மாலை நேரத்து மயக்கம்
"மது ரொம்ப மூடாதே, ஏசி நார்மலா தான் இருக்கு, லைட்டா ஆ சில்னஸ் வர மாதிரி தான் போட்டு இருக்கேன்",என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் படுத்து அவளிடம் பேச தொடங்கியவன், அவளுடைய உம் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான்,
பின்பு அவள் மேல் கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ளவும்,
"நீங்க சொன்னீங்க",...
அவளுக்குள் தோன்றிய உணர்விற்கு பெயர் தெரியாமல் அப்படியே முழித்துக் கொண்டு நின்றாள்.
"மது என்ன ஆச்சு, ஒன்னே ஒன்னு தானே மது கொடுத்தேன், அதுக்கே இவ்வளவு ஷாக் ஆகுற" என்று கேட்டான்.
தொண்டை குழி ஏறி இறங்க, பதட்டத்தோடு "இல்ல நீங்க மாத்தி பேசுறீங்க" என்று லேசாக கலங்கிய குரலோடு சொன்னாள்.
அவனும் "நிஜம்மா மது நீ...
10
ஒற்றை முத்தத்தில்
சிலிர்த்து அடங்கும்
உணர்வு குவியலில்.,
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை
கோட்டை விட்டு
விட்டேன்.,
நீயே கணக்கு
வைத்து கொள்.,
பிறகு நேர் செய்து
கொள்வோம்.,
இரவு உணவை முடித்து விட்டு தோழிகள் கிளம்பினர்.
அவர்களை அனுப்பி விட்டு சோபாவில் ஒரு ஓரமாக அமர்ந்தவள், தனது செல்போனை எடுத்து நண்பர்கள் அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்க்க தொடங்கியிருந்தாள்.
ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே இருந்தவள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் பார்த்து விட்டு...
அவனும் சேர்ந்து அவளோடு பேசிக்கொண்டே நடந்து வர, தோழிகளோடு சேர்ந்து வந்து சேர்ந்து கொண்டாள், சரணின் சித்தப்பா மகள்.
மதுவை சரணின் அருகில் அமர்த்தப்பட்ட பிறகு கண்ணிமைக்கும் பொழுது ஆக நேரம் ஓடி மறைந்தது போல தோன்றியது, மந்திரங்கள் ஓத பெரியவர்கள் ஆசியோடு, அட்சதை தூவ கெட்டி மேளம் முழங்க சரண் கட்டிய திருமாங்கல்யம்...
9
எரியும் நெருப்பில்
பஸ்பமாகி கொண்டிருக்கிறது
என் எதிர்ப்புகளும்
எதிர்பார்ப்புகளும்
இனி நான்
என்பதன் அடையாளம்
நீயாகி போனாயோ...
திருமணத்திற்கான அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்க பிடித்து வைத்த பொம்மை போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அலங்காரம் முடியவும் கண்ணாடி முன் நின்ற அவளுக்கு 'இது நாம் தானா' என்று தோன்றியது.
ஏனெனில் இதுவரை அவள் மேக்கப் என்ற ஒன்று பயன்படுத்தியதே கிடையாது. அதிகமாக அலங்காரங்களில் ஆர்வம் செலுத்தியதும் கிடையாது.
ஆனால்...
"உட்காருங்க எங்க போறீங்க"., என்று சொல்லிவிட்டு சிவா கையை பிடித்து வைத்துக்கொண்டான்.
மதுவை பார்த்து "நான் உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல அவளோ அவனை பார்க்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.
"நீங்க பேசுங்க நாங்க வெளியே போறோம்"., என்று சொல்லவும்
"இல்லை இல்லை நான் அவளை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு "வா...
அருகில் அமர்ந்திருந்த நந்தினி தான்., அவள் கையை பிடித்துக் கொண்டு, "லூசு மாதிரி பேசாத மது., உன்னோட லைஃப்ல பின்னாடி யோசிச்சி பார்ப்ப., கண்டிப்பா நீ அந்த அண்ணாவோட சந்தோஷமா இருப்ப., அத மட்டும் உறுதியா இல்லசொல்லுறேன்., உனக்கு இதைவிட நல்ல குடும்பம்., உன்ன புரிஞ்சிக்கிட்ட அத்த மாமா எங்க கிடைப்பாங்க சொல்லு., ...
8 மாலை நேரத்து மயக்கம்
கனவு என்று நினைத்ததெல்லாம் நிஜமாய் நிற்கும்போது
நிஜமென்று நினைத்ததெல்லாம்
கனவாய் களைவதில்
அதிசயம் ஒன்றுமில்லை.,
நிஜங்களும் நிழல்களும்
போட்டிபோடும் உலகமிது அறிந்துகொள்ள தான்
முடிவதில்லை
அதிகாலையில் கண் விழித்தவளுக்கு நேற்று நடந்தது எல்லாம் கனவு போலவே தோன்றியது., சற்று நேரம் புரண்டு புரண்டு படுத்தவள்., 'கல்யாணம் சரண் ன்னு நெனச்சி நெனச்சி கடைசில கனவுல கூட ஃபேமிலி மொத்தமா...
சிவாவின் அம்மாவும் பின்னாடியே செல்ல., சிவா வந்து பார்த்தவுடன்., அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும்., மது என்று அவன் கூப்பிட அவளோ அவனின் அழைப்பிற்கு திரும்பியும் பார்க்கவில்லை.,
சிவா அமைதியாக காத்து நிற்பதை பார்த்தவுடன்., சரண் தான் பதில் சொன்னான்.
"சரி நீ போ., அப்புறம் அவட்ட பேசு"., என்றான்.
"போகும் போது கதவை...
அவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தாலும்., மீண்டும் அவள் கன்னத்தை தட்டி "மது எழுந்துக்கோ இங்க பாரு., திட்ட மாட்டேன்., உன்னை காணலை ன்ற டென்ஷன் தான்., எல்லாரும் தேடிட்டு இருக்காங்க., நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுதா., உனக்காக அங்கிருந்து பறந்து வராத குறையா வந்து இருக்கோம் மது எழுந்துக்கோ"., என்று...
மாலை நேரத்து மயக்கம் 7
உயிர் வரை
ஊடுருவும் குளிரிலும்
உன்னைக் காணும்போது
உதறல் தான் எடுக்கிறது.,
எப்படி மாற்றிக் கொள்வேன்
மனதில் பதிந்து போன
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியுமா.,
அவன் சொன்ன இரண்டரை மணி நேரத்திற்கு சற்று முன்பே வந்து சேர்ந்திருந்தனர்., 3 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை அத்தனை வேகமாக கடந்து வந்து சேர்ந்திருந்தான்.,
சரண் நேராக காரை அவர்கள் வீட்டின் அருகில்...
எங்கும் அவளைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை., வெளியே வந்தவுடன் கண்டிப்பாக மது வீட்டில் இருந்து வெளியே வந்து இருந்தால் 'உங்க பொண்ணு இந்த பக்கமா வந்தா எங்க இந்த நேரத்தில் தனியா போனா' என்று யாராவது கண்டிப்பாக கேட்பார்கள்.
ஆனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்க., எங்கு சென்று எப்படி...
"உன் கிட்ட போயி பேசினேன் பாரு., என்னைய சொல்லனும்., நான் எங்கேயாவது போறேண்டி., அப்ப தான் இவங்களுக்கெல்லாம் அறிவு வரும்"., என்று சொன்னாள்.
"லூசு மாதிரி பேசாத போ., காபி குடிச்சிட்டு படி"., என்று சொல்லியவள் போனை வைத்தாள்.
அதற்குள் இங்கு இடி இடிக்க தொடங்கவும்., இவளும் போனை கட் செய்துவிட்டு 'இனிஎன்ன...
உதறி தள்ள நினைக்கும்
போது தான்.,
சுழட்டி அடிக்கும்
சுறாவளியாக இன்னும்
இன்னும் உள்வாங்கிக்
கொள்கிறது நினைவு.,
அன்று கல்லூரியில் இன்டர்னல் மார்க் ரிசல்ட் வர., எப்போதும் போல நந்தினி மதுவை திட்டிக் கொண்டிருந்தாள்.,
"ஏன்டி வீட்டில படிக்கிறியா இல்லையா., இது என்ன மார்க்கு., எப்பவும் எப்படி மார்க் வாங்குவ., இந்த மார்க் வாங்க தான் நீ கஷ்டப்பட்டு சண்டை போட்டு...
மது அம்மாவோ., "இங்க பாருங்க நீங்க பேசாம இப்படி சொல்லிட்டு போயிட்டா எப்படி., நான் அவட்ட பேசமாட்டேன்., சரணை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுமா., சரணையே வேண்டான்டா., வேற எவனுக்கு இவ சரி சொல்ல போறா., எவன கட்ட போறா., இவ யாரையும் நினைச்சிட்டு இருக்காளோ என்னவோ"., என்று சொன்னார்.
'என்ன இப்படி...
5
சின்ன சின்னதாக ரசிக்க
தொடங்கிய விழிகள்
மட்டுமே உண்மை
சொல்லும்.,
வார்த்தை பல இடங்களில்
உண்மையை மறைக்கவே
முயற்சிக்கும்.,
திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசிய பிறகு அவளிடம் யாரும் மீண்டும் அதைப் பற்றி பேசவில்லை.,
இரு வீட்டிற்கும் முன்புபோல பேச்சுவார்த்தை இல்லை என்பதை மதுவின் அம்மா அவ்வப்போது ஜாடையாக மதுவை திட்டுவதில் இருந்து மது அறிந்துகொண்டாள்.
அவளுக்கும் மனதிற்குள் வருத்தம் தான்., 'சிவாக்கும்...
அதற்குள் அவளிடத்தில் அமர்ந்திருந்த மதுவும்., 'அந்த சிவா பக்கி தான் சொல்லியிருப்பான்., அப்படி இப்படின்னு., பெரிய இதுங்க நான் என்ன தலையாட்டி பொம்மையா., இவங்க இஷ்டத்துக்கு என்னாலும் பண்ணுவாங்க., நான் தலையாட்டனுமா., என்ட்ட பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு கேட்க வேண்டாமா'., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.,
'என்னத்த எழுத போறேன்னு தெரியல., நான் படிச்ச...
4
நினைவுகள் துறந்து
நிஜங்களோடு
கைக்கோர்க்க தான்.,
கனவுகளை தொலைத்த
கல்லாய் மாறுகிறது
மனம்.,
காலை கண் விழித்தவளுக்கோ எல்லாம் கனவு போல் தெரிந்தது., சற்று நேரம் அமைதியாக யோசித்தவளுக்கு அனைத்தும் புரிந்தது., யோசித்துக் கொண்டே அப்படி உறங்கி இருக்கிறாள்
பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டே அசையாமல் இருந்தவளுக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்டது.,
கிச்சனில்...
"டேய் எரும நான் எப்படா அப்படிசொன்னேன்"., என்று அடிக்க போக அவனோ வேகமாக தள்ளி நின்றான்.,
"டேய் இங்க என்ன நடந்துட்டுருக்கு., உங்க ரெண்டு பேர்ட்ட தான் கேள்வி கேட்டுட்டு இருக்கோம்., அவ தூங்கணும் சீக்கிரம் அனுப்பு ன்னு நீ கத்துற., அவ என்னனா., இதான் சாக்குன்னு உன் பின்னாடி வந்து இன்னும் என்னமோ...
3
உன் விழிகளில் வானவில்
கனவுகள்.,
கலைந்து போகாமல்
காத்துக்கொள்ள
காவல் இருக்கவா.,
இமையாக மாறி
இணைந்தே இருப்பேன்
உன் கனவுகளுக்குள்
சிறு இடம் எனக்கென
ஒதுக்கி கொடு.,
ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது.,
அனைவரும் கூடி இருந்த இடத்தில் யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க., அத்தனை பேரின் கண்களும் சிவாவையும்...