Monday, April 29, 2024

    Paarthiban Kanaa

    உ ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி ! பார்த்திபன் கனா 10 “ராஜா.....” “..........” “அத்தை இரண்டு முறை கூப்பிட்டாச்சு... நாம கிளம்பிட்டோமா இல்லையான்னு கேக்க...” “............” “டைம் ஆச்சுடா........” மங்கையின் மொழிகளெல்லாம் மன்னவன் செவிமடல் தீண்டி... உள்ளே நுழைந்தது தான்... ஆனாலும் அவள் மடி சாய்ந்திருந்தவனுக்கு ம்ம் கொட்டவும் தோன்றவில்லை. துளித் துளியாய்.... அவளோடான மணித்துளிகளை அக ஆழியில் சேர்த்தும் அனுபவித்தும் கழித்தான்...! இரு சூரிய...
    உ ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி! பார்த்திபன் கனா 9 கரையும் காலம்..!! வேனிற்காலம் வசந்தம் விதைத்து விடைபெற்றுச் சென்றிருக்க.. கார்காலம் வந்து நின்றது புனல் பாய்ச்ச.. கடந்த காலம் முழுவதும் அன்பு.. அக்கறை.. கொஞ்சம் ஊடல்.. கொஞ்சும்  உவகை.. சிறு துளியாய் சினம்.. இவற்றின் கனம் தான்...! யாழுக்கு மட்டுமல்ல.. எல்லாருக்கும்.  மெல்லிய இருள் கவிழ்ந்த அந்த அறையினுள் மௌனம்...
    உ ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி ! பார்த்திபன் கனா 6 விஷ்ணுவர்த்தன்... ராஜலஷ்மியை மணம் முடிக்கவிருக்கும் மணவாளன்.. பொறியியல் முடித்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை கோவையில் நடத்தி வருபவன்.. வந்த வரன் வரமாய் அமைந்து விட நிச்சயத்திற்கு நாள் குறித்தனர் பெரியோர். மாப்பிள்ளை வீட்டினர் விடைபெற்று கிளம்ப... விஷ்ணு “நான் அவர்கிட்ட பேசிட்டு வரேன்...” என்றபடி ராஜாவிடம்...
    உ ஓம் ஓம்கார சொருபனே போற்றி.. பார்த்திபன் கனா 5 எவனோ ஒருவன் வாசிக்கிறான்....... இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்....... சுவர்ணலதாவின் குரல் காற்றில் கசிந்து கொண்டிருக்க..... மெல்ல மெல்ல அதனுள் கரைந்து.. தொலைந்து போகவிருந்தவளை மீட்டெடுத்தது அந்தக் குறுஞ்செய்தி...! ஓர் அறிமுகமில்லா எண்ணிலிருந்து...! ஒரு முகவரியை குறிப்பிட்டு உடனடியாக அவ்விடம் வரவேண்டும் யாழ் என்றிருக்க..... ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனை யாழிடம். “என்ன...
    உ ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி ! பார்த்திபன் கனா 7 துளிர்...! ராஜ பார்த்திபனின் பேரன்பில் துளிர்த்து.. தழைத்து.. செழித்து.. சிறந்து நிற்கும் நாற்றுப் பண்ணை. பொறியியல் முடித்ததும்... அவன் நட்புக்கள் மென்பொருள்... மேலாண்மை என சென்றுவிட இவன் நாட்டம் நாற்றுபண்ணை மீது. அக்ரி சீட் கிடைக்க வேண்டுமென அதீத முயற்சி செய்தும்.. கிடைக்கவில்லை.....
    உ ஓம் வேதப் பொருளே ! வேந்தே போற்றி !   பார்த்திபன் கனா 11 “தப்பு செஞ்சுட்டோம்னு உணர்ந்தா மட்டும் போதாது... அதை சரி செய்யவும் வேணும் மாமா...” சிறு தயக்கம்... தடுமாற்றம் இன்றி தனக்குள் தோன்றிய கருத்தை தன் முன்னே அமர்ந்திருந்த தன் மாமானாரிடம் வைத்தாள் யாழ் மங்கை. மங்கை மொழிக்கு மறுப்பின்றி மெல்ல தலையசைத்தார் பெரியசாமி. பார்வதி...
    உ  ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி !   பார்த்திபன் கனா 12 எட்டுத் திசையும் எமக்கே என்ற எண்ணமோ என்னவோ... மூவரும் மாற்றி மாற்றி பார்த்து வைத்தார்கள்...  யாழ் மங்கையிடம் பிடிபட்டு நின்ற பொறுமை... இதோ... போகப்போகிறேன்.. இதோ... என இவளிடம் இருந்து விடை பெற ஆயத்தமாகியிருந்தது.  பார்வதி ஆரம்பிப்பார்... பார்த்திபன் ஆரம்பிப்பான்… என இவள் பார்த்து நிற்க... அவர்கள் மௌனம்...
    உ ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி ! பார்த்திபன் கனா 13 சாளரம் வழியே எட்டிப் பார்த்த கதிரவன் கதிர்கள் மெல்ல மெல்ல போர்வைக்குள் நுழைந்து மன்னவன் முகம் பார்த்துவிட முயல... அவனே போர்வை விலக்கி தன் திருமுகம் காட்டினான். பார்த்திபன் பார்வை பக்கத்து மேஜையில் இருந்த அவன் மங்கையிடம் தஞ்சம்..!  மணக்கோலத்தில் அலர்ந்த அகத்துடன் மலர்ந்த முகத்துடன் விழிகள்...
    உ ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி ! பார்த்திபன் கனா 14 நாள்கள் நாழிகளாய் மாறி மின்னலென கடந்திருக்க.... விஷ்ணு ராஜியின் நிச்சயம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து திருமணம் குறிக்கப்பட்டிருந்தது.  “யாழ்....” “அத்த..” “ராஜா ரெடி ஆகிட்டானா..? இந்த லிஸ்டை அவன் கிட்ட கொடுத்திடறியா..?”  “இதோ...” என இவள் அவர்கள் அறை நோக்கி வந்தாள். இவளுக்கும் இவளவனுக்கும் இடையே ஓடும் டெர்ம்ஸ் அண்ட்...
    உ ஓம் வெண்நீறனியும் விசாகா போற்றி ! பார்த்திபன் கனா 15 மெல்ல.. மெல்ல... இருள் விடை கொடுத்து கொண்டிருக்க... விடியல் வந்து கொண்டிருந்தது கொண்டாட்டத்துடன்.  அதற்கு கொஞ்சமும் குறையாமல் கொண்டாட்டமும் கோலாகலமுமாய் திருவிழா போல் திருமணம்.  விஷ்ணு வெட்ஸ் லஷ்மி...  நுழைவாயில் அருகில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டு மின்னலாய்... மிளிரும் வகையில்..! புன்னகையுடன் அதைக் கடந்து உள்ளே நுழைந்தால்.... வேணு கானம் வழங்கிட வேய்ங்குழலோடு...
    error: Content is protected !!