Advertisement

மூன்று படுக்கை அறை கொண்ட வீடு தான்.,  ஆனாலும் ஒரு அறையை முகிலன் தனது அலுவலக  சம்பந்தமான விஷயங்களை மட்டும் வைத்திருந்ததால் அந்த படுக்கை அறையை யாரும் உபயோகிக்கவில்லை., அதில் அவனது யூனிஃபார்ம் லிருந்து அலுவலக கோப்புகள் முக்கியமான பைல் என அனைத்தும் அங்கு வைத்திருப்பதால் அந்த அறைக்கு யாரும் செல்லவில்லை…,  அதே நேரம் இன்னொரு படுக்கையறை முகிலன்  உபயோகித்துக் கொண்டு இருந்ததால் அந்த அறைக்கும் யாரும் சொல்லவில்லை.,

      அதே நேரம் இனியாவின் கணவன் தான் கலையை இனியா வோடு குழந்தையை வைத்துக் கொண்டு படுக்க  செல்லுமாறும்.,  தான் மற்றவர்களோடு ஹாலில் படுத்துக் கொள்வதாகவும் சொல்ல..,

       வேண்டாம் என மறுத்து விட்டாள்., பின்பு இரவு விளக்கை மட்டும் போட்டு வைத்து விட்டு அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு கலையும் ஹாலில் அவர்களோடு படுத்து விட., பாதி இரவில் தற்செயலாக தண்ணீர் குடிக்க எழுந்து வந்த முகிலன் நேரம் என்ன என்று பார்ப்பதற்காக அங்கிருந்த செல்போனை எடுத்து டைம் டைம் பார்க்க,  நினைக்கும் போது போனை ஆஃப் பண்ணி வைத்திருந்தது போல இருந்தது..,

       ஆனால் அது சூர்யாவின் போன்.,  சூர்யா இரவு நேரத்தில் போனை ஆஃப் பண்ணும் பழக்கம் கிடையாது., எப்படி ஆஃப் ஆகியிருக்கும், ஒருவேளை சார்ஜ் இல்லையோ என்று நினைத்துக் கொண்டு அதை சார்ஜரில் போட முயற்சி செய்யும் போது தான்,  அருகில் இருந்த கலையின் போனை  நேரம் பார்க்க எடுத்தான்.,

 அதுவும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பதை பார்த்தவுடன்.,  இது இனியாவின் வேலையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.,  எதற்கு இந்த வேலை என்று யோசிக்கும் போது தான்., அனைவரும் காலையில் எத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும்.,  என்று பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது..,

            மதியை அழைக்க செல்ல வேண்டும்., என்பதற்காக அவர்கள் நினைத்திருக்க இவள் அனைவரது போனையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதை பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது..,

         என்ன செய்வது இவளை எத்தனை முறை தான் திட்டுவது என்று நினைத்து விட்டு அனைவரது போனையும் சத்தமே இல்லாமல் எப்பொழுதும் போல ஆன் செய்து வைத்து விட்டு நகர்ந்து சென்று விட்டான்  ..

         அவனுக்கு அதிகாலையிலே போன் அழைத்தது., என்னவென்று பார்க்கும் போது அங்கு உள்ள மீனவ மக்களிடையே இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து இருப்பார்.,  அதில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏதோ வாய் வார்த்தை தவறி அது சண்டையில் வந்து நிற்பதாக கூறவும்., காலையில் மீன் இறக்கும் இடத்தில் பிரச்சினை என்றவுடன் வேறு வழி இல்லாமல் இவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் அங்கு இருந்தாலும்.,  இவனும் செல்ல வேண்டிய சூழ்நிலை என்பதால்  அங்கே கிளம்பி சென்றான்..,

          அப்போது சூர்யாவை மட்டும் பார்த்துக் கொள் என்று சொல்லி இனியா இரவு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்த கதையை சொல்லி விட்டு சென்றான்..,  ஏனென்றால் இவன் மறுபடியும்  தூங்கி விட கூடாது.. என்று.,

        சூர்யா எழுந்து கிளம்பி வரவும் அதே நேரம் இனியா எழுந்து வரவும் சரியாக இருந்தது.., எழுந்து வந்து பார்த்தவள் அனைத்து போனும் ஆன் செய்து வைத்திருப்பதை பார்த்த உடனேயே திரு திருவென முழித்துக் கொண்டு நின்றாள்.,

       ஆடு திருடிய கள்ளன் மாட்டிக் கொண்ட கதை போல் இருந்தது., அவளது நிலைமை அதை பார்த்த உடன் சூர்யா அவளிடம் “குடும்ப மானத்தை வாங்காதே.,  நீ எவ்வளவு தப்பு பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்க மாட்டாங்க.,  காரணம் என்னன்னா அப்பாவும் மாமாவும் பிரண்ட்ஸ்.,   எல்லாருக்கும் சின்ன பிள்ளைல இருந்தே தெரியும்., அதனால எல்லாரும் சரி சரி ன்னு போயிட்டு இருக்காங்க..,  இது எப்பவும் ஒன்று போல இருக்கும் நினைக்காத., பிரச்சினையை வளர்க்காதே”..,  என்று சொல்லிவிட்டு “இதுக்கு மேல ஏதாவது இந்த மாதிரி பிரச்சனை பண்ணினா நான் கண்டிப்பா மாப்பிள்ளை ட்ட நீ என்ன காரியம் பண்ணின கல்யாணத்து அன்னை ல இருந்து ன்னு   எல்லாம் சொல்லி விடுவேன்..,   நேத்து நைட்டு போனை பண்ணி வச்ச கதையை சொன்னா.,  அப்புறம் இன்னும் கேவலமாக போயிரும் ஞாபகம் வச்சுக்கோ”.,  என்று சொல்லித் திட்டி விட்டு அவன் மதியை அழைத்துவர சென்றுவிட்டான்…

     அவன் கிளம்பிய இடைவெளியில் கலையிடமும் சொல்லி., “பார்த்துக்கோ இவ வேற ஏதும் பிரச்சனை உண்டு பண்ணிறாம”.., என்று சொல்லி விட்டு சென்றிருத்தான்…

       சூர்யா மதியை அழைத்துக் கொண்டு வரும் போது., மதி ட்ரெய்னில் வரும் போது நடந்த கதை,  பாலத்தின் மீது ட்ரெயின் வரும்போது கடலை மிக அருகில் பார்த்த கதை, என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தாள்., நேற்று நண்பர்கள் கூட வந்து ட்ரெயினில் ஏற்றி விட்டதை ஏற்கனவே அவனிடம் போனில் சொல்லி இருந்ததால் அதை விட்டு -விட்டாள்.,

     சூர்யாவோ இவள் இன்னும் அதே குணம்  என்று நினைத்துக் கொண்டான்., தம்பி ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்பதால் இனி மதியை அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது., மதியும் விட்டுக் கொடுத்து போகும் குணத்தோடு இருப்பதால்.,  அவளும் வாழ்க்கையில் ஜெயித்து விடுவாள் என்று நம்பினான்..

       வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் கலகலப்பாகவே அவளுக்கு நேரம் போனது., வீட்டில் அனைத்தையும் ஒதுக்கி வைத்திருந்த விதம் அவளுக்கு பிடித்து இருந்தது., இருந்தாலும் கலையும் வீட்டுப் பெரியவர்களும் “உனக்கு எதுவும் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்” என்று சொல்லவும்..,

         நல்லாயிருக்கு.,  அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாள்.

  அங்கு தண்ணீர் பிரச்சினை இருந்தாலும் இவர்களுக்கு தண்ணீர் ஒழுங்காக வரும்.,  அவர்கள் வீடு கோர்ட்ரஸ் ல்  இருப்பதால் அவர்களுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்வார்கள்.,

          அது தெரிந்ததால் அதற்குரிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதால் அங்கு வீட்டில் பெரியவர்கள் சற்று நிம்மதியாக உணர்ந்தார்கள்..,

          அதே நேரம் அவள் கொண்டு வந்த எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அழுக்கு துணிகளை எடுத்து துவைக்க போட்டும் முன்  வீட்டில் இருந்த மற்ற அழுக்குத் துணிகளையும் சேர்த்து எடுத்து  துவைக்க  மெஷினில் போட்டாள்…

       எல்லோரும் இருக்கட்டுமா  நாங்க ஊருக்கு போயிட்டு பார்த்துக்கிறோம் என்று சொன்னதற்கு..,  இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாள்.

       ஒரு பொறுப்புள்ள குடும்ப பெண்ணாக தன் கடமையை செய்யத் தொடங்கினாள். காலை உணவை முகிலனின் அம்மாவும் அவளின் அம்மாவும் செய்ய., அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இவள் குளித்து முடித்து வந்தாள்.

           சாப்பிட்டு முடித்து கதை பேசிக் கொண்டிருக்கும் போது தான் முகிலன் வீட்டிற்குள்ளே நுழைந்தான்., அவனோ  அவளைத் தேட..,

      கலையோ… “தம்பி முகத்தில் வெளிச்சம் பளிச் ன்னு தெரியுதே” என்று கேட்கவும்.

     “சும்மா கிண்டல் பண்ணக்கூடாது அண்ணி, அண்ணன் கூட தான் கல்யாணம் முடிஞ்ச புதுசுல இப்படி தான் இருந்தான்., நாங்க யாராவது கேட்டோமா”…

    “நீ வேற டா… அது அப்ப அப்படி தான்”…,

     என்னது என்று கலை கிண்டலாக கேட்கவும்..

     அசட்டு சிரிப்பை பதிலாக சூர்யா பதிலாக தர… உடை மாற்ற சென்றான்., முகிலன்.

      “உங்க ஆளு., பின் பக்கம் போனாங்க தம்பி” என்றாள் கலை.,

        அறைக்குள் இருந்து “தேங்ஸ் அண்ணி” என்ற சத்தம் மட்டும் வந்தது..

         அவள் அப்பொழுது தான் பின்புறம் வேலை செய்துகொண்டிருந்த உதவிக்கு வந்த பெண்ணிடம்., என்ன செய்யப் போகிறார்கள்.,  என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.   பிறகு சென்று அந்த அம்மாவிற்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்து கொடுத்து விட்டு துணியை காயப் போட கொடுத்து விட்டு வந்தாள்..,

     அவனும் அவசர அவசரமாக யூனிபார்மை மாற்றிவிட்டு அவளைத் தேடி கிச்சனுக்கு வந்து விட்டான் ..

        முகிலன் கிச்சனுக்குள் நுழைவதை பார்த்தவுடன் இனியா எழுந்து அவனுக்கு காலை உணவு வைத்து கொடுப்பதாக  உள்ளே செல்ல முயற்சிக்கவும்.,

      இனியாவின் கணவன் கையை பிடித்து இழுத்து அருகே அமர வைத்து.,  “நாங்க எல்லாரும் இங்கே தானே இருக்கோம்.,  உனக்கு என்ன உங்க அம்மாக்கு இல்லாத அக்கறை.,   உங்க அம்மாக்கு தெரியாத பையன் வந்து இருக்கான் சாப்பாடு எடுத்து வைக்கணும் னு., அவங்களே பேசாமல் தான இருக்காங்க..,   உங்க அண்ணி இருக்காங்க இல்ல அவங்க வச்சு கொடுப்பாங்க..,  நீ உன் வேலைய பாத்துட்டு இங்க உட்காரு” என்று சொல்லி சத்தம் போட்டான்..,  அவனுக்கு விஷயம் தெரியாத போதே அவளுடைய நடவடிக்கைகள் சில பிடிக்காத காரணத்தால் சத்தம் போடவும் வேறு வழி இன்றி அமைதியாக அங்கே அமர்ந்து கொண்டாள்.

கிச்சனுக்குள்  போனவுடன் அவளைப் பார்த்தவன் சற்றுநேரம் பார்த்துக் கொண்டே நின்றான்., அவளும் அப்படியே நிற்க இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணால் களவாடிக் கொண்டனர்.,

       பின்பு அருகில் வந்தவன் அவளை இறுக்கமாக அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து மீசை முடி உரசும்படி அவளை கொஞ்சி அவளுக்கு கூச்சத்தை உண்டு பண்ணினான்., அவளோ கூச்சத்தை பொறுக்க முடியாமல் அவனிடம் இருந்து தள்ளி நிற்க முயற்சித்தும்., முடியவில்லை என்றதும்., அவனிடம் மெதுவான குரலில் கெஞ்சி கொண்டு நின்றாள்., அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டே நகர்ந்தான்…,

       அவனிடம் இருந்து தள்ளி நின்று கொண்டு  சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தாள்…

      அவன் நிதானமாக கிச்சன் திண்டில் ஏறி அமர்ந்துகொண்டு அவளை அருகில் இழுத்து காலால் பிடித்துக்கொண்டு சாப்பாடு ஊட்டி விட சொல்லிக் கொண்டிருந்தான்..

         இருவரும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தாலும்.,  அது மதிக்கு என்னவோ போல இருக்க, அவனிடம் “ப்ளீஸ் போய் அங்க  உட்கார்ந்து சாப்பிடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்..,

      ஏன் என கேட்டதற்கு “எல்லாரும் வெளியே இருக்காங்க, ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கேட்கவும்.,

     “சரி அப்போ கன்னத்தில் ஒன்று கொடு, அப்படியே கூட இந்த கன்னத்துல ஒன்று கொடு”., என்று கேட்டு வாங்கிக் கொண்டு., அவனும் கொடுத்து விட்டே சாப்பாடு எடுத்துக் கொண்டு ஹாலில் வந்து மற்றவர்களோடு அமர்ந்தான்…,

       அவன் அவளிடம் டில் போட்டுக்கலாம் எல்லாரும் ஊருக்கு கிளம்பி அதுக்கப்புறம் சாப்பாடு ஊட்டனும் என்று சொல்லி  வைத்திருந்தான்..,  அவளும் சிரித்துக் கொண்டே  தலையை ஆட்டி இருந்தாள்..

     “என்னடா., ஒடி வந்துட்ட., நீ போன ஸ்பீடு க்கு., மதியம் சாப்பாடு கடைல தான் ஆர்டர் பண்ணனும் ன்னு நினைச்சேன்”.., என்றான் சூர்யா..,

     சூர்யா காதில் மட்டும் கேட்குற மாதிரி.., “அநியாயத்திற்கு வெட்கப் படுறா…, பக்கத்தில் போறதுக்கே., தடா போடுறா”., என்றான்…

    இவனும் முகிலனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.., “டேய் பொய் சொல்லாத., எல்லோரும் இருக்கோம் ன்னு., மதி உன்னை விரட்டி விட்டுட்டா…, சரியா…, இரண்டு நாள் பொறுத்துக்கோ”… என்றான் சிரிப்போடு…

 இரண்டு பேரும் பேசி சிரிக்க., கலை அங்கிருந்தே சத்தம் கொடுத்தாள்… “மதி இங்கே வா இவங்க இரண்டு பேரும் ஏதோ ரகசியம் பேசி சிரிக்காங்க”.., என்றாள்.

      “அக்கா,ரகசியம் பேசுறவங்களுக்கு பிரியாணி கிடையாது” என்றாள்…

      அத்தனை பேருக்கும் பிரியாணி தயார் செய்தாள்.. மற்றவர்கள் ஏதாவது உதவி மட்டும் செய்தார்கள்., இனியாவை தவிர..

         அனைவரும் இரண்டு நாட்கள் அங்கிருந்து அவளுக்கு என்னென்ன தேவை.,  என்னென்ன செய்ய வேண்டும் எப்படி செய்கிறாள்.,  என பார்த்துவிட்டு அதன் பிறகு அவர்களை தனியே வீட்டில் விட்டு விட்டு மதுரைக்கு கிளம்பினர்.

      அப்போது அவனும் சொன்னான் லீவு கிடைக்கும் போது வருவோம் என்று.,  மகிழ்ச்சியோடு அனைவரையும் அனுப்பி வைத்தனர்., அனுப்பி வைத்துவிட்டு இவர்களது தனிக்குடித்தனம் தொடங்கினார்கள்..

வாழ்க்கை என்பது எப்போதும் உறவுகளிடம் பூ போல அழகானதாக அமைந்து விட்டால்., சண்டை, சச்சரவுகள் எல்லாம் பனி போல விலகி விடும்.”

Advertisement