Advertisement

  அந்த முறை தற்செயலாக அன்று விடுப்பு எடுத்து இருந்த இனியாவின் கணவனும் இனியவை அழைத்துக்கொண்டு.., மதிய நேரம் அவர்கள் வீட்டிற்கு முகிலன் போவதை கணக்கு வைத்து அங்கு வந்து சேர்ந்தனர்., அவன் சாப்பிட்டு முடித்து சற்று நேரத்திற்கெல்லாம் “நான் கிளம்பட்டுமா பிள்ளைங்க ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வர்றது க்குள்ள போகனும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

                 இனியா கணவன் தான் தங்கைக்கும்., அண்ணனுக்கும் சமாதானம் செய்து வைக்க முன் வந்தான். அப்போது தான் முகிலன் இனியாவின் கணவனிடம் பேசுவது போல பேசினான்.

                “கூட பிறந்தவங்க., அம்மா ,அப்பா, எல்லாரும் வாழ்க்கையில் முக்கியம் தான் இல்லன்னு சொல்லல..,  ஆனா அதுக்காக வீட்டுக்கு என்னை நம்பி வந்தவளை விட்டுட்டு மத்தவங்க தான் முக்கியம் என்று நான் வந்துருவேன்னு எதிர்பார்த்தது தான் பெரிய தப்பு.., அந்த அளவுக்கு நான் முட்டாள் தனமான பாசத்தோடு இருந்திருக்கிறேன்னு எனக்கு இப்பதான் புரியுது”..,

           அவன் வந்திருப்பதை அறிந்து தற்செயலாக சூர்யாவும் வந்திருக்க.., சூர்யா சொன்னான் “சரிதான் ஆனா நீ சின்னப் பிள்ளையிலிருந்து.,சொன்னது எல்லாம் செஞ்ச இல்ல., அதுனால இவன் நம்ம என்ன சொன்னாலும் செய்வான் என்னும் அந்த எண்ணத்தில் தான் உன்கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டா”..,

                 “ஆமா தப்பு என் மேல தான்.., நான் இப்போ என் பசங்க ட்ட இருந்து பாடம் கத்துகிறேன்.., அன்னைக்கு ரிஷி ரக்க்ஷிய அடிச்சுட்டான்.., என்று வீட்டில் கேட்டு தெரிந்ததை சொன்னான்”.

                   “சின்ன வயசுலயே பாசம் என்ற பெயரில் நான் லூசா இருந்திருக்கேன்…,  நான் லூசா இருந்ததை பயன்படுத்தி என்ன எல்லாம் பண்ணினா ன்னு  எனக்குதான் தெரியும்..,  நானும் அதுக்கு சில விஷயங்களில் உடந்தையா இருந்திருக்கேன்.., இப்ப நினைக்கும்போது எனக்கு எரிச்சலா இருக்கு.., நான் என்ன எல்லாம் பண்ணி இருக்கேன் அப்படின்னு யோசிக்கும் போது கடுப்பா வருது”என்று சற்று அமைதியானவன். “வார்த்தைகளை யோசிச்சு பேச சொல்லுங்க.., அதுக்காக உறவு ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் இல்லாம போயிர போவதில்லை.., என்று சொன்னபடி கிளம்ப தொடங்கினான்..,

        சூர்யா ஏதோ சொல்ல வருவதை கண்டவன்  நிதானமாக திரும்பி “கல்யாணத்து அப்ப பேசினது தான் இப்போ நான் சொல்றேன்..,  அவ இவ விஷயத்தில் தலையிட மாட்டா.., இவளும் தலையிடாமல் இருக்கட்டும்..,  கூட பிறந்தவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் கடைசியில் இல்லாமல் போறது இல்ல.., அதுக்காக அவளை எப்போதும் குறை சொல்லிக்கிட்டு இருந்தா.., நான் பாத்துட்டு இருப்பேன் ன்னு யோசிக்க கூடாது.., அதே மாதிரி எனக்கும் குடும்பம் வந்துருச்சு…, எனக்கு அவ என் உயிர்.., என் பிள்ளைங்க முக்கியம்..,  என் ஒய்ஃப் யாராவது ஒரு இடத்தில ஓதுகிறாங்க அப்படின்னு நினைக்கும் போது.., நானும் அவங்க கிட்ட இருந்து விலகி தான் போக வேண்டியதிருக்கும்.., அவ என்னோட பாதி…, அதுதான் எனக்கு முக்கியம் எட்டு வருஷம் ஆகுது., இந்த எட்டு வருஷத்துல அவ எந்த விஷயத்திலாவது தலையிட்டு இருப்பாளான்னு நல்ல யோசிச்சு பாக்க சொல்லுங்க”.., என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டை நோக்கி கிளம்பினான்..,

          பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு வரும் நேரத்திற்கு சரியாக அவனும் வந்து சேர்ந்தான்.., அதன்பிறகு பிள்ளைகளோடு பாடம்., அவளோடு கிச்சனில் அவளுக்கு உதவுவது என நேரத்தை போக்கிவிட்டு., அவளோடு சேர்ந்து இரவு உணவை முடித்துக்கொண்டு பிள்ளைகளோடு மறுநாள் சனிக்கிழமை விடுமுறை என்ற காரணத்தினால் அனைவரும் சேர்ந்து கொண்டனர்..

            மற்ற நாட்களில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைக்க.., அவள் மறுநாள் விடுமுறை என்றால் மட்டும் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது வழக்கம்., அன்றும் அதுபோல அப்பாவும் பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருக்க.., அவள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தாள்.,

           “அன்னைக்கே நான் கேட்டேன்., ஒரே ஒரு கவிதை சொல்லேன்” என்று அவள் முழித்து பார்க்கவும்.,

             “ஏன் முழிக்க., உனக்கு தெரியாமல் வாசித்து விட்டேன்”., என்று சொன்னான்.

            “எங்க வாசிச்சிங்க” என்று அவள் கேட்டாள்.

         “நீ எனக்காக கவிதை எழுதி வைத்திருந்த தானோன்னு” என்று சொன்னவுடன் அவளுக்கு முகம் சிவக்க வெட்கம் வந்து சேர்ந்தது…, ஏனெனில் அது அவள் அவனை ரசிக்கும் நேரங்களிலெல்லாம் எழுதும் கவிதை….

               “நீங்க போலீஸ் இல்லை., சரியான கேடி., திருடன்” என்று அவள் சொன்னாள்.,

             அவள் பிள்ளையோ “ஏன் மா அப்பா.., டெப்டி கமிஷனர் ஆப் போலீசு தானே.., நான் ஸ்கூல் ல அப்படி தான் சொல்லியிருக்கேன்”..கேட்டான்…

          “ஆமா டா உங்க அம்மா ஏதோ ஜாலிக்கு சொல்லிட்டு இருக்கா” என்று முகிலன் சொன்னான்.

                       “உங்க அப்பா., அம்மா பாட்டி வீட்டில் மாடி ஏறி குதிச்சு” என்று அவள் கதை சொல்லத் தொடங்க., அவனோ “தூங்கும் போது அப்பா உனக்கு ஜிராஃபி கத்திரிக்காய் கதை சொல்கிறேன்” என்று இடையில் சொன்னான்., இவள் ‘அய்யோ இவன் ஏதோ குழப்ப போறான்., பிள்ளைகளை’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்….

      யோசனையோடு அவனை பார்த்து அவள் முறைக்க.., அவன் “நீ தான ஆரம்பிச்ச அதை சொல்றேன்” என்று சொல்லி விட்டு., அவன் “பிள்ளைகளிடம் ஒன்னும் இல்லடா  ஊர்ல நடந்த கதை” என்று சொன்னான்.

     “அப்பா பெட் ரூமிற்கு போய் கேட்கலாம்”., என்று சொல்லி பிள்ளைகள் அவனை அழைத்துக் கொண்டு பெட் ரூமுக்கு செல்ல…, அவர்கள் பின்னால் ஓடினாள்., இவன் ஏதோ ஏடாகூடமா சொல்ல போறான் என்று யோசித்துக்கொண்டு அவளும் பின்னாடியே போய் சேர்ந்தாள்.

              அவன் பிள்ளைகளை அருகே படுக்க வைத்துக் கொண்டு கதை சொல்லத் தொடங்கினான்.., அவனுடைய இடது கையில் மேல் ரிஷி படுத்திருக்க அவன் மேல் ரக்க்ஷி படுத்திருக்க.., “அப்பா கதை சொல்லுங்க” என்று சொல்ல…, பிள்ளைகளுக்கு கதை சொல்லத் தொடங்கினான்.

                 அவளும் வந்து அவனது வலதுபுறம் படுத்துக்கொண்டாள்., இவன் என்ன சொல்கிறான் என்று கேட்பதற்காக அவசரமாக தான் உள்ளே வந்தாள்., மற்ற நாட்களில் அவன்  ஸ்டோரி புக் படிப்பவன் இன்று படிக்காமல்., “ஒரு ஊர்ல ஒரு ஜிராஃபி இருந்துச்சா., அந்த ஜிராஃபி வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கத்திரிக்காய் இருந்துச்சா”., என்று சொல்லவும்

          அவனுடைய மகள் “அப்பா கத்திரிக்காய் எப்படி பா  ஜிராஃபி  இருக்குமிடத்தில் இருந்துச்சு” என்று கேட்டாள்.

          “அப்பா சொல்ற கதை கேட்க போறியா..,  இல்ல நீ கேள்வி கேட்க போறியா” என்றான் ரிஷி…,

             “சரி சரி சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “அப்போ அந்த ஜிராஃபிக்கும் அந்த கத்தரிக்கும் பிடிக்கவே பிடிக்காதாம்., ரெண்டு சண்டை போட்டுட்டே இருக்குமாம்., ஜிராஃபி பார்த்தாலே கத்தரிக்காய்  ஓடிப்போய் ஒழிந்துக்குமாம்.., அப்ப ஒரு நாளு இந்த ஜிராஃபி., இந்த கத்திரிக்கா வ பாக்குறதுக்கு., கத்திரிக்கா வீட்டுக்குள்ள சுவரேறி குதிச்சு போச்சாம்”.,

       “எதுக்கு பா இதுகுதித்து போச்சு” என்று கேட்டான்..,

       “அதை மிரட்ட  போச்சு டா”

       “ஏற்கனவே பயந்து போய் தானே இருக்கு” அப்புறம் எதுக்கு., இந்த ஜிராஃபி போய் கத்திரிக்கா வ மிரட்டுச்சு” என்று கேட்டான்…

  “ அது தான்டா தெரியாம போயிடுச்சு” என்று சொல்லிக்கொண்டே “அப்புறம் கத்திரிக்கா நல்லா வளர்ற வரைக்கும் தள்ளி தான் இருந்துச்சி பார்த்துக்கோ..,  கொஞ்ச நாள் கழிச்சு இருவரையும் பிரண்ட்ஸ் ஆக வைக்கலாம்., அப்படின்னு சொல்லி பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஃப்ரெண்ட்ஷிப் ஆ போங்க ன்னு சொன்னாங்க .., அப்புறம் வேற வழி இல்லாம இந்த கத்திரிக்காய் வந்து ஃபிரண்டா ஏத்துகிட்டு..,  ஜிராஃபி ஒரே குஷியா இருந்துச்சா.., நம்மள பார்த்து பயந்த கத்திரிக்காய் நம்ம கூட பிரெண்டா இருக்கே அப்படின்னு சொல்லி குஷியா இருந்துச்சா.., ஆனா கத்திரிக்காய்க்கு மட்டும் சை இருந்து இருந்து இந்த ஜிராஃபி கூட போய் பிரண்டா இருக்க சொல்றாங்களே அப்படின்னு தோணுச்சாம்”., என்று அவன் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவள் மெதுவாக அவன் கையைக் கிள்ளி விட்டாள்..,

           அவனோ.. “நீ சும்மா இரு., பிள்ளைகளுக்கு கதை சொல்லிட்டு இருக்கேன் இல்ல” என்று சொல்லிவிட்டு கதையை தொடர்ந்தான்..

      “அப்புறம் என்ன பா ஆச்சு…,  ஜிராஃபி கத்திரிக்காய் கூட சேர்ந்து பிரண்ட்ஸ் ஆயிடுச்சா” என்று கேட்டான்.

              “ அது ஒரு பெரிய சோக கதை” என்றான்.

        “ என்னப்பா ஆச்சி” என்று அவன் ரொம்ப மும்மரமாக கதை கேட்க..,  “அந்த கத்திரிக்காய் இருக்குல்ல.., கத்திரிக்கா.., வேற வழி இல்லாமல் ஜிராஃபி கூட ஃபிரண்ட் ஆனாலும்., அப்புறம் ரொம்ப பாசமா இருக்கேன்னு சொல்லி., சொல்லியே…, கொஞ்ச நாள்ல இந்த கத்தரிக்கா க்கு பயம் இல்லாம போயிருச்சி”..,

       இடையிட்ட ரிஷியோ…, “ப்ரண்ட்ஸ் பயப்பட மாட்டாங்க ப்பா”…. என்றான்..,

       “என் செல்லம் டா நீ” என்று மதி அவனைக் கொஞ்ச., ரக்க்ஷி  “அம்மா நானு”… என்று கேட்க.., “நீயும் தான் குட்டிம்மா” என்றாள் மதி…, ரிஷியோ அப்பா கதை என்க…

          “ அப்புறம் அந்த கத்திரிக்கா.., கொஞ்ச நாள்ல ஜிராஃபி ய  முழுங்கிருச்சி டா”….

            “ கத்திரிக்காய் எப்படி பா., முழுங்கும் ஜிராஃபி பெருசா இருக்கும்., கத்திரிக்காய் சின்னதா இருக்கும்”., என்று கேட்டான்..,

                 “அப்படிதாண்டா முழுங்கி முழுங்கி இப்ப கத்திரிக்காய் வந்து ஜிராஃபி மாதிரி ஆயிருச்சு” …,

            “அது எப்படி கத்திரிக்கா ஜிராஃபி மாதிரி ஆகும்” என்று அவனுடைய சந்தேகத்தை கேட்டான்.

             “கத்திரிக்காய் இப்ப ஜிராஃபி மாதிரி இருக்குடா ன்னு” என்று சொல்ல.., “அப்ப சரி பா”… என்று சொன்னான்.., அதற்குள் ரக்க்ஷித் தூங்கியிருந்தாள்.., மெதுவாக அவளை எடுத்து ரிஷி ன் அருகில் படுக்க வைத்துவிட்டு மறுபடியும்  கதை சொல்லிக்கொண்டிருந்தான்…,

    “ஆமா இப்ப கத்திரிக்கா எங்க இருக்கு…, ஜிராஃபி எங்க இருக்கு., நீ எப்படி கண்டு பிடிப்ப” என்று கேட்டான்.

           “எப்படிப்பா கண்டுபிடிக்க முடியும்., அது கத்திரிக்காய் முழுங்கிருச்சு தான., அப்ப கத்திரிக்காய் ம்., ஜிராஃபி யும் ஒன்னாயிருச்சி இல்ல என்று சொன்னான் ரிஷி…,

          “நிறைய பேருக்கு இது புரியவே மாட்டேங்குது டா” என்று முகிலன் சொல்ல….

          “யாருக்கு புரிய மாட்டேங்குது” என்று அவன் பதில் கேள்வி கேட்டான்.

        “இதே கதையை உங்க அம்மாட்ட சொன்னேன் டா … உங்க அம்மா நம்பவே மாட்டேங்கிறா என்று சொன்னவுடன்…

              அவன் அவசரமாக எழுந்து “அம்மா கத்திரிக்காய்., ஜிராஃபி ய  முழுங்கிடுச்சா.., அப்ப கத்தரிக்காயும்., ஜிராஃபியும்  ஒன்று ஆயிடுச்சுன்னு அர்த்த மா உனக்கு புரியலையா…, ப்ரண்ட்ஸ் எல்லாம் அப்படி தான் இருப்பாங்க…  அப்ப கத்திரிக்காய் வேறே., ஜிராஃபி வேறே கிடையாது” அப்படின்னு சொன்னான்…. “சரி தானே ப்பா” என்று ரிஷி சொல்ல…,

             “ஆமாடா நீ என் சமத்து பையன்., தூங்கு” என்று சொல்லி அவனை தூங்க வைக்க முயற்சி செய்து..,  அவன் குழந்தையை தட்டிக் கொடுத்து தூங்க வைத்து கொண்டிருக்க…, இவள் அவன் முதுகோடு அணைத்தபடி படுத்துக் கொண்டு “ஜிராஃபி கதை எல்லாம் ஓகே தான்…, ஆனால் கத்திரிக்காய் எப்படி முழுங்கிச்சி” என்று கேட்டாள்.

            அவன் பதில் ஏதும் சொல்லாமல் சற்று நேரம் குழந்தைகள் பக்கமாகவே படுத்திருந்தவன்…, குழந்தைகள் தூங்கி விட இவள் பக்கமாக திரும்பி அவளை அணைத்துப் பிடித்த படி “இந்த கத்தரிக்கா இந்த ஜிராஃபி ய என்னைக்கோ முழுங்கிருச்சு அது தெரியுமா” என்று சொன்னான்..,  “நிஜமா” என்று அவள் கேட்க.., “நிஜம் தான்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்…

            மெதுவாக அவள் அவன் தோளில் வளைவு வழியாக குழந்தைகளை ஏட்டிப் பார்க்க “என்ன பண்ற” என்று அவன் கேட்டான்.,

              “இல்ல அந்தப் பக்கம் படுத்து இருக்க குட்டி ல  கத்தரிக்காய் குட்டி இருக்கான்னு., பார்த்தேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க…, அவனோ சந்தேகமே வேண்டாம்., அது ஜிராஃபி குட்டி தான்.., என்று சொன்னான்…

             “அப்ப கத்திரிக்கா குட்டி இல்ல அப்படி தானே”….

              “உனக்கு வேணும்னா சொல்லு.., இன்னொரு கத்திரிக்காய் குட்டி வேணும் னா  பெற்றுக்கொள்ளலாம்” என்று அவன் சொன்னான்..

                “உங்க மூன்னு பேரையும் பார்த்துக்கவே போதும் போதும் என்ற அளவுக்கு., எனக்கு பெரிய விஷயமா இருக்கு.., இதில இன்னொன்னு தேவையா” என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவன் கைகளுக்குள் தன்னை ஒப்புவித்தாள்….,

        திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்பது பெரியவர்கள் சொல்லும் வார்த்தை அது சொர்க்கத்திலோ., நரகத்திலோ நிச்சயிக்கப்படுவது இல்லை.., வாழ்க்கை எப்படி வாழ படுகிறது என்பது அவரவர் கைகளில் தான் இருக்கிறது.., திருமணம் என்ற பந்தத்தில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டும் தான்…, அதில் புரிதலும்., அன்புமும்., ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பதிலும்., அங்கு குடும்பத்திற்காக நம் பிள்ளைகளுக்காக என நிறைய பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு வாழ வேண்டும்..,

                வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் வாழ்க்கை என்பது எளிதான காரியமல்ல.., விட்டுக்கொடுக்க தொடங்கும் போது நிம்மதியும் சந்தோஷமும் தானாக வீட்டிற்கு வந்துவிடும்.., குடும்பத்தை கோவிலாகவோ., வெறும் கட்டிடமாகவோ., மாற்றுவதும்….  அவரவர்க்கு வாய்க்கும் வாழ்க்கை துணையை பொருத்தே…, இது ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அமையும்.

          வாழ்க்கை துணையை பொருத்து  தான்   எல்லாமே.ஏன் நான் மட்டும் தான் விட்டு கொடுக்கணுமா என்று நினைப்பதை விட்டு.., நீ விட்டுக் கொடுக்காதே.., நான் விட்டுக் கொடுத்து போறேன் என்று நினைக்க தொடங்கினால்., வாழ்க்கை வாழ்க்கையாக அங்கு வாழப்படுகிறது..உண்மையான அன்பு எந்த சூழ்நிலையிலும் நாம்  விரும்புபவரை காயப்படுத்த நினைக்காது…, வாழ்க்கை வாழ்வதற்கே கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை.., அதை சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ்ந்து முடிப்போம்.., வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை இனிக்கட்டும்., வாழ்க்கை ருசிக்கட்டும்..,

Advertisement