Advertisement

அத்தியாயம் 19

 அவளது நேசத்தின் வரிகள்

உன் நேசத்தின்

வெளிப்பாடு

உன் பார்வையில்

உன் வார்த்தையில்

உன் விரல் நுனியில்

கூட உணர

வைக்கிறாய்….

        இனியாவின் கணவன் அறிவுரை செய்துவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லவும்…, சூர்யா அங்கே வந்தான்.,

     வந்தவன் இனியா விடம் “உனக்கு நான் எத்தனையோ தடவை சொன்னேன்., நீ தான் கேட்கல.., அவ அமைதியா போயிட்டு இருக்கா ன்னு திரும்பத் திரும்ப பண்ணா..,  என்னைக்காவது ஒரு நாள் நீ என் கையால் அடி வாங்குவ ன்னு எதிர்பார்த்தேன்..,  ஆனால் முகிலன் அடிப்பான் னு..,  நான் எதிர்பார்க்கவே இல்ல.,  உன் மேல அவ்வளவு பாசம்  அதாவது உன்னை வெறுக்க முடியாத அளவுக்கு பாசம் வைத்திருந்தான்.,  ஆனா அவனையே நீ அடிக்கிற அளவுக்கு கொண்டு விட்டுட.., இப்பவும் அவன்  அதற்காக வருத்தப்படவில்லை.,  இப்பவும் என்ன சொல்றான் னா..,  அவ மூஞ்சில முழிக்க கூட  நான் விருப்பப்படல ன்னு சொல்லுறான்..,   நீ அந்த அளவில் பண்ணி வச்சிருக்க…,

      பேசுற வார்த்தைகளை யோசித்து பேசனும்.,  நிதானமா பேசனும்.,  அந்த பொண்ணு அமைதியா இருக்கு னு.,  அதற்காக நீ என்ன நாளும் பண்ணுவியா..,

      சரி நீ உன்னோட கோபம்., சண்டை எதுனாலும்., கலை ட்ட பேசுறது வேற.., அவ அத்தை பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கோம்.., அது வேற நம்ம வீட்ல எல்லாரும் சரி சரி போயிடு வாங்க ..,

      மதி வீட்டுல அந்த மாமாவும், அத்தையும் எதுக்காக அவங்க பொண்ண நீ இப்படி பேசுறத கண்டுக்காம போறாங்க ன்னு நினைக்கிற…, அப்பாவோட இருக்கிற இத்தனை வருஷ  பிரண்ட்ஷிப்…,  அந்த பிரெண்ட்ஷிப் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் மாமா இருக்காரு.., அந்த பொண்ணு நானே கண்டுக்காம போகும் போது நீங்க எதுக்கு இத பத்தி பேசறீங்க., ன்னு சொல்லி அத்தை வாயை அடைக்க வைக்குது..,அப்படி இருக்கும்போது..,  நீ உனக்கு பிடிக்கலைன்னா பேசாம ஒதுங்கிப் போ.., அதுக்காக தேவை இல்லாம பேசாத.., இது ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லிட்டு தான் இருக்கேன்..,

        நீயும் உன்  வேலையை நிறுத்தாம..,  அப்படி இப்படி பண்ணிக்கிட்டு இருந்தாலும்.., அந்த பொண்ணு பெருசாவே எடுத்துக்காம, இதுவரைக்கும் வெளிய காட்டிக்காம போச்சு.., எங்க எல்லாருக்கும் தெரியும் நீ என்ன வம்பு பண்ணிக்கிட்டு இருக்க ன்னு..,  எப்ப பாரு முகிலன் கிட்ட சண்டை போடுவது.., உனக்கு உன் பொண்டாட்டி தான் முக்கியமா  போய்ட்டா ன்னு…, ஆமா இன்னைக்கு ஒரே அடில உனக்கு புரிய வைத்தான் இல்ல அவனுக்கு அவன் பொண்டாட்டி தான் பெருசுன்னு..,  யாரா இருந்தாலும் அவங்க வாழ்க்கை துணை தான் உங்களுக்கு பெருசு.., சரியா….,

      எனக்கு கலை முக்கியம்..,  கலைக்கு நான் முக்கியம்.., அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அப்படி தான்.., இப்ப  உன்னைய உன் புருஷனை விட்டு விட்டு வீட்ல வந்து உட்கார்ந்து…, அண்ணன் தம்பி கூட இருந்து பார்த்துட்டே இரு..,  அண்ணன்-தம்பி பாசத்தை மட்டும் பார்த்துட்டு இரு சொன்னா.., இருந்துருவியா..,  உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குற வரைக்கும்…, தான் உன்னோட அண்ணன்.., தம்பி பெருசா தெரியும்.,  கல்யாணத்துக்கப்புறம் அண்ணன் தம்பி நாங்க யாரும் கண்ணுக்கு தெரியாது…,

      உனக்கும் குடும்பம் வந்துரும்.., உன்னோட  குடும்பத்தை பார்க்கறதுக்குத் தான் நேரம் சரியா இருக்கும்.., அப்படி இருக்கும் போது நீ..,  உன் குடும்பம் ன்னு இருக்கிறத விட்டுட்டு.., தேவை இல்லாத்தை பார்க்காத…,

        உனக்கு உன் வீட்டுக்காரர் வாங்கி தந்தா.., அவர் எனக்கு வாங்கி கொடுத்தாரு அப்படி பத்து தடவை சொல்லுவ…,  அதே மாதிரி தானே எல்லா பொண்ணுங்களுக்கும்  இருக்கும்.., அது போல இங்க மட்டும் உரிமையா கேட்டு வாங்குற…,  இதே இது உன் ஹஸ்பண்ட் வீட்டுல அவர் கூட பிறந்த பொண்ணு.., போன் பண்ணா.., இல்ல வந்து  எனக்கு அது வேணும்..,  இது வேணும்னு கேட்டா.., இங்க வந்து குறை படிக்குற…,  இல்ல எப்ப பாரு அங்க வந்து கேட்டுகிட்டே இருக்கா…,  அவ வீட்ல என்ன வாங்கி கொடுக்காமலா.., இருக்காங்கன்னு  சொல்ல தெரியுது இல்ல…,  அதே மாதிரி உன்னை பத்தி கலையும் மதியும் பேசியிருந்தா..,  அது உனக்கு  அசிங்கம் ங்கிறத யோசிக்க மாட்டியா..,  இவங்க ரெண்டு பேரும் பேச மாட்டேங்க…,  அதுக்காக நீ உன் இஷ்டத்துக்கு செய்வீயா என்று கேட்கவும்”..,  அவள் காலை கட்டிக்கொண்டு தலையை மடியில் புதைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்து கொண்டாள்..,

    இத்தனை நாள் பேசாதது எல்லாம் சேர்த்து வைத்து சூர்யாவும் பேசி விட அவளுக்குத்தான் அவமானமாக இருந்தது…,  தான் இவ்வளவு பெரிய தப்பு செய்து கொண்டிருக்கிறோம் என்று..,  இருந்தாலும் திருந்துவாளா என்பது அவள் மனதிற்கு மட்டுமே தெரிந்த விஷயம்…,

         வெளியே அனைவரும் பேசிக்கொண்டிருக்க முகிலன் மட்டுமே உள்ளே இருந்தான்., அவனுக்கு துணையாக ஸ்ரீராம் உள்ளே இருக்க..,

        அந்நேரம் உள்ளே மெதுவாக தன் உணர்வு திரும்பிய மதிக்கு தான் எங்கிருக்கிறோம் என்று முதலில் புரியவில்லை..,  சுத்தி  மருத்துவ உபகரணங்களுடன் இருந்தவளுக்கு.., ஆங்காங்கே உடலில் வலி தெரிந்தது ஆங்காங்கே.., ஏதோ கட்டுப் போட்டு இருப்பது போல உணர்ந்தாள்..,  அப்போது தான் அவளுக்கு கார் உருண்டது பற்றிய நினைவு வந்தது…,

     கட்டு போடப்பட்டிருப்பதை வலியின் தீவிரத்தால்  அவளால் உணர முடிந்தது..,  முழித்து பார்த்தவளுக்கு தன்னை சுற்றி மருத்துவ உபகரணங்கள் இருப்பதை கண்டவள்.,  மெதுவாக பக்கத்தில் திரும்பவும் அந்தப் பக்கமாக மற்றொரு நோயாளிக்கு எதுவோ செய்து கொண்டிருந்ததை நர்ஸைப் பார்த்தவள் அந்த அறையில் வேறு யாரும் இல்லாததை கண்டு மெதுவாக அந்த நர்ஸை அழைக்க..,

      நர்ஸ் வேகமாக திரும்பி பார்த்து “அப்பாடி கண் முழிச்சிட்டீங்களா” என்று கேட்க…,

           “ஏன்., என்ன ஆச்சு” என்று கேட்டாள்…

      “காலையில் வந்து அட்மிட் பண்ணாங்க., உங்களுக்காக பெரிய போராட்டமே நடந்துட்டு இருந்தது…, சிஸ்டர் காட்’ஸ் கிரேஸ் இருங்க., யாரையாவது கூட்டிட்டு வரேன்”., என்று சொல்ல

     நர்ஸை  அழைத்து “ப்ளீஸ்  வெளியே என் ஹஸ்பண்ட் இருந்தா., அவரை வர சொல்றீங்களா” என்று கேட்டாள்..,

    “கண்டிப்பா வர சொல்றேன்ங்க., அவரு தான் உங்கள முதல்ல பார்க்கணும்., இன்னைக்கு அவர் அழுத அழுகையில் ஹாஸ்பிடல இங்க இருந்த எல்லோருக்கும் கண்ணு கலங்கிருச்சு…, நீங்க லவ் மேரேஜா” என்று கேட்டாள்.,

          அவ்வளவு வலியோடும் லேசாக சிரித்தவள்.., “ப்ளீஸ் வரச்சொல்லுங்கள்” என்று வலியோடும்., வேதனையோடும்., முகத்தை சுருக்கியபடி சொல்ல…,

    “இதோ இதோ சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தே அவளைப் பார்த்த டாக்டருக்கு போன் செய்து சொல்லி விட்டு…, வெளியே வந்தவள் ஸ்ரீராமும் முகிலனும் இருப்பதை கண்டவள்., “சார் உங்க வொய்ஃப் கண்ணு முழிச்சிட்டாங்க., உங்கள பாக்கணும் சொல்றாங்க” …, என்று சொன்னாள்.

    முகிலன் அவசர அவசரமாக எழுந்து உள்ளே ஓடினான்.., அதே நேரம் ஸ்ரீராம் உள்ளே வர போனவன் அப்படியே வெளியே தேங்கி நிற்க.., “உள்ள வாடா” என்று முகிலன் கூப்பிட…,

      “நீங்க முதல்ல பார்த்துட்டு வாங்கத்தான்., அதுக்கப்புறம் நான் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

            “நீயும் வா” என்று சொல்ல

          “இல்ல தனியா போய் பார்த்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு டாக்டர் வருவதற்காக காத்திருக்க., அவன் கண் கலங்க நின்றான்.,

         மருத்துவ காரணங்கள் சுற்றி இருக்க படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு கண்ணீர் அவனறியாமல் வடிந்தது..,  இவள் கையிலும் மருந்து இருந்த ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்து.., கையை அசைக்க முடியாமல் பிடித்து வைத்தது போல் இருக்க..,  இடது கையில் மட்டும் பல்ஸ் பார்ப்பதற்காக  வைத்திருந்ததை எடுத்து விட்டு அருகில் வரும்படி கையால் அழைத்தாள்…,

     அவனும் கண்கலங்க கண்ணீரோடு அருகில் வந்து அவள் தோளில் தலைவைத்து அமைதியாக இருந்தாலும்…, கண்ணீர் வடிவதை உணர்ந்தவள்..,  மெதுவாக கையை பிடித்து “ப்ளீஸ் அழாதீங்க” என்று சொன்னாள்.., அதே நேரம் அவன் முகத்தை பார்த்தவள் காலையில் அவன் கன்னத்தை தடவி எட்டு வருட காதலை தான் அந்த  நேரம் சொல்லியது.,  அவளுக்கு நினைவு வந்தது..,  அந்த ரத்தக் கரை படிந்த உடையை கூட மாற்றாமல் அவன் எத்தனை சற்றுநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள்.,  அவனை அழ விடாமல் அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு..,  ஒன்னும் இல்ல நான் வந்துட்டேன்.., அப்படியெல்லாம் போக மாட்டேன்.., என்று வலியோடு அவனை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தாள்..,

      அப்போது டாக்டர்  வர ஸ்ரீராம் உள்ளே வந்தான்.., ஸ்ரீராமை பார்த்தவள் வலியோடு அவனை புன்னகைத்து அருகில் அழைக்க..,

      அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டு ஏங்கி ஏங்கி அழுதான்…, “கார் ஓட்டும் போது மெதுவா பார்த்து போ ன்னு., சொன்னேன்ல” என்று சொன்னான்.,

         அப்போது தான் அவனுக்கு அந்த விபத்து நடந்த விஷயம் பற்றி விசாரிக்க சொன்னதை பற்றி அப்போது தான் நினைவு வந்தது…, அது வரை வேறு எந்த நினைவும் இல்லாமல் இருந்தவனுக்கு அப்போது தான் இவனுடைய மேலதிகாரி காலையில் சொல்லிக் கொண்டிருந்த விஷயமே நினைவுக்கு வந்தது..,

      எனவே அதைப் பற்றி கேட்க வேண்டும் என நினைத்து கொண்டான்.., அதற்குள் வெளியில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு., அவர்களோடு பேசிவிட்டு “அவளும் சற்று ஓய்வெடுக்கட்டும் எல்லாரும் இனிமேலாவது வீட்டுக்கு கிளம்புங்க.., எல்லாம் உங்க சொந்தக்காரங்களா இருக்கிறாங்க”., என்று சொன்ன பின்பு அனைவரும் ஒவ்வொருவராக பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் அவர்களுடைய அன்பே தெரிவித்துவிட்டு செல்ல கீதாவும் காத்திருந்து அவளை பார்க்க வந்தாள்..,

Advertisement