Advertisement

அத்தியாயம் 17

அவளது நேசத்தின் வரிகள்

 

உன்னுடன் கூடிக்

கழித்த கூடல்

பொழுது….

விடிந்த பின்

முகம் பார்க்க

நாணி மருதாணி

பூசிய முகமாய்

சிவந்து தான்

போகிறேன்….

ஒவ்வொரு முறையும்

முதல் முறை

நினைவில்….

              அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் காரிடாரில் ஐ.சி.யூ முன் அமர்ந்திருந்தவன்.., தன் பதவியும் தன் அதிகாரத்தையும் மறந்து சிறு குழந்தையாய் கண்மூடி தவித்துக் கொண்டிருந்தான்…. எல்லோருக்கும் அந்த சூழ்நிலையில் தோன்றும் அதே எண்ணம் இது கனவாய் போயிருக்கக் கூடாதா என்று..,  ஆனால் அவன் கன்னத்தில் இரத்தக் கறையோடு படிந்த மெல்லிய விரல் தடமும்.., அவன் உடுத்திய சீருடையில் அவன் சட்டை காலரோடு சேர்ந்து அவன் நெஞ்சு வரை தடவி இருந்த மெல்லிய விரலின் தடத்தோடு சேர்ந்த ரத்தக்கறையும்..,   இவை அனைத்தும் கனவல்ல நிஜம் என்று அவனை உயிரோடு கொன்று கொண்டிருந்தது…,

அவள் மயங்குவதற்கு முன் அவன் கன்னத்திலும்., அவனுடைய சீருடையிலும் படிந்த ரத்த கரையும்., அவள் சொல்லிய வார்த்தையும்.,  அவன் கையைப் பிடித்த போது கையில் சேர்ந்த ரத்தக்கறையும் அவன் இவ்வுலகத்தில் இன்னும் தான்.,, எப்படி இதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தையே தூண்டியது….

        அவன் வேலைக்கு பார்க்காத விஷயமில்லை., எத்தனையோ இரத்தம் தோய்ந்த முகங்களையும்., விபத்துக்களையும்.,  எத்தனையோ விபத்துக்களையும் பார்த்தா -லும்.,  ஏனோ இந்த இரத்தம் மட்டும் அவன் கண் முன் நின்று அவனை சிறிது சிறிதாக சிதைத்துக் கொண்டு இருப்பதாகவே தோன்றியது.., சுற்றியிருந்த அனைத்தையும் மறந்து.,  தலையில் கையை தாங்கி அமர்ந்திருந்தவனுக்கு., அவனது சக ஊழியர்களின் நினைவும் அவனுக்கில்லை., அவனுடைய மேலதிகாரி அருகில் இருப்பதும் அவனுக்கு நினைவில்லை., அனைத்தையும் மறந்து உள்ளே மூச்சுக் காற்றோடு போராடிக்கொண்டிருக்கும் அந்த ஒருத்தியை தவிர உலகத்தில் அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை….

       அவனை இதுவரை ஒருமுறை கூட சோர்ந்து பார்த்திராத அவனுடைய சக ஊழியர்களும்., அவனுக்குக் கீழ் பணிபுரிபவர்களும்., அவனுடைய உயர் அதிகாரியும் அவன் நிலை கண்டு அனைவருமே கலங்கித்தான் போயினர்., யாரும் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை என்ன செய்வது என்று தெரியவில்லை அனைவரும் அமைதி காத்தனர்…..

     இதில் யாரும் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை., இது கடவுளுக்கு அடுத்தபடியாக மனிதன் மதிக்கும் ஒரு மருத்துவரின் கையில் தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் தான் அனைவரும் இருந்தனர்.., அனைவரது பிரார்த்தனையும் கடவுளிடமும் சேர்ந்து தான் இருந்தது…

       ஐ சி யூ வில் இருந்து வெளிவந்த டாக்டரை கண்டவுடன் அவசரமாக  வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவனை பார்த்த போது சக ஊழியர்களுக்கும்., அவனது கம்பீரம் தான் ஞாபகம் வந்தது.  ஒரு மனிதனுக்கு அவன் யார் மேல் அன்பாக இருக்கிறான் என்பது அவர்கள் அருகில் இருக்கும் வரை உணர்வதே இல்லை..,  அவர்கள் அருகில் இல்லாமல் போய் விடுவார்களோ., என்ற எண்ணம் வரும் போது தான் அந்த அன்பின் ஆழம் எத்தனை தூரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.., அப்படிதான் அன்று அவனது நிலையும் இருந்தது..

     “டாக்டர் இப்போ எப்படி இருக்கு”., என்று கேட்டபடி பதட்டத்தோடு நின்றவனை பார்த்த டாக்டர்….

      “ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு சார்.., லேடி டாக்டர் வந்துட்டு இருக்காங்க கார் உருண்டப்போ..,  ஏர் பேக் இருந்தாலும் அவங்களுக்கு வலது பக்க காதோரம் அடிபட்டு இருக்கு.,  அதுமட்டுமில்லாம கால்  மூட்டுல., ஏதோ குத்தி இருக்கு.., இடது கால் பாதம் கார் உருண்டதில் முன் பக்கத்திலிருந்து மாட்டி.., பாதத்தில் சின்னதா பிராக்சர் எதோ ஆகி  இருக்கு..,  அடிபட்டதில் ரைட் சைடு கண்ணுக்கு மேல சின்னதா வெட்டுக்காயம் இருக்கு.., ஸ்டிச் போட்டு இருக்கோம்., ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு.., செக் பண்ணிட்டு இருக்காங்க..,  லேடி டாக்டர் (கைனகாலஜிஸ்ட்)  வர சொல்லி இருக்கோம்”..,

      “வயிற்றில் ஏதோ அடிபட்டிருக்கும் அப்படின்னு ஃபீல் பண்றோம்.., பட் கண்பார்ம் மா சொல்லமுடியாது.., ஏன்னா மே பி சாக்குல கூட ஆகி இருக்கலாம்.., அவங்களுக்கு  பிளிடிங் ஆகுது  .,  அதையும் பார்க்கணும்.., வயிற்றில் வேற எதுவும் அடிபட்டு இருக்கான்னு கைனகாலஜிஸ்ட் இருந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்”..,

       “கார் நல்ல உருண்டு இருக்கு இல்ல…, அதனால தான் நல்ல அடிபட்டிருக்கு…, ஏர்பேக் ஃபுல்லா கவர் ஆனதால வேற கொஞ்சம் மூச்சு திணறி இருக்காங்க…, அந்த மூச்சுத்திணறல் தான் இன்னும் சரியாகல., கான்சியஸ் வரல.,

       கான்சியஸ் வரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் சொல்ல முடியாது.., கொஞ்ச நேரம் வெயிட் பண்ணனும்., என்ன அவங்க வந்து முழிச்சு பேசினால் தான் அவங்களோட கண்டிஷன் என்னன்னு சொல்ல முடியும்..,

      வலது பக்கம் தலையோடு அடிபட்டிருக்கு..,  தலையில வேற எங்கேயும் அடிபட்டு இருக்கான்னு தெரியல வெயிட் பண்ணுங்க”…..

          எவ்வளவு அடி பட்டிருக்கு., எந்தெந்த இடத்தில் காயம்…, இந்த பிராக்சர் எல்லாம் சொன்னதிலேயே அவனோட உயிர் பாதி போன மாதிரி அவனுக்கு இருந்தது…,  அது தாங்க முடியாதவன் அப்படியே அங்கிருந்த சேரில் வேகமா உட்காரவும்.., பக்கத்துல இருந்த கூட ஒர்க் பண்றவங்க தான்., “ஒன்னும் ஆகாது சார்., பயப்படாதீங்க நல்லபடியா வருவாங்க., நீங்க தைரியமா இருங்க சார்., நீங்களே இப்படி வருத்தப்பட்டா., மத்தவங்களுக்கு யார் என்ன சொல்ல முடியும். நீங்க எவ்வளவு பாத்திருக்கீங்க., கண்டிப்பா ஒன்னும் ஆகாது சார்.., தைரியமா இருங்க”.,  என்று சொல்லவும்.., அவனையும் மீறி கண்ணீர் வழிந்தது.., ஆனாலும் துடைத்துக்கொண்டு ஆக்சிடென்ட் பண்ண லாரி டிரைவரை பிடிச்சாச்சா என்று கேட்டுக் கொண்டிருந்தான்….

         அருகில் இருந்த., அவனுடைய உயர் அதிகாரி “கவலைப்படாதீங்க நாங்க எல்லாம் இருக்கோம், அப்படி  எல்லாம் விடமாட்டோம்.,  யாரு என்னன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல டீடைல்ஸ் கிடைத்துவிடும்”., என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்….

     எத்தனை பேர் ஆறுதல் சொன்னாலும்.., அவனுடைய நினைவுகள் பின்னோக்கி ஓடத் தொடங்கின. ஆனாலும் அவன் அவளின் நிலையை அறியாமல் தன் மனதைக் அலைய விடக்கூடாது என்பதற்காக பிடிவாதமாக இழுத்துப் பிடித்து வைத்திருந்தான்..,

      அவள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்றவுடன் இவனும் தன் வேலையை பார்க்க தன்னுடைய ஜிப்பில்  சென்றான்…, அவள் வீட்டிற்கு வந்திருப்பாள் போன் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு போன் வந்தது.., சார் உங்க வீட்டு பக்கம் இருக்கிற இந்த இடத்துக்கு வாங்க என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி., அவனும் வேகமாக கிளம்பினான்.., சார் நீங்க உடனே வாங்க என்று மட்டும்  பேசியவர்கள் சொல்லவும் வேகமாக சென்றான்…,  அங்கு போன பிறகுதான் தெரியும் இவனுடைய கார் ஆக்சிடன்ட் ஆகி இருப்பதை…,

     அப்போது தான் அந்த ஆக்சிடென்ட் ஐ  பார்த்த அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் சொன்னது.., “வேண்டுமென்றே வந்து இடித்தது போல ஒரு லாரி பின்புறமிருந்து இடித்து தள்ளியது., இவள் ஓட்டிக் கொண்டு வந்தவள் ஒழுங்காகதான் ஒட்டிக்கொண்டு வந்தாள் என்றும் இடித்த வேகத்தில் கார் உருண்டது” என்று சொன்னார்கள்…,

இவனுடைய உயிர் போய் வந்தது போல உணர்ந்தான்., அதற்குள் அப்பகுதியில் ஆக்சிடென்ட் என தெரிந்து போலீஸ் அனைவருமே அங்கு தான் கூடியிருந்தனர்.., இவனுக்கு தான் கடைசியாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.., காரை உடைத்து அவளை வெளியே தூக்கும் போது அவன் அறியாமல் கண்ணில் கண்ணீர் வடிந்தது.., அவனுடைய பதவியோ., அவனுடைய வேலையோ., அவன் போட்டிருக்கும் சீருடையோ., அவனுக்கு ஞாபகம் வரவில்லை., கண்ணீர் மட்டும் கண்களில் நிற்காமல் வடிய..,

       அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து இருந்ததால் அவளை  ஸ்டக்சரில் படுக்க வைக்கும் போதும்.., அவள் கண் திறந்து தான் இருந்தது.., ஆனால் ஆங்காங்கு ஏற்பட்ட காயம்., நெற்றியில் இருந்து வழிந்த ரத்தம் அவள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போதும்.., அவளும் கண்ணை முடிந்த அளவு மூடாமல் திறந்து வைத்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..,

         அவன் அருகில் வரவும்.,  அவள் அவனிடம் சில வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு, அவன் கன்னத்தை தடவி அவன் யூனிஃபார்ம் காலரோடு சேர்த்து பிடிக்க.., பின்பு மெதுவாக அவனை தடவியபடி அவளது விரல் கீழே அவள் அறியாமல்  இறங்க.., அவன் கன்னம் யூனிஃபார்ம் என அனைத்திலும் அவளுடைய ரத்தம் படிந்திருந்தது…,

           அவனோ அவள் கண் சொருகுவதை கண்டு.., கன்னம் தட்டிய படி பெளமி.., பெளமி.., என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் அவன் வாயிலிருந்து வரவில்லை..,

     அப்போது அருகில் இருந்தவர்களிடம் போலீஸ் விசாரித்து கொண்டிருந்தது லாரி எங்கே என்று கேட்க..,  லாரியை விட்டுவிட்டு டிரைவர் ஓடிவிட்டான் என்று அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..,

     அவரை பிடிக்க இரண்டு மூன்று ஆட்டோ டிரைவர்கள் சேர்ந்து போய் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.., மெயின் ரோட்டின் பகுதியில் அடித்து தூக்கியதால்., அங்கு கொஞ்ச நேரம் போக்குவரத்து நெரிசல் ஆனது.., அதன் பிறகுதான் அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..,

        வரமாய் கிடைத்தவளை இழக்க துணியாத., அவன் மனம் அவளை நோக்கி ஓட துவங்கவும்.., அதே நேரம் அந்த விபத்து பற்றிய செய்திகளோடு அவனோடு வேலை செய்யும் மற்ற ஒரு அதிகாரி வந்து இறங்கவும் அவரை பார்த்தபடி அமர்ந்திருந்தான்…,

          அப்போது தான் அங்கிருந்த உயர் அதிகாரியிடம் உடன் பணிபுரியும் மற்றொரு அதிகாரி பேசிக்கொண்டிருந்தார்.., இது திட்டமிட்ட விபத்து என்றும் லாரி டிரைவரை  அங்கிருந்த ஆட்டோக்காரர்கள் பிடித்து விட்டார்கள் என்றும்.., அடையாளம் காட்டிய பின் விசாரிக்கும் முறையில் விசாரித்ததில்., கார் நம்பரை மட்டும் சொல்லி இருக்கிறாங்க.., அதில் நீங்கள் தான் போவீங்க ன்னு., நினைத்து விட்டிருக்கிறார்கள்..,  கார் நம்பரை வைத்து தான் இந்த விபத்து என்று தெரியப்படுத்தவும்., இவனுக்கு மேலும் வருத்தம் வந்தது.., எப்போதும் யாரிடமும் அவனுடைய காரை எடுக்க அனுமதித்தது கிடையாதே.., ஏனோ அன்று அனுமதித்தது தவறாக போய்விட்டதோ என்று எண்ணத் தொடங்கினான்..,

          பெரும்பாலும் அவன் அலுவலக காரில் அவனுடைய வேலைகளை முடித்துக் கொள்வான்.., வீட்டின் உபயோகத்திற்கு என்றுமே அலுவலக வண்டியை பயன்படுத்தியது கிடையாது., அதனாலேயே இன்று வேறுவழியில்லாமல் இந்த காரை கொடுக்க வேண்டியதாக இருந்தது..,  இப்போது என்ன செய்வது என்று அவனுக்கு தெரியாத சூழ்நிலையில் அமர்ந்திருந்தான்..,

      அதேநேரம் லேடி டாக்டர் வந்து உள்ளே செல்லவும்.., இவன் பதட்டத்தோடு பார்த்து இருந்தான்.., எப்படி யாருக்கு என்ன பதில் சொல்வேன்..,  என்னால் வந்த விபத்து இது.., என்று  அவன் மனதில் அவனுக்குள் தோன்ற தொடங்கி இருந்தது..,

          உடன் பணி செய்யும் அதிகாரி., “உங்கள் வீட்டிற்கும் தகவல் தெரிவித்து விட்டோம்., அவர்கள் வீட்டிற்கும் தகவல் தெரிவித்து விட்டோம்., அவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்” என்று சொல்லவும்…, கலங்கிய கண்ணோடு குனிந்து விட்டான்…,

        உள்ளே  ட்ரீட்மென்ட்  நடந்து கொண்டிருக்கும் போதே அவனருகே வந்து ஒரு செவிலியர் நிற்பது கண்ணுக்குத் தெரிந்தது., நிமிர்ந்து பார்த்தவன் இடம் அவர்கள் கொடுத்த பொருளை பார்த்து அவன் மேலும் அதிர்ச்சி அடைந்து அவர்களை நோக்கி “ஏன் இதையெல்லாம் கலட்டினீங்க” என்று கேட்கவும்..,

          “ட்ரீட்மென்ட் அப்ப கலட்டிருவோம்”..,  என்று சொல்லவும்

           அவனுக்கு மேலும் அதிர்ச்சி அடையும் வண்ணம் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி.., அவன் கையில் கொடுத்து இருந்தார்கள் அதைப் பார்த்ததும் அவனது நினைவுகள் சுழற்றி அடித்தது…..

          அவ்வளவையும் கையில் வாங்கியவன் கையில் வைத்து மூடிக் கொண்டு அதிலே முகம் புதைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.., அவனுக்கு  நினைவுகள் அவளது சில விஷயங்களை நினைவு படுத்தியது…,  படித்த பெண் தான் என்றாலும் சில விஷயங்களில் பிடிவாதம் ஜாஸ்தி..,

     இவன்  “படித்தவள் தானே அனைவரும் தாலியை கழட்டி விட்டு  சுற்றுகிறார்கள்.., நீ சிலநேரங்களில் கழட்ட சொல்லும் -போது கூட கழட்ட மறுக்கிறாய்” என்று எத்தனையோ முறை கேட்டிருக்கிறான்.., ஆனால் இன்று கண்ணீர் வடிந்தது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து அதில் அவற்றை வைத்து கட்டி தன் கையிலே வைத்துக் கொண்டான்…

  அந்தத் தாலி செயின் கையில் இருக்கும் போது., அவனது நினைவுகள் சில அந்தரங்க விஷயங்களை நினைவுறுத்தி சென்றது.., எத்தனையோ முறை  கழட்டி விடேன் என்று சொன்னதற்கு முடியாது என்று மறுத்தவள் தான்.., அவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் அமைதியின் திரு உரு..,   ஆனால் இதில்  மறுப்பு மட்டுமே அவளிடம் பதிலாக கிடைக்கும்.., வேண்டுமென்றே அவளிடம் வம்பு செய்ய எத்தனையோ முறை அவனே கழட்ட முயற்சி செய்து..,  அவன் அவளிடம் அடி வாங்கிய  நாட்களும் உண்டு., அதை நினைத்து கொண்டவனுக்கு மேலும் கண்ணீர் வழிந்தது…

       அவனுடைய மனைவி எட்டு வருட தாம்பத்தியம் அவனுடையது.., வாழ்க்கையில்., அமைதியும் நிம்மதியும்  அவனுக்கு பரிசளிக்க வந்த தேவதை திருமணம் ஆகி இந்நாள் வரை அவள் அவனை விட்டு பிரிந்து இருந்த நாட்கள் அதிகமில்லை., முதல் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற போது மட்டுமே நான்கு மாதங்கள் மட்டுமே பிரிந்து இருந்தாள்.,  அதன் பிறகு இவனை விட்டு அவள் எங்குமே சென்றது கிடையாது..,  இரண்டாவது பிரசவத்தின் போது கூட அவன் வேலை செய்யும் இடத்திலேயே இருந்து கொண்டாள்.., இவனுடைய அம்மாவும்., அவளுடைய அம்மாவும் சேர்ந்து வந்து அவளுக்கு வேண்டியதை பார்த்து வைத்துவிட்டு குழந்தையை மூன்று மாதம் கவனித்துக் கொண்டு இருந்து விட்டு சென்றனர்..,  நான் அவள் இல்லாமல் எப்படி இருப்பேன் என்ற நினைவே அவனை மேலும் மேலும் வருத்தி கண்ணீர் வடிக்க வைத்தது..,  அவனுடைய நினைவுகள் காற்றை விட வேகமாக பின்னோக்கி அவளை பார்த்த பழகிய வாழ்ந்த நொடிகளை தேடி பறக்கத் தொடங்கியது…

    ஒவ்வொரு ஆணுக்கும் சரி.ஒவ்வொரு பெண்ணுக்கும் சரி..வாழ்க்கை துணை என்பது வாழ்வில் கைகோர்த்து நடக்கத் தொடங்கும் ஒரு உறவு என்று மட்டுமே அதிகம் பேர் பார்க்கின்றனர்.., ஒன்று தங்களுக்கு கிடைத்த இணையாகவும் துணையாகவும் அதிகம் பேர் பார்ப்பதில்லை.., அதனாலேயே விவாகரத்து என்று  நீதிமன்ற வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.தனக்கு கிடைத்த தோழனாக தோழியாக தன் நட்பை பகிர்ந்து கொள்ள.., தன் அன்பை பகிர்ந்து கொள்ள வந்த துணையாக பார்க்க தவறி விடுகின்றனர்.., காதலில் காமம் இல்லை..காமம் மட்டும் இருக்கும் இடத்தில் காதலும் இல்லை என்பது உண்மைதான்..அதை சரிவர புரிந்து கொள்ளும் தம்பதியர் வாழ்க்கை மட்டுமே நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்க்கையில் அன்பை நிரப்பிக் கொண்டு செல்கிறது.., எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் வாழ்க்கையை இழக்க துணியாத தம்பதியர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து விடுவார்கள்.., எந்த சூழ்நிலை வந்தாலும் தங்கள் வாழ்க்கைத் துணையை இழக்க துணிய மாட்டார்கள் இயற்கையால் மட்டுமே அவர்களை பிரிக்க முடியும்…..

Advertisement