Advertisement

அத்தியாயம் 3

 

விலகத் துடிக்கும் வினாடிகளில்

தான் விதி இன்னும் வலியதாய்

இறுக்குகிறது உன் நினைப்பை…

தோற்றுத்தான் போகிறேன்

ஒவ்வொரு முறையும்

உன் நினைவுகளை

துறக்க நினைத்து….

        முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும் இருந்தது… அங்கு போனபிறகு நண்பர்கள் சேர்ந்தவுடன் அவளது தயக்கமும் பயமும் மறைந்து போனது. நண்பர்கள் நல்லபடியாய் கிடைத்ததே பெரிய காரணம்.

         இவளுடைய நண்பர்களிடம் சூர்யாவும் பேசி அவர்களை பற்றி தெரிந்து கொண்ட பிறகு இவளை நன்கு பழக அனுமதி -த்தான்…  முதன்முதலாக வெளியே இருப்பதால்.,  நட்பு என்று சொன்னால் கூட  அலைபேசியில் சூர்யா பேசி விடுவான்.

              அவளுடைய கல்லூரி காலங்களில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து சூர்யா கவனித்ததை கண்டு அவளுக்குள் மனதிற்கு வருத்தமாக இருந்தது…

       “சூர்யாவிடம் தன் மறைத்த ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாகவே இருந்தது.” எனவே அம்முறை ஊருக்கு சென்றிருக்கும் போது மூன்று மாத பிரிவில் அனைவரையும் பார்க்கும் போது அவளுக்கு கண்ணீர் தேங்கியது. அப்போது “சூர்யாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி பேசிக் பேச அனுமதி கேட்டாள்” அவள் “அனுமதி கேட்டதை பார்த்தவுடன் சூர்யாவிற்கு யோசனையாக இருந்தது.” இவள் எப்போதும் அனுமதி கேட்பதில்லை எந்த விஷயமாக இருந்தாலும் இதுவரை அவள் தொலைபேசியில் அனைத்தையுமே சொல்லி -யிருக்கிறாள். பின்பு இப்பொழுது என்ன தயக்கம் எதற்காக இந்த தனியே பேச வேண்டி அனுமதி கேட்டு நிற்கும் வெண்மதி புதிதாக தெரிந்தாள்…

         மாடியில் எப்பொழுதும் போல அவளுடன் பேசுவது போலவே பேசிக் கொண்டிருந்தான். அவளது பள்ளி கல்லூரி வாழ்க்கை பற்றி அவள் சொல்லிக் கொண்டிருப்பாள்.,  அதுபோலவே சொல்லிக் கொண்டிருப்பதாக அவளுடைய அம்மாவும் அப்பாவும் நம்பினர்., கீழே அமர்ந்து சூர்யாவின் பெற்றோரும் மதியின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்க இவள் சூர்யாவை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று பேச சென்றிருந்தாள்.,  “அண்ணா சாரி ரியலி சாரி., ஃபர்ஸ்ட் நீங்க என்ன மன்னிச்சிட்டே ன்னு சொல்லுங்க” என்று கேட்டாள்.

    “ஏன் மதிம்மா., என்ன ஆச்சு என்று சூர்யா கேட்டவுடன்…”

“அண்ணா ரியலி சாரி நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எந்த விஷயமும் மறைத்ததில்லை., ஒரே ஒரு விஷயம் மட்டும் இப்போ உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன். அது எனக்கு ஒரே கில்டி கன்ஸ்சியஸ் ஆ இருக்கு.  ஏதோ தப்பு பண்ற மாதிரியே ஒரு ஃபீலிங்.,  அதனாலதான் உங்க கிட்ட இப்ப சொல்லனும்னு நினைச்சேன்., கிட்டத்தட்ட இது நடந்து   அஞ்சு மாசமா என் மனசுல  தப்பு ன்னு தோணுச்சு., காலேஜ் சேர்ந்து இந்த மூணு மாசமும் இன்னும்  ஜாஸ்தியா இருக்கு…  அதனாலதான் உங்க கிட்ட சொல்றதுக்கு நினைச்சிட்டு இருந்தேன்.., போன்ல சொல்வதற்கு தயக்கமா இருந்துச்சு.., அதனால தான் நேரில் பார்த்து சொல்லனும்னு நினைச்சேன். ,என்னை மன்னிச்சிடுவிங்க இல்லன்னா என்று கேட்கவும்”……

 சின்ன பிள்ளையாக தன்னிடம் சொல்லிக் கொண்டு இருப்பவளை பார்க்கும் போது இன்னும் பத்து வயதில் தன்னிடம் கதை சொல்லும் குட்டி மதியாகவே கண்ணுக்கு தெரிந்தாள். “என்ன மதிம்மா அவ்ளோ பெரிய பிரச்சனையா”…

    “அண்ணா என்னோட ப்ளஸ் டூ எக்ஸாம் சமயத்துல., என்று அன்று முகிலன் உடன் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தையும் தெரியப்படுத்தினாள்.,”

        அதைக்கேட்ட சற்றுநேரம் சூர்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை….

“அத அப்பவே என் கிட்ட சொல்றதுக்கு என்ன…, என்று சூர்யா வருத்தமான குரலில் கேட்டான்.,”

      “நீங்க வருத்தப்பட கூடாதுன்னு தான் அண்ணா சொல்லல., அத்தை மாமாவுக்கு தெரிஞ்சா அவங்களும் வருத்தப் -படுவாங்க., என்னால யாருக்கும் வருத்தம் வர கூடாதுன்னு நினைச்சேன்., அதனால சொல்லல., இருந்தாலும் என் மனசுல உங்ககிட்ட இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறைத்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு., அதனால தான் இப்ப சொல்லிட்டேன். ஆனா இதைப்பத்தி நீங்க பேச வேண்டாம். தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க.”  என்று சொல்லவும்.. அவனுக்கு வருத்தமாகத் -தான் இருந்தது.

            முகில் இனியா மீது கொண்ட முட்டாள் தனமான அன்பை பற்றி யோசித்துக் கொண்டான். அதைப் பற்றி வெண்மதி இடமும் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய பாசம் முட்டாள்தனமானது. அவள் எது செய்தாலும் சரி எனும் அளவிற்கு அவனுடைய கண்மூடித்தனமான பாசம் என்பதை பற்றி சொல்லிவிட்டு.,  வெண்மதியிடம் ” இதனால இப்போ அதாவது உனக்கு வெளியூரில் படிப்பது ஏதும் வருத்தமா இருக்கா” என்று கேட்கவும்…,

       “இல்லை.,” என்று “தான் சந்தோஷமாக இருப்பதாகவும்” சொல்லிக் கொண்டிருந்தாள்….

           வாழ்க்கை வெளியூரில் இருந்ததைத் தவிர அவள் மிகவும்.     சந்தோஷமாக இருந்தாள்.,  கீதாவிடம்   அடிக்கடி பேசிக் கொண்டும்., ஊருக்கு வரும்போது அவளை பார்த்துக் கொண்டும் இருந்தாள்.,  அங்கு  அவளுக்கு கிடைத்த தோழமைகள் மிகவும் நல்லபடியாக இருந்ததால் அவளது படிப்பிலோ மற்றவற்றிலும் குறை ஏதும் அவளுக்கு வரவில்லை…, அவ்வப்போது சூர்யாவிடம் எப்போதும் சொல்லுவது  போல  அனைத்தையும் சொல்லி விடுவாள்.  அது எப்போதும் அவளுக்கு ஒருவிதமான மன நிம்மதியை கொடுக்கும்.,  அவளால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும்., சிறு குழப்பம் வந்தாலும் அதற்கு தெளிவான முடிவை சூர்யா சொல்லிக் கொடுப்பான்.

       அப்படியே அவளும் நடந்து கொள்வாள். இன்று வரை சூர்யாவிற்கு அவள் ஒரு குட்டி தங்கை தான். பத்து வயது சிறுமியாக தன்னிடம் கதை சொன்னது  போலவே இப்போது அவள் சொல்லும் ஒவ்வொரு கதைகளுமே அவனால் அப்படித் தான் நினைத்துக் கொள்ள முடிகிறது…

       சூர்யா இவள் பத்தாவது படிக்கும்போதே வேலைக்கு சென்று இருந்தான். அவனுக்கு திருமணத்திற்கு பேசத் தொடங்கும்போது இன்னும் சில வருடங்கள் போகட்டும் என்று தள்ளி வைத்தான்.  “முகிலனிடம் அவன் மிரட்டி இதை பற்றி கேட்க சூர்யாவிற்கும் தயக்கமாகவே இருந்தது.., இதை பற்றி கேட்டு மீண்டும் பிரச்சினையை பெரிதாக்கி விடக்கூடாது. வெண்மதியே விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வந்து செல்கிறாள். அவள் வந்து செல்லும் இந்த சமயங்களில் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும்”., என்று நினைத்துக்கொண்டு முகிலன் இடம் இதைபற்றி எதுவும் பேசவில்லை.

      ஆனால் “பெற்றோரிடம் மட்டும் அவன் இனியாவின் மேற்கொண்ட கண் மூடித்தனமான பாசம் என்றும் சரி வராது, அது இனியாவிற்கு பிரச்சனை என்பதை விட முகிலனின் வாழ்க்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தன் பெற்றோரிடம் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்”…

        இவள் கல்லூரிக்கு சேர்ந்த முதலாம் ஆண்டில் இவளுடைய கல்லூரி வாழ்க்கை மிக சந்தோஷமாகவே சென்றது.

    முதல் வருடத்தின் கடைசி மாதங்களில் இருக்கும்போது சூர்யாவிற்கும் அவன் அத்தைமகள் கலைக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கலையும் சூரியாவைப் போல அன்பானவள்.,  மிகுந்த அன்புடன் நடந்து கொள்வாள் திருமணத்திற்கு வர முடியாததால் அடுத்தமுறை வரும்போது அவர்களை பார்க்க வீட்டில் யாரும் இல்லாத நேரம் சென்று இருவரையும் பார்த்து விட்டு திரும்பி விட்டாள்.., அவள் வருவதும் போவதும் இனியா க்கும் தெரியாது.,

            இரண்டாம் வருடத் தொடக்கத்தில் முகிலன் வேலை கிடைத்து சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது. ஏனோ போலீஸ் என்றால் பிடிப்பதில்லை அது சிறுவயதிலிருந்தே அவளுக்கு பயம் என்று சொல்வதை விட ஏனோ பிடிக்காது அவர்களுடைய அதிகாரமான பேச்சு பழக்கம் அவளுக்கு பிடிப்பதில்லை… இப்போது  தேர்வெழுதி டிஎஸ்பி ஆக தேர்வாகி வேலைக்கு சேர்ந்து இருப்பது தெரிந்ததும்..,

           ஒருமுறை கீதாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது “ஏற்கனவே எனக்கு இந்த மூஞ்சை கண்டால் பயம்.., இதில் இந்த மூஞ்சி யூனிபார்ம் போட்டு இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு.., சுத்தம்  ஏற்கனவே பேசமாட்டேன் இனிமேல் சுத்தமா பேச போறது இல்ல., வந்தாலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.,  ஏற்கனவே அதிகாரம் பண்ணுவாங்க., இன்னும் அதைவிட  கொஞ்சம் அதிகாரம் பண்ண பார்க்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்”…

          “நீ ஏன் பாக்க போறே…, நீ தான் ஏற்கனவே திரும்பி கூட பாக்க மாட்டீயே., யார் எந்த வேலைக்கு போனாலும் நமக்கு என்ன நீ உன் படிப்பை மட்டும் பாரு”… என்றாள்…

       ஏனோ மனதிற்குள் அவளறியாமல் ஒரு படபடப்பு வந்து நீங்கியது.., ஆனால் அதை கீதாவிடம் சொல்லவில்லை ஏன் என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். அதன்பிறகு அவள் ஊருக்கு சென்றாலும் அதிகாலை நேரம்தான் சென்று இறங்குவாள்., ராஜன் வந்து அழைத்து சென்றதும் வீட்டிற்குள் சென்று இருப்பவள் தான் பின்பு கிளம்பும் அன்று தான் வெளியே வருவாள்., அப்போதும் அவளுக்கு ரயில் நேரத்தை பொறுத்து வெளியே வருவாள்., அவள் வீட்டிற்கு வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது சூர்யாவையும் அவன் பெற்றவர்களையும் தவிர., அவர்களும் அவளை இங்கு வந்துதான் பார்த்து செல்வார்கள்…

          முகிலன் இப்போது   வேறு ஊரில் வேலை பார்ப்பதால் அவனைப் பற்றிய பிரச்சினைகள் இங்கு இல்லை., இப்போது இனியா விற்கு சண்டை போடவும் ஆள் இல்லாததால் அவளும் அமைதியாகவே இருந்தாள்..

          இனியா கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது இனியா விற்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.. தொல்லை விட்டது என்று நினைக்க., அவள் இரண்டு தெரு தள்ளி இருந்த அவர்களது அத்தை மகனையே திருமணம் செய்யப் போவதாக தெரிந்தது..,

           அந்த முறை கீதாவிடம் பேசும் போது “அவ இந்த ஊரைவிட்டு கல்யாணம் பண்ணி போயிட்டா நம்ம பிரியா நடமாடலாம் நினைச்சேன்…  இதே ஊர்ல இருந்து மறுபடியும் என் உயிரை வாங்க போறா”…  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான்..

Advertisement