Advertisement

“ஏன் டா, உடனே என்னால எப்படி அக்ஸப்ட் பண்ணிக்க முடியும்? நீயும் அப்புறம் கூப்பிடவே இல்லை”

“உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சேன்”

“நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை டா. இப்ப தான் தோணுது. உனக்கு என்னைப் பாத்தா எந்த பீலிங்க்ஸும் வரலைன்னு நினைச்சேன் டா?”

“உன் தலை, உண்மையாவே உன்னை என்னால பழைய படி பாக்க முடியலை டி. அதுவும் அன்னைக்கு சினிமா தியேட்டர்ல….”, என்று ஆரம்பித்து அந்த நிகழ்வைச் சொல்ல உதடு கடித்து தன்னுடைய உணர்வை அடக்கினாள் பவி.

‘”எத்தனை நாள் உன்னை பொண்டாட்டியா பாக்க முடியாம தோழியாவும் பாக்க முடியாம தடுமாறிருக்கேன் தெரியுமா?”, என்று கேட்க “உன்னை எவன் பழைய படி பாக்கச் சொன்னான்? இனி பொண்டாட்டியா மட்டும் பாரு”, என்றாள்.

“பவி”

“இது தப்பா சரியான்னு எனக்கும் தெரியாது அபி. ஆனா இப்ப நீ என்னோட கணவன். எனக்கு எல்லாமும் நீ தான். நமக்குள்ள இருக்குற நட்பு அப்படியே தான் இருக்கும். ஆனா நாம மட்டும் தான் இனி கணவன் மனைவியா வாழ முடியும். இந்த பந்ததை நம்மளால வேற யார் கூடவும் ஏற்படுத்திக்க முடியாது. இவ்வளவு நாள் புரியாம இருந்துட்டேன் அபி. இப்ப எனக்கு ஓகே தான். நானும் ஐ லவ் யு தான்”, என்று சொல்ல அவன் கண்கள் மின்னியது.

“பவி”, என்று கிறக்கமாக அழைக்க “என்ன டா?”, என்று சிறு வெட்கத்துடன் முணுமுணுத்தாள்.

“நான் அங்க வரவா? எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்கு”

“நான் ஊர்ல இருக்கேன்”

“அட்ரஸ் சொல்லு டி, நான் இப்பவே வரேன்? எனக்கு உடனே உன்னைப் பாக்கணும்”

“நான் நாளைக்கு வந்துருவேன் டா”

“பரவால்ல, நான் இப்ப வரேன். நாளைக்கு உன்னை என் கூடவே கூட்டிட்டு வந்துருவேன்”

“அது…”

“பவி எங்க இருக்க? சொல்லு. என் கிட்ட எதுவும் மறைக்கிறியா?”

“நான் உங்க வீட்டுக்கு வந்தேன். இப்ப அங்க தான் இருக்கேன்”, என்று சொல்ல “வாட்? என்ன டி சொல்ற? உன்னை யார் அங்க போகச் சொன்னா?”, என்று கேட்டவன் உடனடியாக வீட்டைப் பூட்டி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

“இங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை டா. நீ டென்ஷன் ஆகாத”

“உன் தலை. அவங்களைப் பத்தி தெரிஞ்சும் அங்க போயிருக்க? நான் உடனே வரேன். நான் வர வரைக்கும் என் கிட்ட பேசிக்கிட்டே இரு. கால் கட் பண்ணாத”

“மெதுவாவே வா டா. எனக்கு ஒண்ணும் இல்லை அபி“

“உன்னைப் பாக்குற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது. அவங்க உன்னை ஏதாவது பண்ணிருவாங்க டி”

“நான் உன் மனைவின்னு அவங்களுக்கு தெரியாது அபி”, என்று சொல்ல நிம்மதியாக மூச்சு விட்டான்.

“நீ மெதுவா வா அபி. நான் சாப்பிடப் போறேன். எனக்கு ஒண்ணும் ஆகாது”, என்று சொன்னவள் போனை வைத்து விட “ஏய் அங்க எதையும் சாப்பிடாத”, என்று அபி சொன்னதை அவள் கேட்கவே இல்லை. அபி காரின் வேகத்தை இன்னும் கூட்டினான்.

பவித்ரா உணவு உண்ணச் செல்ல அனைவரும் அங்கே அமர்ந்திருந்தார்கள். ஏனோ முதல் முறையாக அந்த வீட்டில் சிரிப்புடன் உணவு நேரம் கடந்தது.

அனைவரும் உறங்கப் போக “ஒரு நிமிஷம் பபிதா, இங்க வா மா”, என்று அழைத்தாள் அருந்ததி.

“என்ன ஆண்ட்டி?”, என்ற படி அவள் அருகே வந்தாள் பவித்ரா.

“இங்க உக்காரு மா”, என்று சொன்னதும் அங்கே அமர்ந்து அருந்ததியை குழப்பமாக பார்த்தாள்.

“என்ன இந்தம்மா ஒரு மாதிரி பாக்குது? ஏதாவது கண்டு பிடிச்சிருக்குமோ? கண்டு பிடிச்சா பிடிக்கட்டும். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அபி வந்துருவான். அவன் கூட போயிறலாம். நாமளும் கேக்க வேண்டியதை இப்ப கேட்டுறலாம்”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

“போன இன்டர்வியூ என்ன ஆச்சு மா? வேலை கிடைச்சதா?”

“கால் பண்ணுறேன்னு சொல்லிருக்காங்க ஆண்ட்டி”

“கண்டிப்பா கிடைக்கும். உன்னை விட யார்க்கும் மனசு வராது. அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க மா”

“தேங்க்ஸ் ஆண்ட்டி”

“நான் தான் மா உனக்கு நன்றி சொல்லணும். எங்க வீட்ல சிரிப்பு சத்தம் கேட்டு ரொம்ப வருசமாச்சு. இன்னைக்கு தான் மறுபடி எங்க வீடு நிறைஞ்ச மாதிரி இருக்கு. எங்க மகன் எப்ப எங்களை விட்டு விலகினானோ அப்பவே எங்க வாழ்க்கையும் இருள் அடைஞ்சு போச்சு. ரொம்ப நன்றி மா”

“பரவால்ல ஆண்ட்டி”

“உன்னை மாதிரி ஒரு மருமக எங்க வீட்டுக்கு வரணும்னு ஆசைப் பட்டேன். அப்படி வந்தா என் மகனும் எங்க கூட சேந்துருவான்னு கனவு கண்டேன். ஆனா எல்லாமே கனவா போச்சு”, என்று வேதனையுடன் சொல்ல இது தான் சரியான நேரம் என்று எண்ணிய பவித்ரா “அப்புறம் ஏன் ஆண்ட்டி உங்களால என்னை உங்க மருமகளா ஏத்துக்க முடியலை? ஏன் என்னை கொலை பண்ண முயற்சி பண்ணுனீங்க? ஏன் என்னை அபியை விட்டு பிரிக்கப் பாத்தீங்க? நான் உங்களுக்கு என்ன பண்ணினேன்?”, என்று கேட்டே விட்டாள்.

அதைக் கேட்டு அதிர்ந்த அருந்ததி “நீ..“, என்று அதிர்வாக பார்த்தார்.

“நான் பவித்ரா, உங்க மகன் அபிமன்யுவோட மனைவி”, என்று சொல்ல கண்கள் தெறித்து விடுவது போல பார்த்தாள் அருந்ததி.

“சொல்லுங்க ஆண்ட்டி, என்னை யாரோவா பாக்கும் போது உங்க மருமகளா வந்திருந்தா நல்லா இருக்கும்னு சொன்ன நீங்க ஏன் என்னை கொலை பண்ண முயற்சி பண்ணுனீங்க? அதுவும் உங்க பையனையும் சேத்து? நான் இங்க எந்த இண்டர்வியூக்கும் வரலை. என் வாழ்க்கையை சரி பண்ணணும்னு தான் வந்தேன். அபி கொஞ்ச நாளா சரி இல்லை. டைவர்ஸ்ல வந்து நிக்குறான். அதுக்கு பல காரணம் இருந்தாலும் நீங்க ஏதாவது அவனை மிரட்டிருப்பீங்களான்னு சந்தேகத்துல தான் இங்க வந்தேன். எனக்கு என் அபி நல்லா இருக்கணும். அதுக்கு நீங்க இடைஞ்சலா ஏன் இருக்கீங்க?”

“நான் அப்படி எதுவும் பண்ணலை மா. என் மகனை நானே கொலை பண்ணுவேணா?”

“நீங்க எங்களை வேவு பாக்க ஆள் வைக்கலையா?”

“அதை செஞ்சேன் தான். அந்த பொண்ணு உன்னைப் பத்தி நல்ல தகவல் சொல்லலை மா. நான் உன்னை தப்பா தான் நினைச்சேன்”

“உங்க பையனோட பணத்துக்காக தான் பழகுறேன்னு  நினைச்சிட்டீங்களோ?”

“ஆமா மா, ஆனா உன்னை கொல்ல எல்லாம் நான் சொல்லவே இல்லை. அதுவும் உயிருக்கு உயிரான என் மகனை எப்படிக் கொல்ல நினைப்பேன்? இது எல்லாம் அந்த வடிவு வேலையா தான் இருக்கும். இன்னைக்கு தான் அவ புத்தி தெரிஞ்சது. வீட்டை விட்டு விரட்டினதும் சொத்து வேணும்னு கேஸ் போட்டுருக்கா. நிச்சயம் அதை செஞ்சது அவ தான். அபி என்னை திட்டினதும் அவ கிட்ட கேட்டேன். அவளே ஒத்துக்கிட்டா”

“அப்படின்னா நீங்க என்னைக் கொல்ல ஆள் அனுப்பலையா?”

“நிச்சயமா இல்லை மா. என் மகன் வாழ்க்கை தப்பான பொண்ணு கைல போக கூடாதுன்னு நினைச்சு உன்னை விலக்கி வைக்க நினைச்சது நிஜம் தான். நான் உன்னை மிரட்டணும்னு நினைச்சேன், இல்லை பணம் கொடுத்து அனுப்பணும்னு நினைச்சேன். ஆனா கொல்ல எல்லாம் நினைக்கலை மா. நான் உன்னை நேர்ல பாத்துருக்கணும். பாத்திருந்தா இவ்வளவு குழப்பம் வந்திருக்காது”

“இப்ப உங்களுக்கு பயம் இல்லையா? உங்க மகன் வாழ்க்கை வீணா போய்ட்டுன்னு கவலை இல்லையா?”

“நிச்சயமா இல்லை மா. இப்படி ஒரு மருமக அமைஞ்சதுக்கு நான் சந்தோஷம் தான் படணும்? என் அபி கொடுத்து வச்சவன் தான். அதான் உன்னை அந்த அளவுக்கு தாங்கிருக்கான். என் ஸ்தானத்துல நீ தான் அவனுக்கு இருந்துருக்கன்னு இப்ப புரியுது. உன்னைக் கஷ்டப் படுத்திருந்தா சாரி மா”

“நானும் சாரி ஆன்ட்டி. கொஞ்சம் ஹார்சா பேசிட்டேன். அப்பவே நினைச்சேன். அபியோட அம்மா எப்படி கொலை பத்தி எல்லாம் யோசிப்பாங்கன்னு?”

“இல்லை மா, நான் கெட்டவ தான். ரொம்ப ரொம்ப கெட்டவ. என்னைப் பத்தி தெரியுமா?”

“ம்ம்”, என்று தர்ம சங்கடமாக முணுமுணுத்தாள்.

“அது என் வாழ்க்கைல செஞ்ச பெரிய தப்பு மா. நான் என் தப்பை நியாயப் படுத்தலை. என் மகன் கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி கூட எனக்கு இல்லை. சஞ்சுவுக்கும் இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா அவளும் என்னை மன்னிக்க மாட்டா. கல்யாணம் முடிஞ்சு ஏழு வருஷம் நானும் நல்ல மனைவியா நல்ல பொண்ணா தான் மா இருந்தேன். ஆனா குழந்தை இல்லையே என்ற என்னோட ஏக்கம், அதனால நான் பட்ட அவமானம் வலி, பழிசொல் எல்லாமே என்னை அப்படி ஒரு காரியம் பண்ணத் தூண்டிருச்சு. தப்பு தான். பெரிய தப்பு தான். நானும் பெரியத்தானும் இப்ப வரைக்கும் மனசுல அந்த குற்ற உணர்வோட தான் இருக்கோம். என்னோட கணவனுக்கு நான் உண்மையானவளா இல்லைன்னு உறுத்துது. அதான் எனக்கான தண்டனை. என் பிள்ளையும் எனக்கு இல்லாமலே போய்ட்டான். அதை விடு. இனி அபி எப்பவுமே என்னை மன்னிக்க மாட்டான். நீ அவனை நல்லா பாத்துக்கோ”

“நான் அபி கிட்ட பேசுறேன் ஆண்ட்டி”

“வேண்டாம் மா, என் கிட்ட பேச எந்த நியாயமும் இல்லை. தப்பை சரின்னு வாதாடுறதை விட கேவலம் வேற எதுவும் இல்லை. விட்டுரு. அவன் நல்லா இருந்தா போதும். சீக்கிரம் எனக்கு ஒரு பேரப் பிள்ளையை பெத்துக் கொடுப்பியா? அபியோட பிள்ளையை பாத்துட்டு கண்ணை மூடனும்”

“அது…”

“நான் உன்னை கஷ்டப் படுத்தணும்னு கேக்கலை மா. தோணுச்சு கேட்டேன். சரி நீ ரெஸ்ட் எடு”

“நான் நாளைக்கு கிளம்பிருவேன் ஆண்ட்டி. அபி வந்துட்டு இருக்கான்”

“சரி மா, நீ மட்டுமாவது அடிக்கடி இங்க வா. எங்களால தான் அங்க வர முடியாது. அப்புறம் உங்க வீட்ல எல்லாருக்கும் என்னைப் பத்தி தெரிஞ்சு அசிங்கமா நினைக்ச்சிருப்பாங்கல்ல?”, என்று முகம் கன்றிப் போய்க் கேட்டாள் அருந்ததி.

Advertisement