Mella Thiranthathu Manasu
அத்தியாயம் – 24
“ஹலோ”
“ஹாய் மது, நான் சபரி பேசறேன். எப்படியிருக்க?”
“ஒஹ்… ஹாய் சபரி. நல்லருக்கேன். என்ன திடீர்னு போன்?”, கொஞ்சம் படபடப்பு தெரிந்ததோ குரலில்?
“ஏன்மா? பண்ணக்கூடாதா? உன் ஊருக்கு வரவும், சரி உன்னைப் பார்க்கலாமேன்னு கூப்பிட்டேன்.”, சபரி கொஞ்சம் வருத்தப்படுவது போல் சொல்லவும்,
“அச்சோ…அப்படியில்லை சபரி. சென்னைக்கு வந்திருக்கீங்களா? கண்டிப்பா பார்க்கலாம்.”, இப்போது படபடப்பை நன்றாகவே...
அத்தியாயம் – 13
பாட்டியின் காரியம் சிறப்பாய் நேற்று முடிந்திருந்தது.
அலுவலக மீட்டிங்கை ஜூம் உதவியுடன் முடித்து வெளியே வந்த சபரியும் ஆதியும், ஹாலில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்த மதுவின் எதிரில் வந்து அமர்ந்தனர்.
“ஓரு வேலை செய்ய முடியாததுக்கு ஆயிரம் காரணம் சொல்றான். செய்யறத்துக்கு உண்டான ஒரு ஐடியா உருப்படியா சொல்றதில்லை. இவனுங்களையும் கட்டி மேய்ச்சு, உங்க...
அத்தியாயம் – 11
உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான்.
“பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”, என்றபடியேஅமர்ந்தான்.
“நேத்து ரெண்டு பேரும் போட்ட சண்டை என்ன? அது வேற வாய்ன்னு சொல்ற அளவுக்கு இப்ப சாதாரணமா பேசறதென்ன?”, என்று நினைத்த சங்கரிதான் இருவரையும்...
“அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா?
“உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ பிடிச்சிருச்சி. இந்த குற்ற உணர்ச்சிக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு சுய நலமாய் அவங்க இஷட்டப்படி வாழறாங்க. “
“ஆதி… அவ ஒழுக்கத்தை எப்பவும்...
அத்தியாயம் - 4
“எங்க..”, ஆதி குரல் கனைத்து சரி செய்து, “இப்ப எங்க இருக்காங்க ?”, என்று கேட்டான்.
“இப்பதான் நவனீதன் அங்கிள்கிட்ட பேசினேன். ஃபார்மாலிடீஸ் நடந்துகிட்டு இருக்கு. நம்மள ஹாஸ்பிடல்தான் வர சொன்னாரு. கார் புக் பண்ணி ரெடியா இருக்கு. வா போகலாம்.”, என்று அழைத்து வந்தான்.
“பாட்டி முழிச்சதும் எனக்கு போன் செய்ய சொன்னேன்டா…...
Watch this space friends for my second novel .....
For those not familiar with my name, my first novel விண்மீன்களின் சதிராட்டம் is one of the contest stories. Please check it out if haven't already :)
அன்புடன்
கவிதாசி @ ராகவி
அத்தியாயம் -31
ஞாயிறு காலையில் சபரியின் தந்தை திருமலை பரபரப்பாய்க் கிளம்பி, மனைவி ரஞ்சிதத்தயும் சபரியையும் கிளப்பிக்கொண்டிருந்தார்.
“பா… எதுக்கு இப்படி படுத்தறீங்க ? ஒன்பது மணிக்குத்தான முஹூர்த்தம் ?”, என்று சபரி கேட்க்கவும்,
“டேய், ஒண்ணு விட்ட தங்கைன்னாலும் ராணிக்கு நாந்தாண்டா அண்ணன். அப்ப தாய் மாமன் ஸ்தானத்துல நான் தான இருக்கணும் ? ரஞ்சிதம் தாய்மாமன்...
அத்தியாயம் – 6
மறு நாள் மதியம் வீடு அமைதியாக இருந்தது. பெற்றோர்களும் கிளம்பியிருக்க, நவனீதன் மனைவி சங்கரி அவருக்கான அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
ஆதியும், சபரியும் ஒரு அறையை அவர்கள் ஆபிஸாக செட் செய்திருந்தார்கள். அங்கே வேலையைத் தொடர, மது அமைதியாக வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். வீட்டின் சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.
அரவம் கேட்டு திரும்ப, அங்கே சபரியும்...
அத்தியாயம் – 5
ஆதி மதுவைப் பார்க்க அவள் எரிச்சலான முகமே சொல்லியது, அவளுக்குமே கல்யாணம் பற்றிய எண்ணம் எதுவும் இல்லை என்று. ஏனோ மனதில் சட்டென்று ஒரு கோவம். “ஓஹ்..என்னை வேணாம்னு சொல்லுவாளா இந்த மண்ணாந்தி ?”. இவனும் நோ என்று சொல்லியது வசதியாக மறந்துவிட்டது.
மதுவுக்குமே ஏகக் கடுப்பு. ‘பேரன் மேல ஆசையிருந்தா, அதுக்கு...
அத்தியாயம் – 9
காலை உணவு முடிந்து நவனீதன் தம்பதியுடன் ஆதியும் மதுவும் பேசிக்கொண்டிருக்க, ப்ரியா ப்ரசன்னமானாள்.
‘அல்டாப்பு ப்ரியா, இப்ப எதுக்கு வந்தா ?’, என்று மது யோசித்து முடிவதற்குள்,
ஆதியின் அருகே வந்தவள், அவன் கைப்பற்றி அருகிலேயே அமர்ந்து, கொஞ்சும் குரலில்,
“சோ சாரி ஆதி, பாட்டி பத்தி நியூஸ் கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிருச்சு. நீ...
அத்தியாயம் -30
ஜிம்மில் நுழைந்த ஆதியும் சபரியும் உடை மாற்றி வர தனியறைக்குச் சென்றார்கள். முதலில் வந்த சபரி, போனுடன் ஆதியின் வரவுக்காக நின்றிருந்தான்.
ஆதி ஜிம்மில் வெர்க் அவுட் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும் என்று சபரியிடம் சொல்லியிருக்கவும் போனுடன் நின்றிருந்தான். அரவம் கேட்டு நிமிர்ந்த சபரி அதிர்ந்து, “டேய் என்னதிது?”, என்று அலறினான்.
“என்னடா?”
“என்னடா…. ஆர்டின்...
அத்தியாயம் – 25
காலை நேரம், பூஜையறையில் சுவாமிப் படங்களுக்குப் பூ சாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி.
“அம்மா, நீங்கதான் இந்த இலக்கியம் எல்லாம் கலந்து நல்லா சொற்பொழிவு செய்யறீங்களே. அதையே பெருசா செய்யலாமே மா”, என்று ஆதி கூற,
“டேய் அது அந்த பொண்ணு மது அவங்க முதியோர் இல்லத்துல போடன்னு சொல்லவும், சும்மா ஒரு இருவது நிமிஷம்...
அத்தியாயம் – 22
சபரியுடன் இரவு உணவு முடித்தவன், ஒன்பது மணி போல் வீட்டிற்கு வர, வீடு அமைதியாய் இருந்தது.
நேராக அவன் தந்தையின் ஆபிஸ் ரூம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அங்கிருந்தார், அலுவலக வேலைகளைப் பார்த்தபடி.
“அப்பா…. அம்மா எங்க?”
“அவ ரூம்ல இருப்பா ஆதி. ஏன் கேக்கற?”
“வீட்ல இருக்கற நேரம் அவங்க கூட இருக்கலாம்மில்லையா? எங்க...
“அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ? அதான் பேசிக்கிட்டு இருந்தோம்.”. சபரியின் பதிலில் மெச்சுதலாய் தோள்தட்டினான் ஆதி.
“மச்சி, உன் ஹனிமூனுக்கு கோவால ரிசார்ட் புக்காகிடுச்சு. ஃப்ளைட்டும் போட்டாச்சு,...
அத்தியாயம் – 2
டெல்லியில் விமானம் தரை இறங்கியதும், தன் ஐ-போனை ஆன் செய்தான் R.R. குழுமத்தின் ஒரே வாரிசும், அதன் எம்.டியுமான ஆதித்யன்.
ஆறடியைத் தொடும் உயரம், தினமும் உடற்பயிற்சி செய்வான் என்று பார்ப்பவர் எவரும் சொல்லிவிடும் தேகம்.அவன் சிகையும், அரும்பு மீசையும் லேசான தாடியும், லேசர் பார்வையும் பெண்களை சுண்டியிழுக்கும். ஆனால், அவனாய் அழைக்காமல்...
அத்தியாயம் -17
ராமசாமி காலையில் தன் வீட்டிற்குள் நுழையவும், அவர் தம்பி, தாய், தந்தை அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டனர்.
அவர் தம்பி கோவிந்தன் அண்ணன் கைப்பிடித்து, “ அண்ணா, ரெண்டு நாள் நான் என் பெண்டாட்டி குழந்தைய பார்த்துட்டு வரதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சே. நீங்களும் அண்ணியும் வீட்டுக்கு வந்துடுங்கண்ணா. அந்த மங்களம் அத்தையை நான் விரட்டிவிட்டுட்டேன்.”, என்று...
அத்தியாயம் – 21
”ஆதி… சாப்பிடலாமா?”, என்று கேட்டபடி கான்டீனிலிருந்து வாங்கி வந்த பார்சலை டீப்பாயின் மீது வைத்தான் சபரி.
“ம்ம்..வரேன்டா. என்னோடதையும் எடு.”, என்றவாறே ஈமெயில் டைப் அடித்துக்கொண்டிருந்தான் ஆதி. குன்னூரிலிருந்து வந்து இரண்டு வாரமாகிவிட்டது.
வந்ததும் வேலை வரிசைகட்டி நின்றது. இடையில் ஒரு வாரம் போல டெல்லி சென்று வந்தான். இன்றுதான் சபரியுடன் லன்ச் சாப்பிடவே...
அத்தியாயம் – 12
அதன் பின் தினந்தோறும் ஆதி மதுவுடன் காலையில் நடைபயற்சி செய்தான். நிதமும் ஒரே வழியாகச் செல்லாமல் பல்வேறு பாதைகள் வைத்திருந்தாள். சில நேரம், வழியில் இருக்கும் கிளைப்பாதையை பார்த்து அதில் செல்லுவாள். பொறுமையாக செடி கொடிகள், காளான்கள், பூச்சி, பூ என்று ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஏதாவது ஒரு தகவல் விரல் நுனியில்...
அத்தியாயம் – 7
அன்றிரவு, வீட்டின் பின்புறம் தீ மூட்டி, குளிருக்கு இதமாய் அதை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும்.
“மதியம்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டீங்க. இப்ப சொல்லு ? “, மது கேட்டாள்.
சபரி அந்த நிகழ்வின் ஞாபகத்தில் சிரிக்க ஆரம்பிக்க, ஒழுங்கா என்னாச்சுன்னு முழு கதையும் சொல்லுங்க என்று ஆர்டர் போட்டாள் மது.
அவள் அதிகாரக் குரலும், குளுருக்கு ...
அத்தியாயம் – 15
சபரி வந்து அழைக்கவும், திரும்பினாள் மது.
“என்ன, விசாரிச்சிட்டு போயிட்டாங்களா? சிவாஜிக்கு மிஞ்சின நடிப்பா இருந்திருக்குமே.”, என்று கேட்டாள் ஒரு ஏளனப் புன்னகையுடன்.
“அப்படியிருந்தா பரவாயில்லையே மது. ப்ரியா அப்பா, ஆதியை ப்ரியாவுக்கு கல்யாணம் செய்ய கேட்டு வந்திருந்தார். இவ என்னவோ ப்ளான்ல இருக்கா.”, சபரி சீரியசாய் சொன்னான்,
“அடேயப்பா, நான் எதிர்பார்த்ததைவிட வேகமாத்தான் இருக்கா.”,...