Advertisement

அத்தியாயம் 4

சிறகிருந்தும்  பறக்க

துணிவில்லை…

அன்பில்  திளைத்த

பறவைகள்…

 

இது பாலைவனத்தில்

பறந்ததில்லை….

குடும்பத்திற்குள்

குதுகலமாய் சிறகு

விரிக்கும் வீட்டு

பறவை….

          அவளுடைய படிப்பு முடியும் சமயம் அவளுக்கான வேலையும் சிறந்த கம்பெனியில் கிடைத்து  தயாராக இருந்தது.  அது தெரிந்த போது வீட்டில் உள்ளோர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். சூர்யாவும் வாழ்த்து தெரிவித்து அவளுக்கு சிறு பரிசுப் பொருளை வாங்கி கொடுத்தான். அதுபோலவே பாலனும் வசந்தாவும் மிகவும் சந்தோஷப் பட்டனர்.

     ஸ்ரீராம் அந்த வருடம் தான் கல்லூரியில் முதலாமாண்டில் அடி எடுத்துவைக்க தொடங்கியிருந்தான்.  அவனுக்கு பிடித்த மருத்துவப் படிப்பே  கிடைக்க அதில் முதல் வருடத்தில் இருந்தான்..

          பொதுவாக நாட்களுக்கு இறக்கை கட்டிக் கொண்டுதான் பறக்கிறது என்பது  போல சில சமயங்களில் நமக்கு தோன்றுகிறது.  சில நாட்களை நாம் கடந்து விடும் சமயங்களில் அப்படித்தான் தோன்றும்.,  மதியின் படிப்பும் முடிந்து அவள் வேலையில் சேரும் நாள் வரும் சமயத்தில் அவள் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள்.

ஏதோ அவளுக்கான  நாட்கள் இதுவென்று.,

         ஏனெனில் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் கழித்து திருமணத்திற்கு பார்க்கத் தொடங்கி விடுவோம் என்று சொல்லியிருந்தனர். ஒன்று , மற்றொன்று அதற்குள் தன் ஆசைப் -பட்டபடி மேற்படிப்பை தொடர வேண்டும் என்பதும்,  எனவே அவள் மேற்படிப்பை ஒருபக்கம் தொடங்க ஏற்பாடு செய்துவிட்டு வேலையில் சேர்வதற்கு தயாரானாள்….

        வேலையில் சேர்ந்த பிறகு முதல் ஒரு வாரம் அங்கு உள்ளவர்களோடு பழகுவதற்கு தயங்கி பின்னரே நெருக்க -மானாள்.  முதல் ஆறு மாதம் பயிற்சி காலமாக ஓடும் போதே தோழமைகள் நெருங்கி விட்டனர்.

அவளுடைய நட்பு வட்டம் தனி அதில் இவர்கள் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் இருந்தனர். அதில் ஒருவன் இவர்களுடைய சீனியர் ரஞ்சன் மூன்று வருடம் மூத்தவன் பெங்களூரை சேர்ந்தவன்., இரு பெண்களில் ஒருத்தி இவளோடு சேர்ந்து படித்த ஏஞ்சல் சென்னையை சேர்ந்தவள் தான். ஆனால் அவர்கள் வீடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பதால் இவள் போய் வருவதற்கு சரிவராது என்ற காரணத்தால் இங்கேயே தங்கியிருந்து வேலை பார்க்கிறாள்.  ஒரே கல்லூரியில் படித்து வந்த இருவரும் ஒருவன் ஜான் மற்றொரு பெண் லதா  இருவரும் நல்ல தோழமை எனவே இவர்களைப் மட்டுமே அந்த குழுவில் இருப்பார்கள்.  அனைவரும்  நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

            பெங்களூரில் இருந்து வந்தவன் பெங்களூரில் வேறொரு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு அது பிடிக்காமல் இந்த கம்பெனிக்கு வந்து வேலையில் சேர்ந்தவன். அவன்  வேலை பார்த்தது முதலில் அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு வேலை எனவே இங்கு வந்து முதலில் இருந்து கற்றுக் கொள்ளும்படி இருந்தது., அவனுடைய நிலை அதனாலேயே இவர்களோடு பழக பழக சந்தர்ப்பம் வாய்த்தது.

           அவர்கள் தோழமையோடு பழகத் தொடங்கிய இந்த ஆறு மாதத்திற்குள் அடிக்கடி சூர்யாவிடம் இவள் பேசும் போது அவர்களும் பேசிக்கொண்டனர். சூர்யா கல்லூரியின் சமயத்தில் எப்படி இவளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டானோ அதே போல வேலைக்கு வந்த சமயங்களிலும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டான்.

        ஒருமுறை ட்ரெய்னிங் முடிந்த சமயம் வேலை தொடங்கியபோது அதே கம்பெனியில் வேறு ஒரு பிரிவில் வேலை பார்க்கும் ஒருவன் வந்து மதி இடம் “அவளைப் பிடித்து இருப்பதாகவும்., வீட்ல வந்து பொண்ணு கேட்டா தருவாங்களா” என்று கேட்டான்.

         இவள் பயந்து போய் சூர்யாவிற்கு போன் செய்து முதலில் சூர்யாவிடம் தான் சொன்னாள்.

        சூர்யா “உனக்கு என்ன தோணுது, உனக்கு பிடிச்சிருக்கா” என்று கேட்டான்.

  “அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லன்னா., எனக்கு அந்த மாதிரிலாம் இல்ல., ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு, ஏதாவது பண்ணுங்க” என்று சொன்னாள்.

            சூர்யா இவர்கள் “நட்பு குழுவிடம் தொலைபேசியில் அழைத்து கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னான்.

        அதன்பிறகு நட்பு இன்னும் இறுக்கமானது.  மதிய உணவு வேளையில் அனைவரும் கேன்டீனில் அமர்ந்து உணவு எடுத்துக் கொண்டிருந்தபோது.,  பெங்களூரில் இருந்து வந்த ரஞ்சன் தான் முதலில் கேள்வி கேட்க தொடங்கினான்.

    “தப்பா நினைக்கக்கூடாது மதி பக்கத்து செக்க்ஷன் ல இருந்து வந்து உன்ட்ட பேசுன அந்தப் பர்சன் எனக்கு தெரிஞ்சு நல்ல சாய்ஸ்., ஆளும் நல்லா இருக்காரு., பெஸ்ட் குவாலிஃபைடு., ஆபீஸ்ல நல்ல போஸ்டிங் இருக்குறாரு., எல்லாமே யோசிக்கும் போது எங்களுக்கு தெரிஞ்சி ஓகே தான் சொல்லுவோம்., அவர் வந்து உன்கிட்ட ப்ரொபோஸ் கூட பண்ணல., வீட்டுக்கு வந்து கேட்கிறேன் ன்னு தான் சொல்லி இருக்காரு., அப்புறம் ஏன் நீ ஒதுங்கி போறே.   நீ என்ன மாதிரி யோசிக்கிற ன்னு தெரியல., உனக்கு லவ்வு என்கிற அந்த கான்செப்ட் பிடிக்கலையா இல்ல அந்த  பர்சனை பிடிக்கலையா., வேற யாரையாவது விரும்புறயா தப்பா எடுத்துக்காத., ஜஸ்ட் கேட்கலாம் ன்னு தான்., முறைச்சு  பார்க்காதே”என்று ரஞ்சன் சொன்னான்.

        “டேய்., உன்ன உதைக்காம விடக்கூடாது டா, அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லை. லவ் ங்கற கான்செப்ட் பிடிக்காது., அப்படி எல்லாம் இல்ல,  ஏன் லவ் பண்றவங்களுக்கு காலேஜ் படிக்கும் போது தூது எல்லாம் போய் இருக்கேன்”….

   “அடிப்பாவி சூர்யா அண்ணா க்கு தெரியுமா… திட்டலையா”…. என்றாள் லதா

       “சூரியாணா க்கு தெரியும் சொல்லி இருக்கேன்., எதையும் மறைக்கமாட்டேன்., திட்டு விழும். பின்ன கொஞ்சவா செய்வாங்க.” என்றாள்.

      “அப்புறம் என்னாச்சு” என்றான் ரஞ்சன்

       “நான் என்ன கதையா சொல்லுறேன்”.

        “திட்டினதோட ஒண்ணும் சொல்லலையா”… “சும்மா தான் கேட்டேன், அதுக்கு ஏன்டி என் சாப்பாட புடுங்குற” என்றாள் லதா.

    “நீ சாப்பாட்ட மட்டும் பாரு… நாங்க பேசின விஷயமே மாறி போச்சு” என்றான் ரஞ்சன்.  நீ சொல்லு என்றான்.

       ” எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை அவ்வளவுதான்”.

          “லவ் மேரேஜ் பண்றவங்களுக்கும் பிரச்சினை வரத்தான் செய்து, அரேஞ்ச் மேரேஜ் பண்ணறவங்களுக்கும் பிரச்சினை வரத்தான் செய்து, பிரச்சினை இல்லாத வாழ்க்கை எல்லாம் கிடையவே கிடையாது. ஏனோ எனக்கு பிடிக்கல”. அவ்வளவு தான்.,

       “நம்ம இவ்வளவு நாள் வளர்த்த அம்மா அப்பா க்கு தெரியாதா. டிரஸ் விஷயத்தில் கூட எந்த டிரெஸ் எடுத்துக் கொடுத்தா  தன்  பிள்ளைக்கு அழகா இருக்கும் ன்னு, ஆசைப்பட்டு  பார்த்து பார்த்து செய்ற பெத்தவங்களுக்கு தெரியாதா., தன் பொண்ணுக்கு எந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை வந்தா நல்லா இருக்கும்னு.,  ஸோ இந்த சந்தோஷம் அவங்களுக்கு கிடைக்கட்டுமே.,  அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த மாப்ளையோட நல்லபடியா வாழ்ந்த காட்டினா.,  எங்க அம்மா, அப்பாக்கு பெருமை இல்லையா., என் பொண்ணுக்கு நான் செலக்ட் பண்ணின மாப்பிள.,  என் பொண்ணோட லைஃப் நல்லா இருக்கு அப்படின்னு அவங்களுக்குள்ள ஒரு  திருப்தி கிடைக்கும். அந்த திருப்தி ய எங்கம்மா, ப்பா ட்ட பாக்கனும்னு ஆசை படுறேன் அவ்வளவுதான்.  எதுவா இருந்தாலும் அம்மா அப்பாவோட சாயிசா இருக்கணும் அவ்வளவுதான்”…

  ஜான்  “மதி நெஜமாதான் சொல்றியா, நான் கூட நினைச்சேன், நீ  அன்னியன்  ரேஞ்சுக்கு லவ்  பண்றவங்கள  கண்டா வெறுக்கிற ரகம் ன்னு நினைச்சேன்.,  எப்படி உன்ன ரெமோ வா மாற்ற யார் வரப்போறாங்களோ ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.   நம்ம ஃபிரண்டு இப்படி அம்பி மாதிரி இருக்கிறாளே ன்னு யோசிச்சேன்”… என்றான்.

         அவளது நட்பு வட்டம் சிரிப்பதை பார்த்தவள்.

        “டேய், நெஜமாவே நீங்க எல்லாம் அடி தான்டா வாங்க போறீங்க. என்ன பார்த்தா உங்களுக்கு  எப்படி தெரியுது., நெஜமாவே ஒரு பொண்ண நல்ல பிள்ளையாய் இருக்க விட மாட்டீங்களா டா”…

    “நீ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு,” என்று ஏஞ்சல் கொஞ்சலாக சொன்னாள்.

 “அம்மா அப்பாக்கு துரோகம் பண்றாங்க ன்னு ஒரு பீல்., அதனால தான் ஒதுங்கி நின்னேன் ஒழிய மற்றபடி பிடிக்காது என்று இல்லை.  இப்பதானே சொன்னேன் காலேஜில் உள்ள -வங்களுக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன்”. என்றாள்.

     “எல்லாருக்கும் இப்படி கேட்க காரணம் என்ன தெரியுமா”, என்று லதா கேட்டாள்.

        “என்ன காரணம்” என்று உணவை வாயில் அடைத்துக் கொண்டு மதி கேட்டாள்.

      “பெரிசா ஒன்னும் இல்ல நீ அந்த சீனியர் வந்து சொன்னதுக்கப்புறம் வேண்டாம்னு சொல்லிட்டு ஒதுங்கிப் போன., அது மட்டும் இல்லாம நம்ம செக்சன் ல உள்ளவங்க யாரும் உன்ன ஆர்வமா பார்த்தா கூட அவங்க ட்ட இருந்து டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ற., அதனால தான் எல்லாருக்கும் சந்தேகம் வேற ஒன்னும் இல்ல., ஒன்னு உனக்கு லவ் என்கிற கான்செப்ட் பிடிக்காம இருக்கணும்., இல்ல நீ வேற யாரையாவது லவ் பண்ணனும் ன்னு அதனாலதான் கேட்டாங்க” என்றாள்.

       “லூசுங்களா நீங்க., ஒரே வார்த்தை இப்பவும் சொல்றேன், என்னோட சாய்ஸ் அரேஞ்ச் மேரேஜ் தான்., ஸோ எங்க அம்மா அப்பா நிச்சயம் பண்ணி நடக்கும், எல்லா பங்க்ஷனும் வச்சு ஜாம்ஜாம் ன்னு நடக்கிற கல்யாணம் தான் எனக்கு வேணும். சும்மா  ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா நல்லா இருக்காது இல்ல.,” என்றாள்.

        ஜான் “இப்ப எல்லாம் நிறைய லவ் மேரேஜ் கிரண்ட் ஆ நடக்குது தெரியுமா”.., என்றான்.

            “உண்மை தான்., பேரன்ஸ் லவ் மேரேஜ்னு இதுதான் நடக்கும் தெரிஞ்சு தான் எல்லாரும் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க, ஆனாலும் மனசார எல்லாரும் சம்மதிப் பாங்களா ன்னு தெரியாது., நம்ம வளர்ப்பு பொய்யாய் போச்சு ன்னு ஃபீல் பண்ணுவாங்க. சரி ஏதோ பிள்ளைங்க நல்லா இருந்தா ஓகே.,  அப்படிங்கற மாதிரி நினைச்சு பர்மிஷன் கொடுப்பாங்க., நான் கண்டிப்பா நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு, நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்ப சொல்றேன் ஓகே வா”.. என்றாள்.

       அவர்கள் வேலையில் சேர்ந்த பிறகு வரும் முதல் புதுவருடம் அதற்கு அனைவரும் ஒரே போல உடை வாங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டனர். கலர் முக்கியமாக ஒரே கலராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.ஏன் ஏனென்றால் அதில் மூன்று பேர் தீபாவளி கொண்டபவர்களாகவும், இரண்டு பேர் கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் ஆக இருந்ததால் 5 பேரும் சேர்ந்து நீ புது வருடத்திற்கு உடை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டனர்.

         இந்த முறை கிறிஸ்துமஸ் நியூ இயர் விடுமுறை சற்று அதிகமாகவே இருப்பதால் அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்ல இருப்பதாலும் முதலில் உடைகளையே தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

        அது சம்பந்தமாக அவர்களது அரட்டை தொடர்ந்தது. அதன் பிறகும் அவர்களுடைய நட்பு சிறிதளவும் பிழை இல்லாமல் அழகாக தொடர்ந்து சென்றது. ஐந்து குடும்பத்திற்கும் , ஐந்து பேரையும் நன்றாக தெரியும், என்னும் அளவிற்கு அவர்களுடைய பழக்கம் நெருங்கி வந்தது.

        அவளுடைய மேற்படிப்பும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவே இல்லை. சூர்யாவும் சூர்யாவின் மனைவியும் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து பார்த்துவிட்டு சென்றனர். பாலனும் வசந்தாவும் ஒருமுறை வந்து சென்றனர். இவளும் வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஒரு முறை சென்று சூர்யாவின் மகள் அம்முவை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

         இப்போது அம்மு நன்றாகப் பேசத் தொடங்கி இருந்ததால் சூர்யா இவளை அழைப்பது போல மதிம்மா   என்றே அவளும்   தொடங்கியிருந்தாள். சூர்யா அப்படி அழைப்பதால் அவளுடைய அழைப்பும் அவ்வாறு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே..! இது தெரியாதவர்கள்  இனியாவும் முகிலனும் மட்டுமே…

         அந்த முறை புதுவருடப் பிறப்பன்று அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த போது இவள் தோழர்களோடு சேர்ந்து எடுத்த உடை அணிந்திருந்தாள். அம்மு க்கு ஊருக்கு வரும்போது உடை வாங்கி வந்திருந்தாள். அதை முதல் நாள் சூர்யாவிடம் கொடுத்திருந்தாள்.

          அவள் அதே கலரில் உடை அணிந்து வர கோயிலில் வைத்து அம்மு மதியை பார்க்கவும் ஓடிவந்து  காலை கட்டிக் கொண்டாள். அவளை தூக்கிக்கொண்டு சற்று தள்ளி சென்றவள், கோயில் பிரகாரத்தை வலம் வரத்தொடங்கினாள்.

Advertisement