Advertisement





  4

   நினைவுகள் துறந்து
   நிஜங்களோடு
   கைக்கோர்க்க தான்.,
   கனவுகளை தொலைத்த
   கல்லாய் மாறுகிறது
   மனம்.,

         காலை கண் விழித்தவளுக்கோ  எல்லாம் கனவு போல் தெரிந்தது., சற்று நேரம் அமைதியாக யோசித்தவளுக்கு அனைத்தும் புரிந்தது.,  யோசித்துக் கொண்டே அப்படி உறங்கி இருக்கிறாள்

         பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டே அசையாமல் இருந்தவளுக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்டது.,

         கிச்சனில் இருந்து அம்மா சத்தம் போட்டு பேசுவது புரிந்தது.,  நேரத்தை பார்க்க அது அவள் எப்பொழுதும் எழும் நேரத்தை தாண்டி இருந்தது.,

       ‘அம்மா எப்பவும் எழுப்புறவங்க தானே.,  ஏன் எழுப்பலஎன்ற யோசனை வந்தாலும்., மனமோ மீண்டும் அவர்களிடம் குறை தேடியது., ‘ஆமா அவங்களுக்கு நான் படிச்சா என்ன.,  படிக்காம போனா என்ன.,  இப்ப அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிட்டு போயிரனும்., அதுதானே அவர்களுடைய எண்ணம்‘., மனதிற்குள் புலம்பிய படி எதுவும் சத்தம்  செய்யாமல் எழுந்து தன் அறையிலேயே காலை வேலைகளை முடித்துக் கொண்டு வெளியில் வந்தாள்.,

          நியூஸ் பேப்பரில் தலையை கவிழ்த்து இருந்த மதுவின் தந்தை அவளை நிமிர்ந்து பார்த்து.,  “என்னமா  நைட் லேட்டா தூங்குனியா., ரூமுக்கு வந்து பார்த்தா நீ பக்கத்துல புக்கெல்லாம்  வச்சிட்டே தூங்கியிருந்த., அது தான் லேட்டா தூங்கியிருப்ப ன்னு அம்மா எழுப்பி விடாம வந்துட்டா“., என்றவர்.,

     “மது காலேஜ்க்கு  பஸ் போறீயா.,  அப்பா கொண்டு வந்து  விடவாஎன்று அவராக கேட்டுக் கொண்டிருந்தார்.

              இவளோஇல்லப்பா பஸ்ல போய்டுவேன்“., என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

         அம்மாவோடு  வேறு எதுவும் பேசாமல் தனக்கான காபியை கலந்து எடுத்துக்கொண்டு ஹாலில் அமராமல் பின் வாசலில் போய் நின்று தூரத் தெரிந்த மரத்தில் எங்கோ கேட்ட பறவைகளின் ஓசைகளை தேடுவது போல சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே காலை காபியை குடித்துக் கொண்டிருந்தாள்.,

     மனம் முழுவதும் நேற்று தோழியிடம் பேசியதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தது., வேறு எதுவும் அதைப் பற்றி பேசுவதற்கு இனி இல்லை என்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்ற யோசனையோடு கிளம்ப தொடங்கினாள்.

          இன்னும் 10 நாட்கள் அடுத்தடுத்து பரீட்சைகள் இருக்கும்., இரண்டு நாள் விட்டு., ஒருநாள் விட்டு என்று மாறி மாறி ஒவ்வொரு பரீட்சைக்கும் இடையில் விடுமுறை விட்டு விட்டு பரீட்சை இருப்பதால் 10 நாள் வரை இழுத்து செல்கிறது.

       இதற்கிடையில் இவர்கள் கல்யாணத்திற்கு வேறு அவசர படுத்தவும் என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையோடு கிளம்பிக் கொண்டிருந்தாள்.,

        இன்னும் பேச்சுவார்த்தையில் தான் போகிறது., இவர்கள் நினைத்தால் வேகவேகமாக எல்லாவற்றையும் முடித்து விடுவார்கள் இன்னும் இருக்கும் நாட்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் கல்லூரிக்கு கிளம்பினாள்.

       காலை உணவை ஏனோ தானோவென்று முடித்துவிட்டு பரீட்சைக்கான புத்தகத்தோடு கிளம்பி கல்லூரி பேருந்து எப்பொழுதும் நிற்கும் இடம் வரை நடந்து செல்வாள்., எப்போதும் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்பவள்.,  இன்று அதே யோசனையோடு நடந்து செல்ல சுற்றுமுற்றும் சரியாக கவனிக்கவில்லை..,

       அவள் போகும் பாதையில் சற்றே மறைவான இடத்தில் இருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

      நேற்று இரவு மனது கேட்காமல் தான் மதுவின் தோழிக்கு அழைத்து மதுவின் நிலையை அறிந்துகொள்ள சொன்னான்., ஏனெனில் அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.

        மதுவின் தோழி அவள் நன்றாக இருக்கிறாள் என்று சொன்னாலும்., மனதுகேட்காமல் தான் இன்று அவள் கண்ணில் படாமல் அவளை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக தான் வந்திருந்தான்.,

       அவள் கல்லூரி பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்வாள்., அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மறைவான இடம் தேடி நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.,

    அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் துருதுருப்போ சுறுசுறுப்போ இல்லை.,  எதையோ பறிகொடுத்தவள் போல் அமைதியாக நடந்து செல்பவளை பார்த்தவனுக்கு மனது சற்றுக் கஷ்டமாகத்தான் இருந்தது., சுயநலமாக முடிவெடுத்து விட்டோமோ என்று மனதிற்குள் குழம்பியவன் என்ன செய்வது என்று குழப்பத்தோடு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.,

       எல்லாம் இவள் நன்மைக்குதான் என்பதை இவள் எப்போது புரிந்து கொள்வாள்., என்ற யோசனையோடு அவள் பஸ் ஏறும் வரை பார்த்திருந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

      கல்லூரி சென்று வகுப்பறையில் அமரவும்., அவள் தோழி வந்துஎக்ஸாம் முடிஞ்ச பிறகு உன்கிட்ட பேசணும்“., என்று சொன்னாள்.

       அவளை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலை கவிழ்ந்து புத்தகத்தைப் பார்க்க தொடங்கவும்.,

        அவளோஏண்டி இப்படி இருக்கிறபுரிஞ்சுக்க முயற்சி  பண்ணாம., உங்க வீட்ல நீ ஒரே பொண்ணு.,  உன் நல்லதுக்காகத்தான் உங்க அம்மா அப்பா பண்றாங்க.,  யோசிச்சு பாரு.,  தெரியாத இடத்தில்., யாருனே தெரியாத ஒருத்தன் கிட்ட ஒத்த பொம்பள பிள்ளைய கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு., பயந்துபோய் இருக்குற ஒரு அம்மா அப்பாவுடன் நிலைமை எப்படி இருக்கும் யோசிச்சு பாரு., இதே இது பக்கத்துல கொடுத்தாச்சு னா.,  அம்மாவுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கும்.,

      அது மட்டும் இல்லாம நீ அவங்க வீட்டுல.,  அவங்க பார்த்து வளர்ந்த பொண்ணு., அதே மாதிரி அவங்க விவரம் தெரிந்த நாளிலிருந்து உங்க வீட்டில உள்ளவங்க பார்த்து வளர்ந்தவங்க தான்..,  அப்படி இருக்கும் போது இவங்களுக்கு னா அம்மா அப்பா யோசிக்காமல் பொண்ணு கொடுப்பாங்க..,

        யோசித்து பாரு., அதுமட்டுமில்லாம நல்ல ஜாப்ல இருக்காங்க.,  உனக்கு அத்தனைக்கும்  மெய்டு வருவாங்க.,  நீ ஒரு வேலை செய்ய வேண்டாம் கடைசி வரைக்கும் ராணி மாதிரி இருப்ப..,  இதனால் யோசிக்க மாட்டேங்குற..,

         இதை எல்லாம் உங்க அம்மா அப்பா  யோசிக்காமலா., உன்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பாங்க..,  அதுமட்டுமில்லாம யாருனே தெரியாத வீட்டுக்கு நீ போய்., அந்த வீட்ல உள்ளவங்க எல்லாருக்கும் அட்ஜஸ் பண்ணி.,  அவங்கள எல்லாம் புரிஞ்சு அப்படிங்கறதை விட.,

     இது உங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும்., உங்க குடும்பத்தை அவங்க குடும்பத்துக்கு தெரியும்., அவங்க குடும்பத்தை உங்க குடும்பத்துக்கு தெரியும்., இந்த மாதிரி ஒரு அலைன்ஸ் எங்கே கிடைக்கும்.,  அதனால தான் பொண்ணு கேட்ட உடனே சரின்னு சொல்லி இருப்பாங்க.,

        நீ யோசிச்சு பாக்க மாட்டியா.,  சிவாவ யோசிச்சிப் பாரேன்., சிவா வந்து உனக்கு நல்ல பிரண்ட் தான்.,  ரெண்டு பேரும் கை கோர்த்து சுத்திட்டு அலஞ்சிங்க.,  குடுமிப்பிடி சண்டை போட்டு இங்க எத்தனை பஞ்சாயத்து ஓடி இருக்கு.,  உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர்ற சண்டை  எல்லாத்தையும்  அவங்க அம்மாவும் உங்க அம்மாவும் சேர்ந்து தீர்த்திருப்பாங்க.,  இல்லாட்டி அவங்க அப்பாவும்.,  உங்க அப்பாவும் சேர்ந்து தீர்த்து விடுவாங்க.,

          எனக்கு தெரிஞ்சு நீயும் சிவாவும் சண்டை போட்டு ரெண்டு பேரும் திட்டு வாங்கி அவங்க அண்ணா பஞ்சாயத்து பன்னது எல்லாம் ஒரு தடவையோ., இல்ல இரண்டு தடவையோ தான்., உங்க ரெண்டு பேர பத்தி ஒவ்வொரு விஷயமும் அவங்க நல்ல புரிஞ்சு வச்சிருக்காங்கன்னு தான் சொல்லலாம்.,  அந்த மாதிரி உங்களோட ஃப்ரெண்ட்ஷிப் ஊருக்கே தெரியும்.,

        நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்துக்கே தொல்லையை கொடுத்தது., இப்படி யோசிச்சிப் பாரேன் நீ வேற யாரையோ ஒருத்தரை கல்யாணம் பண்ணினா உங்க பிரெண்ட்ஷிப் கடைசி வரைக்கும் நீடிக்குமா.,  நீடிக்க வாய்ப்பே இல்லை அதே இது நீ சிவாவோட அண்ணனையே கல்யாணம் பண்ணிக்கிட்ட னா.,  உங்க ஃப்ரெண்ட் ஷிப் கடைசி வரைக்கும் நீட்டிக்கும்.,  யாரும் ஒரு வார்த்தை உங்களை சொல்ல முடியுமா யோசிச்சு பாரு..,  சிவா அதனால தான் சரின்னு சொல்லியிருப்பான்.,

     அப்படி யோசிச்சிப் பாரேன்., நீ சிவா மேல கோவப்படுற., ஆனால்  அவன் சொல்றான்., அவனுக்கு உன்னோட ப்ரெண்ட் ஷிப் விட்டுப் போயிடக் கூடாது ன்னு.,  நீ எப்பவும் அவன் கூட இருக்கணும் அப்படிங்கிறதற்காக கூட அவன் சம்மதம் சொல்லி இருக்கலாம் இல்ல.,

          அது மட்டுமில்லாம சிவாவோட அண்ணனுக்கு என்னடி குறைச்சல்., நீ ஏன் வேண்டாம்னு சொல்ற., என்ன யார்ட்டையும் ரொம்ப பேச மாட்டாங்க அதுதானே., அது அவங்களோட சுபாவம், அதுமட்டுமில்லாம அவங்களோட வேலை அப்படி..,  அவங்க போய் வளவளன்னு பேசிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காதே.,  அப்படி பேசிட்டு சுத்திக்கிட்டு இருந்தா அவங்கள  யார் மதிப்பா சொல்லு.,

            அவங்க வேலைக்கு அவங்க இப்படித்தான் இருந்தாகணும்., நீ வாயாடிதானே., ஜோடினா ஒருத்தர் அப்படியும் ஒருத்தர் இப்படியும் ன்னு தான் இருக்கனும்.,  எனக்கு ஒரு தோணுச்சு அதனாலதான் சொல்றேன்.,  அதுக்காக முறைச்சி எல்லாம் பார்க்காதே“., என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அவளுடைய தோழி.,

ஏனெனில் அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளைப் பார்த்து முறைக்க தொடங்கவும் தான்., அவள் அப்படி சொல்லி விட்டு பேச்சை நிறுத்தியது.

     மதுவோ வேறு எதுவும் பேசாமல்ஆல் பெஸ்ட் எக்ஸாம் எழுது போஎன்று சொல்லிவிட்டு அவளுடைய எக்ஸாம் ஹாலை நோக்கி புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றாள்.,

       ‘சிவா சொன்னான் என்று நாமும் பேசி பார்த்தாச்சு., வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டேங்குறா., என்ன பண்ணப் போறேன்னு தெரியலைய‘.,  என்று அவள் தோழி தனியாக புலம்பிக் கொண்டு அவளுடைய எக்ஸாம் ஹால் நோக்கி அவளும் செல்ல தொடங்கினாள்.,

       ‘எக்ஸாம் முடிஞ்ச பிறகு ஒரு தடவை பேசி பார்ப்போம் என்ன சொல்றான்னுஎன்று நினைத்துக் கொண்டே அவளுடைய இடத்தில் சென்று அமர்ந்தாள்.,

      

Advertisement