Advertisement

அவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தாலும்., மீண்டும் அவள் கன்னத்தை தட்டி “மது எழுந்துக்கோ இங்க பாரு., திட்ட மாட்டேன்., உன்னை காணலை ன்ற டென்ஷன்  தான்.,  எல்லாரும் தேடிட்டு இருக்காங்க., நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுதா.,  உனக்காக அங்கிருந்து பறந்து வராத குறையா வந்து இருக்கோம் மது எழுந்துக்கோ”., என்று சொன்னான்.,

         மீண்டும்  மெதுவாக ஆனால் அழுத்தமாக கன்னம் தட்டியவன்., அவளை தன் மேல் சாய்த்து பிடித்திருந்தான்.,

     மயக்க நிலையில் இருந்து தன் உணர்வு பெற்றவள்., அவனிடம் இருந்து நகர்ந்து அமர்ந்தாள்.,

      “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை., இவ்வளவு நேரம் எப்படி இருந்த தெரியுமா” என்று கேட்டான்.

     “நான் ஒழுங்கா தான் டிரஸ் போட்டு இருக்கேன்” என்று கலங்கிய குரலோடு சென்னாள்.

       “உன் டிரஸை யார்   சொன்னா.,  உன்னை தான்  சொன்னேன்., யார் என்ன சொன்னாலும் கோபப்பட்டாலும்., நீ ஏன் இப்படி பண்ணின., இந்த மாதிரி பிரச்சனை ன்னு ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி சொல்லனும் ன்ற அறிவே கிடையாதா”., என்றான்.

    மீண்டும்  தலைகுனிந்து அமைதியாக இருக்கவும்.,

      “இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க முடியும்.,  எந்திரி”என்று கேட்டான்.,

      “கால் மரத்து போச்சு., கை கால் இழுக்குது”., என்று சொன்னாள்.

        “பெய்த மழைல நனைஞ்சும் நீ இன்னும் நல்லா இருக்கேயே ன்னு சந்தோஷப்படு”என்றவன்.,

        “எந்திரி” என்று சொல்லி அவளை கைத்தாங்கலாக பிடித்து மெதுவாக தான் முன்னே இறங்கி.,  அவளை கைபிடித்து கீழே இறக்கத் தொடங்கினான்.,

      பாதிப்படி இறங்கியதுமே அப்படியே அமர்ந்து விட்டாள்.

        “எனக்கு கால்  ரொம்ப வலிக்குது”., என்று சொன்னாள்.

     அப்போது தான் மீண்டும் தன் செல்லில் இருந்த டார்ச்சை அடித்து பார்த்தான். மழைத் தண்ணீரில் அமர்ந்திருந்ததால் அத்தனை மழையிலும் நனைந்திருந்ததால் கை., காலெல்லாம் ஊறிப்போய் தோலெல்லாம் சுருங்கி ஏதோ போலிருந்தது.

அப்போது தான் தொட்டுப் பார்த்தான் மேல் சுட்டு கொண்டிருந்தது.

   “சரி., மெதுவா கீழ  போலாம்” என்றான்.

” நான் எங்கேயும் வரலை., என்னை விடுங்க”என்று சொன்னவள்.,  மீண்டும் அப்படியே ஏணியின்  கைப்பிடியில் தலை சாய்ந்து கொண்டவன்.,

‘இவ சரிப்பட்டு வரமாட்டா’ என்று நினைத்தவன்.,  போனை எடுத்து கீழே உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு சிவாவின் எண்ணுக்கு அழைத்து.,  “அம்மாகிட்ட கொடு”., என்று சொன்னான்.,

    அவன் அம்மாவிடம் “அவ ரூம் ரெடி பண்ணி வைங்க.,  டாக்டருக்கு போன் பண்ணுங்க., அல்லது சிவாவை நான்கு வீடு தள்ளி இருக்க அந்த டாக்டர் அங்கிளை கூட்டிட்டு வர சொல்லுங்க”., என்று சொன்னவன் வேறு எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டான்.,

      “இவன் என்ன சொல்றான்” என்று சொல்லி விட்டு மதுவின் அம்மாவிடம் “அவ ரூம் ரெடி பண்ண சொன்னான்”.

     “சிவா நீ போய் நாலு வீடு தள்ளி இருக்கிற  டாக்டரை கூட்டிட்டு வருவேயாம் டா”., என்று சொல்லி அனுப்பினார்.

         அவர்கள்  அவளின் அறைக்குள் செல்லும் போதே., மற்றவர்கள் “என்ன சொன்னான். எங்க இருக்கானாம். அவளை பார்த்து விட்டானா”.,  என்று ஆளாளுக்கு கேட்டுக்கொண்டு இருக்கும் போதே

        அவன் மாடியில் இருந்து அவளை தூக்கி வருவதை பார்த்தவுடன் “டேய் என்னடா இவ்வளவு நேரம் மாடியில் தேடினோமே”என்று சொல்லி எல்லோரும் ஒன்று போல கேட்டனர்.

      “மாடியில் இல்ல அதுக்கும் மேல சின்டெக்ஸ் டேங்க் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து இருந்தா.,  மழை அதிகமா இருந்ததாலா இல்ல இறங்கி வரத் தெரியலையா ன்னு தெரியல.,  உடம்பில் சூடு இருக்கு., பாதி மயக்கத்தில் இருக்கா.,  கன்னத்தை தட்டி எழுப்பினா அழுகுரா”.,  என்று சொன்னவன்.,

     வேறு எதுவும் சொல்லாமல் கீழே கொண்டு வர அவன் கையில் தூக்கி வரும் போது மீண்டும் அவள் அரைமயக்க நிலைக்குச் சென்று இருந்ததால் அவளை அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.,

கீழே அவளை அழைத்து வரும் போதே ஈரமான ஷாலை எல்லாம் நன்றாக புழிந்து மேலே போட்டு விட்டு இருந்ததால் அப்படியே தூக்கிக் கொண்டு வந்து அவள் அறையில் அவள் படுக்கையில் விட்டான்.,

     “அவளுக்கு சீக்கிரம் டிரஸ் மாற்றி விடுங்கள்., டாக்டர் வர்றதுக்குள்ள”., என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

      கதவை சாத்தி விட்டு வெளியே வந்தவன். “நான் வீட்டுக்கு போயிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன்”., என்று சொல்லி விட்டு வீட்டிற்கு போக தொடங்கினான்.

           அவனும் அலுவலக உடையிலேயே இருந்ததால் அதை மாற்றுவதற்காக வீட்டிற்கு சென்றவனுக்கு., மனதெல்லாம் அவள் பற்றிய நினைவுகளே., “அவளுக்கு பிடிக்கலையா.,  இவங்க கட்டாயப்படுத்தி பேசுகிறார்களா., எதனால அப்படி இருக்கிறாள்”., என்று யோசித்தவனுக்கு அவள் புத்தகத்தில் எழுதி இருந்த ‘தெரியாத பிசாசை விட தெரிந்த பேயே மேல்’ என்ற வாசகம் வந்துவிட்டு சென்றது.

       ‘ஒருபுறம் எதற்காக இந்த வார்த்தை எழுதியிருப்பாள்’ என்று தோன்றினாலும் ‘அவள் முதலில் மயக்கத்திலிருந்து வெளியே வரட்டும்’என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.

      வேறு எதுவும் யோசிக்கவில்லை.,  அவன் உடை மாற்றிக்கொண்டு மதுவின் வீட்டிற்கு மீண்டும் வரும்போது அதற்குள் மருத்துவர் வந்திருக்க அவளுக்கும் உடைமாற்றி வைத்திருந்தனர்.

     தலையெல்லாம் துவட்டி வைத்திருக்க.,  அரை மயக்க நிலையில் தான் இப்போதும் இருந்தாள்.,

    டாக்டர் வந்து பார்த்து விட்டு “டெம்பரேச்சர் கொஞ்சம் அதிகமாக இருக்கு.,  மழையில் நல்ல நனைஞ்சி இருக்கிறா”., என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே.,

    யாரும் அவள் காணாமல் போனது பற்றி சொல்லாமல் வேண்டுமென்றே மழையில் நனைய வேண்டும் என்று ஆசைப்பட்டு போய் மொட்டை மாடியில் இருந்திருக்கிறாள் என்றும்., அதிகமாக குளிரத்தொடங்கியவுடன் இறங்கி வர முடியாமல் அங்கேயே இருந்து விட்டாள் என்பது போல சொல்லி வைத்தனர்.

     டாக்டர் ஏற்கனவே அவளைப் பற்றித் தெரிந்தவர் என்பதால்., “ஆமா மதுவைப் பற்றி தான் எல்லோருக்கும் தெரியுமே., மொட்டமாடி மொட்டமாடி ன்னு  தானே உட்கார்ந்திருப்பா., அப்பவே தெரியும்., எத்தனை தடவ சொல்லியிருக்கேன்., மழை நேரத்தில் மட்டும் மாடிக்கு எல்லாம் போகாதே ன்னு.,  சொன்னா, மத்தவங்க பேச்சு கேட்காம இன்னும் சின்ன பிள்ளை மாதிரி ஓடிட்டு தான் இருக்கா”என்று சொல்லிவிட்டு ஊசியைப் போட்டுவிட்டு “கை காலை நல்ல சூடு பறக்கத் தேய்த்து விடுங்கள்”., என்று சொல்லிவிட்டு

“மாத்திரையைக் உணவு ஏதாவது கொடுத்து பிறகு கொடுங்கள்., கொஞ்ச நேரத்தில் மயக்கம் தானா தெளியும்., பயப்பட ஒன்றுமில்லை., தனியா இருந்த பயத்தில் கூட மயக்கம் வந்திருக்கலாம்”.,  என்று சொன்னார்.,

        அவளுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற பிறகுதான் அனைவருக்கும் பசியும் தோன்றியது., உடனே அருகிலிருந்த உணவகத்தில் சென்று சிவாவும் அவனது நண்பனும்  உணவு வாங்கி கொண்டு வந்தனர்.,

சிவாவின் நண்பனும் அங்கே உணவு அருந்தினான். ஆனால் அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும் போதே அவள் லேசாக விழிப்பு வர அப்போது தான் அறையில் நன்றாக போர்த்தி அவளை தூங்க வைத்து இருப்பதை உணர்ந்தவளுக்கு., அப்போதும் கைகாலெல்லாம் குளிர் அடிக்க போர்வைக்குள் நன்றாக சுருண்டு கொண்டாள்.,

         அவளின் நினைவோ ‘ஐயோ வீட்டில் இப்ப எல்லாரும் திட்டுவாங்க’., என்று தோன்றினாலும் ‘நான் அங்கே தானே  இருந்தேன்., யார் கூட்டிட்டு வந்தா.,  யாரோ கன்னத்தை தட்டினாங்க தானே., சரண் அவங்க மாதிரி இருந்தது., அது கனவா இருக்கும் போல., எப்பவும் இவங்க எல்லாம் சேர்ந்து அவங்களை பற்றி பேசுவதால் அப்படி தோணுது போல’., என்று அவளே மனதிற்குள் நினைத்துக் கொண்டு சுருண்டு கொண்டிருக்கும் போதே அறைக்குள் வந்து நின்றான் சரண்.,

      அவள் போர்வைக்குள் சுருண்டு கொள்வதை பார்த்தவன்., மெதுவாக அவள் அருகில் வந்து நின்றான்.,

    ‘யாரோ நிற்கிறார்கள்’ என்று யோசித்துக்கொண்டே நிமிர்ந்தவள் சரணை பார்த்தவுடன் திருதிருவென முழிக்க தொடங்கினாள்.

       ‘ஒரு வேளை இதுவும் கனவோ’ என்று பதட்டத்தோடு உற்று பார்த்தாள்.

    அவள் சற்று பயத்தோடு பார்ப்பதை பார்த்தவன் “இப்ப எப்படி இருக்கு., ஓகேவா”., என்று கேட்டான்.

        யோசனையோடு மெதுவாக தலையசைத்தாள்.,

      வெளியே பார்த்து சத்தம் கொடுத்தவன்., “அம்மா மது முழிச்சிட்டா., அவளுக்கு ஏதாவது சாப்பாடு கொண்டு வாங்க” என்று சொன்னான்.

       “இதோ ப்பா., அவ மட்டும் தான் சாப்பிடணும்., எல்லாரும் முடிச்சாச்சு”., என்று சொல்லிக்கொண்டே உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.

       அவள் அம்மா அருகில் வந்து “எழும்பி உட்காரு” என்று சொல்லி அதட்டவும்.,

        “அத்தை., மெதுவா சொல்லுங்க அத்தை”என்று இவன் சத்தம் போட்டான்.

      “சரிப்பா” என்று சொன்னவர் அவளுக்கு எழுந்து கொள்ள உதவினார்.,

      அவள் எழுந்து அமரும் போது அவளுக்கு முதுகை சாய்த்துக் கொள்ள தலையணை எடுத்து வைத்தவன்., “வசதியா இருக்கா” என்று கேட்டுவிட்டு “இப்ப கொடுங்க” என்று சொல்லி விட்டு அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

       அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடியே இருக்க.,  சிவாவின் அம்மா தான் அவளுக்கு உணவை எடுத்து வாயில் ஊட்டி விட்டார். இரண்டு இட்லி போதும் என்று அவள் நகர தொடங்க.,

       “போதும்”என்று சொல்லும் போதே சிவாவின் அம்மாவும்., அவனின் அம்மாவும் ஒன்று போல அதட்டினார்கள்.,

    “வாய மூடிட்டு கொடுக்கிறத சாப்பிடு”என்று சொன்னார்கள்.

    கண் கலங்கினாலும் எதுவும் சொல்லாமல் அதற்கு மேல் சாப்பிட முடியாமல் “போதும் வாந்தி வருது”., என்று சொன்னாள்.

        “வாந்தி வராம என்ன செய்யும்., மதியம் சாப்பிட்டது ஈவ்னிங் காபி கூட குடிக்காம.,  உனக்கு அவ்வளவு திமிரா.,  காபி போட்டுக்குடி என்று சொல்லிட்டு தானே போனேன்., காபி கூட குடிக்காமல் மேல போய் தவம் இருந்தியே., எந்த சாமி வந்து வரம் கொடுக்கும் ன்னு உட்கார்ந்துட்டு இருந்த” என்று சத்தம் போட்டார்.

     “இரு மாத்திரை எடுத்துட்டு வரேன்., அதுக்குள்ள படுத்திராதே, சாப்பிட்ட உடனே படுக்க கூடாது” என்று சத்தம் போட்டுக்கொண்டே சூடாக பால் எடுத்துவர சென்றார்.

Advertisement