Mazai Minnal Nenjukulle
அத்தியாயம் 6
வாதங்களும் பிரதிவாதங்களும்
இல்லாத அழகான மௌனமே
காதலின் மொழியோ!!!
அபிமன்யுவின் வாழ்வில் நடந்த விசயங்களைக் கேட்ட பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு எந்த ஆறுதலும் சொல்ல வில்லை. ஆறுதல் சொல்லி மறக்க கூடிய விஷயம் இல்லையே இது.
அவன் கையை இருக்கமாகப் பற்றி இருந்தாள். அவனும் அவள் கையை விலக்கிக் கொள்ள வில்லை. மதியம் முதல் பீரியட்க்கான...
“அபி ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு டா”
“எனக்கு பழகிருச்சு”
“அப்புறம் என்ன அச்சு?”
“என்ன ஆகும்? என்னை பாத்து தலை குனிஞ்சு அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் அவங்க கிட்ட பேசலை. அவங்களும் என் கிட்ட பேசலை. அப்படியே அமைதியாகிட்டேன்”
“உங்க அப்பாவுக்கு தெரியுமா? உங்க அப்பா இப்ப எப்படி இருக்காங்க?”
“ம்ம், அப்பா இப்ப உயிரோட இல்லை...
“எனக்கு இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு டா. ஆனா சந்தோஷமா இருக்கு. சரி எனக்கு கிளாஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொன்ன ரிஷி தங்கையிடம் “நீ கிளாஸ்க்கு போகலையா பவி?”, என்று கேட்டான்.
“இன்னும் லன்ச் டைம் முடிய பதினேழு நிமிஷம் இருக்கு. அது வரைக்கும் அபி கூட பேசிட்டு...
அத்தியாயம் 5
கனவுகள் மறந்து விடும் என்று
யார் சொன்னது உன் உருவில்
காண்கிறேன் பல வண்ணக் கனவுகளை!!!
அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற பிறகுமே அபிமன்யுவின் கோபம் குறையவே இல்லை. அதற்காக அவனே நேரில் சென்று அவளை சந்திக்கும் பழக்கம் எல்லாம் இல்லாததால் எரிச்சலுடன் சுற்றிக் கொண்டிருந்தான். இப்போது அவனது உச்சக் கோபம் அவள் மீது தான் திரும்பி...
“சரி வேற யாரையும் லவ் பண்ண மாட்டா. ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிப்பா தானே?”
“ஆமா, அதுக்கு என்ன?”, என்று கேட்டாள்.
“அவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவான்னா என் மேல அவளுக்கு இருந்த காதலுக்கு என்ன அர்த்தம்?”
“நீ தான் மறுத்துட்டியே? அப்புறமும் உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?”
“காதல் இருந்தா...
அத்தியாயம் 4
இயற்கை கூட ரகசியமாய்
நீரூற்றிச் செல்கிறது நம்
காதல் செடி வளர!!!
இப்படியே நாட்கள் கடக்க அப்போது ஒரு நாள் பவித்ரா தன்னுடைய கிளாசுக்குள் வரும் போது சாந்தினி கன்னத்தில் கை வைத்த படி கலக்கமாக அமர்ந்திருந்தாள்.
“என்ன டி காலைலே கன்னத்துல கை வச்சு உக்காந்துருக்க? எத்தனை கப்பல் கவுந்துச்சு?”, என்று கேட்ட படி அவள் அருகே...
“வீட்ல என் மேல எல்லாரும் கோபமா இருக்காங்களா பவி?”
“உன் மேல யார் கோபப் படுவாங்களாம்? ஆனா எனக்கு ஒரு டவுட்?”
“என்ன?”
“இல்லை, யாராவது உன் கூட நான் இருந்தா என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டுறாங்களா? அதான் டைவர்ஸ் கேக்குறியா?”, என்று கேட்க இப்போதும் அவன் அமைதியாக இருந்தான்.
“சொல்ல மாட்டியே? சரி நீ குளிச்சிட்டு சாப்பிடு. நான் போனை...
அத்தியாயம் 3
எந்தன் கனவுகள் கரை
சேராது என்று தெரிந்தும்
கரை தொடத் தான் நினைக்கிறது!!!
ரவி பவித்ராவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றதும் தயக்கத்துடன் வீட்டுக்குள் சென்றாள். “அம்மாடி, வா டா. அங்க என்ன நடந்துச்சு மா? அபி என்ன சொன்னான்?”, என்று படபடப்பாக கேட்டார் கிருஷணன். கோதையும் ஆர்வமாக அவள் முகம் பார்த்தாள்.
வாழ வேண்டிய வயதில் மகள் விவாகரத்து...
“அந்த கிழவியை நானே சாகடிக்கப் போறேன் பாரு. யூட்டியூப்ல வீடியோ போட சொல்லிக் கொடுத்தாலும் கொடுத்த? அது பண்ணுற அலப்பறை என்னால தங்க முடியலை. ஹோம் டூர்ன்னு வீடியோ போட்டுச்சு. சரி, எல்லாரும் போடுறது தான்னு விட்டேன். ஆனா இது என்னோட மகன் ரூம் டூர்ன்னு ஒரு வீடியோ எடுக்குது. என்னோட ரூமையே...
“தேவையில்லை மா, உன் புருஷன் உன் மேல பழி போட்டா நான் வெரிபை பண்ணலாம். ஆனா நீயே ஒத்துகிட்ட பிறகு தேவை இல்லை. ஆனாலும் ரிப்போர்ட் கைல வச்சிக்கோங்க. வேற ஜட்ஜ் வந்தா கேப்பாங்க. அப்புறம் உங்களுக்கு உடனே எல்லாம் டைவர்ஸ் கிடைக்காது. நம்ம இந்திய அரசாங்கம் கணவன் மனைவியை சேர்க்க அவகாசம்...
அத்தியாயம் 2
பெண் மனம் எரிந்து
போனாலும் பீனிக்ஸாய் உயிர்
பெறச் செய்கிறது காதல்!!!
அபிமன்யுவின் வக்கீல் அவனை உள்ளே அழைத்ததும் ரோஹிணியை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே ரவியும் பவித்ராவும் அவர்களுடைய வக்கீலுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“உன் புருஷன் வரான்”, என்று ரவி பவித்ராவின் காதில் முணுமுணுக்க அந்த வார்த்தை ஏதோ ஒரு குறுகுறுப்பை அவளுக்குள் உருவாக்க...
“அபியை நம்பலைன்னா இந்த உலகத்துல வேற யாரையுமே நம்ப முடியாது மாமா. அவனுக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்குள்ளே போராடுறான். அவனுக்கு இந்த டைவர்ஸ் மன நிம்மதியைக் கொடுக்கும்னு தான் நான் அவனுக்கு டைவர்ஸ்க்கு சம்மதம் சொன்னேன்”
“உன் கிட்ட ஒண்ணு கேக்கட்டா? ஏற்கனவே கேட்ட கேள்வி தான்”
“என்ன மாமா?”
“அவனை லவ் பண்ணுறியா பவி?”
“தெரியலை அத்தான்”
“இதுக்கு பதில்...
குளித்து கிளம்பி ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டு பவித்ரா கீழே வரும் போது ரிஷி நந்தன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோதை அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஒரு பேண்ட் சட்டை அணிந்து கிளம்பி சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது.
புது மலர் போல கிளம்பி வந்த மகளைக் கண்ட கோதை கலங்கிய மனதை அடக்கி...
அத்தியாயம் 1
அலைபாயும் மனதிற்கு
தடுப்பணை உந்தன்
கனல் பார்வையோ?!!!
கதிரவன் தன்னுடைய ஒளிக் கரங்களினால் இருள் போர்வையை விலக்கி பூமியை ஒளி மயமாக்கிக் கொண்டிருக்கும் அழகான காலைப் பொழுது. சூரியனைக் கண்ட பறவைகள் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாய் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன.
இத்தகைய காலை வேளையில் சென்னை மாநகரம் எப்போதும் போல் பரபரப்பாகவே காட்சி அளித்தது. வளசரவாக்கத்தில் அமைந்திருந்த ஒரு...