சிவாவும் மதுவிடம் அமர்ந்து, “நாளைக்கு தீபாவளிக்கு என்ன எல்லாம் வெடி போடலாம்”, என்று கேட்டான்.

   “எனத்தையும் போட்டு தொலடா, இந்த குட்டியும் கூட்டிட்டு போ”, என்று குழந்தையை சொல்லிக் கொண்டிருந்தாள்.

  அவர்கள் பேச்சு கேட்கும் தொலைவில் தான் சரண் இருந்தான்.

     “ஏன் மது நீ வெடி போட வரலையா”,  என்று கேட்டான் .

” அப்புறம் பார்க்கலாம்”, என்று சொல்லி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சிவா குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல,

மதுவும் சமையலுக்கு உதவி செய்வதற்காக சரணின் அம்மாவோடு சென்று அடுப்படியில் நின்றாள்.

பின்பு மதிய சமையலை முடித்து வீட்டுக்கு  வேலைக்கு வருபவரிடம்,  கிச்சனை ஒதுக்கி போட்டு  சுத்தம் செய்ய சொல்லி விட்டு மது அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்க, அவளை ஒட்டி உரசிய படி வந்து சரணும் அமர்ந்தான்,

இவளோ இன்று இவன் கொஞ்சல் மிஞ்சல் கெஞ்சல் எல்லோவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

    முதல் முதலாக இருவருக்குமான ஒரு நாள் பேச்சுவார்த்தையற்ற கோபம் என்று அவன் நினைத்திருக்கிறான்.

ஆனால் அது நடிப்பு தான் என்றாலும், தானும் பேசாமல் தானே இருந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவள், இவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘என்னை பைத்தியமாக்கி வைத்திருக்கிறார் இந்த மனுஷன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

    தீபாவளியை நல்லபடியாக இரு வீட்டினரோடும் சேர்ந்து கொண்டாடி விட்டு, இரண்டு நாள் இருந்து விட்டு அவர்களது இருப்பிடம் நோக்கி கிளம்பினர்.

    குழந்தை தான் அதிகமாக தேடினாள்,  இருந்த நாட்களில் இரண்டு வீட்டு பெரியவர்களுடனும் நன்கு நேரத்தை போக்கிய அவளுக்கு அங்கு செல்லவே விருப்பம் இல்லை.,

  நிலா அங்கு  சென்ற பிறகு எப்படி இருப்பாள் என்பது தெரிந்தது தான்.,

     அவளுக்கு பாட்டி தாத்தாவோடு இருந்த சந்தோஷம் வராது என்பது மது மனதிற்கு புரிந்தாலும், அவனது தொழில் விஷயத்தில் அப்படி இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டாள்.

    காரில் ஏறும் முன் சிவாவிடம் வந்தவள்., “சொன்னது ஞாபகம் வச்சுக்கோ, பேசி முடிவு பண்ணுங்க, அப்பப்ப ரெண்டு பேரும் தகவல் சொல்லுங்க,  நானும் அவளிடம் போன்ல பேசுறேன்” என்று சொன்னவள்,  “பார்த்துக்கோ டா” என்று சொல்லி விட்டு நான் கிளம்புறேன் என்று கிளம்பினாள்.

    சிவா தான்,  “மது தேங்க்ஸ் மது,  என்னுடைய லைப் காக நீ இவ்ளோ யோசிக்கிற”, என்று சொன்னாள்.

    “லூசு மாதிரி பேசாதடா”, என்று சொல்லி விட்டு  “வீட்டிற்கு போயிட்டு போன் பண்றேன்” என்று சொல்லி விட்டு குழந்தை இருந்த பின்பக்கமாக ஏறிக்கொண்டாள்.

ஏற்கனவே இவர்களை அழைக்க காலையிலே டிரைவர் வந்திருக்க இப்போது தான் கிளம்பினார்கள்.

      அவர்களுக்கான இடத்திற்கு சென்ற பிறகு எப்போதும் போல இருந்தாலும், அவ்வப்போது சரண் இவளது கோபம் மனதில் எதுவும் இருக்குமோ என்று நினைத்தவன், தன் காதலை மொத்தமாக கொட்டிக் கொண்டிருந்தான்.

     தனிமையில் லவ் யூ சொல்வதும், தனக்கு அவள் எத்தனை முக்கியம் என்பதையும் புரிய வைத்து கொண்டு இருந்தான்.

   பொங்கலுக்கு வருவதற்குள் இருவரும் விரும்புவது வீட்டில் தெரிய.,

     பொங்கலுக்கு வந்த நேரத்தில் சரண் மீண்டும் விசாரணைக்கு சிவாவை நிறுத்திவிட்டு,  மதுவையும் சேர்த்து அழைத்தான்.

     மதுவும் மெதுவாக வந்து நின்றாள்,  வந்தவள் எப்போதும் போல சிவாவிற்கு பின்பக்கமாக நின்று கொண்டு,  “ஏண்டா உங்க அண்ணனுக்கு பஞ்சாயத்து பண்ணாம இருக்கவே முடியாதடா, லீவுல கூட யாரையாவது கூப்பிட்டு வச்சு விசாரணை பண்ணிட்டே இருக்கணுமா”,  என்று கேட்டாள்.

      இவனும் மெதுவாக வாயை மூடியபடி,  “உன் புருஷன் கேரக்டர் உனக்கு தான் தெரியும், என்கிட்ட வந்து கேட்குற”, என்று சொன்னான்.

    “சோ, என்ன கட்டி வச்சு இப்படி கஷ்டப்படுத்த தானடா கட்டி வச்ச”, என்று அவனை கோவப்படுத்தினாள்.

     அவனும் “நீ இப்போ எனக்கு தூது போனீயே ஒருத்தி”, என்று சொல்ல தொடங்கவும்,

      “என்னது நானா, நீ தான் என்கிட்ட சொன்ன”, என்று சொன்னவள்,

      “அவளுக்கு என்னடா குறைச்சல்”, என்று கேட்டாள் .

     “என் அண்ணன் உன் ட்ட  தோப்புக்கரணம் தான் போடுவான் ன்னு நினைக்கிறேன். நான் அவனுக்கு அட்வைஸ் பண்ண மாதிரி நான் தான் காலில் விழ வேண்டியது இருக்கும்னு நினைக்கிறேன்,

    எவ்ளோ டென்ஷனாகுறா,  ஜாலிக்கு பேசுனா கூட கோவம் வருது.,  கிட்டத்தட்ட அதுல எல்லாம் எங்க அண்ணன் மாதிரியே இருக்கா”, என்று சொன்னான்.

       “கர்மா இஸ் பூமராங்” என்று பின்னாடி இருந்து மெலிந்த  சத்தத்தில் அவனிடம் கிண்டலாக பேசியபடி இருந்தவள், “இன்னொரு பழமொழி கூட இருக்குடா, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படின்னு, ஒரு வேளை இத தான் சொல்லி இருக்காங்களோ,  நீ என்னை உங்க அண்ணனோட கோர்த்து விட்ட இல்ல,  அதுதான் உனக்கு தானா வந்துருச்சு மாட்டினடா  மவனே”, என்று சொல்லி பேசும் போதே,

    சரணும் அங்கிருந்து “ரெண்டு பேரும் என்னடா பேசுவீங்க”,  நான் கூப்பிட்டு விசாரிச்சிட்டு இருக்கேன் ரெண்டு பேரும் அங்க நின்னு கிசுகிசுன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க”, என்று கேட்டான் .

    மதுவின் அப்பாவோ,  “இது எப்பவும் தெரிஞ்சது தானே தம்பி, இது ரெண்டும் சேர்ந்து எதையாவது வம்பு பண்ணி இருக்கும்”, என்று சொல்லி குடும்ப கதை தெரிந்தவராக அவரும் சரணின் அப்பாவும் வெளியே சென்றுவிட்டனர்.

     மதுவின் அம்மா தான்,  “ஏண்டி என்ன பண்ணி வச்ச”, என்று கேட்டார்.

  “ஒன்னும் பண்ணலையே”, என்றாள்.

     “நீ தான் முதல்ல அவனுக்கு நந்தினி பாப்போமான்னு கேட்ட, இப்போ அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்னு சொல்றாங்க, அவங்க வீட்லயும் விஷயம் தெரிஞ்சிருச்சு, இப்ப கேட்டா சிவா  நான் முதல்ல இருந்தே லவ் பண்ணிட்டு தான் இருக்கேன் ன்னு சொல்றான், அந்த பொண்ணும் அப்படித்தான் சொல்லுது, அப்ப நடுவுல நீ எதுக்கு பேசுன”, என்று கேட்டார் .

      “அதுவா உங்க மருமகன் வாயிலிருந்து சொந்தத்தில் பொண்ணு வேணும் அப்படின்னு சொன்னாரு இல்ல, அந்த வார்த்தையை கேட்பதற்காக”, என்று சொன்னாள்.

    “அய்யோ அம்மா மலையேற ஆரம்பிக்கலே”, என்று அவன் நினைக்க,

      சிவாவோ அய்யய்யோ  திருப்பி மறுபடியும் அந்த பிரச்சினையும் பெரிதாகிறதே’ என்று நினைத்தவன், “மதுஉஉ அம்மா தாயே பேசாம இரு” என்று சொன்னான்.

      “சரி சொல்லு ண்ணா, இப்ப என்ன செய்யணும்”, என்று அமைதியாக நின்றான்.

   சரணோ பதில் பேசாமல் அவனையே பார்க்க.,

“லவ் பண்றேன் ஒத்துக்கிட்டேன்ல, அப்புறம் என்ன”, என்று கேட்டான் .

   “சரி லவ் இப்பதான் வந்துச்சா, முன்னாடியே இருக்கா”, என்று சரண் கேட்டான்.

      “நான் தான் மதுகிட்ட, எனக்காக நந்தினி கிட்ட பேச சொன்னேன்”, என்று சொன்னவன்,

      “அதுக்கு தான்  நந்தினி கிட்ட பேசிட்டு,  அம்மா கிட்ட வந்து பேசினா.,  அன்னைக்கு கேட்கும் போது அவ தான் சொல்ல கூடாதுன்னு சொன்னா., அதனால தான் அமைதியாயிருந்தேன், என்றான்.

     “அவ சொல்ல கூடாதுன்னு சொன்னா, அமைதியா இருப்பியாடா”, என்று கேட்டான்.

    “அவ என்ன சொன்னாலும் அப்படித்தான், அவ சொன்னா நான் செய்வேன்”, என்று சொன்னான்.

     “திருந்தவே திருந்தாதீங்க டா, ரெண்டு பேரும் இப்படியே இருங்க”, என்று சொன்னான்.

      சரணின் மகளோ, ‘ஏம்பா அம்மாவையும், சித்தப்பாவையும் திட்டிட்டு இருக்கீங்க”, என்று கேட்டாள்.

    “உங்க அம்மாவும் சித்தப்பாவும் ஸ்கூல் படிக்கும் போது இருந்தே பிரச்சினை தான், ரெண்டு பேரும் பிரச்சினை பண்ணிட்டு இப்படி வந்து நிப்பாங்க”, என்று சொன்னான்.