Advertisement

அத்தியாயம் 20

 அவளது நேசத்தின் வரிகள்

கண்களால் கைது

 செய்வதை சற்று

 தள்ளி வை…!

 நம் கண்கள்

 ஒரு முறை காதல்

 சொல்லிக் கொள்ளட்டும்…,

      பொதுவாகவே  சற்று இரக்க குணம் உள்ளதால் தான்.., அவன் வேலை விஷயத்தில் யாரையும் அடிக்க அனுமதிக்காமல் இருந்தது…, யாராக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கு வலிக்கும் என்று அடிக்கடி சொல்வான்.., விசாரிப்பதே வேறு விதமாக இருக்கும் என்று அலுவலகத்தில் பேசிக்கொள்வார்கள்.., அவனுடன் வேலை பார்ப்பவர்கள் சொல்வார்கள்., அந்த அளவிற்கு நிதானமாகவும் பொறுமையாகவும் விசாரிப்பான்., சில இடங்களில் சரியான பதில் கிடைக்காத போது தான் மற்றவர்களை விட்டு விசாரியுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவான்..,

     அப்படிப்பட்டவன் தன் உயிரில் பாதி.., அவள் வலியில் வேதனையோடும் நாட்களைக் கடந்து வந்ததை பார்த்து கொண்டு  இருந்தால் அதற்கு காரணமானவர்களை சும்மா விடும் அளவிற்கு அவன் ரொம்ப நல்லவன் எல்லாம் இல்லை என்பதை நிரூபித்தான்..,

       விபத்து நடந்த அன்று., அங்கு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் மூலமாக அவன் அறிந்தது..,  வந்து கொண்டிருந்த காரை வேண்டுமென்றே பின்புறம் வந்த லாரி இடித்தது போல தான் இருந்தது.., ஏனெனில் லாரி போவதற்கு பக்கவாட்டில் அவ்வளவு இடமிருந்தும் வேண்டும் என்று இடித்தது போல தான் இருந்தது…,  இடித்து விட்டு வேகமாக செல்ல முயன்ற போது எதிர்ப் பக்கம் இருந்தவர்கள் ஓடி வர  லாரியை நிறுத்த  முற்படவும்…,  லாரியை  ஒரு ஓரமாக விட்டு விட்டு டிரைவர் ஓடிவிட்டான்., என்று தான் சொன்னார்கள்..,

          அவனை பின்னே விரட்டிப் பிடித்து வந்த பின்பு., இவன் எதுவும் விசாரிக்கவில்லை ஆனால் விசாரிக்க இவனுடைய மேலதிகாரி ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார்..,  விசாரித்த வகையில் சில விஷயங்கள் தெரிய வந்தது.,

         பிரமோஷனோடு கூடிய  டிரான்ஸ்பரில் வந்தவன்..,  முதலில் இங்கு உள்ள இடங்களை  பார்ப்பதில் தன் பாதி நேரத்தை செலவழித்தான்., அப்போது தான் அங்கு பள்ளி பகுதியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக தகவல் வந்தது., அது பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்தே இருப்பதாக தெரியவும்.,  அவர்களை தேடிக் கொண்டே இருந்தான் அப்படித் தேடிக் கண்டுபிடித்த போது ஒரு பெரும்புள்ளி சிக்கினார்…,

         யாராக இருந்தால் என்ன என்ற எண்ணத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதிலிருந்து மீண்டு வர என்ன முயன்றாலும் மற்றவர்களைப் போல் அதில் மீண்டு வர முடியாது என்பது அவனுக்கு நன்றாக தெரியும்., போதைப் பொருள் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் தான்., அவன் அந்த பெரும் புள்ளியின் மேல் வழக்குப் பதிவு செய்து இருந்ததான்.,

     அப் பெரும்புள்ளி தலைமறைவாகவே சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்., என்று கையில் கிடைத்தாலும் கைது செய்து உள்ளே தள்ளி விடுவார்கள் என்று தெரியும், என்பதால் அந்த ஆள் அப்படியே சுற்றிக் கொண்டிருக்க அவரின் மூலமாக தான்., இந்த லாரி டிரைவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..,

     அதாவது போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளினால் பிரச்சினை பெரிதாகும் என சொல்லி அவனுடைய கார் நம்பரை மட்டுமே கொடுத்திருந்தார்கள்., அவன் மதியின் காரை உபயோகிப்பதை அறியாதவர்கள்., அவனுடைய கார் வேறு யாருடைய கைக்கும் போகாது என்பது வரை  விசாரித்து.., அவனுடைய கார் நம்பரை மட்டும் சொல்லி அடித்து தூக்க சொல்ல..,

       அன்று விதியின் வசமாக அந்த காரை மதி எடுத்துக்கொண்டு வர., லாரி காரை இடித்து தள்ளியது..,  இது தெரிந்ததிலிருந்து அவனின் எண்ண ஓட்டம் இவனை எப்படி கைது செய்வது எப்படி உள்ளே வைத்து விசாரிப்பது என்பது மட்டுமே…, ஏனெனில் டிரைவர் அப்ரூவராக மாறி உண்மையை சொல்லிவிட்டான்..,

      “பணம் கொடுத்தாங்க அதனால தான் செஞ்சேன்” என்ற வகையில் அவன் சொல்ல., இந்த கேசும் சேர்ந்து கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது., அதாவது இவனை தான் கொல்ல சொன்னார்கள் என்ற வகையில் தெரிய., பெரும்புள்ளிகள் எப்பொழுதும் செய்யும் சில கோள் மால்களில் மாட்டிக் கொள்வது போல., அப்பெரும் புள்ளியும் போதை வழக்கோடு சேர்த்து கொலை முயற்சி வழக்கும் சேர்த்து மாட்டிக் கொண்டார்.

       இப்போது எப்படி ஆனாலும்  அவரை தேடும் பணி காவல்துறையில் மும்முரமாக நடந்தது.., எங்கு மறைந்திருந்தாலும் வேறுவழியில்லை வந்துதான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்தது..,  அந்த ஆள் மாட்டுமன்று அவனுக்கு முகிலன் உடைய விசாரணையின் கோணம் வேறு விதமாக இருக்கும் என்பது அலுவலகத்தில் அனைவரும் அறிந்த விஷயமாகவே இருந்தது.., அவனை விசாரிக்க வேண்டாம் என்று உயரதிகாரி சொன்னாலும்., எனக்கு ஒரு அரை மணி நேரம் மட்டும் டைம் கொடுங்க என்று அவரிடம் கேட்டிருந்தான்.., ஏனெனில் அவனின் அந்த வலியும் வேதனையும் மற்றவர்களும் அறிந்து இருந்ததால் சரி என்று சம்மதித்தனர்.., அரை மணி நேரம் விசாரணை எப்படி இருக்கும் என்பது அனைவருக்குமே புரிந்தது..,

       மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அவன் மேலதிகாரியிடம் பேசி தயார் செய்து வைத்திருந்தான்., தேடிக்கொண்டிருக்கிறார்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சொன்னார்களே ஒழிய பெரும்புள்ளி தலைமறைவாக இருந்தவரை., அதிலிருந்து 10 நாள்களுக்குள் கைது செய்து விட்டதாக தகவல் வந்தது.

     அன்று இவன் வெளியே கிளம்பும் போதே சீக்கிரம் வந்து விடுவேன் என்று மதியிடம் சொல்லிவிட்டு., சூரியாவிடம் போன் செய்து சொல்லிக் கொண்டே சென்றான்., “இன்னைக்கு அவனை பிரிச்சி எடுக்க போறேன்” என்று சொல்லவும் சூர்யா தான் பயந்தான்.,

      “எதுவாக இருந்தாலும் பார்த்துக்கோ., இனி இந்த மாதிரி பிரச்சினை எதுவும் வந்து விடக்கூடாது., அதனால எது செஞ்சாலும் யோசிச்சு செய்” என்று சொன்னான்.,

     “நான் பாத்துக்குறேன்” சொல்லிவிட்டு அலுவலகம் சென்று வழக்கு விசாரணையில் இருந்த பெரும் புள்ளி பார்க்கும் போது கொலை செய்யும் அளவுக்கு வெறி வந்தாலும் சூரியா சொன்னதும் ஒருபுறம் இருந்தது…, எனவே அரைமணிநேரம் தேவையான அளவு கவனிப்பு கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.,

     வரும்போது அப்பெரும் புள்ளியிடம் சொல்லிவிட்டு வந்தான். “அவளுக்கு எதுவும் ஆகல அப்படிங்கிற ஒரே காரணத்தினால் தான் இந்த அளவுக்கு அவளுக்கு வேற எதுவும் பிரச்சனை இருந்துச்சு.., இல்ல வேற ஏதும் னா.., நீ உயிரோடு இருந்திருக்க மாட்ட” என்று சொல்லிவிட்டு வந்தான்., அது மட்டுமல்லாமல் அதன் பிறகு அவர்களுடைய கவனிப்பு வேறுவிதமாக இருந்தது.., அவன் மேல் வழக்கு மிகவும் ஸ்ட்ராங்காக போடப்பட்டது.., ஜாமினில் வெளியே வரமுடியாத அளவுக்கு வழக்கு வகைகள்., அவன் மீது போட துறையிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.., எனவே அவனும் நிம்மதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..,

      அதற்குள் இவன் சென்ற விஷயத்தை பற்றி சூர்யா கலை இடம் சொல்ல.., கலை மதி இடம் சொல்ல., மதி அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.., ஏதும் பிரச்சினை இழுத்து இருப்பார்களோ என்ற பயத்தோடு… அதே நேரம் முகிலன் வந்து எப்போதும் போல் குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டு அவர்களுடைய அறைக்கு வர.., கட்டிலில் முதுகுக்கு தலையணை கொடுத்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

      அவனை அவள் உற்றுப் பார்த்தவுடன்., அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்டான். அவன் சாதாரணமாக பேச்சை மாற்ற இவள் ஏன் அதோட விட்டுற வேண்டியதானே., முடிஞ்சிடுச்சு., இனிமேல் அவன அடிச்சா., ஏதாவது அது மாறப்போகுதா என்று சொன்னதற்கு.., அவன் சில விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

        “அவன் பண்ணது தப்பு மதிம்மா புரிஞ்சுக்கோ., ஸ்கூல் பிள்ளைகளும் காலேஜ் பிள்ளைகளும் என்ன பண்ணாங்க., போதை பொருளை குழந்தைகளுக்கு பழக்கி., இவன் வியாபாரத்துக்காக., இவர் சம்பாதிப்பதற்காக., அதனால தான் அவன் மேல கேஸ் பைல் பண்ணுனேன்., இது ஒண்ணும் தப்பு இல்ல டா., அவன் கொலை பண்ண ட்ரை பண்ணது., அதைவிட மோசம்…, சரி நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன் இப்ப நீ அதுக்கு மட்டும் பதில் சொல்லு”..,

      “சொல்லுங்க” என்று சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவளிடம் அருகில் அமர்ந்து கொண்டு…,

     “சரிடா இந்த ஆக்சிடெண்ட் இப்போ உனக்கு பதில் எனக்கு ஆகி…, எனக்கு எதுவும் ஆயிடுச்சின்னா” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் வேகமாக அவன் வாயை தன் கை கொண்டு மூடினால்., அடுத்த நிமிடம் கண் கலங்க அவனைப் பார்க்கும் போது அவன் சொன்னான் “உனக்கு வர்ற இதே வலி தாண்டா., எனக்கும் வருது. உனக்கு இவ்வளவு அடியோடு நீ தப்பி வந்துவிட்ட.., உனக்கு எதுவும் ஒன்னுனா என் நிலைமையும்., குழந்தைங்க நிலைமையை யோசிச்சு பார்த்தியா., அதே மாதிரி தான் கார் நம்பரை மட்டும் கொடுத்து லாரி டிரைவர் கிட்ட சொல்லி இருக்கான்.., எப்பவும் யார் கிட்டயும் காரை கொடுக்காத நான் அன்னைக்கு போய் உன் கையில காரை கொடுப்பானா”.., என்று சொன்னான்.

Advertisement