Advertisement

அத்தியாயம் 21

அவளது நேசத்தின் வரிகள்

உன் மார்பில்

சாயும் நேரங்களில்

காதல் உணரப்படுகிறதா..,

இல்லை உணர்த்த படுகிறதா

தெரியவில்லை..,

ஆனால் இருவருக்கும்

இடையே சடுகுடு

ஆடுகிறது காதல்…

                அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதே அவனது பெரும் வேலையாக அவன் முடிவு செய்து கொண்டான். அவளும் ஓரளவு நடக்கத் தொடங்கிய பின்பு இருவரின் அம்மாவும் ஊருக்கு கிளம்பினார்கள். அதன் பிறகு எப்பொழுதும் போல் போனில் அனைவரும் பேசிக் கொண்டாலும்., அவளுடைய ஆரோக்கியத்தை கேட்டுக் கொண்டே இருந்தனர்., ஏனெனில் இன்னும் முழுமையாக சரி வராத காரணம் ஒன்று இருந்தாலும்., அனைவரும் இங்கேயே இருந்தால் அங்கு இரண்டு வீட்டிலும் அப்பா இருக்கிறார்கள் அவர்களின் கவனிக்க ஆள் வேண்டும் என்ற எண்ணத்தோடு மதி தான் அவர்களை எல்லாம் போக சொன்னாள்.

         பிள்ளைகளுக்கு தேவையான சமையல் மட்டும் இவள் பார்த்தாலும்., மற்றபடி வீட்டில் அனைத்திற்கும் அவன் வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்து வைத்திருந்தான்., அதனால் அவளுக்கு மெதுமெதுவாக செய்தாலும் அனைத்தையும் செய்து விடுவாள். கால் மட்டும் இன்னும் வேகமாக நடக்க முடியாமல் இருந்தாள்..,

     பாதத்திலுள்ள எலும்பு முறிவினால் மற்றபடி அவள் வேலைகள் அனைத்தும் அவளே பார்த்துக் கொண்டாள்., வீட்டில் பழையபடி அவர்களது சந்தோஷம் வந்திருக்க ஒரு நாள் பிள்ளைகள் ஹோம் ஒர்க் எல்லாம் முடித்து விளையாடிக்கொண்டிருக்க.., முகிலனும் வந்து சேர்ந்த பிறகு அனைவருக்கும் இரவு உணவு கொடுத்து விட்டு அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தாள்.

   இப்பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு கதை சொல்ல முகிலன் தயங்குவதில்லை., இவள் வருவதற்கு முன்னே அவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்று படுக்க வைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தான்.., அவனுக்கு இப்போது வரை பயம் பிள்ளைகளை அவள் அருகில் விட., அவளை மிதித்து  விடக் கூடாது.., கைகளை மேலே தூக்கி போட்டு அவளுக்கு ஏதும் வலி வந்து விடக்கூடாது என்பதால் அவளை முன்பு போலவே பார்த்துக்கொண்டான்.

            எனவே பிள்ளைகளை எப்போதும் போல அவன் அருகில் போட்டுக்கொண்டு.,  அவளை அவனுக்கு மற்றொரு புறமாக படுக்க இடம் ஒதுக்கி வைத்திருந்தான். அவனும் வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்., ஏதோ யோசனையோடு அவள் இருப்பதை அவள் முகமே காட்டியது., என்ன யோசனையாக இருக்கும்., போன் பண்ணி என்னத்தையும் போட்டு கொடுத்தார் களா என்று தெரியலையே.., என்ன பிரச்சனை என்று தெரியலையே., என்று யோசனையோடு பிள்ளைகளுக்கு எப்போதும் சொல்வது போல பேஸ்புக்கில் இருந்து எடுத்து படித்து கதையை சொல்லிவிட்டு தூங்க வைத்திருந்தான்.,

         அவனின் முதுகு புறமாக வந்து படுத்து., அவனை அணைத்தபடி “என்னை பார்த்து திரும்பி படுங்க உன்கிட்ட பேசணும்” என்று மெதுவாக சொன்னாள்., அவனும் அவள் ஏதோ பேச தான் யோசிச்சிட்டே இருந்திருக்க வேண்டும்.., என்ன விஷயம் தெரியலையே என்ற யோசனையோடு மெதுவாக திரும்பி படுத்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு “சொல்லுடா என்ன பிரச்சினை”.., என்று சொல்லி மண்டையை தட்டி காட்டி., “இங்க இருக்கிறதே கொஞ்சூண்டு மூளை., அதை ஏன் யோசிக்கிறேன் ன்னு., குறைச்சுக்குற” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

         “எனக்கு பிரச்சனை ஒன்னும் இல்ல…, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டாள்” …,

        “எனக்கு என்ன பிரச்சனை., நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சொல்லும்போது

       “நிஜமா” என்று அவனிடம் திரும்ப கேட்டாள்.

      “நிஜமா நல்லா இருக்கேன் போதுமா” என்று சொல்லி விட்டு அவளின் அமைதி கண்டு., “வேறு எதையாவது சொல்ல வருகிறீயா” என்றான்., மீண்டும் அவளிடம் “நீ எதையோ யோசிச்சிட்டு என்னமோ கேட்கிற ன்னு., நினைக்கிறேன். என்ன விஷயம் சொல்லு” என்று சொன்னான்.

            அவன் மார்போடு முகம் புதைத்துக்கொண்டு “உங்களுக்கும் இனியாக்கும் என்ன பிரச்சினை” என்று அவன் முதுகில் கோலம் போட்ட படி மார்பில் முகம் புதைத்து கேள்வி கேட்க அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த அவன் கை சற்று நேரம் அப்படியே நின்றது.

              பின்பு அவளை மறுபடியும் அவள் தலையை தடவிக் கொடுக்க தொடங்கியவன்., “தப்பு பண்ணும் போது தட்டி கேட்டு இருக்கணும் டா., விட்டுட்டேன்.  இப்போ அவளோட தப்பு ஓவரா போயிட்டு இருக்கு அது என்னவோ சரியா படல” என்று அவன் சொன்னான்…

              “உனக்கு யாரு சொன்னா எப்படி தெரியும்” என்றான்.,

            “அது கேள்விப்பட்டேன், சரி, நீங்களே சரி ஆயிடுவீங்க நினைச்சிட்டேன்., அதுக்காக இத்தனை நாளா பேசாமல் இருப்பாங்க., அவங்க பேசாமா இருக்காங்க அப்படி ன்னு., நீங்களும் பேச மாட்டீங்களா” என்று கேட்டாள்.,

        “நான் தான் எப்போ அவ சரியாகுறாளோ அப்போ பேசுவேன் என்று சொல்லி இருக்கேன் சூர்யா கிட்ட…, அவள் கிட்டையும் சொல்ல சொல்லிட்டேன்., அதுவரை அவ என் முகத்துல கூட முழிக்க கூடாதுன்னு., இருக்கேன்., என்ன வார்த்தை பேசினா தெரியுமா” என்றபடி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

             அப்போது மெதுவாக அவன் முதுகைத்  தடவி கொடுத்தபடி “நீங்க அழுகிற வருத்தத்தில் கூட சொல்லி இருக்கலாம்..,  அப்படியே ஒன்னும்  இல்ல ன்னு விட்டுருங்க”., என்று சொல்ல

                  “ஏண்டி உனக்கு கோபமே வராதா., எனக்கு இப்ப கட்டி புடிச்சு கடிக்கணும் போல இருக்கு”.,

                “யாரு என்னைய வா” என்று அவள் கேட்க “உன்னை அடிப்பேன்., கடிப்பேன்” என்று சொல்லி கொண்டிருந்தான்.,

         “செல்லம் கொடுத்து, உங்க தங்கச்சி நீங்க கொடுத்து வச்சிங்க அது தெரியுமா., தப்பு நீங்க பண்ணிட்டு அடிக்கிறதை அவங்கள அடிப்பீங்களா” என்று இவள் வேகமா பேச….

            “மெதுவா பேசு., பசங்க முழிச்சிட போறாங்க” ன்னு அவன் சொன்னான்.

            ஒகே., மெதுவா பேசுறேன்.., தப்பு பண்ணுனா பிள்ளைகளை தட்டிக் கேட்கனும்…, எப்பவும் ஜால்ரா தட்டிட்டு., இப்போ ஐயோ நான் ரொம்ப நல்லவன்.., கெட்டவன்.., அப்படியெல்லாம் பில்டப் பண்ண கூடாது சரியா.., தப்பு னா தப்பு தான் சொல்லணும்.., ரிஷிய எடுத்துக்கோங்க இப்பவே பாப்பா ஏதும் பண்ணனுனா அடிச்சிட்டு., அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லுவான்.., நீ அப்படி பண்ணின இல்ல அதுதான்  அடிச்சேன்  அப்படின்னு  சொல்லுவான்.., அப்புறம்  பாப்பா  வந்து சாரி அண்ணா இனிமேல் நான் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லும்…,  பாப்பா  3 வயசு ஆகுது.., அவனுக்கு என்ன ஏழு வயசு ஆகுது., இப்பவே அதுங்க ரெண்டுக்கும் புரியுது.., உங்களுக்கு புரியல இல்ல..,  தப்பு பண்ணா தட்டிக் கேட்கனும் அதுக்கு அப்புறம் நீ தப்பு பண்ணின அதனால தான் நான் உன்ன சத்தம் போட்டேன் ன்னு  புரிய வைக்கணும்…, அதை விட்டுட்டு நீ தப்பு பண்ணின நான் அடிச்சேன்., நான் அதுக்கு அப்புறம் உன்கிட்ட பேச மாட்டேன்., நீ என்கிட்ட பேச கூடாது அப்படின்னு சொல்ல.., அவங்களுக்கு இன்னும் கோபம் வளரத்தான் செய்யும்., ஒழிய குறையாது.., எப்படி குறையும்” என்று கேட்டாள்..,

           அவள் முகத்தை தன் மேல் இருந்து விலக்கிக் கொண்டு.., அவள் முகத்தை இரவு விளக்கின் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தவன்., “எப்படி இப்படி இருக்கிறாய்., சான்சே இல்ல உன்ன மாதிரி ஒரு பீஸ் கிடைக்கவே கிடைக்காது தெரியுமா” என்று சொல்லவும்.,

         “உங்களுக்கு இன்னொரு ஆள் வேற தேவைப்படுது” என்று சொல்லி அவனை கிள்ளி வைக்க

           “அடியே ஊரே பயப்படும் போலீஸ்காரன் இப்படி போட்டு கிள்ளுறீயே” என்று அவன் சொல்ல.

          “ஊருக்கு உள்ளவங்க பயப்படுவாங்க…, பொண்டாட்டி நான் பயப்பட அவசியம் இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

                   அதன் பிறகு அவர்களுடைய நாட்கள் சந்தோஷமாக தான் கழிந்தது.., எப்பொழுதும் இருக்கும் எதார்த்தமான வாழ்க்கைக்கு வாழப் பழகிக் கொண்டனர். அவர்களது வாழ்க்கையில் இடையே குட்டி குட்டி சண்டை வந்தாலும்., எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. ஒரு பத்து நாட்களுக்குள் அவனுக்கு எப்பொழுதும் போல மதுரை  செல்ல வேண்டிய வேலை இருந்ததால்., போய்ட்டு வாங்க என்று அனுப்பி வைத்தாள்.., “நான் வந்து கூப்பிடுவேன்., அப்படி இல்லை னா., ஆட்டோ வரும் போய் கூட்டிட்டு வா.., கார்ல போக கூடாது” என்று சொல்லிவிட்டு சென்றான்.., சரி என்று சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள். இவளுக்கும் அதன் பிறகு கார் எடுக்க பயம் இல்லை.., இருந்தாலும் பிள்ளைகளுக்கும் அவளுக்கும் சில பழக்கவழக்கங்களை அவனுடைய கட்டுப்பாட்டின் படியே இருந்தாள்..,

              அன்று மதுரைக்கு சென்றவன் அவள் சொன்னதை யோசித்துப் பார்த்துக் கொண்டே தான் இருந்தான். தப்பு செஞ்ச அவளுக்கு இப்ப வரைக்கும் ஒரு உறுத்தல் இல்ல.., தான் சொன்னது தப்புன்னு தோனல., ஆனால் நான் அவளை மூஞ்சில முழிக்காத என்று சொன்னதை மட்டும் எல்லார்ட்டையும் சொல்லி வச்சிருக்கா.., இவ எப்படி தான் மாறப்போறா என்ற எண்ணத்தோடு வேலைமுடித்து.., வீட்டிற்கு போக இந்த முறை அவன் வருவது இவர்களுக்கு ஏற்கனவே போன் செய்து சொல்லி இருந்ததாள் மதி.., அவன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தனர் ..,

Advertisement