Advertisement

அத்தியாயம்

முனுமுனுக்கும்

பாடல்கள்

அனைத்தும்

உனக்காக எழுத

பட்டதாய் உணர

வைக்கிறாய்…,

கேட்கும் இசை

எல்லாம் உனையே

நினைவுட்டுகிறது..,

நிஜம் தேடும்

நினைவுகளோடு.,

தொடங்குகிறது

வாழ்க்கை பயணம்…,

           அன்று அவளுடைய வேலைகள் அனைத்தும் முடிந்து  வேலையிலிருந்து வெளியேறுவதற்கான நாள் என்பதால் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, உடன் பணிபுரியும் நபர்களுடன்  ஒரு நட்போடு சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.,

       அவளுடைய தோழிகளும், தோழர்களும்., அவளை ட்ரெயின் ஏற்றுவதற்காக ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தனர்.,  தோழமைகளை விட்டுப் பிரிவது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும்.,  அவர்களே  நாங்கள் நேரம் கிடைக்கும்போது வர பார்க்கிறோம்.,

    அனைவருக்கும் சேர்த்து லீவு கிடைத்தால் வருகிறோம் என்று சொல்லியிருந்தனர். அது மட்டுமன்றி அனைவருக்கும் திருமணம் வரும் போது பத்திரிக்கை வைப்பதாகவும்., நீ அருகில் இல்லாமல் திருமணமே நடக்காது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தனர்.,

      அவள் ட்ரெயினில் ஏறி  அவளுடைய இடத்தில் அமர்ந்த பின் தோழமைகளை, கட்டாயப்படுத்தி  கிளம்ப சொல்லிவிட்டு அமர்ந்திருக்கும் போது., முகிலன் இடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

      பௌமி ஸ்டேஷன் வந்துட்டியா என்று கேட்கவும்.,

        இவளும் “வந்தாச்சு.., சீட்க்கு வந்து செட்டில் ஆயாச்சு” என்று சொன்னாள்.

      ” ஓகேடா பார்த்துக்க., ராமநாதபுரம் ஸ்டேஷன்ல ரயில் நிற்கும் போது போன் பண்ணு., அங்கிருந்து ஒரு ஹாப் அன்ட் ஹவர் ஆகும்., சோ நீ அந்த இடத்தில் வரும் போது போன் பண்ணா நான்   ஸ்டேஷன் வந்துருவேன்” …,

         “வீட்ல எல்லாரும் என்ன செய்யறாங்க., எல்லாரும் வந்தாச்சா” என்று கேட்கவும்.,

                 ” காலையிலேயே வந்தாச்சு…, திங்ஸ் கொண்டு வந்து இறக்கி இருக்காங்க., வீடு கிளீனிங் நடந்துகிட்டு இருக்கு…, இரண்டு ஆள் அரேன்ஜ் பண்ணி விட்டுட்டு வந்திருக்கேன்., திங்ஸ் அரேஞ்ச் பண்ணிட்டு இருந்தாங்க…, இந்நேரம் முடிச்சிருப்பாங்க”…,

   “நீட் ஆ இருக்கா”…

          “இப்ப தான் வீட்ல இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பீல் வருது”.,

       “திங்ஸ் நிறைய இருக்கோ”…

        “அது நீ வந்து பார்த்துக்கோ., பார்த்துட்டு உனக்கு எது வேண்டும் வேண்டாம் ன்னு., நீ முடிவு பண்ணு.,   நான் சொல்ல கூடாது.,  அதனால நான் ஒன்னும் சொல்லல.,  நான் எதுக்கு இவ்வளவு திங்ஸ் என்று கேட்டதற்கு., எங்க அம்மா சத்தம் போட்டுட்டு  இருக்காங்க”.,  என்று சொல்லிக் கொண்டிருந் -தான்..,

      “நிறைய திங்ஸ் இருக்கா”., என்று கேட்கவும்…,

      “இல்லை எனக்கு மட்டும் தான் அப்படி தோனுதா என்னன்னு தெரியல…, வீட்ல இதுவரைக்கும் எந்த திங்ஸ் ம் இல்லாமல் வீடு ப்ரியா இருந்த மாதிரி., இருந்தது”.,

என்ன.,  நான் மட்டும் இருந்தால்   நிறைய திங்க்ஸ் எல்லாம் கிடையாது..,  இப்போ திங்ஸ் வந்த உடனே  தெரியுதோ என்னவோ.,  இட்ஸ் ஓகே., நீ வந்து பார்த்துட்டு அதுக்கப்புறம் முடிவு பண்ணிக்கோ” என்று சொல்லிக் கொண்டிருந்தான்…

     “சரி., நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னாள்.

      ” வீட்டுக்கு வந்துட்டீங்களா” என்று கேட்டாள்.

      ” இல்லடா ஒர்க் முடியல, வெளியே தான் இருக்கேன்., எப்படியும்10 மணி ஆகும் வீட்டுக்கு போறதுக்கு”., என்று சொல்லவும்.,

       ” சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்க

     “இல்ல போய் சாப்பிட்டுக்குறேன்…, வீட்டுல சொல்லிட்டேன்”., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு அவன் அருகில் வேலை சம்பந்தமாக மற்றவர்கள் பேசுவது கேட்டது…,

     “சரி உங்க ஒர்க் அ பாருங்க… தூங்கப் போறதுக்கு முன்னாடி வேணா கூப்பிடுங்க” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

           அதன் பிறகு அவளுடைய பயண நேரங்களில் அவளுடைய எண்ணம்  முழுவதும் அவனுடனான வாழ்க்கை எப்படி இருக்கும்…  என்ற யோசனையோடு ஓடிக் கொண்டிருந்தது.., தூங்குவதற்கு முன்பு கீதாவிற்கு அழைத்து பேசினாள்….

      கீதாவோ  எடுத்தவுடன் “என்னமா டிராவல் எப்படி இருக்கு”  கேட்டாள்..

     சென்னை யை விட்டுட்டு ராமேஸ்வரத்தை பார்த்து போய் ட்ட இருக்கேன்… என்று அவள் சொல்லவும்

       ” ம்ம்ம்… சரி உனக்கு வீட்டில் என்னென்ன குண்டு எல்லாம் காத்துகிட்டு இருக்கோ., தெரியாது, சோ வீட்டுக்கு போகும்போது எல்லாத்தையும் எதிர்பார்த்து போ”…, என்று சொன்னாள்.,

         ” ஏன் வீட்ல ஏதும் ப்ராப்ளம் ஓடுதா., உனக்கு அம்மா யாரும் போன் பண்ணி எதுவும் சொன்னாங்களா” என்று கேட்கும் போது…

           கீதா “அதெல்லாம் ஒன்றுமில்லை இனியாவும் வந்திருக்கிறாள்., அதற்காக தான் சொன்னேன்”.,  என்று சொன்னாள்.

  “ம்ம்ம்…, கலை அக்கா நேத்து பேசும் போது சொன்னாங்க…  சரி நான் பாத்துக்குறேன்” என்று சொன்னாள்…

            ” விட்டுக் கொடுத்து போ ன்னு., மட்டும் தான் சொல்லுவேன்., ஏன் னா அண்ணன் உன் மேல பாசமா இருக்காங்க.  சோ இதுக்கு முன்னாடி நடந்த பிரச்சினை எதை பற்றியும் பேசி விடாதே., உனக்கு சொல்லனும் னு அவசியம் இல்லை.,  எல்லாரும் எப்பவும் ஒன்றுபோல இருக்க மாட்டாங்க.., அதுவும் அண்ணன் வேலையை பொருத்த -வரைக்கும் அவங்களுக்கு மைண்ட் செட் எப்படி இருக்கும்னு தெரியாது.., வேலையில் உள்ள டென்ஷனை கூட சில நேரங்களில் உன் கிட்ட காட்ட வேண்டிய சூழ்நிலை வரலாம்., அதனால நீ தான் எல்லாத்தையும் பொறுத்துப் போகனும்., உனக்கு  கிட்டத் தட்ட மூணு மாசமா., நானும் இதை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்., என்று உனக்கு  என் மேல கோவம் எதும் இல்லையே”., என்று கீதா கேட்கவும்…

        ” அதெல்லாம் ஒரு கோவமும் இல்ல…, நீ சொல்றது எனக்கு புரியுது, என்று சொல்லும் போதே.,

           கீதா “கல்யாணம் முடிஞ்ச புதுசில, ஆம்பளைங்க எல்லாம் பாசமா தான் இருப்பாங்க.,  ஒரு குழந்தை வர்ற வரைக்கும் எல்லாம் ஒழுங்கா தான் இருப்பாங்க.,  அதுக்கு அப்புறமும் அன்பு எல்லாம் உள்ளே இருக்கும்., என்ன வெளியே காட்ட மாட்டாங்க.,  குழந்தை வந்துருச்சு, குடும்பம் ஆயிடுச்சு,  இதுதான் ஃபேமிலி,  அப்புறம் ரொட்டின் லைஃப்  அப்படித் தான் போகும்.,  முகிலன் அண்ணா வந்து  ரொம்ப பேச மாட்டாங்க.,  உன் கிட்ட ஒழுங்கா பேசுறாரு.,  அதுவரைக்கும் ஓகே ஆனா  அவரோட வேலையை பொருத்தவரை நீ தான் விட்டுக் கொடுத்து போற மாதிரி இருக்கும்., டைமிங் இல்லாத வேலை.,  அது மட்டுமில்லாம அடிக்கடி டிரான்ஸ்பர் வருகிற வேலை வேற.,  சோ பெட்டியை கட்டிட்டு எப்பவும் பின்னாடி போக ரெடியாக இரு..,” என்று  சொல்லவும்..

        “இப்ப தான் நான் சென்னையிலிருந்து பெட்டியை கட்டிட்டு கிளம்புறேன். ராமேஸ்வரத்துக்கு உள்ள கூட போகவில்லை…,  அதுக்குள்ள பெட்டியை கட்டி ரெடியா இருன்னு சொல்லுற., உன்னை”.. என்று தோழிகளுக்கு உண்டான பேச்சோடு நேரம் கழிந்தது.,  கீதாவிடமிருந்து சில அறிவுரைகளைப் பெற்றுக் கொண்டபின் எல்லாவற்றிற்கும் சிரித்தபடி சரி சரி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…

          ஒரு தோழியாக அதுமட்டுமல்லாமல் அவளுக்கு முன்னால் திருமணமான., ஒரு குழந்தையின் தாயாகவும் சில அறிவுரைகளை மதிக்கு வழங்கினாள்.,

       அதற்கும்  அவள்  சிரித்தபடி சரி சரி என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்..

         இதற்கிடையில் சூர்யாவும் அவளிடம் பேசி இருந்தான்.  காலையில் முகிலன் அழைக்க வருவதாக சொல்லி இருந்தாலும் அவனுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து அவன் வர முடியாவிட்டால் சூர்யா வருவதாகச் சொல்லியிருந்தான்.

        எனவே இதைப் பற்றி சூர்யா வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தான்.

       அப்பொழுது தான் வீட்டை மதியின் ரசனைக்கேற்ப வீட்டை ஒதுங்க வைத்து சுத்தம் செய்து இருந்தனர். இரவு சாப்பாட்டிற்க்கான  வேலை நடந்து கொண்டிருந்தது..,

     மசாலா பொடி எல்லாம் தயார் செய்து எடுத்து வைத்து விட்டு போக வேண்டும் என்று முகிலனின் அம்மாவும்., மதியின் அம்மாவும் பேசிக்  கொண்டிருந்தார்கள்..,

         நாளை பகலில் வீட்டிற்கு வேலைக்கு வரும் அம்மாவிடம் சொல்லி எல்லாவற்றையும்  மெஷினில் கொடுத்து திரித்து வாங்கி வைத்துவிடுவோம் அப்பொழுதுதான் அவளுக்கு வசதியாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்…

      இனியா எதிலும் தலையிடாமல் தனியே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாலும்.,  என்ன செய்யலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருப்பதாகவே கலைக்கு தோன்றியது.,

           அவளை அவ்வப்போது  வேலைக்கு நடுவே  கவனிப் -பதை இன்னொரு தன் வேலையாக வைத்திருந்தாள்..

           முகிலன் அவளிடம் சாதாரணமாகப் பேசினாலும்., சில விஷயங்களில் அவளை கண்டுகொள்ளாமல் இருந்தது அவளுக்கு மதி  மேல் கோபத்தை உண்டு பண்ணியது..

        இரவு உணவிற்குப் பின் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தான் முகிலன் வந்தான்.,

       வந்து உடை மாற்றி விட்டு சாப்பிட அமரவும்., கலை வந்து உணவைப் பரிமாறி விட்டு “காலையில் தம்பி ப்ரியா” என்று கேட்டாள்.,

              “இல்லை அண்ணி ஒர்க் இருக்கும் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்…

          அதே நேரம் சூர்யாவும் “காலையில மதிய கூப்பிட நீ போறியா., இல்ல  நான் போகவா” என்று கேட்டான்..,

         “அது எனக்கு இருக்க வேலையைப் பொறுத்து தான் முடிவு பண்ண முடியும்., காலைல ஒரு வேளை சீக்கிரம் போக வேண்டியது இருந்துச்சுன்னா நான் கிளம்பி விடுவேன்., நீ பாத்துக்கோ, அப்படி இல்லன்னா நான் போய் கூப்பிடுகிறேன்”, என்று சொன்னான்.

           சொல்லி விட்டு சாப்பாடு எடுத்து வாயில் வைத்தவன் தற்செயலாக நிமிரவும், அதே நேரம் இனியாவின்  முக மாற்றமும்., அவளது யோசனையும்., முகிலனுக்கு சந்தேகத்தை கொடுத்தது..,  இவ ஏதோ ப்ளான் பண்றா போலயே என்று யோசித்துக் கொண்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்து கொண்டான்..,

சற்று நேரத்தில் அனைவரும் அவ்வீட்டின் ஹாலிலேயே விரித்து படுக்க தயாராக., இனியா தன் கணவன் குழந்தையோடு ஒரு படுக்கையறைக்குள் அங்கு சென்று படுக்கப் போவதாக சொல்லிவிட்டு போய்விட்டாள்.,

Advertisement