Advertisement

அதனால் தான் ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் வளைக்காப்பு என்பதில் யார் என்ன சொன்னாலும் மதி பிடிவாதமாக இருந்தாள்.., அதன்படி ஒன்பதாவது மாத தொடக்கம் வரை அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து விட்டு.., அவளுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வளைக்காப்பிற்கு இரண்டு நாள் முன்பு ஊருக்கு கிளம்பி சென்றாள்…

         இப்போது ஓரளவுக்கு இனியாவின் குணம், இனியாவின் மாமியாருக்கு தெரியும் என்பதால், அவளின் கணவனுக்கு லேசாக தெரியும்.., முழுவதுமாக தெரியாது ஆனால் அனைவரும் அவளை அவள் மாமியார் வீட்டில் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர்…, இரண்டு நாளில் வளைக்காப்பு முடிந்து., அவளை அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை., இனியாவை அவர்கள் வீட்டு பக்கம் விடக்கூடாது என்பதில் இனியாவின் மாமியார் உறுதியாக இருந்தார்..,

          “புள்ளதாச்சி பொண்ணு மனசு கஷ்டப்படுற மாதிரி பேசி வைச்சிருதா…, அந்த பொண்ணு என்ன தான் கண்டுக்காம போனாலும்., மனசு வருத்தம் வரத்தானே செய்யும்., அந்த புள்ள மனச வருத்தப்பட வைக்கிறதுக்கு இவள விடலாமா” என்று பேசி…, கலையோடு சேர்ந்து நீங்கள் அங்கு பார்த்துக் கொள்ளுங்கள் வளைகாப்புக்கு நேராக மண்டபத்திற்கு அழைத்து வருகிறேன் என்று சொல்லி விட்டார் இனியாவின் மாமியார்.,

         தாத்தா சொன்னபடி வளைகாப்பு மதியின் வீட்டில் மிகச்சிறப்பாக செய்தனர். மதியின் வீட்டு பக்கம் உள்ளவர்கள் கூட்டம் ஒருபுறம் என்றால்., முகிலன் வீட்டு சொந்தங்கள் ஒருபுறம் என கூட்டம் அதிகமாகவே இருந்தது…, அப்போது தான் பாலனும் சொல்லிக் கொண்டிருந்தார்…, குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கும் பங்ஷனையும் ஓரளவுக்கு சிறப்பாகவே செய்யவேண்டுமென்று நலுங்கு முடிந்து கன்னத்தில் சந்தனம்.., நெற்றியெல்லாம் சந்தனம் குங்குமம்., தலை நிறைய பூ வோடு பட்டுப் புடவையில் அழகாக ஜொலித்தாள்.., வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் முகிலன்.., பின்பு அவளை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே முகிலன் வந்து பேசுவதற்கு என்று மதியை தனியாக அழைத்துக் கொண்டு சென்று விட்டான்..,

      “ஏய்… கத்தரிக்கா அப்படியே அழகா இருக்க…, மெழுகு பொம்மையை செஞ்சி அதுக்கு கன்னத்துல சந்தனத்த தேச்சு வச்ச மாதிரி இருக்கு பாக்குறதுக்கு., பேபி வந்து உன் அழகு எக்ஸ்ட்ரா கூடின மாதிரி எனக்கு ஒரு பீல்”. என்று சொல்லி அவள் தோளில் கைப்போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.

      அவர்கள் வீட்டிற்கு கிளம்பினாள் மதி…, அவள் வீட்டிற்கு கிளம்பும் போது அம்முவும் அவளோடு கிளம்பிப் போய்விட்டாள். கேட்டதற்கு “நான் தம்பியோ., தங்கையோ., பிறந்தவுடன் தூக்கிக்கொண்டு தான் நம்ம வீட்டிற்கு வருவேன்” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

         ஏனெனில் வந்த இரண்டு நாட்களும் மதியை விட்டு அம்மு எங்கும் நகரவில்லை.., கேட்டதற்கு “வயிற்றுக்குள் இருக்கும் பாப்பா எனக்குத்தான் என்று சொல்லி விட்டாள்., அதனால் பாப்பா பிறந்த உடனே என்கிட்ட தான் தரனும்., அப்புறம் தான் நான் வீட்டுக்கு தூக்கிட்டு வருவேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      மதியின் அம்மாவும் “ஆமா டா., நீ தானே அக்கா.., அப்ப நீ தானே பார்த்துக்கனும்”.., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        மதியின் அருகில் நின்று கொண்டு வயிறை கட்டிக் கொண்டு வயிற்றில் முத்தமிட்டு கொண்டே இருந்தாள். “மதிம்மா பாப்பா எனக்கு தானே” என்று சந்தேகம் கேட்டு கொள்வாள்…

         “ஆமா டா…, அம்முக்கு தான் இந்த பாப்பா”. என்று சொன்ன பின்பு அவளிடம் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.., அவள் வயிற்றை பிடித்து முத்துவதே அம்முவிற்கு பெரிய வேலையாக இருந்தது…

           அங்கிருந்த நாட்களில் வீட்டுப் பெரியவர்களும் சரி…, உறவினர்களும் சரி.., அவளை நல்லபடியாகவே பார்த்துக் கொண்டனர். முகிலனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து அவளை பார்த்து விட்டு சென்றான்.., மருத்துவர்கள் கொடுத்த நாளிலே பிரசவ வலி வந்தது.

          அச்சமயம் ஸ்ரீராமுக்கு ஏதோ லீவு இருந்ததால் அவனும் வீட்டிற்கு வந்திருந்தான்.., அவளுக்கு வலியின் ஆரம்பம் என்பதால் ஸ்ரீராம் இடம் இப்படித்தான் வலிக்குமா., அப்படித்தான் வலிக்குமா.., என்று கேட்க

        அவன் அவளிடம் “ஏங்க்கா இப்படி படுத்துற…., நான் எத்தனை டெலிவரி பார்த்தேன் ன்னு என் ட்ட கேள்வி கேட்க…. என்று கேட்டான்.

         “டேய் நீ டாக்டர் தான்டா…, உனக்கு இது கூட தெரியாதா” …, என்று அவனிடம் அவள் கத்திக் கொண்டிருந்தாள்…,

       “ஐயோ அக்கா பேசாம இரு… பக்கத்து வீட்டு பாட்டிய அம்மா கூப்பிட போய் இருக்காங்க…, கொஞ்ச நேரம் பேசாம இருக்கா” …

“இங்கெல்லாம் வலிக்குதுடா” என்று இடுப்பை பிடித்துக்கொண்டு கேட்க

          “ஐயோ அக்கா நான் டாக்டருக்கு படிச்சிட்டு தான் இருக்கேன்., இன்னும் முழுசா கூட முடிக்கல., நீ வேற ஏன் இப்படி கேட்டு கேட்டு எனக்கு படிக்குறோமா., இல்லையான்னு தோனுது பேசாம இருக்கா” … என்று சொல்லி விட்டு அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தான்…,

         இவளுக்கு லேசாக வலிப்பது போல இருக்கவும்.., பக்கத்து வீட்டிலிருக்கும் பாட்டி அழைப்பதற்காக சந்திரா போகும் போதே முகிலனின் அம்மாவிற்கும் சொல்லிவிட்டு சென்றார்.., முகிலனின் அம்மா கலை மற்றும் தாத்தாவோடு வந்துவிட., சற்று நேரத்திலே இனியாவின் மாமியாரும் கிளம்பி வந்துவிட்டார்..,

       பாட்டி அவள் வயிற்றை தொட்டுப் பார்த்துவிட்டு “பிள்ளை வலி மாறி தான் இருக்குது.., வயிறு இறுகும் அப்புறம் சாதாரணமாகவும் இப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு பெருஞ்சீரகத்தை எடுத்து அவளுக்கு வேகவைத்து கசாயம் போல் செய்து கொடுத்தார்கள்.., அதன் பிறகு அவளுக்கு தொடர்ந்து வலி வர மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்..,

        அதே நேரத்தில் முகிலனுக்கு ஏற்கனவே போன் செய்து சொல்லி விட்டான் ஸ்ரீராம்.. நீ பேசு என்று மதியிடம் சொல்ல அவள் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டாள்…

         “எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு., இப்ப பேசினா அவரையும் சேர்த்து நான் டென்ஷன் ஆகிடுவேன் வேண்டாம்., அவர் ரிலாக்ஸ்டா வரட்டும்” என்று சொல்லிவிட்டாள்.

       சூர்யா அலுவலகம் சென்றவன் அவனும் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்துவிட., இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.., அம்முவிற்கு பயங்கர சந்தோஷம்..,

        “அவளிடம் அங்க மதி வலியோட கஷ்டப்பட்டு இருக்கா., நீ எதுக்கு இங்க சிரிச்சிட்டு இருக்க”. என்று கலை கேட்கவும்

         அவள் குழந்தைக்குரிய குணத்தோடு “தம்பி வரப்போறான் இல்ல அதுதான்” என்று சொல்லவும்..,

           அவளுடைய கடைசி ஸ்கேன் பார்க்கும் போது ஸ்ரீராம் மருத்துவர் என்பதால் அவனுக்கு மட்டும் சொல்லி இருந்தார்கள் பையன் என்று அதை அம்முவிற்கும் ஸ்ரீராம் சொல்ல.., அவள் அதிலிருந்து தம்பி தம்பி என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.., அவளுக்கு தம்பி வரப்போகும் சந்தோஷம் அவளுடைய சந்தோஷமான சிரிப்பில் இருந்தது.., மதிக்கு அழுகை வந்தாலும் அம்முவின் சந்தோஷமான சிரிப்பும் வீட்டிலுள்ளவரின் கவலை முகமும் அவள் அழுகையை கட்டுப்படுத்தி இருந்தது…,

        அதிகமான வலிகளை மதிக்கு பரிசளித்த பின்னரே முகிலனின் மகன் வந்து பிறந்தான்…, சரியாக குழந்தை பிறக்கும் நேரத்திற்கு சற்று முன்னே முகிலனும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்…

         அவன் கையில் குழந்தையை கொடுத்தார்கள்.., அழகில் நிறத்தில் மதியையும் ஜாடையில் சிறிது அவனையும் சேர்த்து பிறந்திருந்தான்., முகிலனின் மகன்.

         முகிலனோ குழந்தையை சூர்யாவிடமும்., கலையிடமும்., கொடுத்து விட்டு ” முதல்ல குழந்தைய உங்க கைல தான் தரனும் ன்னு ஏற்கனவே சொல்லியிருந்தா… நான் தான் சந்தோஷத்துல வாங்கிட்டேன்.., அவகிட்ட நீங்க வாங்கினதா சொல்லிருங்க”… என்றான்…

” மதிக்கு பயப்படுற மாதிரி பில்டப் பண்ணுறீயே… போடா” என்று சொன்ன படி அவனை சந்தோஷத்தோடு அணைத்து கொண்டான் சூர்யா.

         அங்கிருந்த அனைவரும் மிகுந்த சந்தோஷப்பட்டனர்.. என்றால் அம்முவை கையில் பிடிக்க முடியவில்லை “தம்பி என்கிட்ட கொடுங்க.., நான் பார்த்துப்பேன்” என்று சொல்லி அப்போதே கையில் கேட்டு அடம் பிடிக்கத் தொடங்கி இருந்தாள்…,

          “குட்டி பேபியா இருக்கான் இல்ல உன்னால தூக்க முடியாது டா., நீ உக்காந்துக்கோ” என்று சொல்லி அம்முவை உட்கார வைத்து…, அவள் மடியில் துணியால் சுற்றப்பட்ட குழந்தையை கலை வைக்க பிடித்துக் கொண்டே இருந்தான் முகிலன்…,

         மதியை பிரசவ அறையிலிருந்து அறைக்கு மாற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு பெரியவர்கள் அங்கு நிற்க.., இவனும் குழந்தையை கலையை பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டு அவளைப் பார்ப்பதற்காக சென்றான்.., மதி அதிகமான வலியினாலும்., அரை மயக்கத்தில் இருந்தாள்.

        அறைக்கு வந்தவுடன் யார் இருப்பதையும் பொருட்படுத்தாது., அவள் அருகில் சென்று அவள் தலையை தடவிக் கொடுத்து நெற்றியில் முத்தம் வைத்தான். முகிலனின் சந்தோஷத்தை கண்ட மதியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் வழிந்து ஓடியது…, அவள் கண்ணீரை துடைத்து விட்ட முகிலன் “ரொம்ப கஷ்டப்பட்டுட போதும்., நமக்கு ஒரு குழந்தை போதும்” என்று சொல்லவும்.

        அவசரமாக அவன் வாயை மூடி இல்லை என்று தலையை ஆட்டவும்..,

         ஏன் என்று முகிலன் கேட்டான்..

           “இரண்டாவது பேபிக்கு நீங்க பார்த்துக்கிறேன் ன்னு சொல்லியிருக்கீங்க” என்றாள்.

          மகனை அருகில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.., அம்முவையும் தன் அருகில் வைத்தபடி….

        அவளை வீட்டிற்கு அழைத்து வரும் வரை முகிலன் அவளோடு இருந்தான்.., மருத்துவமனையில் இருக்கும் நேரங்களில் குழந்தை விழித்திருந்தால் அவன் கையில் வைத்து கொண்டிருந்தான்…

          பெரியவர்கள் தான் “குழந்தையாக இருக்கும்போதே கையில் வைத்து பழகக் கூடாது.., பின்பு அந்த குழந்தை அதே பழக்கத்திற்கு எப்பொழுதும் தூக்கிக் கொண்டே இருக்க சொல்லும்” என்று சொன்னார்கள்…

         “நான் இங்கே இருக்கிற நாள் தான் தூக்கி வைத்திருக்க முடியும்., ஊருக்கு போயாச்சு ன்னா அங்க எல்லாம் முடியாது… எனக்கு வேலையே டைட்டா இருக்கும்”.., என்று சொல்லிவிட்டு கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தான்…

        வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு நாட்கள் வேகமாக செல்வது போலத்தான் இருந்தது…, நேரமே இல்லாதது போலவே அவளுக்கு தோன்றியது.., குழந்தை தூங்கும் நேரம் மட்டுமே அவளால் தூங்க முடிந்தது.., மற்ற நேரங்களில் வீட்டிற்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்ததுடன்., அவளுக்கான கவனிப்பு என்று வீட்டில் எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டே இருந்தார்கள்.., முகிலனின் அம்மாவும்., பகலில் அங்கு வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையானதை செய்து வைத்துவிட்டு கலையும் இங்கு வந்து இவளுக்கு தேவையானவற்றையும்.,குழந்தைக்கு தேவையானவற்றையும்., சந்திராவோடு சேர்ந்து செய்ய தொடங்கி விடுவார்கள்..

         அம்மு அப்பொழுதுதான் கேஜி சேர்த்திருந்தால்.., ஸ்கூல் போக மீதி நேரங்களில் எல்லாம் குட்டி பையனுயுடன் இருந்தாள்.., மூன்று மாதங்கள் முடியப்போகும் நேரத்தில் குழந்தைக்கு பெயர் வைத்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு நாள் பார்க்க தொடங்கினர்..,

        ஆனால் முகிலனோ அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற மறுநாளே அவன் ராமேஸ்வரம் அழைத்துச் செல்வதாக சொல்லிக்கொண்டிருந்தான்..,

          இங்கு இரண்டு வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் தான் வருத்தமாக இருந்தது…, குழந்தையை பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று., அதுமட்டுமல்லாமல் இவள் குழந்தையை வைத்துக்கொண்டு மற்ற வீட்டு வேலைகளை எப்படி பார்ப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.., பெயர் வைக்கும் நாளும் நெருங்கியது..

      வாழ்க்கை பாதை இது தான் என தெரிந்த பின்பு.நம் பாதையில் மட்டும் கவனம் வைத்து செல்லும் போது எந்தப் பிரச்சினையும் வருவதில்லை… அடுத்தவர் பாதையை பார்க்கும் போதுதான் அங்கு பிரச்சனைகள் வருகிறது… வாழ்க்கையில் மற்றவர்களை பார்த்து ஒப்பிடுதல் என்பது மட்டும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்பொழுதும் சுகமான பயணமாகவே அமையும்..  சுகமான பயணமாகவோ., இல்லை  சுமையான பயணமாகவோ.மாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது…,

Advertisement