Advertisement

ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி !
பார்த்திபன் கனா 14
நாள்கள் நாழிகளாய் மாறி மின்னலென கடந்திருக்க…. விஷ்ணு ராஜியின் நிச்சயம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து திருமணம் குறிக்கப்பட்டிருந்தது. 
“யாழ்….”
“அத்த..”
“ராஜா ரெடி ஆகிட்டானா..? இந்த லிஸ்டை அவன் கிட்ட கொடுத்திடறியா..?” 
“இதோ…” என இவள் அவர்கள் அறை நோக்கி வந்தாள்.
இவளுக்கும் இவளவனுக்கும் இடையே ஓடும் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் இஸ்யூ பார்வதிக்கு தெரியவராமல் பார்த்துக் கொள்வதில் இருவரிடமும் அதீத கவனம்.. 
அறையினுள் நுழைந்தவளின் பார்வையில் படுகிறான் பார்த்திபன் படு கேஷூவலாக. அதுவும் அப்போது தான் குளித்து முடித்த வந்திருப்பான் போல. 
முன்னெற்றி முடியில் முளைத்திருந்த துளித் துளியாய் நீர்த் திவலைகள் அதை தான் அறிவித்தன. 
மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் இவள் பக்கம் பார்வை திருப்ப.. சட்டென நகர்ந்து அவனுக்கான உடையை எடுத்து வைத்தாள். 
அழைப்பை துண்டித்து வந்தவன் அவளை அப்படியே கப்போர்டோடு சேர்த்து சிறை வைத்தான். 
“மங்கம்மா… நான் சொல்றத கொஞ்சம் கேளுடி…” இவன் கெஞ்சலில் இறங்கியிருக்க… அவள் விழிகளில் வேள்வி செய்தாள். 
அவன் அதை கண்டு கொண்டால் தானே!!! அவன் தான் மிஷன் மங்கம்மா மன்னிப்பில் இறங்கியிருக்கிறானே! 
வித விதமாய்.. வித்யாசமாய்.. என எப்படி எப்படியோ அவளிடம் மன்னிப்பை முன் வைத்துவிட்டான். 
ம்ஹூம்… மசியவில்லை அவன் மனையாள்.
“மங்கம்மா… இப்ப பேசுவியா மாட்டியா…??” அதட்டல்.. கொஞ்சல்.. கெஞ்சல் கலந்த தொனி. 
முடியாது என்பதாய் அசைகிறது அவள் தலை.. 
“ப்ச் பேசுடி…”  என்றவன்
“இப்ப நான் என்ன பண்ணினா பேசுவ நீ..??” இறங்கி வருவதை தவிர வழியில்லை என உணர்ந்தே இருந்தான் உற்றவன்.
இவன் இறங்கி வந்தும் இவனவள் இவன் பிடியிலிருந்து விலகிச் செல்வதிலேயே முனைப்பாக இருக்க.. சட்டென இவனுள் ஏறி நின்றது கோபம். 
தன்னவளை தன்னிடமிருந்து விலக்கியவன் “உனக்கு இன்னும் என்ன புரியவே இல்லடி… உனக்கு இந்த விஷயத்தில வருத்தம் மட்டும் தான். ஆனா எனக்கு வலி…” 
அவன் வார்த்தைகளிலே அவனை தின்று தீர்க்கும் வலியும் வேதனையும் இவளுக்கு தெரிகிறது தான். ஆனால் ?? 
அவனாகத்தானே அதை தேடிக் கொண்டான். அதை ஆழமாய் அனுபவிக்கட்டும்.. அப்படியும் விட்டுவிட முடியுமா என்ன?? அவளால் அது முடியாது..! 
இவள் இதழ்கள் மௌனம் களையும் முடிவில் நிற்க.. அவன் “இதப்பத்தி இனிமே பேசாதே!!!” இப்படி சொல்லி விட்டு விலகி சென்று விட்டான். 
அவள் அப்படியே… அங்கேயே.. நின்றாள்.
பாவையவள் பார்வை தன் மீதே படிந்து கிடப்பதை கண்டவன் அப்போது தான் கவனித்தான். 
தும்பையின் தூய்மை நிறத்திலான சட்டையும் ப்ளூ டெமிமுமாக அவளுக்கு காட்சி கொடுக்கிறானே அவன்!!! பின் எப்படி விழிகளை அவள் பிரித்தெடுப்பாளாம்…?? 
“வைர்ட் சர்ட்… ப்ளூ டெமிம்.. சன் கிளாஸ்… பர்பெக்ட் காம்பினேஷன் ஃபார் பார்த்திபன்” அவள் அடிக்கடி சொல்லும் ஒன்று. சொல்வதோடு சொல்லுக்குரியவனை… அவன் தோற்றத்தை தனக்குள் பதிந்தும் கொள்வாள்.
அவள் தான் சொல்லி வைத்தாள் இதையும். 
“சண்ட போட்டா பேச மாட்டாங்களாம்… ஆனா சைட் மட்டும் அடிப்பாங்களாம்.. இதென்னடா லாஜிக்..?”
சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டபடி மங்கையவள் பக்கம் வந்தவன் இடையோடு இழுத்தனைத்து “சைட் அடிச்சது தப்பு தானே ம்ம்…???” எனக் கேட்டு வைத்தான்.
அவள் முறைப்போடு மறுப்பாய் தலையசைக்க… மூக்கின் மீது முத்திரை வைத்தவன் 
“இப்போ…??” 
“ம்ஹூம்…” 
அவள் இமைகளில் இதழ் சேர்த்தவன் “இப்போ…??” எனக் கேட்க.. 
இதழ் கடை இளஞ்சிரிப்பை இதழ் கடித்து மறைத்தவள் மறுபடியும் மறுக்க..
இவளவன் விழிகளில் விழுகிறதே இவள் செவ்விதழ்கள்.. இதழோடு இதழ் சேர்த்து இன்பம் எழுத இவன் இதழ் நோக்கி இறங்கிய வேளையில்… 
யாழ்…. என்ற பார்வதியின் குரல் அவர் வரவை குறிப்புரைக்க.. சட்டென இதழ் பதித்து விலகினான். 
இமைக்கும் நொடியில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வில் இவள் நிலைத்து.. விழி விரித்து நிற்க…. 
“ஹேய்… மங்கம்மா.. முழிய மாத்துடி முதல்ல..” என அவள் கன்னத்தில் கொடுக்க வேண்டியதை கொடுத்து வெளியே அனுப்பி வைத்தான்.
சற்று நேரம் கழித்து வந்தவன் அங்கிருந்த அகிலைப் பார்த்ததும்.. 
“டேய்… எப்படா வந்த..??” என புன்னகையுடன் கேட்க.. 
“அண்ணி கூப்டிங்களா??? இதோ வந்துட்டேன்….” என இவன் புறம் பார்க்காது அவன் சென்று விட.. பார்த்திபன் இதழ்களில் தவழ்ந்த புன்னகை அப்படியே தேய்ந்தது. 
யாருக்குமே அவனைப் புரியவில்லை என்பது புரிந்தது இவனுக்கு. 
இருக்கட்டும்.. இது இப்படியே இருக்கட்டும்.. இவனாக யாருக்கும் இதை பற்றி விளக்கம் கொடுக்கப் போவதில்லை என்ற உறுதியுடன் ராஜியை பார்க்கச் சென்றான். 
கவிழ்ந்திருந்த கல்யாண களையும் பரவிய புன்னகையுமாய் அவள் தோழிகளுடன் அரட்டையில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்குள் கடந்த வாரத்தின் பக்கங்கள்.. 
“ராஜா…. எங்க இருக்க.. சீக்கிரம் வீட்டுக்கு வா…” 
“ஏன் என்னாச்சு…???” அவள் பதற்றத்தில் இவன் பரிதவிப்பு கொள்ள.. அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 
அவனுள் வெடித்துக் கிளம்பிய கலவரமும் தவிப்புமாய் வீடு வந்து சேர்ந்தான். 
வீட்டின் முற்றத்தில் யாழ் அமர்ந்திருக்க.. அவள் மடியில் படுத்துக் கிடந்தாள் ராஜி. அருகே அவன் அம்மா.. விழிநீரின் தடங்கள் அவர் கன்னத்தில். 
“அப்பா..??” அவன் அகக் கேள்விக்கு பதிலாய் அவர் வீட்டுத் தோட்டத்தில்!! 
“ம்மா… என்னாச்சு…??” 
இவன் வருகையில் இன்னுமாய் அவரிடம் அருவி!!! 
யாராவது என்னென்னு சொல்லித் தொலைங்களேன்!!!! இப்படித் தான் கத்த வேண்டுமென இருந்தது அவனுக்கு. 
முடியாதே!!! முயன்று பொறுமையை பிடித்து வைத்துக்கொண்டு அவன் மங்கையைப் பார்த்தான். 
அவள் விழிகள் அவன் தங்கையை தொட்டு தலைவனிடம் வர.. அவனுக்கு புரிந்தது விடயம் ராஜி என. 
ஹூப்….. சற்று ஆசுவாசமாக அவகாசம் கொடுத்தான்.
அதற்குள் தேற்றிக் கொண்ட பார்வதி மைந்தனிடம் “இப்போ இவளுக்கு கல்யாணம் வேண்டாமாம்..” 
அதிரந்து அவரைப் பார்க்க..
“இன்னும் கொஞ்ச நாள்  போகட்டும்னு சொல்லி ஒரே அழுகை…. காலைல சாப்பிடல.. யாழ் ஏதோ சொல்லவும் அவளையும் எதிர்த்து பேசிட்டா.. பொறுக்க முடியாம நான் இரண்டு அடி கொடுத்திட்டேன்.” சொல்லும் பொழுதே தழுதழுத்தது தாயின் குரல். 
“ம்மா… என்னமா நீ..??” என்றவன் துயில் கொண்டிருந்தவளை தலையில் வருடிக் கொடுத்தான். 
“என்னை என்னடா பண்ண சொல்ற??? அவ கல்யாணம் வேணாம்னு சொன்ன காரணம் அப்படி…”
‘என்ன’ என்பதாய் பார்க்க.. 
“அத்த அது அவ தான் அவங்க அண்ணாகிட்ட சொல்லணும்..” சரியாய் இடை புகுந்தாள் இவன் சரிபாதி.
குழப்பத்தை இவனுள் குடியேற வைத்தவள்.. இவன் தங்கையை எழுப்பி இவனுடன் விட்டு விட்டு பார்வதியை அழைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“ராஜி… என்னாச்சுடா..” இவனுள் தாய்மை தலைதூக்கி அவள் தலை கோத.. இன்னுமே உடைந்தாள் அவள். 
“அண்ணா…. ப்ளீஸ்… நான் இன்னும் கொஞ்ச நாள் உங்ககூடவே இருக்கேன்.. இப்பவே என்னை அனுப்பாதீங்க.”. கசிந்த கண்ணீரில் கரையவிருந்தவன் சற்று நிதானித்து…
“சரி… நீ எங்க கூடவே இரு.. விஷ்ணுகிட்ட நான் பேசுறேன்.. சரியா??” 
அவன் தங்கை சிறு பிள்ளையாய் கேட்டுக் கொள்ள.. விஷ்ணுவிற்கு அழைத்தான். 
“விஷ்ணு… உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். இப்போ ப்ரீயா??” 
“……” 
“அது… ராஜி…” என இவளைப் பார்க்க.. தவிப்பு ததும்பும் கண்களுடன் இவனைப் பார்த்திருந்தாள். 
“சரி நீ ராஜிகிட்ட முதல்ல பேசு… அப்புறம் நான் என்னனு சொல்றேன்” என இவளிடம் நீட்ட.. திகைத்துப் பார்த்தாள். 
“பேசு…” என்றவன் அவளிடம் தந்துவிட்டு எழுந்து செல்ல முயல.. அவனைக் கை பிடித்து அமர சொன்னவள் அலைபேசியை காதில் வைத்தாள். 
“ஹேய் ராஜிம்மா…..” துள்ளி வந்து விழுந்த இவள் துணையின் குரலில் உள்ளிருந்து புறப்பட்டு வந்த உணர்வொன்று தொண்டையை அடைத்துக் கொள்ள.. இயலாமையுடன் அண்ணன் அவனைப் பார்த்தாள். 
அவன் கை நீட்ட.. அவனிடம் அலைபேசியை கொடுத்து விட்டு.. அமைதியாக அழ ஆரம்பித்தாள்.
“விஷ்ணு… நான் கொஞ்ச நேரத்தில கூப்பிடறேன்..” என்று விட்டு அழைப்பை துண்டித்தவனுக்கு அவள் நிலை விளக்காமலே விளங்கியது.
“ராஜி…..” வருடிக் கொடுக்கும் வாஞ்சை!!! 
“நீ ஏண்ணா எங்களையெல்லாம் விட்டு இருந்த…??” நீரேறிய விழிகளுடன் வினவியவளுக்கு விடை கொடுத்துவிட முடியுமா இவனால்?? 
“எனக்கு விவரம் வந்து நான் சந்தோஷமா இருக்கிறது இந்த ஒரு மாசமா தான்.. அதுவும் உன்கூட இருக்கிறதால.. ஏன்னா என்னை மட்டும் அங்க விட்டுட்ட நீ..??” 
அவனென்ன விரும்பியா செய்தான்?? விதிக்கப்பட்ட ஒன்று அல்லவா??
“நாம இப்படி ஒன்னா இருக்கணும்னு எவ்வளவு நாள் கடவுள் கிட்ட வேண்டிருக்கேன் தெரியுமா??? இத்தனை வருஷம் கழிச்சு இந்த வரம் கிடச்சிருக்கு.. ஆனா அத அனுபவிக்க விடாம என்னை எல்லாரும் இங்க இருந்து துரத்துறதுலயே குறியா இருக்கீங்க..” எனக் குற்றத்தை அவன் முன் வைக்க.
“ராஜி……” திகைத்துப் போய் அமர்ந்துவிட்டான். 
இதற்கென்ன பதில் கொடுக்க முடியும்..? முடியாது…செய்ய முடியும்.. ஆனால் அதற்கான காலம் கடந்து போய்விட்டது. 
அடுத்த திங்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்போது போய் விஷ்ணு வீட்டாரிடம் என்னவென்று நிற்பது?? ஏற்கனவே உறவுகள் விலக்கிய நிகழ்வை விஷ்ணு எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்கிறான். இப்போது போய்…. பேச வேண்டும்.. ராஜியிடம்..! 
“இங்க பாரு ராஜிம்மா.. இந்த பிறவியில ராஜாக்கு தங்கை ராஜி தான்.. ராஜிக்கு அண்ணா ராஜா தான்.. இதை யாராலும் மாத்திட முடியாது. 
அதே போல தான் நீ என் மேல வெச்சிருக்க பாசமும்.. நான் உன் மேல வெச்சிருக்கறதும்.. நீ கல்யாணமாகி போயிட்டா அது காணாம போகிடுமா?? கிடையாதில்ல.. எங்க இருந்தாலும் நீ இங்க இருப்ப எப்பவும் என இதயம் தொட்டு காட்டியவன்..
விஷ்ணு கிட்ட நான் சொல்றேன்.. வாராவாரம் என் தங்கச்சியோட இங்க வந்து சேர்ந்திடுடான்னு. இல்ல நீ ஒரு கால் பண்ணு.. நாங்க அங்க இருப்போம். சரியா… இந்த டைம் பொண்ணுங்களுக்கு ரொம்பவே ப்ரீசியஸ்… அத இப்படி அழுது வைக்காம அம்மாவோட அண்ணியோட என்ஜாய் பண்ணணும்.. ஓகே…???” என தலையில் கை வைத்து மென்மையாக ஆட்ட.. 
கொஞ்சம் தெளிவு பிறந்தது அவளிடம் புன்னகையுடன். 
“வா… உங்க அண்ணி இன்னிக்கு ஏதோ விஷப்பரீட்சைக்கு ரெடி ஆகிட்டா…. என்னனு போய் பார்ப்போம்…” என்றபடி எழுந்து செல்ல இவளும் தொடர்ந்தாள். 
சமையல் அறைக்குள் நுழைந்தவன் யாழ் ஏதோ செய்து கொண்டு இருக்க.. எட்டிப் பார்த்து விட்டு 
“பாரு…. உனக்கு எங்க மேல பாசமே இல்ல……” 
வாழைக்காய் சீவிக் கொண்டே “ஏன்டா…??” என்றவருக்கு வம்பிழுக்க வந்திருக்கிறான் என புரிந்தே இருந்தது.
“பின்ன..  என்ன தான் உன் பிரியமான மருமக.. பிரியப்பட்டு கேட்டாலும் அவ குக்கிங் கண்டிஷன் தெரிஞ்சும் நீ உள்ள விட்டிருக்க பாரு…. அதில இருந்தே தெரியல…”
“காலைல தானடா அவ செஞ்ச சாப்பாட்டுக்கு சர்டிபிகேட் கொடுத்திட்டு சாப்பிட்டு போன..??”
“என்ன பண்றது.. செய்யறவங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பப்ப அள்ளி விடுறது தான்… அதையெல்லாமா பெருசா எடுத்து பெருமையா சொல்லிகிட்டு இருப்பீங்க…. சின்ன பிள்ள தனமா இல்ல…” நான் ஸ்டாப்பாக நக்கல் நாவில் நடனமாடியது நம்பியிடம்.
மங்கையின் முகம் பார்க்க முயன்று… முடியாமல்.. பஜ்ஜி பக்கம் போய் பார்த்து விட முனைந்தவனிடம் 
“டேய்!!!! பஜ்ஜி பக்கம் கை வந்தது அப்புறம் பிங்கர் ப்ரை தான் சொல்லிட்டேன்..” வேறு யார் இவனது மங்கம்மா தான். 
“பாரு….. அங்க பாரு… உன் முன்னாலயே மரியாதை இல்லாம பேசுறா??? உனக்கு கேட்கலையா???” ‘இரு இரு மம்மிகிட்ட சொல்லித் தரேன் என்பதாய் இவன்’
“ஏன் கேக்கல… கேட்டுச்சே!!!” ‘ஐ வான்ட் மோர் எமோஷன் என்பதாய் இவன் தாய்’
“பார்வதி……… நீ.. யுமா..?????” ‘பராசக்தி சிவாஜி கூட பக்கம் வர முடியாது பார்த்திபனிடம்… என்பதாய் இவன்’
“டேய்!!!! ஒழுங்கா ஓடிடு…” ‘உங்க விளையாட்டுக்கு நான் வரல…. என்பதாய் இவன் தாய்..’
“ஓகே…. போடான்னு சொன்னா போகப் போறேன்….” என்றவன் “இது பஜ்ஜிக்கு” என யாழ் கன்னத்தில் பட்டென அதரங்கள் பதித்து விலகினான்.
‘டேய்!!!!’ அமைதியாக அலறியவள் அத்தையைப் பார்க்க… அவர் கவனம் வேலையில்!! 
அப்பாடா!!! என ஆசுவாசப்பட்டவளை பார்த்து அறை வாயிலில் நின்றவன் கண்ணடித்து சிரிக்க.. கையில் வைத்திருந்த கரண்டியைக் காட்டவும்.. ஜூட்….. 
அப்பாவிற்கு பஜ்ஜி எடுத்து சென்றிருந்த ராஜி வந்ததும் யாழின் கையைப் பிடித்துக்கொண்டு “சாரி அண்ணி….” என்கவும்
‘மறுபடியுமா மன்னிப்பு படலம்???’ என நினைத்தவள்
“அப்படியே வாய் மேல ஒன்னு போட்டுடுவேன்… உன் அண்ணாவா இருந்தா இப்படித்தான் கேப்பியா..??”
“ஹையோ அண்ணி… அவன் தோப்புக்கரணமே போட சொல்வான்….” என்ற அவள் பதிலில் இவள் திருதிருக்க.. 
“ஆமா அண்ணி… பிள்ளையார்கிட்ட ஒரு நாள் சாரி கேக்கிறத பார்த்துட்டு.. பார்த்திபன் கிட்டவும் இனிமே இப்படித்தான் சாரி கேக்கணும்னு சொல்லிட்டான்…”
“ஹா ஹா… உங்க அண்ணாக்கும் பிள்ளையாருக்கும் ஏதும் பிரச்சினை இருக்கா??? இந்த பார்வதி பையனுக்கும் அந்தப் பார்வதி பையனுக்கும் அப்படியென்ன பிரச்சனை??”
“யாருக்கு தெரியும்??? நீங்க வேணும்னா கேட்டு பாருங்க…” 
“கேக்குறதென்ன??? உங்க அண்ணாவ தோப்புக்கரணமே போட வைக்கிறேன்..” 
இவள் மங்கம்மா சபதம் எடுக்க.. சட்டென இவள் காதை திருகிய பார்வதி.. “என் முன்னாடியே என் பையன தோப்புக்கரணம் போட வைப்பேன்னு சொல்றியா நீ???” என மிரட்ட
“ஆ… அத்த விடுங்க.. விடுங்க.. வேணா இப்படி பண்ணலாம்..” 
“எப்படி..??” 
“உங்க பையன் தோப்புக்கரணம் போடும் போது உங்க கண்ண கட்டிடலாம்.. என்ன ராஜி??” 
“பக்கா அண்ணி…” என இவள் சிரிக்க.. 
“ராஜா…. இங்க கொஞ்சம் வந்திட்டு போயேன்..” இவர் அழைப்பில் மகளும் மருமகளும் இரு வேறு திசையில் தெறித்தனர்.
நிறைவாய் நீர் திரண்டிருந்தது அவர் விழிகளில்!!
அன்றைய தினம் அவன் பேசிய பிறகே புன்னகையுடன் காட்சி கொடுக்கிறாள் ராஜி. அது தானே அவனுக்கும் வேண்டும். 
ராஜி.. அவன் தங்கை.. அவளுக்கான அன்பு அகத்தில் இருக்கிறது தான். ஆனால் அதை காட்ட வேண்டும். 
இதுவரை அவன் ராஜிக்கென எதுவும் செய்ததில்லை.. செய்ய வேண்டும்.. அவள் திருமணத்தில் தொடங்கி தமையனாய் அவளுக்கு அவன் நிற்க வேண்டும் இனி எப்போதும். அதை மனதில் கொண்டு தான் மனமற்று மரத்துப் போன நெஞ்சத்துடன் அப்படியொரு காரியம் செய்து வந்தான். 
அதில் வலிகளும் வருத்தங்களும் வேதனைகளும் தான்… ஆனால் அதை தாங்கி கொள்ள வேண்டும்.. தலை மகனாய்… தமையனாய்… அவன் கடமையாற்ற.
ஆம்…. அவன் துளிரைத் துறந்திருந்தான்….. தன் கடமைக்காக. 
திருமணச் செலவை பெண் வீட்டார் ஏற்றுச் செய்வது இவர்கள் வழக்கம்.. ஆனாலும் விஷ்ணு பிடிவாதமாக தன் பக்கம் பாதிச் செலவை ஏற்றுக் கொண்டான். அப்படி இருந்தும் இவனுக்கு தேவை பல லட்சங்கள்!!!!! 
யாரிடமும் வாங்கும் எண்ணம் துளியும் இல்லை அவனிடம். அன்று அந்த அரசியல் வாதி வந்து துளிரை கேட்டுப் போனது சிந்தனையில் அப்படியே தங்கிப் போயிருந்தது. காலம் பார்த்து அது இவன் சிந்தனைச் சுவர்களை தட்டியது. 
முடிவெடுத்து விட்டிருந்தான்.. ஆற்றங்கரையோரம் என்பதால் இவன் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே கிடைத்தது.
அகில்… யாழ்… இருவரும் இவனுடன் செய்யும் யுத்தத்திற்கு இதுவே காரணம். இவர்களை புரிந்தே… மறுப்பை உணரந்தே… செயலை செய்து முடித்துவிட்டே இவர்களிடம் அறிவித்தான். அதை தொடர்ந்தே தொடங்கியது மௌனப்போர்.
“அண்ணா… ஏன் இங்கவே நின்னுட்ட..???” 
ராஜியின் வரவில் நினைவுகளை விட்டு வந்தவன்.. 
“ஒன்னுமில்ல டா.. நீ போய் உன் ப்ரெண்ட்ஸோட இரு..” என்றுவிட்டு வெளியே வந்தவன் இவன் பல்சர் அருகில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்ற அகிலைப் பார்த்ததும் புன்னகையைத் தவழ விட்டு அவனிடம் வந்தான். 
“நான் உன்னை கூப்பிடவே இல்லயே.. போ.. உங்க அண்ணி தானே உன் பாஸ்… அவங்க சொல்றதயே செய்..”
“இப்பவும் பாஸ் சொன்னதால தான் இங்க நிக்கறேன்…” 
இதை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு அவனோடு ஏறி அமர்ந்து கொண்டான் அகில்.
“எல்லாம் நேரம்டா….” என்றவன் பல்சரை பறக்க விட்டான்.
கனவு நனவாகும்…….

Advertisement