Advertisement

” ஒன்னும் இல்ல அலைச்சல் ஜாஸ்தி” என்றான்.

          ” சாப்பிட்டியா” என்று கேட்கவும் “சாப்பிட்டேன் சொல்லு என்ன விஷயம் முக்கியமான விஷயம் பேசனும் ன்னு சொன்ன” என்று கேட்டான்.

    மதி இடம் பேசியதை சொன்னான்.,  அதற்கு கலை சொன்ன பதிலையும் சொன்னான்., “இப்போ நீதான் முடிவு சொல்லணும்” என்று முகிலன் இடம் கேட்ட போது…,

          “என்னை நம்பு கண்டிப்பா என்னோட மனைவியா வந்ததுக்கப்புறம், என் வைஃப் அ எப்படிப் பார்த்துக்கணும் எனக்கு தெரியும். கண்டிப்பா அதுல ஒரு சின்ன குறை கூட வராது”.என்று சொன்னான்.

     ” சோ கடமை தவறாத கணவனா இருப்பேன் ன்னு சொல்ற அப்படித்தானே” என்று கேட்டான்.

      “கடமை என்பதை விட, நான் எந்த இடத்திலேயும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன்., அதே நேரத்துல நம்ம வீட்டு ஆள்களையும் விட்டுக்கொடுக்க முடியாது.  எங்க எப்படி அட்ஜஸ்ட் பண்ணனுமோ பண்ணிக்கிறேன்”.. என்று  சொன்னான்.

        ” நெஜமாதான் சொல்றியா” என்ற சூர்யாவின் கேள்வி க்கு., “கண்டிப்பா” என்று பதிலளித்தான்.

     ஆனால் அதை அவன் காப்பாற்றுவானா என்பது சூர்யாவிற்கு சந்தேகமாக தான் இருந்தது., “நல்லா யோசிச்சி முடிவு பண்ணு” என்று சொன்னதற்கு முகிலன் சூர்யாவிடம் நேரடியாகவே சொல்லி விட்டான்., நான் இனியாவிடம் எப்படி மதி விஷயத்தில் அவளை தலையிடாமல் பார்த்துக் கொள் என்று சொன்னேனோ…  அதே மாதிரிதான் மதி ட்ட சொல்லப்போறேன்…,  மதி விஷயத்தில் இனியா தலையிட மாட்டாள்.  இனியா விஷயத்தில் மதி தலையிடக் கூடாது இது ரெண்டு பேருக்குமான பொதுவான விஷயமாக நான் பேசிக்கிறேன்”..,

       ” அது மட்டுமில்லாம இனியா வரக்கூடாது., ன்னு சொன்னதால கண்டிப்பாக அந்த இடத்துக்கு கூட்டிட்டு வர மாட்டேன்., கூட்டிட்டு வந்து அவமானப் படுத்துவது என்பது பெரிய தப்பு அதனால அந்த மாதிரி விஷயங்களெல்லாம் செய்ய மாட்டேன், அது மதியும் புரிஞ்சுக்குவா…, சொன்ன புரிஞ்சுக்கிற பொண்ணு தான், எனக்கு நம்பிக்கை இருக்கு”., என்று சொன்னான்.,

         “சோ புரிஞ்சுப்பா ன்னு நம்புற…, அதே நேரத்தில் பிரச்சினை இல்லாமல் இருக்கும் ன்னு நம்புறியா”., என்று சூர்யா கேட்கும் போது…,

        ” கண்டிப்பா பிரச்சினை வரும், எல்லாரும் சம்மதிச்சி நடக்கிற கல்யாணத்திலே மாமியார், நாத்தனார் பிரச்சனைகள் அதிகமாக தான் இருக்கு…, இப்போ   நானும் எத்தனையோ கேஸ் எல்லாம் பார்க்கிறேன்., நம்ம வீட்டை பொருத்த -வரைக்கும் மாமியார் பிரச்சனை வராது., நாத்தனார் பிரச்சனை வரும் பார்க்கலாம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”.., என்று சொன்னான்.

         “மதிட்ட பேசு., கண்டிப்பா மனசு விட்டு பேசி விடு” என்று மட்டும் சூர்யா சொல்லி விட்டு வைத்தான்.

        அதன் பிறகு சூர்யா கீதாவிற்கு போன் செய்து மதியிடம் பேசிய விஷயங்களையும், கலை சொன்னதையும்,  முகிலன் பேசிய விஷயங்களையும், சொல்லி அவளிடம் பேசி முடிவுக்கு  வர சொல்லி சொன்னான்.

         இந்த கல்யாண விஷயத்தை பொறுத்தவரை சூர்யாவிற்கும், கீதாவிற்கும் ,  தான் பயமும் இருந்தது.,  வருத்தமும் இருந்தது.,

    ஏதும் பிரச்சினை நடந்துவிடுமோ என்ற யோசனையோடு,  எங்கே தவற விட்டோம் என்ற பயம் இருந்தது.

       ஏதோ பேச எப்படியோ பேசி கடைசியில் மதியை மயக்கிய விதியின் விளையாட்டை என்னவென்று சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்…

             அன்று இரவு கீதா மதிக்கு அலைபேசியில் அழைத்து இருந்தாள். அவள் எல்லா வேலையும் முடித்து அவளுடைய ஆபிஸ் வேலை இருந்தால் மட்டுமே முழித்து இருப்பாள் அல்லது அந்த நேத்திற்கு தூங்க சென்று விடுவாள் என தெரிந்தே, அந்த நேரத்திற்கு அழைத்திருந்தாள்.

          பேசும்போது சாதாரணமாகத்தான் பேச தொடங்கினாள்.” மதி  சொல்லு கீதா” என்றாள்.

             “நீ முதலில் என்னை மன்னிச்சேன் ன்னு சொல்லு” என்றாள்.

         ” லூஸா நீ” என்று மதி சத்தம் போட்டாள்.

            “சாரி மதி எனக்கு அவங்க பேசின உடனே உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்., ஆனா சூர்யா அண்ணா தான் முதலில் நான் மதி ட்ட பேசிக்கிறேன் அதுக்கப்புறம் நீ பேசலாம்னு சொன்னாங்க., அதனாலதான் வெயிட் பண்ணினேன்., நான் நினைச்சேன், அந்த அண்ணா சம்மதிக்க மாட்டாங்க ன்னு., ஆனா அவங்க சம்மதிச்சிட்டாங்க, இப்ப என்ன பண்ணனும் தெரியல, நீ தான் சொல்லணும்”., என்றாள்.

       ம்ம்ம்…என்றாள் ஒரு பெருமூச்சோடு.,

          “சூர்யா ண்ணா., எல்லாம் சொன்னாங்க…  உனக்கு இதுல வருத்தம் இருக்கு அப்படிங்கிற மாதிரி யோசிக்கிறாங்க.,   உங்க அப்பாவும் சரி.,  சூர்யா அண்ணாவும்  சரி, நீ ஏதோ வருத்தத் -தோட சம்பாதிச்ச மாதிரி தான் ஃபீல் பண்றாங்க.., இப்ப நாங்க என்ன செய்யணும் அத சொல்லு”.. என்று கேட்டாள்.

       ” ஒன்னும் பிரச்சனை இல்ல பார்த்துக்கலாம்”, என்ற வார்த்தையோடு நிறுத்திக்கொண்டால் மதி…

        “மதி நான் சொல்லுறத கேட்பியா”., என்று கீதா கேட்டாள்.

          ” கண்டிப்பா கீதா, உன் பேச்சைக் கேட்காம யார் பேச்சைக் கேட்பேன் சொல்லு”., என்று சொன்னாள்.

         “நீ என்ன சொன்ன என் கிட்ட முதல்ல  காலேஜ் படிக்கும் போது நான் உன்கிட்ட நேரா கேட்டு இருக்கேன்., இப்போ வேலைக்கு வந்ததுக்கப்புறம் கூட கேட்டு இருக்கேன்., நீ யாரையாவது விரும்புறீயா ன்னு., நீ அப்ப எல்லாம் என்ன சொன்ன ஞாபகம் இருக்கா எனக்கு  அந்த மாதிரி இன்ட்ரஸ்ட் இல்ல., கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட ஹஸ்பண்ட் லவ் பண்ணுவேன்னு சொன்ன சரியா”..,  இப்போதும் நீ சொன்னதையே தான் சொல்றேன்., ” கல்யாணத்துக்கு அப்புறம் உன் கழுத்தில் தாலி கட்டினவரு மேல உன்னோட  மொத்த பிரியத்தையும் வை.,  எல்லாம் தன்னால் சரியாயிடும், அன்பால மாற்ற முடியாதது எதுவுமே கிடையாது, எல்லாரும் ஒரு வகைல அன்புக்காக தான் ஏங்கி  இருக்கிறவங்க.., அந்த அன்பு உன்கிட்ட கிடைக்கும்போது அதை விட  அவருக்கு வேற என்ன எதிர்பார்ப்பு இருக்கும்.,  கண்டிப்பாக புரிஞ்சுபாங்க., என்ன அந்த அண்ணன் ரொம்ப ப்ரீயா பேச மாட்டாங்க.., அது தான் ஒரு விஷயம்  இனியா சொன்னதுக்கு செஞ்சு கொடுப்பாங்க அவ்வளவுதான்.., மற்றபடி  ரொம்ப பேச மாட்டாங்களா இருக்கும்.,   கண்டிப்பா உன்ன புரிஞ்சுபாங்க நம்பு..,

அவங்க வீட்ல இப்ப வந்த பிரச்சினைகளில் கூட அவங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் யோசிக்கும் போது ஒரு அளவுக்கு தெளிவா யோசிக்கிறவங்களா இருப்பாங்கன்னு தான் தோணுது., என்ன அவங்க வேலை அப்படி, கண்டிப்பா எல்லாரையும் புரிஞ்சுகிற மென்டாலிட்டி வந்திருக்கும்.,  யார் மேல தப்பு, யார் மேல தப்பு இல்லை, என்கிறத தெளிவா தெரிஞ்சுக்கிற  அந்த மைண்ட் செட் வந்து இருக்கும் அதனால நீ பயப்படுவதற்கு எதுவுமில்லை சரியா., எல்லாம் நல்லபடியா நடக்கும் நம்பு.,” என்று கீதா சொன்னாள்.

           “நான் அப்போ சொன்னேன் இல்ல., அது தான் இப்பவும் சொல்றேன் கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன கல்யாணம் பண்ணுறவர் மேல என்னோட முழு காதலும் இருக்கும். அவ்வளவுதான், அது எங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளை எந்த மாப்பிள்ளையா இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.  என்ன  எங்கப்பா இவங்கள செலக்ட் பண்ணி இருக்காங்க,  அவ்வளவு தான்.,  எங்கப்பா செலக்ட் பண்ணுனாங்க ன்னு சொல்வதை விட மாமா கேட்டதால்  எங்கப்பா சம்மதிச்சு இருக்காங்க..,  கண்டிப்பா என்னால அன்பாய் இருக்க முடியும்னு தோணுது., ஆனா எனக்குள்ள ஒரு பயமும் வருது, எல்லாம் சரியாகுமா, இல்ல பிரச்சினையாக மாறுமா ன்னு”., என்று மதி சொன்னாள்.

        ” ஒன்னே ஒன்னு மட்டும் தான் சொல்லுவேன்,  மதி  எதிர்பார்ப்போட கல்யாணம் பண்ணிக்காத எதிர்பார்ப்பு   ஏமாற்றத்தை கொடுக்கும், அதனால எதிர் பார்க்காதே,  இனியா குணம் நல்ல தெரியும்,  இனியா பிரச்சனை க்கு வந்தா அவளை எப்படி மேனேஜ் பண்ணுவது உனக்கு தெரியும்.,  இப்போ அண்ணாவும் ஓரளவுக்கு  உண்மை சொல்றாங்களா, பொய் சொல்றாங்களா, ன்னு  தெரிஞ்சிக்கிற அளவுக்கு இருக்காங்க.,   உன்னோட மைண்ட் செட் மாறும், நீயும் புரிஞ்சிக்குவ.,   நீ எதையும் எதிர்பார்க்காத உன்னோட முழு அன்பையும் கொடு அதுக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்., உன்ன புரிஞ்சுபாங்க., இது வந்து வேலையோ,  இல்ல நம்ம செய்ற கடமையோ கிடையாது.,  இது நம்மளோட வாழ்க்கை, இந்த வாழ்க்கை நமக்கு ஒரு தடவை தான்., வாழுற வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துட்டு  போலாம்”.,

       “சண்டையும், பிரச்சினையும், எப்பவுமே நம்ம பதில் பேசினால் தான், அந்த இடத்தில் பிரச்சினை உருவாகும் பதில் பேசாம ஒதுங்கிப் போய்ட்டா அந்த இடத்தில் பிரச்சினை வராது., அப்படிதான் வாழ்க்கையும் எப்பவுமே ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப்  குள்ள ஒரு ஆர்க்யூமெண்ட் வரும்போது யாராவது ஒருத்தர் ஈகோ பார்க்காமல் விட்டு கொடுத்து டாங்கனா., அந்த இடத்தில் பிரச்சினையே வராது.,  இதை  நீ புரிஞ்சுக்குவ ன்னு நினைக்கிறேன்., எனக்கு உன் வயசு தான்., என்ன இருந்தாலும் நான் உனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையோட சுத்திகிட்டு இருக்கேன்.,  அதான் இந்த விஷயத்தை சொல்றேன் புரியுது இல்லை”.,  என்று சொன்னாள்.

          ஐயோ பாட்டிமா., பாட்டிமா.,   நீ சொல்றது நல்லாவே புரியுது.,  நான் சொல்றேன்ல எல்லாம் சரியாகும்.,நானும் மைண்ட் செட் பண்ணிக்கிறேன் சரியா., என்று சொன்னாள்.

        “அனேகமா முகிலன் ண்ணா பேசினா நீ அவங்க கிட்ட மனசு விட்டு பேசிக்கோ..,  வேற என்ன சொல்றது எனக்கு தெரியல.,  நீ கல்யாணத்துக்கு ஒரு வாரம்தான் லீவ்ல வருவேன்னு சொன்னாங்க., ஓகே பார்க்கலாம்  நான்  போன் பண்றேன்.,  நாளைக்கு நம்ம பேசுவோம் சரியா.., நீ போ தூங்கு எதையும்  போட்டு குழப்பிக்காத.,  நிம்மதியா தூங்கு எதுனாலும் நமக்கு என்ன எழுதி இருக்கோ, அதுதான் நடக்கும் யோசிக்காத சரியா” என்று சொல்லவும்.,  சரி என்று அவளிடம் வாய் வார்த்தையாக சொல்லி விட்டாலும்., கீதா சொன்னதை பற்றி யோசித்துக்கொண்டே தூக்கத்தை வேண்டி நித்ரா தேவியிடம் தவமிருக்க தொடங்கினாள். எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னுள் வளர்க்க தொடங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்…

வாழ்க்கைப் பாதை கல்லும் முள்ளும் சேர்ந்தது தான். என்ன வரும் என்று போகும் பாதையில்  எதிர்பார்ப்போடு போகாமல், எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தோடு வாழ்க்கை பாதையை கடந்தால் அது இனிமையான பயணமாக அமையும். வாழ்க்கை என்பது நமக்கு ஒருமுறைதான் அதை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்வோம்”

Advertisement