Advertisement

அத்தியாயம் 16

உனக்கும் எனக்கும்

புது வாசம்

பரவுகிறது….

பால் மணக்கும்

பிள்ளையோடு…

மண் மணக்கும்

விளையாட்டை

கற்று கொடுத்து

கதை பேச வைக்கிறது

நம் புது வரவு…..

       பெயர் சூட்டும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. முகிலன் மதியின் குழந்தைக்கு ரிஷி என பெயர் வைத்தனர். மறுநாளே அவளை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான். குழந்தையும் சரி மதியும் சரி இப்போது உடல் நலம் கொஞ்சம் சற்று தேறி இருந்தால் பெரியவர்களும் சரி அழைத்துக் கொண்டு செல்லட்டும் என விட்டு விட்டனர்.

        முகிலனின் அம்மாவும்., மதியின் அம்மாவும்., ஒருவர் மாற்றி ஒருவர் போய் அவளுக்கு 2 மாதங்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தனர். அந்த வகையில் வீட்டு பெரியவர்கள் அவளையும் குழந்தையும் நல்லபடியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் தனியாக எல்லாவற்றையும் அவளேப் பார்த்துக் கொள்ளும் வகையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்தது.., அவனுடைய வேலை நேரங்களை பொருத்தே இவளுடைய வேலையும் பார்த்துக் கொண்டாள். வீட்டிற்கு வேலைக்கு மேலும் ஒரு ஆளை அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்ததான்., இப்போது அவளுக்கு அதிகமான வேலை இல்லை.., குழந்தையை கவனித்துக் கொண்டு சமையலை மட்டும் பார்த்துக் கொண்டாள்.

       குழந்தையும் அவளும் ஓரளவு உடல் நலம் தேறி வர .., அதன் பின்பு இரு வீட்டினரும் மாதத்திற்கு ஒரு முறை வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்., அவளுக்கு குழந்தையோடு நேரம் சரியாக இருந்தாலும்., முகிலன் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் குழந்தையோடும் அவளுடனும் நேரம் செலவழிப்பதை வழமையாகக் கொண்டிருந்தான்..,

      காலங்களும் நேரங்களும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.., அவ்வகையில் முகிலனுக்கு மதிக்கும் நேரங்கள் மாதங்களாகவும் வருடங்களாகவும் கடந்து ஓடிக்கொண்டிருந்தது…,

       நிறைவான வாழ்க்கையின் பயனாக மதி இரண்டு குழந்தைகளின் தாயாக மாறியிருக்க., அவளை அவ்வீட்டின் ராணியாக பார்த்துக்கொண்டான் முகிலன்., அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் அவளது அலைபேசி அழைத்து., அவளை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது…,

     “என்ன செஞ்சிட்டிருக்க” என்று கீதா கேட்க….,

      “பழைய விஷயங்களை யோசிச்சிட்டு இருந்தேன்…, ரிஷி பிறந்த வீட்டுலையும் சரி., ரக்க்ஷி பொறந்த வீட்டுலையும் சரி இவங்க பண்ணதெல்லாம் யோசிச்சிட்டு இருந்தேன்” …, என்று மதி சொல்லிக் கொண்டிருந்தாள்…,

     “நீ பழைய விஷயங்களை அசை போட்டுக் கொண்டே இருக்காதே, ன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன்…, நிறைய யோசிக்காத” என்று கீதா சொல்ல…,

        “ஒன்னும் இல்ல, இப்ப ரெண்டு நாளா ஒரே யோசனை சில விஷயங்களை எல்லாம் இவங்க மாறி என்ன செய்ய.. இந்த இனியா வை மாற்றவே முடியல.., என்ன பண்ணனும் தெரியல.., அவளால சில நேரம் இவங்க தான் டென்ஷன் ஆகுறாங்க…, என்று மதி சொன்னாள்.

     “அது என்ன பண்ணுவாங்க…, அவங்க கூடப் பொறந்தவ ஒரேடியாக பேச முடியாதே ன்னு அமைதியா இருப்பாங்க…, சரி விடு பாத்துக்கலாம்”என்று கீதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே.

     “ இப்ப ஸ்ரீராமுக்கு மேரேஜ் ஆயிடுச்சி.., இனிமேல் நான் வந்து பிள்ளைங்களோட போய் லீவு இல்ல.., விசேஷ நாட்களிலோ போய் அம்மா வீட்டுல உக்காந்து இருக்க முடியாது.., அவங்க அவங்க வீட்டுல போய் இருந்தா., இனியா வந்துருவா… என் ட்ட சண்டை போட முடியல என்கிற கோபத்தில் ஒன்னு இவங்க ட்ட சண்டை போடுவா.., இல்லாட்டி அத்தை மாமா கிட்ட சண்டை போடுவா.., குட்டிஸ் ட்ட கூட பார்த்தது கிடையாது.., கூப்பிட்டு வச்சு பேசியது கூட கிடையாது.., அப்படி இருக்கும்போது எனக்கு அந்த இடத்தில் இருக்க எப்படி பிடிக்கும் நினைக்கிற கீதா.., நானும் எவ்வளவு நாள் தான் அஜஸ்ட் பண்ணி போக முடியும் சொல்லு.., அஜஸ்ட் பண்ணி போறது எனக்கு பெரிய டிப்ரஷன் ல போய் நின்னுருமோ ன்னு எரிச்சல் வருது”..,

      “இவங்க ட்டயும் பிள்ளைங்க ட்டயும் சில நேரம் கோவப்படுறேன்., எனக்கே சில சமயம் என்ன பாக்க இரிட்டேட் ஆகுது… நான் ஏன் இப்படி மாறிட்ட அப்படின்னு தோணுது”…, என்று மதி புலம்பவும்…,

        “லூசாடி பிடிச்சிருக்கு உனக்கு…, கல்யாணம் முடிஞ்ச இந்த எட்டு வருஷத்தில் அண்ணன் தான் உன் பின்னாடி…, பெளமி., பெளமி னு பூனைக்குட்டி மாதிரி உன் பின்னாடியே தான் சுத்திட்டு இருக்காரு…, இதுக்கு மேல அண்ணே எப்படி மாறுவாரு…, என்ன கூட பிறந்த பாவத்துக்கு அவகிட்ட எதுவும் அதட்டி பேச முடியாம அமைதியா இருக்காரு…, ஆனா அது என்னைக்கும் ஒன்னு போல இருக்குன்னு யோசிக்காத., என்னைக்காவது ஒரு நாள் கொடுக்கப் போறாரு அன்னைக்கு அவளுக்கு இருக்கு” … என்று கீதா சொல்ல.,

      “இப்ப கார் வாங்கி கொடுத்ததற்கு…, அப்படி சண்டை போட்டாளாம்…, நானும் கலை அக்காவும் பிள்ளைங்க ல கூட்டிட்டு வெளியே போயிருந்தோம்…, அவங்க அம்மா, அப்பா, சூர்யா அண்ணா., இவரு., இனியா ஐந்து பேர்தான் இருந்தாங்க…, மாமா ட்ட செம திட்டு., ஆனாலும் பாரு, அடுத்து எப்ப வம்பு இழுக்கலாம் ன்னு., வெயிட் பண்ணுவா” …, என்றாள்.

       “என்ன செய்ய விடு…, அண்ணா உனக்காக இவ்வளவு பாக்குறாரு அதுக்காக நீ சில விஷயங்களை சரி சரி ன்னு போ”., என்றாள் கீதா…,

      “அப்படி தான் போயிட்டு இருக்கு” …,

       “விருதுநகர் வந்ததுக்கு அப்புறம் எப்படி போகுது”.,

     “விருதுநகர் வந்ததுக்கப்புறம் நல்லா தான் இருக்கு…, என்ன இங்கிருந்து ஒன் ஹவர் கூட ஆகாது…, மதுரைக்கு வீட்டுக்கு போக., ஆனாலும் பாரு அடிக்கடி போக முடியல…, இரண்டும் அவங்க அப்பா கூட சேர்ந்து என்னை போட்டு என்ன பாடு படுத்துது ன்னு தெரியுமா” …,

      “ஆமா நேத்து என்ன சத்தம் போட்டியா., ரக்க்ஷி சொன்னா அம்மா அப்பாவை திட்டிட்டாங்க னா…,

        “திட்டாம கொஞ்சுவாங்களாக்கும்…, அவளை ஹோம் வொர்க் எழுத வைக்க சொன்னா., அவளுக்கு அவரே எழுதிக் கொடுக்குறாரு…, வாடா அப்பா சொல்லி தர்றேன் அப்படின்னு கூப்டு வச்சி கைய புடிச்சு எழுதிக் கொடுக்கிறேன் சொல்லிட்டு…, நான் கிச்சன்லே நின்னு பார்த்துட்டு இருக்கேன்., கடகடன்னு அவரே போட்டு முடிச்சிட்டார்”.,

    “ம்ம்ம்…, பிள்ளைங்க கிட்ட., இந்த அப்பாங்க எல்லாம் அடிமை…, சரி சரி நீ எல்லாத்தையும் யோசிச்சி குழப்பிக்காத…, ஹாப்பியா இரு., உன் குட்டீஸ் காக நீ ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட்டு உடம்ப பாத்துக்கோ” என்று சொன்னாள்.

     “எனக்கென்ன நல்லா இருக்கேன்” …. என்று மதி சொல்ல..,

     “ஸ்கூல் விடுற நேரத்திற்கு அண்ணன் வந்துருவாங்களா… உன் காரை வேற எடுத்துட்டு போனாங்க ன்னு சொன்ன” …,

     “பிள்ளைங்கள கூப்பிட டைமுக்கு வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்…, வராட்டி ஆட்டோ போன் பண்ணி சொல்வாங்க…, ஆட்டோவில் போய் கூட்டிட்டு வந்துருவேன் பிள்ளைங்கள” ….. என்று சொல்லி விட்டு., தோழிகள் அவர்களுக்கே உரிய கல கலப்போடு பேச்சை முடித்துக் கொண்டனர்….

      திருமணம் முடிந்து இந்த எட்டு வருடங்களில் இருவருக்கான புரிதலும் அன்பும் அதிகரித்து இருந்தாலும்.., சிறு சிறு சண்டைகளும் அடிக்கடி வந்து கொண்டு தான் இருந்தன.., ஒன்று பிள்ளைகள் பண்ணும் சேட்டையால் வரும் இல்லையென்றால் வீட்டில் இருக்கும் பிரச்சனையால் வரும்.., அவர்களுக்குள் என்று என்றுமே சண்டை வந்தது கிடையாது..,

     முகிலன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று வருவது கடினமாக இருப்பதால் அவளுக்காக சிறிய காரை வாங்கிக் கொடுத்திருந்தான்., இப்பொழுது ப்ரமோஷனோடு அவன் விருதுநகருக்கு டிரான்ஸ்பர் ல் வந்து இருப்பதால்.., இங்கு வந்து பள்ளி சேர்த்த பிறகு தான் கார் வாங்கிக் கொடுத்தான்.., ஏற்கனவே அவனிடமிருந்த காரை அவன் எப்போதாவது மட்டுமே உபயோகிப்பான்., வேறு யாரையும் எடுக்க அனுமதிக்க மாட்டான் அவளுக்கு என்று வாங்கிக் கொடுத்தது தான் அடிக்கடி உபயோகப் படுத்திக் கொள்வது..,

      குழந்தைகளை பள்ளியில் விழா வாகட்டும்.., பள்ளி நிகழ்ச்சிகள் ஆகட்டும்., எதுவாக இருந்தாலும் மதி தான் சென்று வருவாள்.., முகிலனுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று வருவான்., மத்தபடி பள்ளிகளை பொறுத்தவரை ரிஷி அம்மா., ரக்க்ஷி அம்மா., என்று அவளை தான் அனைவருக்கும் நன்றாக தெரியும்.., இருவரும் செய்யும் சேட்டைகள் பல நேரங்களில் ரசிக்கும் படியாக இருந்தாலும்.., சில நேரங்களில் மதி இடம் அடி வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.., லீவு நாட்களில் இவர்கள் மதுரைக்கு செல்ல முடியாவிட்டால் அம்மு வை அழைத்துக் கொண்டு கலை இங்கு வந்து விடுவாள்..,

      இவர்கள் அனைவருக்கும் மிக சந்தோஷமாக பொழுதுகள் போகும்., சூர்யாவிற்கு மதியும் முகிலனும் ஒருவருக்காக ஒருவர் புரிந்து கொண்டு அன்போடு வாழும் வாழ்க்கை பார்த்து சந்தோஷம் தான்.., எங்கே சொதப்பி விடுவார்களோ என்று திருமணத்தோடு பயந்தது சூர்யாவும் கீதாவும் மட்டுமே.., மற்றவர்களை பொறுத்தவரை எல்லாம்., சாதாரண பெரியவர்கள் பார்த்து முடிக்கும் கல்யாணம் என்ற எண்ணம் மட்டுமே.., இவர்கள் போடும் சண்டையை அறிந்த இருவர் மட்டுமே பயந்து போய் இருந்தனர்..,

      வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்தாலும் இருவருக்குமான பிரச்சினைகள் வந்துக் கொண்டு தான் இருந்தது.., ஆனாலும் இருவரும் வாழ்க்கையில் இதெல்லாம் கடக்க வேண்டிய ஒன்று என்று கடந்து போய்க் கொண்டிருந்தனர்..,

      அவனுடைய கண்டிப்பு., அவனுடைய நேர்மை என்று அவன் வேலையில் சிறந்த பெயர் பெற்றிருந்தான்.., அது மட்டுமல்ல கண்டிப்புடன் கூடிய சிறந்த அதிகாரி என்ற பெயரும் பெற்றிருந்தான்.., விருதுநகரில் அவர்கள் வாழ்க்கை சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது.,

    கீதாவிடம் பேசி முடித்தவள் வீட்டில் எப்போதும் செய்யும் மற்ற வேலைகளையெல்லாம் முடித்து விட்டு., மதிய உணவை முடித்து விட்டு., வீட்டில் உதவி செய்வதற்கு மாலை நேரத்தில் வரும் அம்மாவிற்காக எல்லாம் ஒதுக்கிப் போட்டுவிட்டு., பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்தவுடன் ஏதாவது ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்களே என்று அதற்காக சிற்றுண்டி செய்வதற்கு தயார் செய்து வைத்து விட்டு., பள்ளிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.

       இப்போதுவரை முகிலன் வரவில்லை., வந்தால் அவன் அவர்களை கூட்டி வருவான். இப்போது இவள் கூப்பிட போக வேண்டும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்.,

      முகிலனிடம் இருந்து போன் வந்தது.., “சாரிடி பெளமி நீ போய் கூட்டிட்டு வந்துடு டா., எனக்கு இன்னும் வொர்க் முடியலம்மா., முடிஞ்ச உடனே கிளம்பி வந்துடுறேன்., டின்னருக்கு உங்களோட வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

Advertisement