Advertisement

அத்தியாயம் 15

நிதர்சனம் புரிய நெடுங்காலம்

தேவையில்லை….

துணை காட்டும் அன்பு

ஒன்று அத்தனையும்

புரிய வைக்கும்….

ஆறுதலாக ஒரு

புன்னகை….

அது போதும்

அன்றைய நாள்

நிறைவாக செல்ல….

         டாக்டரிடம் சென்று உறுதி செய்த பின் அவளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டான்.. வீட்டிற்கு தெரியபடுத்தவும் இரண்டு குடும்பத்தினரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்., நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு வீட்டினரில் யாராவது வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்தது.., சூர்யாவிற்கு விடுமுறை கிடைக்கும் நேரம் எல்லாம் சூர்யா தன் குடும்பத்தினரோடு வந்து சென்றான்.,

         அதன் பிறகு பொங்கலுக்கு அவளை ஊருக்கு அழைத்து வந்திருக்கும் போது இனியாவை வீட்டு பக்கமே விடாமல் பார்த்துக் கொண்டாள் கலை.., இனியாவின் மாமியாரிடம் லேசாக கோடிட்டு காட்டி வைத்திருந்தாள்.,

           அதனால் இனியாவின் மாமியார் “பொங்கல் வேலை எல்லாம் யாரு பார்ப்பா., அம்மா வீட்டுக்கு., அம்மா வீட்டுக்கு ன்னு ஓடுதே” என்று சொல்லி அவளை சத்தம் போடுவது போல போட்டு வீட்டில் பிடித்து வைத்துக் கொண்டார்..,

         இங்கு மதியின் முதல் பொங்கல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.., கலை இப்படி செய்தது வீட்டில் அனைவருக்குமே தெரியும்.., எல்லோரும் இவளை எப்படி எல்லாம் கண்ட்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு என்று சொல்லி சிரித்துக் கொண்டார்கள்.., அம்முறை இரண்டு நாட்களுக்கு மேல் அவளை அங்கு தங்க வைக்க அவன் அனுமதிக்கவில்லை…,

       ஏனென்றால் அவள் எந்த விதத்திலும் கஷ்டப்படுவதை அவன் விரும்பவில்லை.., ஒவ்வொரு முறையும் அவளுடைய பரிசோதனைக்காக செல்லும்போது வீட்டிலிருந்து யாராவது வந்தாலும்., முகிலனும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவளோடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான்.., அவனுடைய மாற்றங்கள் வீட்டினர் அனைவருக்குமே நன்றாகவே தெரிந்தது.., அனைவருமே சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.

        வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அவளை அதிகமாக வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொண்டான்.., அவள் தான் சத்தம் போட்டு அவனை நகர்ந்து போக சொல்லிவிட்டு செய்வாள்..,

          ஒருமுறை கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு “வயிறு ரொம்ப பெருசா இருக்கே.., ஒரு டூவின் பேபியா இருக்குமோ” என்று அவன் கேட்க

      “ஆசை தான்… அப்படி இருந்தா முதல் ஸ்கேன் எடுக்கும் போதே சொல்லி இருப்பாங்க., ஒரே பேபி தான்” என்று சொல்லவும்

      “அப்புறம் எப்படி வயிறு ரொம்ப பெருசா இருக்கு” என்று அவன் கேட்கும் போது

       “கண்ணு வைக்காதீங்க” என்று சொல்லி அவனை சத்தம் போட்டு விட்டு “ஒரு வேளை ஜிராஃபி குட்டியா இருக்கும் போல இருக்கு., அதனால தான் வயிறு பெருசாயிடுச்சு., கத்திரிக்காய் குட்டியா இருந்தா சின்னதா இருந்திருக்குமோ” என்று சொல்லி கேட்கவும்

      அவன் சிரித்துக்கொண்டே “எந்த குட்டியா இருந்தாலும் என் செல்ல குட்டி தானே” என்று சொல்லி அவள் வயிற்றை தடவி முத்தமிட்டுக் கொண்டான்..,

           அப்போதுதான் அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான்… “இப்போது ஏழாவது மாசம் தொடங்கிடுச்சி அம்மாவும் அத்தையும் உன்னை ஏழாவது மாசத்துல வளைக்காப்பு போட்டு கூட்டிட்டு போகனும் ன்னு சொல்றாங்க.., எனக்கு அனுப்ப இஷ்டமில்லை., பெளமி நீ என்னோடு இரு., ப்ளீஸ்” என்று கேட்கவும்…

        அவளும் “டெலிவரி சமயம் கஷ்டம் இல்ல., எனக்கும் பேபி எல்லாம் பார்க்க தெரியாது… அடுத்த பேபிக்கு வேணா நான் உங்க கூடயே இருக்கிறேன்…, இந்த ஒரு பேபிக்கு மட்டும் போயிட்டு வரட்டுமா” என்று கேட்கவும்..,

       “அப்ப இப்பவே போனுமா” என்று அவன் கேட்க

        “இல்ல அது வேணாம் அம்மா ட்ட நான் பேசுறேன்.., ஒன்பதாவது மாதத்தில் வரேன்னு சொல்லி”… என்று பேசிக்கொண்டிருந்தனர்..,

         இருவரும் என்ன செய்யலாம் என்று அவள் அம்மாவிடமும் முகிலனின் அம்மாவிடமும் பேச… அவர்கள் இல்ல வளைக்காப்பு போட்டா நாங்க கூட்டிட்டு வந்து விடுவோம் என்று சொல்ல.., ஊரில் வைத்து வளைக்காப்பு செய்ய வேண்டும். என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க.,

     முகிலனும் “இல்ல அப்படி கண்டிப்பா வளைக்காப்பு இப்போ ஏழாவது மாசம் போடணும்னா.., நீங்க இங்க நான் ஒர்க் பண்ற இடத்துலேயே வச்சு போட்டுருங்க…  போட்டுட்டு இங்க விட்டுட்டு போங்க” என்று சொல்லவும்..

       “அது எப்படிப்பா அங்க பெருசா வைக்க வேண்டாமா”.. என்று சொல்ல அந்த முறை மதியைப் பார்ப்பதற்காக முகிலனின் தாத்தாவும் வந்திருந்தார்.. அவர்தான் கடைசியாக தீர்வு சொன்னார்.

         “ஒன்பதாவது மாசம் பெருசா வைக்கணும் பா” வளைகாப்பு என்று சொல்லவும்…

        “ஏன் தாத்தா பெருசா வைக்கணும்னு சொல்றீங்க., நம்ம கலை அண்ணிக்கு பண்ண மாதிரி பண்ண வேண்டியது தானே” என்று சொல்லவும்…

        “கலை உனக்கு வருத்தமா” என்று தாத்தா கேட்க.,

       “அப்படி எல்லாம் இல்லை” என்று சொல்லவும்.

         “இல்லை மண்டபத்தில் கிராண்டா பண்ணனும்., கல்யாணத்துக்கு வந்த அத்தனை பயலையும் வர சொல்லணும்” என்று தாத்தா சொல்லவும் அனைவருக்கும் புரிந்தது கல்யாணம் பேசும் போது சிலர் பேசிய வார்த்தைகள் தாத்தாவின் இந்த யோசனைக்கு காரணம் என்ற உடனே பாலனும் சரி என்று சொன்னார்…, அதன்படி ஒன்பதாவது மாதம் ஊரில் வைத்து மண்டபம் பிடித்து பெரிதாக வளைகாப்பு வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்., முகிலனும் சரி என்று சொல்லி விட்டான்.,

       ஒன்பதாவது மாதம் ஆரம்பத்திலேயே கூட்டிக் கொண்டு சென்று விடுவோம் என்று பேசிக்கொண்டார்கள்…, முகிலனுக்கு தான் கோபம்., இரண்டு நாள் இருந்துவிட்டு அவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றவுடன்., அதன் பிறகு கிடைத்த தனிமையில் அவளை அணைத்து பிடித்தபடி படுத்திருந்தவன்..,

       “ஏன் பெளமி என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா…, நீ பேசாம அவங்க ஒன்பதாவது மாசம் ஸ்டார்டிங் ல அங்கே கூட்டிட்டு போகணும் சொல்லுறாங்க…, நீயும் அமைதியா இருக்கிற., என் கூட இருக்கணும்னு உனக்கு தோணலையா”., என்று கேட்கவும்.,

       “என்னால இப்ப எந்திரிச்சு., உட்கார்ந்து திரும்பி உங்களை பார்த்து படுக்க முடியாது., நீங்க அப்படியே எந்திரிச்சு இந்த பக்கம் வந்து என் முன் பக்கம் வாங்க” என்று கேட்கவும்., அவளது கர்ப்பகால நடைமுறைகள் அப்படியே திரும்பி படுக்க கூடாது என்று பெரியவர்கள் சொல்லியதால்…, அவள் அவனிடம் அப்படி சொல்லிக் கொண்டிருந்தாள்.,

         “சரி சொல்லு என்ன விஷயம்” என்று அவன் கேட்கவும்

       “எனக்கும் கொஞ்சம் பயமா இருக்கு…, வயிறு பெருசாகுது, அதுவும் குட்டியோட முமண்ட்ஸ் பயங்கரமா இருக்கு.., துருதுருன்னு இருக்குமோ என்னவோ தெரியல., ஒரு இடத்தில இருக்க மாட்டேங்குது., இப்பவும் பாருங்க எனக்கு தூக்கம் வருது.., பேபி என்ன தூங்குதா பாருங்க” என்று சொல்லி அவன் கையை பிடித்து குழந்தையின் அசைவுகளை அவனுக்கு காட்டிக்கொண்டிருந்தாள்…, “ஒரு இடத்தில இருக்குதா பாருங்க.., உருண்டுகிட்டே இருக்கு.., இப்படி இருக்கும் போது எனக்கும் பயமா இருக்கும் இல்ல.., திடீர்னு வலி வந்தா கூட எப்படி வலிக்கும் ன்னு கூட தெரியாது..,அப்படி இருக்கும்போது பெரியவங்க பக்கத்துல இருக்கிற தானே நல்லது… நம்ம ரெண்டு பேரும் மட்டும் என்ன பண்ண முடியும் சொல்லுங்க… நீங்களும் வெளிய போனீங்கன்னா எப்ப வருவீங்க ன்னு தெரியாது.., உங்களோட டூட்டி அப்படி, நான் அதுக்காக உங்களை குறை சொல்லல”.,

        “இப்பவும் பாருங்க…, அந்த அம்மாவை என் கூட இருக்கச் சொல்லிட்டு போறீங்க., அவங்களுக்கும் ஃபேமிலி இருக்கு இல்ல., எப்பவும் நம்ம கூட இருப்பாங்கன்னு எதிர்பார்க்கமுடியாது இல்ல கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…, நான் ஊருக்கு போய்ட்டானா அம்மா., அப்பா இருப்பாங்க., அங்க உங்க அப்பா அம்மா தாத்தா கலை அக்கா சூர்யா அண்ணா எல்லாரும் இருக்காங்க ஒன்பதாவது மாசத்துல டெலிவரி முன்னாடி கூட இருக்கலாம்., எல்லாத்தையும் யோசிக்க வேண்டியது இருக்கு., ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”.., என்று அவனை தாங்கவும்

       “உங்களுக்கு டைம் கிடைக்கும்போது நீங்க ஊருக்கு வாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது

        “சரிடா இவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது., நானும் யோசிக்கணும்… இதற்கிடையில் எப்போதும் போல் கீதாவிடம் பேசுவது தவறவில்லை…, ஏனெனில் கீதா நல்ல தோழியாக மட்டுமில்லாமல் ஒரு சகோதரியாகவும் மதி க்கு தேவையான அறிவுரைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தாள்…

        எப்பொழுதும் விட்டுக் கொடுக்கும் சூழ்நிலையில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்… அப்படிதான் மதி எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து சென்றாலும் சில நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக தொடங்கி இருந்தாள்.., அதை கீதாவிடம் மட்டும் அவ்வப்போது புலம்புவாள்.., அதற்கு பதிலாக கீதா சில விஷயங்களில் அறிவுரை சொல்லுவாள் அதன் விஷயமாகவே இப்போதெல்லாம் மதி சில முடிவுகளில் பிடிவாதமாக நின்று விடுகிறாள்..,

          அப்படிதான் இந்த வளைக்காப்பு விஷயமும்.., மற்ற விஷயத்தில் முகிலனுக்காக மதி விட்டுக் கொடுத்தாள்…. ஆனால் இதில் சரி என்று சொன்னால் மாச கடைசி வரை அவளை இங்கே இருக்க வைத்து விடுவான்.., அவளுக்கு வலி வந்தாலோ இல்லை., பயம் வந்தாலும் அவளறியாமல் மன உளைச்சல் ஏற்படக்கூடும்.., அது குழந்தையை பாதித்து விடக்கூடாது என்ற காரணமும் ஒன்று.., அங்கு சென்றால் அனைவரோடும் இருக்கும் போது முகிலனை தேடினாலும்.., சற்று அனைவர் துணையும் இருக்கும் என்ற தைரியத்தில் அவள் இருக்கலாம்..,

Advertisement