நீ இல்லாமல் போனால்
அத்தியாயம் 3
விலகத் துடிக்கும் வினாடிகளில்
தான் விதி இன்னும் வலியதாய்
இறுக்குகிறது உன் நினைப்பை…
தோற்றுத்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை
துறக்க நினைத்து….
முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும் இருந்தது... அங்கு போனபிறகு நண்பர்கள் சேர்ந்தவுடன் அவளது தயக்கமும் பயமும் மறைந்து போனது. நண்பர்கள் நல்லபடியாய் கிடைத்ததே பெரிய காரணம்.
...
அத்தியாயம் 5
விதியின் செயலா,
மதியின் மயக்கமா,
ஏதோ ஒன்று
உன்னையும் என்னையும்
இழுத்துக்கட்டுகிறது...,
இருக்கிபிடிக்குமா, இல்லை
இழுத்து பிரிக்குமா..,
விதியின் வழியில்
வாழ்க்கை….
முகிலன் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கண் மூடி திறக்கும் முன் ஓடியது போல ஓடிவிட்டது., அவனுக்கும் வயது 29 முடிய போகிறது. அதனால் கல்யாணம் பேச வேண்டும் என்று வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். முகிலனிடம்...
அவனது கைகள் இடையில் அத்துமீறி கொண்டே சண்டை போட்டா நல்ல தாண்டி இருக்கும்.., என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்து சண்டை போடலாமா என்று கேட்டே அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான்…
அதன் பின்பு இரண்டு நாள் மட்டுமே அவனால் விடுப்பு எடுக்க முடிந்தது.., அங்கு உள்ள சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக...
அத்தியாயம் 16
உனக்கும் எனக்கும்
புது வாசம்
பரவுகிறது....
பால் மணக்கும்
பிள்ளையோடு...
மண் மணக்கும்
விளையாட்டை
கற்று கொடுத்து
கதை பேச வைக்கிறது
நம் புது வரவு.....
பெயர் சூட்டும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. முகிலன் மதியின் குழந்தைக்கு ரிஷி என பெயர் வைத்தனர். மறுநாளே அவளை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். குழந்தையும் சரி மதியும் சரி இப்போது உடல் நலம் கொஞ்சம் சற்று தேறி...
"நீ எதுக்கு அவளை பற்றி யோசிக்க., அவ என்ன பெரிய இவளா பேசாமல் இரு" என்று சொல்லவும்...,
"இல்ல நான் வந்து அவளுக்கு பயந்தோ இவ அண்ணனுக்கு பயந்தோ., நான் இத வந்து யோசிக்கல., சூர்யா ண்ணா இதனால வருத்தப்படக்கூடாது., அவ என்கிட்ட பிரச்சினை பண்ணும் போதெல்லாம் பாவம் சூர்யா ண்ணா தான் பீல்...
அத்தியாயம் 17
அவளது நேசத்தின் வரிகள்
உன்னுடன் கூடிக்
கழித்த கூடல்
பொழுது....
விடிந்த பின்
முகம் பார்க்க
நாணி மருதாணி
பூசிய முகமாய்
சிவந்து தான்
போகிறேன்....
ஒவ்வொரு முறையும்
முதல் முறை
நினைவில்....
அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் காரிடாரில் ஐ.சி.யூ முன் அமர்ந்திருந்தவன்.., தன் பதவியும் தன் அதிகாரத்தையும் மறந்து சிறு குழந்தையாய் கண்மூடி தவித்துக் கொண்டிருந்தான்.... எல்லோருக்கும் அந்த சூழ்நிலையில் தோன்றும் அதே எண்ணம் இது கனவாய் போயிருக்கக்...
அத்தியாயம் 20
அவளது நேசத்தின் வரிகள்
கண்களால் கைது
செய்வதை சற்று
தள்ளி வை...!
நம் கண்கள்
ஒரு முறை காதல்
சொல்லிக் கொள்ளட்டும்...,
பொதுவாகவே சற்று இரக்க குணம் உள்ளதால் தான்.., அவன் வேலை விஷயத்தில் யாரையும் அடிக்க அனுமதிக்காமல் இருந்தது..., யாராக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கு வலிக்கும் என்று அடிக்கடி சொல்வான்.., விசாரிப்பதே வேறு விதமாக இருக்கும் என்று...
அத்தியாயம் 19
அவளது நேசத்தின் வரிகள்
உன் நேசத்தின்
வெளிப்பாடு
உன் பார்வையில்
உன் வார்த்தையில்
உன் விரல் நுனியில்
கூட உணர
வைக்கிறாய்....
இனியாவின் கணவன் அறிவுரை செய்துவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லவும்..., சூர்யா அங்கே வந்தான்.,
வந்தவன் இனியா விடம் “உனக்கு நான் எத்தனையோ தடவை சொன்னேன்., நீ தான் கேட்கல.., அவ அமைதியா போயிட்டு இருக்கா ன்னு திரும்பத் திரும்ப பண்ணா.., ...
அத்தியாயம் 21
அவளது நேசத்தின் வரிகள்
உன் மார்பில்
சாயும் நேரங்களில்
காதல் உணரப்படுகிறதா..,
இல்லை உணர்த்த படுகிறதா
தெரியவில்லை..,
ஆனால் இருவருக்கும்
இடையே சடுகுடு
ஆடுகிறது காதல்...
அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதே அவனது பெரும் வேலையாக அவன் முடிவு செய்து கொண்டான். அவளும் ஓரளவு நடக்கத் தொடங்கிய பின்பு இருவரின் அம்மாவும் ஊருக்கு கிளம்பினார்கள். அதன் பிறகு எப்பொழுதும் போல் போனில் அனைவரும் பேசிக்...
"கோபமா” என்று அவன் கேட்க...
"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல... நீங்க போயிட்டு வாங்க" என்று சொல்லி அவனை இவள் தான் சமாதானபடுத்தி அனுப்பும்படி இருந்தது....
அவர்கள் அனைவரும் வண்டியிலும் காரிலுமாக கிளம்பி செல்ல.. மதி அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்க சென்றாள்... "மதியின் அம்மா மதியை அழைத்து நீ எதுவும் வருத்தப்படுறீயா.. ...
அத்தியாயம்
முனுமுனுக்கும்
பாடல்கள்
அனைத்தும்
உனக்காக எழுத
பட்டதாய் உணர
வைக்கிறாய்...,
கேட்கும் இசை
எல்லாம் உனையே
நினைவுட்டுகிறது..,
நிஜம் தேடும்
நினைவுகளோடு.,
தொடங்குகிறது
வாழ்க்கை பயணம்...,
அன்று அவளுடைய வேலைகள் அனைத்தும் முடிந்து வேலையிலிருந்து வெளியேறுவதற்கான நாள் என்பதால் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, உடன் பணிபுரியும் நபர்களுடன் ஒரு நட்போடு சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.,
அவளுடைய தோழிகளும், தோழர்களும்., அவளை ட்ரெயின் ஏற்றுவதற்காக ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தனர்., ...
அவளோ “பரவால்ல” என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொள்ளும் போது அவன் சொன்னான்.. “இந்த வலியும் வேதனையும் என்னென்ன அவனுக்கும் தெரியனும் இல்ல., அதுக்கு தான் இன்னைக்கு அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்துட்டு வந்தேன்.., யாருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு.,அவன் வேலையை அவன் பாத்துட்டு போயிட்டானா பிரச்சினையே கிடையாது.., பணம் சம்பாதிக்கனும் என்கிற...
" ஒன்னும் இல்ல அலைச்சல் ஜாஸ்தி" என்றான்.
" சாப்பிட்டியா" என்று கேட்கவும் "சாப்பிட்டேன் சொல்லு என்ன விஷயம் முக்கியமான விஷயம் பேசனும் ன்னு சொன்ன” என்று கேட்டான்.
மதி இடம் பேசியதை சொன்னான்., அதற்கு கலை சொன்ன பதிலையும் சொன்னான்., "இப்போ நீதான் முடிவு சொல்லணும்" என்று முகிலன் இடம் கேட்ட போது...,
...
அத்தியாயம் 8
மாய பிம்பங்கள்
மறைந்து போகுமா..,
இனிப்போ கசப்போ
உண்மை சொல்லும்
கண்ணாடியாக
வாழ்க்கை..,
நிஜ பிம்பங்களை
தேடும் நீயும் நானும்…
திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது கீதாவும் சூர்யாவும் போன் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்... அவளுக்கு வசப்படும் நாட்கள் மற்றவற்றைக் கீதா விசாரிக்க அவளுக்கு தேவையானவை எவை என வீட்டினர் விசாரிக்க இப்படி...
அத்தியாயம் 4
சிறகிருந்தும் பறக்க
துணிவில்லை…
அன்பில் திளைத்த
பறவைகள்…
இது பாலைவனத்தில்
பறந்ததில்லை….
குடும்பத்திற்குள்
குதுகலமாய் சிறகு
விரிக்கும் வீட்டு
பறவை….
அவளுடைய படிப்பு முடியும் சமயம் அவளுக்கான வேலையும் சிறந்த கம்பெனியில் கிடைத்து தயாராக இருந்தது. அது தெரிந்த போது வீட்டில் உள்ளோர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். சூர்யாவும் வாழ்த்து தெரிவித்து அவளுக்கு சிறு பரிசுப் பொருளை வாங்கி கொடுத்தான். அதுபோலவே பாலனும் வசந்தாவும் மிகவும்...
அத்தியாயம் 9
கைத்தலம் பற்ற
கனவு காணவில்லை
கைகோர்க்கும் விரல்களுக்கும்
இது முதல் ஸ்பரிசம்
உன் பாதச் சுவடை
பின்பற்றும் என் பாதத்திற்கும்
இது புது அனுபவம்
இறுக்கிப் பிடித்த
விரல்களுக்கிடையே
இடையே இறுகிப் போகுமா
மனம் இல்லை
விலகிப்போகுமா மனம்...,
வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது
என்று தெரியாமல்தான்
கடைசி வரை
துணை வருவாய் என்று
அக்கினி சாட்சியாய்
கரம் பற்றிருக்கிறேன்.,
அக்னி சாட்சியாய் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத அவனருகில் அமர்ந்த போது ஏனோ...
அந்த முறை தற்செயலாக அன்று விடுப்பு எடுத்து இருந்த இனியாவின் கணவனும் இனியவை அழைத்துக்கொண்டு.., மதிய நேரம் அவர்கள் வீட்டிற்கு முகிலன் போவதை கணக்கு வைத்து அங்கு வந்து சேர்ந்தனர்., அவன் சாப்பிட்டு முடித்து சற்று நேரத்திற்கெல்லாம் “நான் கிளம்பட்டுமா பிள்ளைங்க ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வர்றது க்குள்ள போகனும்” என்று சொல்லிக்...
அவளின் யோசனைக்கு முக்கிய காரணம் வீட்டை சுத்தம் செய்து விட்டு படுப்பதற்காக வரும்போது வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு வரும்போது இனியாவின் அறையில் விளக்கு எரிந்ததால் சென்று லைட்டை ஆஃப் பண்ண சென்ற போது அவளுக்கு கையில் கிடைத்த பொருள் தான்., அவளது இந்த யோசனைக்கு காரணம்.., இது எப்படி...
அவனும் சிரித்துக்கொண்டே ஆமாம் "முன்னாடி எல்லாம் அவ்வளவு வாய் அடிப்ப, இப்ப என்ன என்னை பாத்து பேசவே மாட்டேங்குற., நிமிர்ந்து பார்க்கவே தயங்குற, என்னை பார்த்தா எதுவும் வித்தியாசமா தெரியுதா" என்று கேட்டான்.
அவள் மறுப்பாக தலையாட்டி விட்டு அமைதியாக அடுத்து வந்தவர்களிடம் பேசிக்கொண்டு நின்றாள்.
இப்போதைக்கு பதில் வராது என்று நினைத்துக்கொண்டே...
அத்தியாயம் 15
நிதர்சனம் புரிய நெடுங்காலம்
தேவையில்லை....
துணை காட்டும் அன்பு
ஒன்று அத்தனையும்
புரிய வைக்கும்....
ஆறுதலாக ஒரு
புன்னகை....
அது போதும்
அன்றைய நாள்
நிறைவாக செல்ல....
டாக்டரிடம் சென்று உறுதி செய்த பின் அவளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டான்.. வீட்டிற்கு தெரியபடுத்தவும் இரண்டு குடும்பத்தினரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்., நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு வீட்டினரில் யாராவது வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்தது..,...