Advertisement

மது அம்மாவோ., “இங்க பாருங்க நீங்க பேசாம இப்படி சொல்லிட்டு போயிட்டா எப்படி., நான் அவட்ட பேசமாட்டேன்., சரணை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுமா.,  சரணையே வேண்டான்டா., வேற எவனுக்கு இவ சரி சொல்ல போறா.,  எவன கட்ட போறா., இவ யாரையும் நினைச்சிட்டு இருக்காளோ என்னவோ”., என்று சொன்னார்.

          ‘என்ன இப்படி நினைக்கிறாங்க’ என்று கோபத்துடன் வெளியே வந்தவள்.,  “இப்ப என்ன நினைச்சுட்டு இருக்கீங்க., ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க., நான் சொன்னேனா., நான் எவனையும் நினைக்கிறேன் ன்னு”., என்று சொன்னாள்.

               “உனக்கு சரணை விட நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருமா., நீ உன் இஷ்டத்துக்கு பாக்குறவங்க எல்லாம் வேண்டாம் வேண்டாம் சொல்லுவ”., என்று பேசி கொண்டு இருக்கும்போதே.,

          “எத்தனை பேரை பார்த்தேன்.,  நான் எத்தனை பேரை வேண்டாம்னு சொன்னேன்., எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்., எனக்கு கல்யாணம் பண்ற மைண்ட் செட் இல்ல.,  நீங்க உங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கனுமா., என்னால எல்லாம் கட்டிக்க முடியாது., மாப்பிள்ளை ன்னு பார்க்க முடியாது”., என்று சத்தமாக பேசினாள்.

          “கத்திக் கத்திப் பேசின வாயில அடிச்சிடுவேன் பார்த்துக்கோ.,  கிளம்பி வந்துட்ட தானே.,  சாப்பிட டைனிங் டேபிள்ல இருக்கு.,  கொட்டிக்கிட்டு மத்தியானத்துக்கு எடுத்து வைத்ததை எடுத்துட்டு இடத்தை காலி பண்ணு.,  இப்போ என் கண்ணு முன்னாடி நிக்காத ஏதாவது திட்டிட போறேன்”., என்று சொன்னார்.

     மனதிற்குள்ளோ., ‘முதல் நாள் காலேஜ்க்கு எப்படி அனுப்புறாங்க பாரு’ என்று நினைத்துக்கொண்டே அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு தனக்கென கட்டி வைத்திருந்த மதிய உணவையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் மது.

         ‌எப்போது  திருமணத்திற்கு முடியாது என்று சொன்னாலோ அதிலிருந்து வீட்டில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினையை தான்.,

       இப்போது என்னவோ அடிக்கடி நடப்பது போலவே தோன்ற தொடங்கியிருந்தது.,

      இதோ அதோ என்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் இரண்டு மாதங்கள் சென்ற நிலையில் வீட்டில் உள்ளவர்களின் பாராமுகமும்., பேசா குணமும் மனதை மிகவும் வருத்தியது. அதே நினைவில் கல்லூரியில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.,

        அவளுடன் ஒன்றாகப் படித்த தோழிகளோ “என்ன ஆச்சு ஏதோ மாதிரி உட்கார்ந்து இருக்க., உன் இஷ்டப்படி காலேஜில் சேர்ந்து விட்டாய் தானே., அது மட்டுமல்லாமல் நந்தினி அவங்க ஊர்ல படிக்க இருந்தவளையும் உனக்காக இதே காலேஜில் சேர வைச்சிட்ட., இதோ ரெண்டு மாசம் ஆக போகுது.,  ஆனால் நீ படிக்கிற மாதிரியே தெரியலையே.,

       ஏனோதானோ ன்னு இருக்க., நேத்து வச்ச கிளாஸ் டெஸ்ட் ல கூட மார்க் கம்மியா வாங்கியிருந்த” என்று கேட்டனர்.

         “ஆமாடி நல்ல கேளுங்க மேடம் என்னவோ படிப்பு தான் முக்கியம் னா., இப்போ என்ன ஆச்சு”., என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள் அவளிடம் அடிக்கடி தொடர்பில் இருக்கும் நந்தினி.

       “வா மா வா., உன்ன தான் எதிர்பார்த்து இருந்தேன்.,  ஏன் உன்கிட்ட சிவா எதுவுமே சொல்றது இல்லையா” என்று கேட்டாள்.,

      “சிவா வா.,அவன் எதுக்கு என்கிட்ட பேசறான்”., என்றாள்.

         “உன்ன தானே தூது அனுப்பி இருந்தான்., இப்போ உன் கிட்ட பேசுறது இல்லையா “., என்று கேட்டாள்.

       “அதெல்லாம் நீ எப்படியாவது சம்மதிச்சிருவ என்ற நம்பிக்கை இருந்த போது., உன் பிடிவாதம் பார்த்த பிறகு எதுவும் சொல்லுறது இல்லை”., என்றாள்.

      “வேண்டாம் வேண்டாம் ன்னு சொன்னேன்., அந்த கல்யாண பேச்சு  எடுத்த பிறகு எப்ப பாரு எங்க வீட்டில் உள்ள எல்லோரும் என்கிட்ட மூஞ்ச காட்டுறாங்க”., என்றாள்.

        “ஆமா., உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க., எல்லாரும் மூஞ்ச காட்டுறாங்க ன்னு சொல்லுற.,  நீ இருக்குற., உங்க அம்மாவும் அப்பாவும் தானே”., என்று கேட்டாள்.

           எங்க அம்மாவும் அப்பாவும் குடும்ப மொத்தத்திலும் சொல்லிட்டாங்க., எங்க பாட்டி தாத்தா கூட ஒழுங்கா பேசுறது இல்லை, திட்டுறாங்க., எப்ப போன் பண்ணி பேச போனாலும் திட்றாங்க.,  அதனால நான் இப்ப யாருட்டையும் பேசுவதில்லை”., என்று சொன்னாள்.

        “சரி விடு விடு., உன் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தானே”., என்று சொன்னாள்.

         “என்னடி சகஜம்., என்னடி சகஜம்., இதுவரைக்கும் யாரும் என்கிட்ட மூஞ்சி காட்டினதே கிடையாது., தெரியுமா., திட்டுவாங்க ஆனால் அடுத்த நிமிஷமே மது ன்னு பேசுவாங்க., ஆனா எல்லாரும் ஒண்ணு போல மூஞ்சை தூக்கிட்டு சுத்துறாங்க.,

       கிட்டத்தட்ட எத்தனை மாசம் ஆச்சு யோசிச்சு பாரு., எக்ஸாம் நடக்கும் போது பேச ஆரம்பிச்சது., அந்த சமயத்தில் ஒரு பதினைந்து நாள்.,  அதுக்கப்புறம் எக்ஸாம் லீவுல ஒரு ஒன் அண்ட் ஆப் மன்த் போயிருச்சு., இப்ப காலேஜ் சேர்ந்து  கிட்டத்தட்ட நாலு மாசம் முடிஞ்சிருச்சி., யாரும் என்கிட்ட ஒழுங்காவே பேச மாட்டாங்க., இந்த சிவா  பக்கி இந்த மேரேஜ் மேட்டர் பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட பேசுறதே நிப்பாட்டிட்டான்.,

      இவ்வளவு தானா அவன் ப்ரெண்ட்ஸ் சிப்.,  ஏன் இவ்வளவு பழகனும்.,  குட்டி பிள்ளைங்களா இருந்ததில் இருந்து நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ பிரண்ட்ஸ் தெரியுமா., நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ் தெரியுமா.,  ஆனால் அந்த பன்னி மாடு என்கிட்டே பேசுறதே நிறுத்திட்டு.., நான் தான் சொன்னேனே.,  பிரெண்ட்ஷிப் வேற, குடும்பம் வேற., தயவுசெய்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் சிப்போட நிறுத்திக்கோ ன்னு சொன்னேன் கேட்டானா அந்த பக்கி.,

         எங்க அண்ணன கல்யாணம் பண்ணு.,  எங்க குடும்பத்துல ஒருத்தியாகு ன்னு அவன் சொல்லி தேவையில்லாம பாரு.,  இப்ப பாரு எவ்வளவு இப்பிரச்சினை இழுத்துவிட்டு இருக்காங்க.., அவங்க வீட்ல உள்ளவர்களும் ஒழுங்கா பேசுறது எல்லாம் கிடையாது போல., வீட்ல யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுறதே இல்லை.,  இந்த பன்னி  நாயும் என் கூட பேசறது இல்ல.,  எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா..,  எல்லாரும் ஆளாளுக்கு இப்படி இருந்தா எனக்கு எப்படி படிப்பில் காண்ஸன்ரேட் பண்ண முடியும்., ஏன்டா இப்படி படிக்க வந்தோம் ன்னு இருக்கு”., என்று சொன்னாள்.

            “அப்ப பேசாம கல்யாணம் பண்ணிக்கோ.,  சரின்னு சொல்லிட்டு கல்யாணம் பண்ணிட்டு போ” என்று அவள் தோழி நந்தினி சொன்னாள்.

         “ஏண்டி உடனே கல்யாணம் தானா.,  இவங்க எல்லாம் நார்மலா இருந்தாலே நான் நார்மலா படித்து விடுவேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

          “அடியே லூசு மது.,  கல்யாணம் பண்ணிட்டு போயிட்ட னா இந்த படிக்கிற தொல்லை., எக்ஸாம் தொல்லை., இன்டர்னல் மார்க்., எக்ஸ்ட்ரா மார்க்.,  செமஸ்டர்.,  மேடம் பனிஷ்மென்ட்.,  பிரக்டிகல் நோட்ஸ் எழுதுவது.,  இந்த மாதிரி எந்த தொந்தரவும் இல்லாம ஜாலியா கல்யாணம் பண்ணிட்டு போகலாம்”.,  என்று சொன்னாள்.

     அவளை முறைத்து பார்த்தபடி இருக்க.,

     நந்தினியோ “ஏண்டி முறைச்சி பார்க்குற” என்று கேட்டாள்.

         “என்னது மொரச்சி பார்க்காமல் உன்னை கொஞ்சுவாங்களா.,  ஜாலியா கல்யாணம் பண்ணிட்டு போ ன்னு சொல்லுற., கல்யாணம் பண்ணி போனவங்க ட்ட போய் கேளு., ஜாலியா இருக்கா., இல்ல மாமியார் கொடுமை.,  கொடுமை நாத்தனார் கொடுமை.,  புருஷன் டென்ஷன் ன்னு எல்லா பிரச்சினையும் இழுத்து போட்டு மண்டையில் காயவைத்திருப்பாங்க.,

        நானு  இந்த சின்ன வயசுல அவ்வளவு பிரச்சினையை பாக்கணும்னு என்ன தலையெழுத்தா.,  அதுக்கு காலேஜ்ல எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் கூட ஜாலியா இருந்துட்டு போயிடலாம்., யோசிச்சு பாக்க மாட்டியாடி லூசு” என்று மது அவளைத் திட்டினாள்.,

          அவள் தோழியும் “நீதாண்டி லூசு.,  எனக்கெல்லாம் எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்., எங்க அக்காவுக்கு மேரேஜ் பண்ணி வச்சாங்க.,  அவளுக்கு லைஃப்ல பிரச்சனை அப்பா அம்மா வீட்டுக்கு அப்பப்ப வந்துட்டு போறா.,

       எங்க அப்பா என்னன்னா  நீ பி.ஜி பண்ணிட்டு ஒரு வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் உனக்கு கல்யாணம் ன்னு சொல்லிட்டாங்க.,  நானே தலையெழுத்தே ன்னு படிச்சுக்கிட்டே இடையில எக்ஸாம் எழுத ட்ரை பண்ணிட்டு இருக்கேன்., நீ என்னனா  படிக்கிறன்னு நிக்குற., உங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கிற ன்னு சொல்றாங்க.,

        அதுவும் மாப்பிள்ளை எப்படி மாப்ள.,  நீ வேண்டாம்னு சொல்ற.,  உனக்கு அவரை பத்தி தெரியும்., அவங்க வீட்டைப் பற்றி உனக்கு  தெரியும்., வேற என்ன வேணும்”., என்றாள்.

         “அடியேய் நந்தி சிவாவோட அண்ணன பத்தி உனக்கு என்ன தெரியும்., சரியான சிடுமூஞ்சி.,  எப்ப பாரு., கடுகடு ன்னு தான் பேசுவாங்க., எப்போ குத்தம் கண்டு பிடிக்கலாம் ன்னு என்னையும் சிவாவையும் ஸ்கூல் டைம்ல பார்த்துட்டே இருப்பாங்க., என்னைய வெளியே பார்த்தாலே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.,  என்னால ஒரு அஞ்சு நிமிஷம் அவங்க முன்னாடி நின்னு பேச கூட முடியாது.,  அவங்களை போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றியே., எப்படி நடக்கும் யோசிச்சு பாக்க மாட்டியா”.,  என்று அவளும் பதிலுக்கு கேட்டாள்.

           “அடியே மக்கு மது கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் ன்னு சொல்வாங்க., கோபக்காரராக இருந்தாலும் உன்னை நல்லா பாத்துக்குவாரா இருக்கும்”., என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே.,

     “ஒருவேளை நல்ல பார்த்துக்கலைனா”.,  என்று இவள் இடையில் கேள்வி கேட்டாள்.

       “லூசு நான் பேசுறத முழுசா பேச விடு”., என்று சொன்னவள் “அவங்க கோப  படுறவங்களா  இருந்தாலும் ஒரு வேளை நல்லவங்களா இருந்து உன்ன நல்ல பார்த்துக்கிட்டாங்கனா அதைவிட என்ன பிளஸ் இருக்கும்”., என்று கேட்டாள்.,

        சற்று நேரம் யோசித்தவள்., “இல்லை இல்லை சரிப்பட்டு வராது.,  வேண்டாம் வேண்டாம்”., என்று சொல்லிவிட்டு அமைதி காத்தாள்.

        மீண்டும் மதுவின் தோழி பேசத் தொடங்கினாள்., “அடியே இப்படி யோசிச்சிப் பாரேன்., ஒவ்வொரு வீட்டில் மாமியார் டென்ஷன்., மாமனார், நாத்தனார் டென்ஷன் ன்னு இப்பதான நீ சொன்ன., உனக்கு அந்த விதத்தில் எல்லாம் ஒரு டென்ஷன் கூட இல்லை.,  இதுல நீ என்ன ன்னு கேக்குறியா.,  உனக்கு பிடிச்சதசெஞ்சு கொடுக்கிற மாமியாரு., உன்ன மகள் மாதிரி பார்த்துக்குற மாமனார்., உன் கூடவே ஜாலியா இருக்கிற., உனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்கிற ஒரு கொழுந்தனார்.,

         இதெல்லாம் எங்க போனாலும் கிடைக்காது சொல்லு., வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா.,  இந்தமாதிரி ஃபேமிலி கிடைக்குமா”., என்று சொன்னாள்.,

      சற்று நேரம் அமைதியாக இருந்தவள்.,  “முடியாது கல்யாணம்னாலே கிணற்றில் விழுவது தான்., அது என்ன தெரிஞ்ச கிணறு., தெரியாத கிணறு ன்னு.,  எந்த கல்யாணமா இருந்தாலும் அப்படித்தான் அது செட்டாகாது”.,  என்று சொன்னாள்.

       “அப்ப நீ இப்படியே தனியாவே இரு., உன்கிட்ட பேச வந்தேன் பாரு., என்ன சொல்லணும்”., என்று சொல்லிவிட்டு அவள் போகவும்.,

                “இவள யாரும் தூது விட்டு இருப்பார்களோ” என்று தனக்குள் கேட்டவள்., ‘சேச் சே  இல்லை இல்லை அம்மா ரெண்டு மாசம் அத பத்தி பேசவே இல்ல., அப்படினா இருக்காது இருக்காது’ என்று அவளே மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.,

      இவள் தனியாக குழம்புவது பார்த்த மதுவின் தோழியோ.,  ‘நீ தாண்டி தனியா அமைதியா சுத்துற., உன்கிட்ட தாண்டி யாரும் பேச மாட்டிக்காங்க.,  அவங்க எல்லாரும் குடும்பம் மொத்தமும் நீ இல்லாத நேரம் விருந்து வைத்து கொண்டாடிட்டு இருக்காங்க.,

        எப்படியும் உன்னை சம்மதிக்க வைத்துவிடலாம் நம்பிக்கையில் இருக்காங்க., நீ என்னன்னா எல்லாருக்கும் டேக்கா கொடுத்துட்டு நான் சம்மதிக்க மாட்டேன்னு சுத்திட்டு இருக்குற.,  லூசு நல்ல இடத்தை எப்படி மிஸ் பண்ற’., என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     தேவையில்லாமல் நீ தடுமாறும்.. ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..!

Advertisement