Advertisement

அதற்குள் அவளிடத்தில் அமர்ந்திருந்த மதுவும்., ‘அந்த சிவா பக்கி  தான் சொல்லியிருப்பான்., அப்படி இப்படின்னு.,  பெரிய இதுங்க நான் என்ன தலையாட்டி பொம்மையா., இவங்க இஷ்டத்துக்கு என்னாலும் பண்ணுவாங்க., நான் தலையாட்டனுமா.,  என்ட்ட  பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு கேட்க வேண்டாமா‘.,  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.,

     ‘என்னத்த எழுத போறேன்னு தெரியல., நான் படிச்ச லட்சணத்துக்கு‘., என்று நினைத்துக்கொண்டாள்.

         அதன்பிறகு அவளுக்கான நேரத்தை பரீட்சை வாங்கிக் கொண்டது., எக்ஸாம் முடியும் வரை யாரைப் பற்றியும் யோசிக்காமல் தனது பரீட்சையில் கவனம் செலுத்தி ஒருவழியாக எழுதி முடித்தாள்.,

      எழுதி முடித்து வெளியே வரவும்., அவள் பின்னே வந்த அவளது தோழிவா இங்க உட்கார்ந்து சாப்பிடலாம்“., என்று சொல்லி மரத்தடிக்கு இழுத்து சென்றாள்.

         இவளும் அமைதியாக அவளோடு சென்றாள். மனதிற்குள்ளோஎப்படியும் நம்மகிட்ட சொல்ல வேண்டியத தானாவே கண்டிப்பாக சொல்லுவா‘., என்ற எண்ணத்தோடு அமைதியாக அவளோடு சென்ற அமர்ந்தவள் உணவை எடுத்து உண்ண தொடங்கினாள்.,

     அவர்கள் கல்லூரியில் மதியம் பரீட்சை முடிந்தவுடன்.,  அடுத்த பரீட்சைக்கான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அவரவர் துறை சார்ந்த பேராசிரியர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்பதால்.,  மாணவர்கள் மதியம் வீட்டிற்கு செல்ல மாட்டார்கள்.

        வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், அவரவர் வாகனத்தில் வந்து கொண்டால் தான் உண்டு.,

       கல்லூரி பேருந்தில் செல்பவர்கள் மாலை தான் செல்வார்கள்., எனவே அவளும் கல்லூரி பேருந்தில் வருவதால் மாலை தான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு உணவு உண்ண அமர்ந்தாள்.,

      உணவு உண்டு முடிந்த பிறகு அவர்கள் வகுப்பிற்கு சென்றனர்., தோழியோ அவளருகில் அமர்ந்து கொண்டுஏன் மது சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற.,  உனக்கு யார் சொல்றதும் புரியலையா.,  இல்ல உன்னோட  நல்லதுக்கு தான் செய்கிறாங்க ன்றத நீ யோசிக்கவே இல்லையா“., என்று கேட்டாள்.

        இவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு.,  “நீ சொல்றதெல்லாம் சரிதான் பானு., ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் யோசிச்சு பாரு., கல்யாணம் ன்றது என் மனசுக்குப் பிடிச்சி நடக்கனும்.,  எல்லாருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்.,  தனக்கு வர்ற ஹஸ்பென்ட்  அப்படி இருக்கணும்.,  இப்படி இருக்கணும்னு., ஆனால் எனக்கு இப்ப வரைக்கும் அப்படி எந்த எண்ணமும் இல்ல.,

      ஆனா கண்டிப்பா நிச்சயமா என்னால இவங்களோட ஒத்துப்போக முடியும் ன்னு தோணல.,  அதுமட்டுமில்லாம நான் இதுக்கு மேல ஹையர் ஸ்டடீஸ் பண்ணனும்னு நினைக்கிறேன்.,  எனக்கு என்னோட படிப்பு முக்கியம் ன்னு யோசிக்கிறேன்.,  நல்ல படிச்சவள  தானே இன்ஜினியரிங் சேர்க்க மாட்டேன் ன்னு அப்பா சொன்னாரு.,  சரி நானும் டிகிரிக்கு வந்துட்டேன்.,

       இப்போ அட்லீஸ்ட் கிடையாது ஒரு பிஜி பண்ணனும்., யூஜி யோட நிப்பாட்டினா  எப்படி.,  எனக்கு இப்ப கல்யாண வேண்டாம்., எனக்கு மத்தவங்க  கற்பனை கனவு எல்லாமே வரணும்., எல்லா பொண்ணுங்களுக்கும் தோணுற மாதிரி எனக்கு தோணுச்சுனா  அப்போ நானே சொல்லுறேன்., தயவுசெய்து இந்த கல்யாணம் வேண்டாம்., முடிஞ்சா நீ சொல்லி பாரு.,

         அதையும் மீறி கல்யாணம் பண்ணனும் னா.,  என்னோட வாழ்க்கை கடமைக்காக வாழ்ற மாதிரி தான் இருக்கும்., என்னால நிச்சயமா ஒரு நல்ல வொய்ப்   இருக்க முடியுமான்னு தெரியாது“.,  என்று சொல்லி விட்டு மறுநாள் பரீட்ச்சைக்குரிய புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.

       அதற்கு மேல் அவளுக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை., இடையில் இரண்டு நாள் அடுத்த பரீட்சைக்கான நேரம் அவளும் படிக்க வேண்டும் என்பதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டாள்., ஆனால் இதை சிவாவிடம் இன்று தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக மதுவின் அருகே அமர்ந்து படிக்க தொடங்கினாள்.

        மாலை கல்லூரி முடிந்து கல்லூரி பேருந்தில் வீட்டின் அருகில் இருந்த கல்லூரி பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வீட்டை பார்த்து நடக்கும் போதும் வேறு எதைப்பற்றியும் யோசனை செல்லாமல் இவர்கள் பேசியதையே நினைத்து கொண்டிருந்தாள்.,

     ‘நிச்சயமாக இவள் போய் சொல்வாள்.,  எப்படியோ இந்த கல்யாணம் நின்றால் சரிஎன்று நினைத்துக்கொண்டாள்.

    ‘சிவா கைல கிடைச்சா இருக்கு‘., என்று நினைத்தவள்., ‘சரியான செல்பிஷ் சிவாஎன்று முனுமுனுத்துக் கொண்டாள்.

       அதுபோலவே அன்று மாலை மதுவின் தோழி., சிவாவிற்கு அழைத்தாள். அவளுடைய பிஜி படிக்கும் ஆசையும்.,  அவளுக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்றும்., “தனக்கு கல்யாணம் பற்றிய எண்ணம் இல்லை., என்னால் இப்போது கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் நல்லபடியாக வாழ முடியாது..,  நிச்சயமாக ஒத்துப் போக முடியாது“.,  என்று சொன்னதாக மட்டுமே சொல்லிவிட்டாள்.

         ‘ஏனெனில் யாரும் அவரவர் உடன் பிறந்தவர்களை விட்டுக் கொடுப்பதில்லை.,  அவள் சொன்ன மாதிரி சொன்னால் சிவா நிச்சயமாக மதுவிடம் கோபப் படக் கூடும்., எங்க அண்ணனுக்கு  என்ன குறைச்சல் என்று நினைக்கக்கூடும்., அதனால் வேறு எதுவும் சொல்ல வேண்டாம்‘., என்று நினைத்துக்கொண்டாள். அதுபடியே சிவாவிடம் சொன்னாள்.,

       சிவாவும்ஓகே பி. ஜி பண்ணனுமா., அத அவ கல்யாணத்துக்கப்புறம் படிக்கலாமே“., என்று சொன்னான்.

       “எனக்கு தெரியாதுடா., இதுக்கு மேல என்னால அவ ட்ட  கல்யாணத்தை பத்தி பேச முடியாது., நீயாச்சு உன் பிரென்ட் ஆச்சு.,  ரெண்டு பேரும் குடுமிப்பிடி சண்டை போடுவீங்களோ., இல்ல அடிச்சுக்கிட்டு உருளுவீங்களோ., இல்லனா அடுத்த பஞ்சாயத்தை கூட்டுவீங்களோ.,  எனக்கு தெரியாது ஆனா இதுக்கு மேல நான் அவட்ட கல்யாணத்தை பற்றி கேட்டேன் னா., என்னைய கொலைகாரி ரேஞ்சுக்கு பார்ப்பா., அதனால தயவுசெய்து என்கிட்ட கல்யாண விஷயத்தை பற்றி கேட்க சொல்லாதே., அவர் சொன்னதை சொல்லிட்டேன்.., இனிமேல் நீ பார்த்துக்கோ“., என்று சொன்னாள்.

        சிவாவோசரி நம்ம வாயை திறந்து சொன்னால் தானே பிரச்சனை தெரியும்., நாம வாயை திறக்க வேண்டாம்‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டுசரி சரி நான் பாத்துக்குறேன்“., என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

            ஆனால் மறுநாள் ஏதாவது பேசுவார்கள் என்று காத்திருந்த மதுவிற்கு தான் ஏமாற்றமாக இருந்தது.

நிச்சயமாக இதற்குள் அவளுடைய தோழி சிவாவிடம் சொல்லியிருப்பாள்., ஆனாலும் இதைப் பற்றி பேசவில்லை என்றால் கல்யாணத்தை நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது‘., என்ற எண்ணத்தோடு

             அன்று மாலையே அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அம்மா அப்பா இருவரையும் வைத்துக் கொண்டுதனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்றும்., தன்னால் சரணை கல்யாணம் செய்துகொள்ள முடியாது.,  அதை மீறி கல்யாணம் செய்து வைத்தீர்கள் என்றால்., இரண்டு குடும்பத்திற்கும் பகைதான் வந்து சேரும்“., என்றும் சொன்னாள்.

       அதையே அழுதுகொண்டு சொல்ல.,  மதுவின் அப்பாதான் என்ன செய்வது என்று தெரியாமல்.,  “இதை நீ சரணின் அம்மாவிடம் சொல்லுஎன்று சொன்னார்.

      அவளும் அவர்கள் வரவும் அவர்களிடம் இதேபோல சொல்லிவிட.,  அவர்கள் யாரும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.,

    அமைதியாக இரண்டு குடும்பத்தினரும் என்ன செய்வது என்பது போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

       சிவாவின் அம்மா அவ்விடத்தை விட்டு அகலும் போதுநான் உன்கிட்ட இதை எதிர்பார்க்கல., நீ எங்க வீட்ல ஒரு பிள்ளை மாதிரி தான்., அப்படிப்பட்ட நீயே என் வீட்டுக்கு மருமகளாக வந்துட்டேனா.,  இந்த ரெண்டு குடும்பமும், இப்போ போல எப்பவும் இருக்கும்னு நினைச்சேன்.,

       ஆனா நீ இப்படி சொல்லுவேன்னு., நான் நினைச்சு கூட பாக்கல.,  வாழ்க்கைன்னா என்னன்னு நெனச்ச மது., சும்மா வெளிதோற்றத்தை வைத்தும் ஜாலியா பேசுறத வைத்தும் முடிவு பண்ணுறீயோ., என் பையன் சிடு சிடு ன்னு பேசுறவன் தான்., நீ அதுக்காக தான் சொல்லி இருக்கேன்னு எனக்கும் தெரியும்., அவன் யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டான்.,  அது எல்லாருக்கும் தெரியும்., ஆனால் அவங்க குணத்தை பற்றியும் இங்க எல்லாருக்கும் தெரியும்.,

        ஆனா நீ இப்படி  சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கல.,  படிக்கணும்னு சொன்ன., அது ஓகே நீ படி வேண்டாம்னு சொல்லலை., ஏன் கல்யாணம் பண்ணிட்டு கூட படியேன்., 

        அவன் இருக்க போஸ்டிங் க்கு., அவனுக்கு சொன்ன உடனே பொண்ணு கிடைக்கும்., இப்ப சொன்னா கூட  நான் நீ ன்னு போட்டி போட்டு பொண்ணு கொடுக்க ரெடியா இருப்பாங்க.., ஆனா எனக்கு இந்த மது என் மருமகளா வந்த நல்லா இருக்குமே ன்னு ஆசைப்பட்டேன்., நீ இப்படி சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை“., என்று சொல்லிவிட்டு வருத்தத்தோடு வெளியே சென்றார்.

           மதுவின் அம்மாதான் சிவாவின் அம்மாவின் கையை பிடித்து அழுத்தி விட்டு அவரை பார்க்க., அவரும்பொறுத்து இருப்போம்என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

     இதைக் கேள்விப்பட்ட சிவாவும் நேராக மதுவின் வீட்டிற்கு வந்துஇப்படி ஒரு பதிலை எதிர் பார்க்கவே இல்லை மது.,  உன்ன பத்தி எனக்கு தெரியும்., உனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் கல்யாணம்., மாப்பிள்ளை இப்படி கனவு., அப்படி வாழனும்.,  இப்படி மாப்பிள்ளை வரணும்னு எந்த எக்ஸ்பெக்டேஷன் னும் கிடையாதுன்னு எனக்கு தெரியும்., ஆனா நீ சொல்றது பொய்.,  எல்லாருக்குமே அதாவது ப்ரண்ட்ஸ் மட்டும் இல்லாமல்  இந்த வீட்டில் உள்ளவங்களுக்கும் சரி.,  அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் சரி.,  எல்லாருக்குமே புரியும்.,

         ஆனா நீ எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற ன்னு எனக்கு புரியல.,  யாரையும் பேசுவதை வச்சு எல்லாம் எடை போடாதே., ன்னு உனக்கு எத்தனையோ நாள் சொல்லிக் கொடுத்திட்டேன்., ஆனா நீ இன்னும் யோசிக்கல., அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.,  உன் கூட இருக்கிற அதே அளவுக்கு டைம் நான் எங்க அண்ணன் கூடவும்  இருந்திருக்கேன்.,

     எங்க அண்ணன பத்தி எனக்கு தெரியும்., உனக்கு அவன் நல்ல பொருத்தமாக இருப்பான் அப்படின்னு தான் நானும் யோசிச்சேன் ஒழிய., ஆனா நீ வந்து இப்படி சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கல நான்., உன்னோட கனவு என்ன., கற்பனை என்ன., ன்னு சொல்லு நான் உன் பிரண்டு தானே சொல்லு“.,  என்று கேட்டான்.

      “நான் உன்கிட்ட சொல்லணும் ன்னு எனக்கு ஒன்னும் அவசியம் கிடையாது“.,  என்று அவளும் மூஞ்சியை தூக்கி கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

      சற்று நேரம் அமைதியாக வெளியே நின்றவன் மதுவின் அம்மா அப்பாவிடம்நிச்சயமா அவ மனசுல வேற எந்த எண்ணமும் கிடையாது., ன்னு  எனக்கு தெரியும்., ஆனால் அவ ஏன் இப்படி சொல்றேன்னு எனக்கு புரியல., எனக்காக கொஞ்சம் டைம் குடுங்க., வெயிட் பண்ணி பார்ப்போம்.,  அவட்ட இருந்து ஏதாவது நல்ல பதில் வருதான்னு“.,  என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மதுவின் அம்மா..,

      “வெயிட் பண்ணலாம் சிவா., நீ சொல்ற மாதிரி எங்களுக்கும் புரியுது., அவளுக்கு அந்த மாதிரி வேறு எந்த எண்ணமும் கிடையாதுன்னு தெரியும்., ஆனா ஏன் இப்படி சொல்லுறா., அது தான் எங்களால புரிஞ்சுக்கவே முடியல., பார்ப்போம்“., என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார்கள்.

      சிவா சென்ற பிறகு., மதுவின் அம்மாவும் அப்பாவும்ஏன் இந்த பிள்ளை இப்படி பண்றா., நல்ல இடம் வரும் போது கல்யாணம் பண்ணி குடுத்துட்டா பொம்பள பிள்ளைய பெத்தவங்களுக்கு எவ்வளவு நிம்மதி ன்றது இவ எப்ப புரிஞ்சுக்குவா ன்னு தெரியலையே., ஏன் இப்படி எல்லாம் பண்றா“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே போன் அடித்தது.,

         போனை எடுத்த மதுவின் அம்மாநீங்க பேசுங்கஎன்று சொல்லிக் கொடுத்தார்.

      ‘யாருஎன்ற யோசனையோடு மதுவின் அப்பா வாங்க.,  அந்த பக்கம் சிவாவின் அப்பாஅவ இஷ்டத்துக்கு விட்ருங்க., வேற எதுவும் பேச வேண்டாம்.,  மீதியை பாத்துக்கலாம்“., என்று சொல்லிவிட்டு

      “கொஞ்சம் வந்துட்டு போங்கஎன்று சொன்னார்.,

      அவர்கள் இரு வீட்டினரும் தங்களுக்குள் ஏதோ பேசிசரி அவ இஷ்டத்துக்கு விடலாம்“., என்ற முடிவோடு பேச்சை அத்துடன் நிறுத்தினர்.

     மதுவின் அம்மா தான் வீட்டில் புலம்பிக் கொண்டிருந்தார்., அது அறைக்குள் இருந்த மதுவிற்கு புரிந்தது., இவர்கள் சிவா வீட்டிற்கு சென்று வந்தது எதுவும் மதுவிற்கு தெரியாது., அவள் அறைக்குள் அடைந்து கிடந்ததால்.,

      மதுவின் அம்மா தான்நல்ல பையன் நல்ல வேலை.,  கவர்மெண்ட் ஜாப் இதெல்லாம் அனுபவிக்க உனக்கு கொடுத்து வைக்கல.,  நாங்க என்னடி பண்ண முடியும்“., என்று சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.

          காதில் கேட்டவற்றை கவனித்தவள்.,  ‘அப்பாடா கல்யாணத்தை நிப்பாட்டிட்டாங்க‘.,  என்று நினைத்துக் கொண்டாள்.,

     ‘ ஆனா இவங்க எல்லாம் ஒரே நாள்ல நிப்பாட்டுற ஆட்கள் கிடையாது., என்ன பண்ண‘., என்று யோசனையோடுசரி பார்ப்போம்., இந்த பேச்சை இத்தோட விட்டுடாங்கனா உண்மையிலே நிப்பாட்டிட்டாங்க ன்னுஅர்த்தம்‘., என்று நினைத்து மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.,

யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..

Advertisement