Saturday, April 20, 2024

    இளங்காற்றே எங்கே போகிறாய்

    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 13 சுகப்பரசவம் என்பதால் மூன்றாம் நாள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். நக்ஷத்ராவின் அம்மா வீட்டில் தான் இருந்தனர். அவர்கள் அறையில், “ஹப்பா நடந்து எவ்வளவு நாள் ஆச்சு. எல்லாம் உங்க பையனால தான்.” என்றவள் எழுந்து நடக்க.... “ஹே... என் பையன் உன் வயித்துக்குள்ள மூன்னு கிலோ தான் இருந்தான். ஆனா நீ...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 12 இருவரும் மீண்டும் சேர்ந்ததில் அவர்களின் பெற்றோருக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி. குழந்தையைப் பற்றி என்ன முடிவு செய்தார்கள் என எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. மறுநாள் இருவரும் அலுவலகத்திற்குச் சேர்ந்து செல்ல... “எனக்கு ஒரு டைவர்ஸ் கேஸ் வரும்னு நினைச்சேன். இப்படிப் பொசுக்குன்னு சேர்ந்துடீங்க.” என பிரதீப் சிரித்துக் கொண்டு சொல்ல.... “உனக்கு ரொம்ப ஆசை...
    மதிய உணவு வழக்கம் போல நக்ஷத்ராவின் வீட்டில் இருந்து வர.... எல்லோரும் சாப்பிட வந்துவிட்டனர். யுகேந்திரன் மட்டும் வரவில்லை. நக்ஷத்ரா அவனுக்குத்தான் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். “அவங்களையும் சாப்பிட கூப்பிடு.” என அவள் பிரசன்னாவை பார்த்து சொல்ல... “ஏன் உனக்கு வாய் இல்லையா?” என்றவன், யுகேந்திரன் வெளியே கிளம்புவதைப் பார்த்துவிட்டு, “சாப்பிட்டு போ டா...”என்றதற்கு, “இல்ல...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 11 பொருளாக எதுவும் கேட்கமாட்டாள் என யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் எங்காவது அழைத்துச் செல்ல சொல்லுவாள் .இரண்டாவது தேன்நிலவு எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என நினைத்திருந்தான். “இந்தப் பிறந்த நாளுக்கு, நீங்களே எனக்குப் பெரிய பரிசு தான் யுகி. ஆனா என்னோட அடுத்தப் பிறந்த நாளுக்குள்ள நம்ம பாப்பா நம்ம கையில...
    “நீ பார்த்துக்கோ.” என நக்ஷத்ராவிடம் சொல்லிவிட்டு அவன் அலுவலக அறையில் இருந்து சென்று விட்டான். “என்ன விஷயமா வந்தீங்க சொல்லுங்க, முதல்ல உங்க பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க.” என நக்ஷத்ரா கேட்க.... “என் பேரு மாணிக்கம், ஊர் கன்னியாகுமரி பக்கம். இவ என் பொண்ணு பேரு ஸ்ருதி. இங்க சென்னையில் தான் வேலை பார்க்கிறா....” அதற்கு...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 10 அடுத்த ஒரு வாரம் யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட சிம்லா மற்றும் குலு மனாலிக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரம், அங்கிருந்த மலைகளில், மரங்களில் எல்லாம் வெள்ளை தொப்பிப் போட்டது போலப் பனியும் படர்ந்து இருக்க... பார்க்கவே ரம்மியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கு அலையாமல் முக்கியமான இடங்களுக்கு...
    வேகமாக எழுந்து உட்கார்ந்தவன், “அவளின் இடது காலை மெதுவாகப் பிடித்துவிட....” “இப்போ மட்டும் யாராவது கதவை திறந்து பார்க்கணும், கல்யாணமான முதல் நாளே இப்படிக் கால் அமுக்க வச்சிட்டாளேன்னு நினைப்பாங்க.” நக்ஷத்ரா சிரித்தபடி சொல்ல... “அப்படி யாரும் நினைக்க மாட்டாங்க. அப்படி நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை.” என்றான். “போதும் படுங்க, சும்மா தெரிஞ்ச மாதிரி பேசினா... அதுதான்...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 9 திருமணதிற்கு இரண்டு தினங்கள் முன்பே அவன் அம்மா அழைத்ததால் யுகேந்திரன் அவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தான். திருமணத்திற்கு முன்தின இரவு ஆட்களை வைத்து வீட்டை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். அதோடு வீட்டிற்கு வெளியே வாசலிலும் பந்தல் அமைத்து, அதோடு மொத்த வீடும் சீரியல் விளக்கால் ஜொலித்தது. காலை ஏழரை ஒன்பது...
    “நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி. எப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆச்சு?”என்றதும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “எப்படிக் கண்டு பிடிச்ச?” என்றான். “உங்களை இப்படி உரிமையா யார் மிரட்ட முடியும்?” “அது என்னவோ உண்மை தான். ஆனா இன்னும் கல்யாணம் ஆகலை.... இனிமே தான் கல்யாணம்.” என்றதும், “ஒ... சூப்பர்.” என்றவள், அவங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?” எனக் கேட்டாள். “தெரியும்,...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 8 நக்ஷத்ராவின் திகைத்த தோற்றத்தை பார்த்து, “என்ன நீங்க தான தேட சொன்னீங்க.” என்றான் ஆனந்த். “ஆமாம். ஆனா எப்படிக் கண்டுபிடிச்ச?” “நீங்க கொடுத்த பேர் ஊர் எல்லாம் வச்சு கண்டுபிடிக்க முடியலை. காலேஜ் போய் அங்க ஒரு ஆளை பிடிச்சு, அட்ரஸ் ஈமெயில் ஐ டி எல்லாம் வாங்கினேன். அதோட போன் நம்பரும்...
    “ஷாப்பிங் எல்லாம் நேத்ராவையும் நகஷத்ராவையும் பார்த்துக்கச் சொல்லலாம். ரெண்டு பேரும் அதுல ரொம்பப் பொருத்தம்.” யுகேந்திரன் சொல்ல... “கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லோரும் தான் போகணும்.” என்றார் கிரிஜா. “சரி நீங்க பார்த்துக்கோங்க. எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இருக்காது.” “உனக்கு யார் வாங்கிறது?” “அது நக்ஷத்ராவுக்குத் தெரியும். அவ எனக்கு நல்லா எடுப்பா.” என்றான். “அம்மா நான் பணம் போட்டு...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 7 மறுநாள் காலை யுகேந்திரன் அவன் அம்மாவை பார்க்க வீட்டிற்குச் சென்றிருந்தான். நேத்ரா வீட்டில் இருந்து தான் வேலை பார்க்கிறாள். அதனால் நிர்மல் மட்டும் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க.... யுகேந்திரன் மீனு குட்டியுடன் பேசிக் கொண்டிருக்க.... கிரிஜா அவனைச் சாப்பிட அழைத்தார். கிரிஜா இரண்டு மகன்களுக்கும் சுட சுட தோசை ஊற்றிக் கொண்டு...
    சொன்னது போல மறுநாள் காலை அவளின் வீட்டின் அருகே வந்ததும், அவன் அழைக்க.... நக்ஷத்ரா அவள் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு சென்றாள். அவளைப் பார்த்ததும் யுகேந்திரன் காரை விட்டு இறங்க பார்க்க... “என்னைப் பேம்பர் பண்ணாதீங்க. எனக்கே என் வேலையைப் பண்ணிக்கத் தெரியும்.” என்றவள், பின் பக்க கதவை திறந்து அவளின் ஸ்டிக்கையும், பையையும் வைத்துவிட்டு, முன்பக்கம்...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 6 யுகேந்திரன் வீட்டிற்குச் சென்றதும், அவன் அம்மாவை அழைத்துத் தான் நக்ஷத்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்ல.... “நான் எத்ர்பார்தேன்.” என்றார் அவர். “எப்படி மா?” “நக்ஷத்ரா இந்த நிலைமையில இருக்கும் போது.... நீ எப்படியும் அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சேன்.” “அம்மா நான் அப்படி நினைச்சிருந்தா... எங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும். அது இல்லை...
    பிரசன்னா குளித்துத் தயாராகி இரவு உணவு உண்ண செல்ல யுகேந்திரனை அழைக்க... “நீங்க போயிட்டு வாங்க டா... நான் ரூமுக்கு வர வச்சு சாப்பிட்டுக்கிறேன்.” என்றான். இதற்கு மேல் அழைத்தாலும் வரமாட்டான் என்று தெரியும், அதனால் அவனைத் தவிர மற்றவர்கள் கிளம்ப... “நீங்க எல்லாம் போங்க. நான் போய் யுகியை பார்த்திட்டு வரேன்.” என நக்ஷத்ரா...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 5 பிரசன்னா திருமணம் முடிந்து மறுவாரம் வந்தவன், அதே குடியிருப்பில் வேறு வீட்டில் மனைவியுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்தான். பிரசன்னா அவன் வீட்டில் யுகேந்திரனை இரவு உணவு உண்ண சொல்லி சொல்ல..... யுகேந்திரன் எப்போதும் போல மெஸ்ஸில் வாங்கி உண்டு கொள்வதாகச் சொல்லிவிட்டான். நக்ஷத்ரா அவள் வீட்டில் மாப்பிள்ளை பாருங்கள் என்று சொன்ன தினத்தில்...
    அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவள், யுகேந்திரன் காபி பிரியன் என்பதால்... அவனுக்கு அவளே காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள். “இது இருக்கட்டும், நீ உட்காரு.” என்றான். அவன் கையில் காபியை கொடுத்துவிட்டே உட்கார்ந்தாள். “சாரி நக்ஷத்ரா, நான் உன்னைக் காயபடுத்த அப்படிப் பேசலை... ஒரு உரிமையில தான் பேசிட்டேன்.” என்றவன் பிரசன்னாவிடம் சொன்னதையே சொல்ல.... “எனக்குத்...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 4 முல்லை என்ற பெயரை முகநூலில் தேட... அங்கே முல்லை மலர், முல்லை கொடி என நூற்றுகணக்கில் இருக்க.... கல்லூரியின் பெயரை வைத்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யுகேந்திரனிடம் கேட்டால்... திட்டுவான் என்று தெரியும். என்ன செய்வது என யோசித்தபடி உறங்கிப் போனாள். மறுநாள் யுகேந்திரன் அலுவலகம் வரவில்லை. வந்த ஜூனியர் வக்கீல்களுக்கு...
    யுகேந்திரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “பாஸ் நீங்க எங்கையோ போயிடீங்க. அந்தப் பொண்ணுக்காக நீங்க வேலைக்குப் போனீங்களா?” என்றதும், “ஆமாம் எங்க அப்பாவும் இல்லாம, எங்க அம்மா வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற பணத்தை எடுத்து கொடுக்க மனசு வரலை. அதனால நான் வேலைக்குப் போனேன்.” “நான் போய்ப் பணம் கொடுத்த போது, அவ வாங்கிக்க...
    இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 3 அடுத்து நக்ஷத்ரா வாதாட வேண்டிய வழக்கை பற்றி யுகேந்திரன் அலுவலக அறையில் வைத்து விளக்கிக் கொண்டு இருந்தான். இருவரும் சேர்ந்து பேசி குறிபெடுத்துக் கொண்டிருந்தனர். மாலை கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும் ஜனனி வந்து நக்ஷத்ராவை அழைக்க... “இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு ஜனனி, நீ போ... நான் அப்புறம் போயிக்கிறேன்.” என்றாள்....
    error: Content is protected !!