Advertisement

        அவனது கைகள் இடையில் அத்துமீறி கொண்டே சண்டை போட்டா நல்ல தாண்டி இருக்கும்.., என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்து சண்டை போடலாமா என்று கேட்டே அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான்…

                 அதன் பின்பு இரண்டு நாள் மட்டுமே அவனால் விடுப்பு எடுக்க முடிந்தது.., அங்கு உள்ள சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக அந்த இரண்டு நாட்களில் அவளை வெளியே அழைத்துக்கொண்டு சென்றாலும் அவனுடைய வேலைகளையும் நடத்திக்கொண்டு ஒரு புரிதல் தாம்பத்தியம் அங்கு தொடங்கியது.., அவளுக்கு தான் சில நேரங்களில் குழப்பம் அதிகரிக்கும் விதமாகவே அவனுடைய நடவடிக்கைகள் இருக்கத் தொடங்கியது..,

             காரணம் இனியாவின் போன் தான்., அது வந்தால்.., பின் சற்று நேரம் அமைதியாக இருப்பான்., அல்லது கொஞ்சம் கோபமாக இருப்பது போல தெரியும்.., ஆனால் எதையும் மதியிடம் காட்டிக்கொள்ள மாட்டான்.., அதுவே அவளுக்கு சற்று கஷ்டமாகத்தான் உணர்ந்தாள்.

                  அன்று அவன் வேலை முடிந்து வருவதற்கு முன் இவள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவனுக்கான உணவுகளையும் தயார் செய்து எடுத்து வைத்து விட்டு., கீதாவிடம் அழைத்து பேசிக் கொண்டிருந்தாள்..

            அப்போது கீதாவிடம் தான் சொன்னாள். “நல்லா தான் இருந்தாங்க., திடீர்னு ஒரு மாதிரி டென்ஷனாக இருக்குற மாதிரி தெரியுது.., இனியா ட்ட போன் வருது அப்படிங்கறது தெரியுது.., இருந்தாலும் என்ன பிரச்சனை பண்றா அப்படிங்கறது தெரியல.., இல்ல ஏதாவது அவங்க மனசு கஷ்ட படுற மாதிரி பேசிட்டாளா., அவங்க அப்பப்போ மூட் அப்செட் ஆகிறாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..,

             அதற்கு கீதா “இங்க பாரு எதையும் கண்டுக்காத.., அவங்க எவ்வளவு கஷ்டத்துல வந்தாலும் உன்னோட நடவடிக்கை ல மாறாம இரு.., உன்னை கஷ்டப்படுத்த கூடாது ன்னு கூட நினைக்கலாம் இல்ல.., நீ சிரிச்ச முகமா இரு.., அவங்க முகத்தை பாத்திட்டு ஆராய்ச்சியா யோசிக்காத., இப்படி இருக்குமோ,அப்படி இருக்குமோ நீயா கற்பனை பண்ணிக்காத எதுவா இருந்தாலும் இருந்துட்டு போகட்டும்.., வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு பொண்ணா உன்னோட ஹஸ்பண்ட் நீ எப்படிப் பார்த்துக்கணுமோ., அப்படி பாத்துக்கோ நான் சொல்றது புரியுதா., எந்த ஒரு இடத்திலும் நம்ம இமேஜனேஷன் கொடுக்கும் போது அந்த இடத்தில் பிரச்சினை அதிகமாகும்., என்ன நடந்தாலும் உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சா சொல்லுவாரு., சொல்லக்கூடாது ன்னு நினைச்சா என்னதான் நடந்தாலும் சொல்ல மாட்டாரு.., அதனால கண்டுக்காத., அதுக்காக நீ ஒரு மாதிரி டல்லா இருந்த அப்படின்னா அவருக்கு கூட கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.. அதனால சந்தோசமா இரு எதைப்பத்தியும் மைண்ட் பண்ணாத” என்று சொல்லவும்…,

             சரி என்று கேட்டுக் கொண்டால் ஏனென்றால் இந்த இரு வாரத்தில் முதல் வாரத்தில் அவனிடம் இருந்த ஒரு ஒட்டுதல் சற்று விலகியது போலவே அவளுக்கு தோன்றியது.., வரும் போதே யாரோட கோபமாக பேசிக்கொண்டு வருவது போலத்தான் தோன்றும்.., அதற்கேற்றார் போல வந்து உணவருந்தி விட்டு சற்று நேரத்திற்கெல்லாம் மறுபடியும் போன் வரும் சரி சரி என்று கேட்டு விட்டு போனை வைத்து விடுவான்., ஆனால் யார் பேசுகிறார் என்று தெரியாத சூழலில் தான் மதியும் இருந்தால்.,

                 எனவே அன்று இரவு அவன் வேலை முடிந்து வரும்போது அதே போல கோபமாக இருந்தாலும் இவள் சிரித்த முகமாகவே அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்., அவன் எதற்கு சிரிக்கிறாள் என்று தெரியாமல் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே உடை மாற்றிவிட்டு உணவருந்த வரும்போது…

         ” என்ன சிரிப்பா இருக்கு இன்னைக்கு வந்தவுடனே” என்று கேட்கவும்.,

அவளும் “யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள்..

“சிரிக்கிற அளவிற்கு என்ன யோசனை”

           “கீதா போன் பண்ணி கிண்டல் பண்ணிட்டு இருந்தா… பழைய கதையெல்லாம் பேசி.. அதுதான் உங்களை பார்த்த உடனே பழைய ஞாபகம் வந்துருச்சு அதான் சிரிப்பு வந்துருச்சு” என்று சொல்லி சிரிக்கவும்…, அவனும் அவளது சிரித்த முகத்தை பார்த்துக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தான்..,

           அதேநேரம் உணவருந்தி முடிக்கப் போகும் நேரத்தில் இனியாவிடம் இருந்து போன் வந்தது.., போனை எடுத்துப் பார்த்தவன் அட்டென்ட் செய்யாமல் சைலன்ட் மோடில் போட்டு விட்டு எழுந்தான்.., அவள் எதுவும் பேசாமல் அனைத்தையும் ஒதுங்க வைக்கவும்., அவன் அவனுடைய பர்சனல் நம்பர் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்தான்.., ஆபீஸ் ஃபோனை மட்டும் எப்பொழுதும் போல ஆனில் வைத்துக்கொண்டான்.

           அப்போது தான் கீதா சொன்ன விஷயம் அவளுக்கு புரிந்தது., இவளும் குழப்பத்தில் இருந்தால்., அவனுக்கு ஏற்கனவே இருக்கும் டென்ஷன்., அதே இது சிரித்த முகமாக இருந்தால் அவனும் அவனை அறியாமல் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் சிரித்து பேசத் துவங்குகிறான்., என்பதை புரிந்துகொண்டால் இது தனக்கு ஒரு பாடம் என்று எண்ணிக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் இருந்து கொள்ள வேண்டும்., என்று நினைத்துக் கொண்டாள்.

                வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் புதிதாக வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு., வாழ்க்கையின் சூட்சுமத்தை கற்றுக் கொடுத்தாள் அங்கு சண்டை சச்சரவின்றி குடும்பம் ஓடும்..

           மதிக்கு கீதா சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போக சொல்லிக் கொடுத்தாள்., அதற்கு தகுந்தார் போல் மதியும் நடந்துகொண்டால்., அவனின் கோபம் ஏற்கனவே அவள் அறிந்ததுதான் என்பதால் அவனுடைய கோபத்தை எப்படி கையாள்வது என்பதை மதி போகப் போக கற்றுக் கொள்ள தொடங்கியிருந்தாள்.

அவனுடைய வேலைகளைப் பற்றியும்., நேரங்கள் பற்றியும் இவள் புரிந்து கொண்டதால்., அதற்கு தகுந்தார் போலவே விட்டுக்கொடுத்து போனதால் அவனும் அவனது வேலையை வீட்டு டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக பார்க்க முடிந்தது…

               வீட்டிற்கு வரும் உதவிக்கு வரும் அந்த அம்மா மிகவும் நல்லபடியாக இவளை கவனித்துக் கொண்டதால்., அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்ததால்., இவளுக்கும் வீட்டில் உள்ள வேலைகள் ஒன்றும் பெரும் பாரமாக தெரியவில்லை., அவனுக்காக பார்த்து பார்த்து சமைப்பதில் ஆகட்டும்., அவனை கவனித்துக் கொள்வதில் ஆகட்டும்., பொறுப்பான குடும்ப தலைவியாகவும் நல்ல மனைவியாகவும் நடந்துகொண்டாள்…

              அதுவே முகிலனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது., வீட்டில் உள்ளவர்கள் தினமும் பேசிக் கொண்டாலும் இவள் யாரிடமும் சின்ன குறையோ., முகிலன் கோபத்தில் திட்டினால் கூட அதை வெளியே சொல்வது கிடையாது., அவன் கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னாலும் அடுத்த நிமிடம் சிரித்த முகமாக அவன் முன்னே பொய் பேசும் வித்தையைக் கற்றுக் கொண்டாள்..

                இன்றைய பெண்கள் தங்கள் கணவனின் முகத்திலிருந்து கண்டுபிடிப்பதாக சொல்லிக்கொண்டு., அவர்களை அவர்களே குழப்பிக் கொள்கிறார்கள்.. எல்லோருக்கும் பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் முக்கியம் தான்., பெண்களால் எப்படி பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் விட்டுக் கொடுக்க முடியாதோ., அது போல தான் ஆண்களும்., அதைப் புரிந்து கொண்டு கண்டு கொள்ளாமல் போக கற்று கொள்ள வேண்டும்… நடக்கும் சில குழப்பங்களுக்கு ஆண்கள் செவி சாய்த்தாலும் பெண்கள் அதையும் கண்டுகொள்ளாமல் வாழக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை அழகானதாக மாறும்…,

           அதன்பிறகு அவள் மனதில் உள்ள எந்த கவலையும் முகிலன் முன் காட்டுவதே கிடையாது.., எதுவாக இருந்தாலும் கீதாவிடம் சொல்லி அறிவுரை பெற்றுக் கொள்வாள்.., அவளுடைய சந்தோஷமான வாழ்க்கை அவள் கையில் தான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

முகிலன் அவள் மீது எந்த அளவு அன்பு வைத்திருக்கிறான் என்பதில் அவளுக்கு எப்போதும் பயம் அதில் ஒரு யோசனையோடு கூடிய எண்ணம் இருந்து கொண்டே இருந்தது…, அதை ஒருமுறை கீதாவிடம் சொல்லும் போது

           “உண்மையிலே அப்பப்போ சந்தேகம் வந்துருது கீதா” என்று சொல்லவும்..,

          “அடியே கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள உனக்கு இவ்வளவு டவுட்டு வருது…, அப்படி எல்லாம் கிடையாது., எல்லாரும் அவங்க அவங்க வொய்ப் மேல அன்பு வச்சிருக்க தான் செய்வாங்க., என்ன வெளியே காட்ட மாட்டாங்க., அதே மாதிரி தான் ஏற்கனவே அண்ணா ரொம்ப வெளியே காட்டிக்க மாட்டார்கள்., பேசிக்க மாட்டாங்க., அப்படித்தான் இருப்பாங்க நீ இதெல்லாம் யோசிக்காத” …, சரியா.,

        “அவ ஏதாவது உன்ன பத்தி பேசினா கூட அவள திட்டிட்டு தான் வருவாங்க…, அவ என்ன உன்ன பத்தி பேசுறாலா இல்ல இல்ல., அப்புறம் ஏன் நீ தேவையில்லாம பேசுற ன்னு தான் கேட்டுருப்பாங்க”.,

      “அந்த கோவத்துல அந்த ராங்கி பிடிச்சவ ஏதாவது பேசி இருப்பா., அதற்கு அண்ணன் டென்ஷனா இருப்பாங்க., நீ எதையும் கண்டுக்காத சரியா” என்று அவள் நேரில் பார்த்தது போலவே சொல்லி வைத்தால் அப்படித்தான் இருக்கும் என்று மதியும் நினைத்துக்கொண்டாள்.

உண்மைதான் சில விஷயங்களை வாழ்ந்து பார்த்தவர்கள் புதிதாய் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது நிதர்சனத்தை புரியவைக்கும்… கற்பனை கலந்த உலகத்தில் வாழ்வது தவறு என்பது நிறைய பேருக்கு புரிவதில்லை… வாழ்க்கையில் கற்பனை என்பது நம் கனவுகளோடு கலைந்து போக கூடியது தான்.., வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்பவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் பட்டு கம்பளத்தை விரித்து தான் இருக்கிறது.., கற்பனையோடு எதிர்பார்ப்போடு வாழ்பவர்களுக்கு தான் பாதை கல்லும் முள்ளும் ஆக கலந்து தெரிகிறது.. , நிஜங்களை புரிந்துகொண்டு எதார்த்ததோடு வாழ கற்றுக்கொண்டால் வாழ்க்கை என்றும் அழகான தோட்டம் தான்.

Advertisement