Advertisement

       எங்கும் அவளைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை., வெளியே வந்தவுடன் கண்டிப்பாக மது  வீட்டில் இருந்து வெளியே வந்து இருந்தால் ‘உங்க பொண்ணு இந்த பக்கமா வந்தா எங்க இந்த நேரத்தில் தனியா போனா’ என்று யாராவது கண்டிப்பாக கேட்பார்கள்.

    ஆனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்க.,  எங்கு சென்று எப்படி தேடுவது தெரியாமல் வீட்டிற்கு வந்தவர்கள்.,  உடனடியாக நந்தினிக்கு அழைத்துக் கேட்டனர்.

    நந்தினியும் “இல்லை ஆன்டி பேசினா.,  நீங்க எங்கேயோ வெளியே போறேன்னு சொல்லிட்டு போனதா சொன்னா., அப்புறம் பேசிட்டு இருந்தா.,  நான் கூட காபி போட்டு குடிச்சிட்டு உட்கார்ந்து படி ன்னு சொல்லிட்டு இருந்தேன்.,  இந்த முறை இன்டெர்னல் மார்க் கம்மி., அது தான் செமஸ்டரில் ஒழுங்காக மார்க் வாங்கணும் உட்கார்ந்து படி அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன்.,  என் கிட்ட வேற ஒன்னும் சொல்லலையே”., என்று சொன்னாள்.

மதுவின் அம்மாவிற்கு பயம் கொடுத்து விட்டது., “ஏங்க சிவாக்கு போன் போடுங்க.,  வேற யாரும் க்ளோஸ் ப்ரென்ட் வீட்டுக்கு போய் இருக்க வாய்ப்பு இருந்தா சிவாக்கு தெரிஞ்சிருக்கும்”.,  என்று சொன்னார்.

          சிவாவிற்கு போன் அடிக்க அதே நேரம் அவர்கள் சரண் வீட்டில் அமர்ந்து இருந்தனர்.

          சிவாவிற்கு அழைத்த மதுவின் அப்பாவோ சிவாவிடம் “அவ காலேஜ் விட்டு இன்னைக்கு சீக்கிரம் வந்தா”.,  இப்படி பிரச்சினை என்று சொல்லி வீட்டில் நடந்தவற்றை சொன்னார்.

      “அங்கிள் மணி அஞ்சரை., அவ இந்த நேரத்துக்கு எங்க போயிருப்பா.,  எங்கேயும் போகமாட்டா., பொதுவாக அவ யார் வீட்டுக்கும் போக மாட்டா” என்று சிவா சொன்னவன்.,

      “அங்க நல்ல தேடி பாருங்க.,  எங்கேயும் போய் இருக்க முடியாது கொஞ்சம் பாருங்க.,   நீங்க எதுவும் கோபப்பட்டு அவட்ட சண்டை எதுவும் போட்டீங்களா”.,  என்று அவன் படபடப்பாக பேசினான்.

     அவரோ “எப்போதும் போல தான் பா”.,  என்று சொன்னார்.

     “நான்தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல., ரொம்ப முகம் காட்டதீங்க.,  அவ படிப்பில் கான்சன்ட்ரேட் பண்ண முடியலன்னு சொல்றா.,  அப்படின்னு நந்தினி சொன்னா ன்னு சொன்னேன்ல.,  அப்போ நீங்க கொஞ்சம் பாத்து நடந்து இருக்கலாம் இல்ல அங்கிள்”.,  என்று அவனும் கோபமாக கேட்டான்.

          அப்போது தான் தன் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த சரண் “என்ன பிரச்சினை”., என்று கேட்டான்.

     “நான் தெளிவா கேட்டு சொல்றேன்”  என்று சொல்லிவிட்டு அவன் நண்பர்களிடம் தெரியாதது போல.,  “இன்னிக்கு மது காலேஜ் விட்டு எப்ப வந்தா., அதுக்கப்புறம் வெளிய எங்கேயும் போனாலா”., என்று அவர்கள் தெருவில் இருக்கும் நண்பர்களிடம் தெரியாதது போலக் கேட்டான்.

       அவன் எப்போதும் அவளை பற்றி விசாரிப்பது தான்., இப்போது இருவரும் பேசாமல் இருப்பது தெரியும் என்பதால் அதற்காக விசாரிக்கிறான் என்று நினைத்துக்கொண்டு “இல்லையே காலேஜ் வந்ததுக்கப்புறம் எங்கேயும் போன மாதிரி இல்லையே., நம்ம ஊர்ல வேற சரியான மழை”., என்று சொல்லி சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,

            சரி என்று அழைப்பை துண்டித்தவன்.,  “வெளிய எங்கேயும் போகலை., எங்க போனான்னு தெரியலை என்று சொல்லும் போதே.,

       கோபமாக கேட்டிருந்தான்., “என்ன விஷயம் சொல்லுங்க” என்று சத்தமாக கேட்டான்.

       சரணின் அம்மா நடந்த விஷயங்களை சொல்லவும் கோபமாக அமர்ந்தவன்., “என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கீங்க ன்னு தெரியுதா., அவ படிக்கப் போறேன்னு சொன்னா படிக்கட்டும் ன்னு விட வேண்டியது தானே.,  ஏன் ஆளாளுக்கு மூஞ்சி காமிச்சீங்க., இப்ப இது தேவையா அவளை எங்கு போய் தேடுவது”.,  என்று சொன்னவன் நேரத்தை பார்க்க மணி ஐந்தரை என்று காட்டியது.

            “கிளம்புங்க., இப்ப காரில் கிளம்பினா கூட கண்டிப்பாக மூன்று மணி நேரத்தில் ஊருக்கு போயிடலாம்., அவ என்ட்ட எதுவும் கேட்டுற கூடாது ன்னு தான் நீங்க அடிக்கடி இங்க  வர்றீங்களா., நானும் என்னமோ முன்னாடிலாம் கூப்பிடும் போது வர மாட்டீங்களே., இப்ப பிள்ளை மேல் உள்ள பாசத்தில் வர்றீங்களோ ன்னு நினைச்சேன்., அவளை டார்ச்சர் பண்ண தான் இங்க சேர்ந்து வந்தீங்களா.,

       ஏண்டா உனக்கு அறிவு இல்லை., நீ அவ கூட படிச்சவன் தான., அவ ப்ரண்டு தானே., ஒரு ப்ரெண்ட இப்படித்தான் பிளாக் மெயில் பண்ணுவியா”., என்று சத்தம் போட்டவன்.,

      “எல்லாம் பேசி பிரயோஜனம் கிடையாது கிளம்புங்க., அதுக்கு இடையில உன் பிரெண்ட்ஸ் ட்ட சொல்லுடா”.,  என்று சொன்னவன் “இல்லை இல்லை யார்ட்டையும் சொல்ல வேண்டாம்., மழை வேறு பெய்து வேற எதுவும் பேச வேண்டாம்., சீக்கிரம் கிளம்புங்க” என்று சொன்னான்.,

         அடுத்த பத்து நிமிடத்திற்குள் அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.,  போகும் வழியிலேயே மதுவின் அம்மாவிற்கு சிவாவின் அம்மா போன் செய்து கேட்டார்.

       மதுவின் அம்மா வருத்தமான குரலோ “தெரியல எங்க போனான்னு தெரியலை., என்ன தேடாதீர்கள் மட்டும் எழுதி வைத்து இருக்கா.,  என்ன பண்ணனும் தெரியல.,  நான்  கோபப்பட்டு தான் போனேன்.,  வேணும்னே அவகிட்ட சொல்லிட்டு தான் போனேன்., உனக்கு ஒரு மாப்பிள்ளை வீடு வந்து இருக்கு.,  நான் ஜாதகம் பார்க்க போறேன் அப்படின்னு சொல்லி மிரட்டுற மாதிரி சொன்னேன்., அவ ஏதாவது சண்டை போடுவா ன்னு தான் நினைச்சேன்., ஆனா  இவ எங்க போனான்னு தெரியலையே., நான் என்ன பண்ணுவேன்”., என்று சொன்னார்.

     “அவசரப்படாதீங்க பொம்பள புள்ள விஷயம்., நாம வெளியே சொல்ல வேண்டாம்., மது அம்மா நீங்க ஒரு பக்கம்., அண்ணன் ஒரு பக்கம் தேடுங்க.,  நாங்க வந்துகிட்டே இருக்கோம்”., என்று சிவாவின் அம்மா பதில் சொன்னார்.

      கார் டிரைவிங் இல் இருந்தாலும் சரண் அனைத்தையும் கவனித்தே வந்தான்., இவர்கள் மேல் உள்ள தன் கோபத்தை கார் ஓட்டும் வேகத்தில் தான் காட்டினான்.

         “உங்களை எல்லாம் என்னம்மா செய்ய., இத்தனை நாள் நான் வந்து போயிருக்கிறேன்., நீங்களும் வர்றீங்க கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகுது., நீங்க இந்த பேச்சு எடுத்து., என்ட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்லையா.,  அதுக்கு தான் நான் வரும் போதெல்லாம் என் கூடவே காவல் காத்துட்டு சுற்றுனீங்களா., இதுக்கு தான் அங்க வர விடலையா நீங்க., ரீசன் இதுதானா இதை என் கிட்ட சொல்லி இருந்தா., நானே அவ கிட்ட பேசி இருப்பேன்., ஏம்மா ஏம்மா இந்த அநியாயம் பண்றிங்க., இப்போ அவளை எங்கன்னு போய் தேடுவீங்க”., என்று கோபமாக கேட்டவன்.

   “உங்கள எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது”., என்று சொன்னவன்.,  சிவாவிடம் தன் கோபத்தை காட்டினான்.

     “ஏண்டா படிச்ச பையன் தானே.,  உனக்கு அறிவு இல்லை., உன் ப்ரண்டு தானே., அவ கிட்ட  இப்படியா பேசாம இருப்ப.,  நீ நார்மலா பேசிட்டு இருந்தாலே., அவளே உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி இருப்பா.,  தேவையில்லாம ஏண்டா அவட்ட முகம் காட்டின”., என்று கோபமாக பேசியவன்

      “உங்கள எல்லாம் வெச்சிகிட்டு என்னத்த சொல்ல சொல்றீங்க”.,  என்று பேசியவன் தன் கோபத்தை காரின் வேகத்தில் கூட்டி காட்டினான்.

             இங்கோ மதுவின் அப்பாவும் அம்மாவும் ஆளுக்கு ஒருபுறமாக தேடிக்கொண்டு இருந்தனர்.

        அதற்குள் சிவா தன் நெருங்கிய நண்பனிடம் மட்டும் “கொஞ்சம் மதுவின் அம்மா அப்பாவோடு சேர்ந்து மதுவை தேடு”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       அவனுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்பதால் அவன் ஒருபுறம் தேட மழை சற்று குறைந்து இருந்ததால் நந்தினியும் அவள் அப்பாவோடு வண்டியில் வந்து இறங்கி இருந்தாள்.

         ஆள் ஆளுக்கு ஒருபுறமாக தேடி அலையத் தொடங்கினர்., ஆனால் அவள் எங்கு போனாள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாததால் நந்தினி அவள் அப்பாவோடு வீட்டிற்கு கிளம்பும் போது.,  “நானும் பிரண்ட்ஸ் ட்ட மெதுவா கேட்டுப் பார்க்கிறேன்., தகவல் தெரிஞ்சா எனக்கு போன் பண்ணுங்க ஆன்ட்டி.,  சிவா வீட்ல வந்துட்டு இருக்காங்களா”., என்று கேட்டவள்., “சரி கிளம்புறேன்”., என்று சொல்லிவிட்டு சென்றாள்.

      சிவாவின் நண்பன் தான் மதுவின் அப்பாவோடு சேர்ந்து தேடிக்கொண்டிருந்தான்.

தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..!

Advertisement