிறாரே... அந்த வைஷூ போல அண்ணனுக்கு பேராசை இல்லை...” என அவனைப் பாராட்டினாள்.
“என்ன ரஞ்சுமா, அமைதியா இருக்க...”
“இல்ல பிரபா, அப்பாக்கு எனக்கு செய்ய வேண்டிய சீர் எல்லாம் எந்தக் குறையுமில்லாம செய்யணும்னு ஆசை... பணத்தைத் திருப்பிக் கொடுத்தா வாங்கிக்க மாட்டார், வருத்தப் பட தான்...
அத்தியாயம் – 5
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்...
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்...
இலை வடிவில் இதயம் இருக்கும்...
மலை வடிவில் அதுவும் கனக்கும்...
சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்...
ஹரிஹரனின் துள்ளலான குரலில் காதல் வழிந்து கொண்டிருக்க, இரவு நேரக் குளிர்ந்த காற்றைக் கிழித்தபடி சென்னைக்கான பாதையில் பாய்ந்து கொண்டிருந்தது அந்த சொகுசுப் பேருந்து.
பிரபஞ்சன், ரஞ்சனா இருவரும்...
எதுவும் பேசாமல் தலையைத் துவட்டியபடி இருந்தவனின் முகம் யோசனையைக் காட்ட, “நான் காபி கொண்டு வரேன்...” என நகர்ந்தாள் அவள். அவள் காபி கொண்டு வருகையில் பிரபஞ்சன் தயாராகி இருக்க, குடித்துவிட்டு இருவரும் கீழே வர மற்றவர்களும் தயாராகி இருந்தனர். டாக்ஸியும் வந்துவிட நல்லசிவத்திடம் சொல்லிவிட்டு மருதமலை கிளம்பினர்.
நல்லபடியாய் சாமி தரிசனம் முடிந்து காலை...
அத்தியாயம் – 4
“ரஞ்சு மா, உன் புகுந்த வீடு பிடிச்சிருக்கா...? மாமியார், நாத்தனார் எல்லாம் நல்லா அன்பாப் பழகுறாங்களா...?” அடுக்களையை ஒதுக்கிக் கொண்டே தனிமையில் மகளிடம் விசாரித்தார் துர்கா.
“ம்ம்...”
“ஹூம், நீங்க சென்னை கிளம்பும்போது உங்க கூட வந்து வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வரணும்னு அப்பாக்கு ரொம்ப ஆசை, ஆனா அவர்...
“இல்லங்க, பாவம் அத்தை... இந்த விஷயத்துல ரொம்ப மனசு விட்டுப் போயிருப்பாங்க, கவலைப்படாதீங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும்...”
“ம்ம்... உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சர்யமாருக்கு ரஞ்சு...” என்றவன் அவளை அதிசயமாய் பார்க்க, “என்ன ஆச்சர்யம்...?” என்றாள் அவள்.
“இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டா நீ தாம்தூம்னு குதிச்சு எங்க குடும்பத்தைப் பத்தி கேவலமா சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்......
அத்தியாயம் – 3
சட்டென்று கணவனை விட்டு விலகி, “ச...சாரி...” என குனிந்தபடி சொல்ல, அவனோ “தேங்க்ஸ்...” என்றான்.
புரியாமல் நிமிர்ந்தவள் அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் புரிந்து கொள்ள சட்டென்று சிவந்த முகத்தைக் குனிந்து, “அத்தை உங்களை டிபன் சாப்பிட வர சொன்னாங்க...” என்றபடி அறைக்குள் சென்று விட்டாள்.
ஒரு மாதிரி படபடப்பாய் உணர கட்டிலில் அமர்ந்தாள்.
“அவனது...
அத்தியாயம் – 2
அழகான அடர் பச்சை நிற கிரேப் சேலை உடலைத் தழுவி இருக்க, எளிய அலங்காரமும், தலை நிறையப் பூவுமாய் நின்ற ரஞ்சனாவை திருப்தியுடன் பார்த்தார் ராதிகா.
“ம்ம்... அழகா இருக்க ரஞ்சனா... சரி, நேரம் ஆச்சு... நான் பாலை சுண்டக் காய்ச்சி எடுத்திட்டு வர்றேன்...” என்று நகர்ந்தார். அவளுக்கு அலங்காரம் செய்துவிட்ட பெண்ணும்...
அத்தியாயம் – 1
“கெட்டிமேளம்... கெட்டிமேளம்...”
புரோகிதரின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கிய மங்கள வாத்தியங்களின் ஓசை மண்டபத்தை நிறைக்க, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த பிரபஞ்சன், தன் அருகே அமர்ந்திருந்த ரஞ்சனாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் துணைவியாக்கிக் கொண்டான்.
புன்னகையுடன் அவள் முகத்தை ஏறிட அவளோ கல்யாணப் பெண்ணுக்குரிய எந்த பாவமும் இன்றி யோசனையுடன் அமைதியாய்...
“ரஞ்சுமா, அம்மா மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையேடா...”
“எதுக்குமா... என் விதி இதுதான்னு கடவுள் எழுதி இருக்கும் போது உங்க மேல கோபப்பட்டு என்ன பண்ணுறது...”
“எனக்குத் தெரியும் டா... நீ எந்த சூழலுக்கும் பொருந்திப் போற பொண்ணு, உன்னோட ஆசைகளை விட குடும்ப நன்மையும், விருப்பமும் தான் உனக்குப் பெருசு... உன் நல்ல மனசுக்கு...