Advertisement

       “உன் கிட்ட போயி பேசினேன் பாரு., என்னைய சொல்லனும்.,  நான் எங்கேயாவது போறேண்டி.,  அப்ப தான் இவங்களுக்கெல்லாம் அறிவு வரும்”., என்று சொன்னாள்.

        “லூசு மாதிரி பேசாத போ., காபி குடிச்சிட்டு படி”., என்று சொல்லியவள் போனை வைத்தாள்.

     அதற்குள் இங்கு இடி இடிக்க தொடங்கவும்.,  இவளும் போனை கட் செய்துவிட்டு ‘இனிஎன்ன செய்யலாம்., இவர்களெல்லாம் இப்படியே இருந்தால் நான் என்னதான் செய்வது’ என்று யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

     அவள் சொன்னது போல் தெரியாத பிசாசை விட தெரிந்த பேயே மேல் தான் என்று நினைக்க தோன்றினாலும்.,  ஆனாலும் தன்னால் முடியாது என்ற எண்ணத்தோடு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

      ஆனாலும் கோபம் கோபமாக வந்தது உடனே பேப்பரை எடுத்தவள்., என்னை தேட வேண்டாம் என்று எழுதி வைத்து விட்டு சற்று நேரம் வீட்டிற்குள்ளே அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தாள்.,

      பின்பு ஒரு முடிவு எடுத்தவளாய் யோசிப்போம் என்று சொல்லிவிட்டு மெதுவாக வீட்டை விட்டு இறங்கினாள்.

       சற்று நேரத்தில் நன்றாக இருட்ட தொடங்கி மழை பொழிய தொடங்கவும். அதே நேரத்தில் மதுவின் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தனர்.,

          “பாருங்க கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா., கதவை தொறந்து வச்சிருக்கா.,  கதவில் கை வைத்ததும் கதவு ஓபன் ஆகுது., கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.,  இதுல இவளை எல்லாம் அடுத்த வீட்டில் கல்யாணம் பண்ணி கொடுத்தாலும்., நானும் நீங்களும் தான் தலை குனிந்து நிக்கணும்., அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்.,

          யோசிக்கி பாருங்க விளையாட்டுத்தனமாக இருக்கா., எல்லாம் நீங்க கொடுக்கற இடம் தான்”., என்று திட்டிக் கொண்டே உள்ளே வந்தார்.

        மதுவின் அப்பாவும் “இப்ப எதுக்கு  என்ன இழுக்குற நானா செல்லம் கொடுக்கிறேன்.,  ஒரு ஸ்டேஜ்ல நீ தான்  இன்னும் அவளை தங்கமே செல்லமே ன்னு வளர்த்த., இப்போ நான் மட்டும் செல்லம் கொடுத்த மாதிரி பேசுற”., என்றவர்.

        “கொஞ்சம் கொஞ்சமா மாறுவா”.,  என்று சொன்னார்.

        “எப்ப மாற போறா., இங்க பாருங்க மழை பெய்ய ஆரம்பிச்சுருச்சு.,  பின்னாடி கிடைக்குற துணியை கூட எடுக்காம இருக்கா., தூரல் போடும் போதே எடுத்து இருக்கலாம் இல்ல”.,  என்று சொல்லி வேகமாக சென்றவர் பின்புறமாக இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு வந்தார்.,

        “இவ கதவை திறந்து போட்டுட்டு எங்கே போனா”., என்று சொல்லிவிட்டு அவள் அறையை பார்க்க அவள் அறை சாத்தியிருந்தது.,

          “ரூம்குள்ள படுத்து தூங்குவா.,  இல்லனா எதாவது புக் எடுத்துட்டு படிக்கிறேன்  ன்கிற பெயர் பண்ணிட்டு உட்கார்ந்திருப்பா., எப்படியோ போய் தொலைங்க”.,  என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு வந்தவர்.

        “உங்க பிள்ளைக்கு  இருக்குற திமிரு பாத்தீங்களா., ஃப்ரிட்ஜில் இருந்து பால் எடுத்து சூடாக்கி காபி கூட கலந்து குடிக்க முடியலை., இவளுக்கு எல்லாத்தையும் நான் கையில் போட்டு கொடுப்பேன் நெனச்சிட்டு இருக்கா.,  அந்த அளவுக்கு ஆகிப்போயிட்டா.,  வரவர ஒரு பொறுப்பு வேண்டாம்”.,  என்று திட்டி கொண்டே இருந்தார்.

        கிச்சனுக்கு வந்த மதுவின் அப்பா “இப்படி நீ கத்திட்டு இருந்தா., மது உள்ள இருந்து வந்து காபி போடப் போறா ன்னு நினைக்கிறியா இல்ல இல்ல., அப்புறம் என்ன சத்தம் போடுறத விடு., அதெல்லாம் சமைக்க தான் செய்வா., முன்னாடி உன்கூட சேர்ந்து சமையல் எல்லாம் கத்துக்கிட்டா தானே.,  இப்ப வேணும்னே பண்ணுறா ன்னு தெரியுது இல்ல., அதனால விடு”.,  என்று சொல்லிவிட்டு இருவரும் மெதுவாகவே பேசினர். அவள் காதுக்கு கேட்கக்கூடாது என்று.,

அவள்  அங்கே இல்லவே இல்லை என்பது தெரியாமல்.,

        திட்டிக்கொண்டே வீட்டின் மற்ற வேலைகளை பார்த்தாலும்., மனது கேட்காமல் மதுவின் அப்பாவிற்கும் அவருக்கும் காபி கலக்கும் போது மதுவிற்க்கும் சேர்த்து காப்பி கலக்கி டைனிங் டேபிளில் மூடிவைத்துவிட்டு  வேண்டுமென்றே சத்தமாக “உங்க பொண்ண வந்து காபி எடுத்து குடிக்க சொல்லுங்க”., என்று சொன்னார்.

        அறையில் இருந்தால் கண்டிப்பாக அது அவளுக்குக் கேட்கும் என்று.,

     சற்று நேரம் வரை காபியை எடுக்க வராமல் இருக்க.,  “திமிரு வந்து சூடு பண்ணி குடிக்கட்டும் “., என்று மழையைப் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

     “இன்னைக்கு என்ன இப்படி திடீர்னு இப்படி ஒரு மழை., கொஞ்ச நேரத்தில் ஊரே சில்லு ன்னு ஆகிருச்சி” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        அவள் காபி எடுக்காததை பார்த்த அவள் அப்பா தான்., “மதுவுக்கு கொண்டு கொடுத்திட்டு வாறன்”., என்று சொன்னார்.

          “உங்கள் பிள்ளைக்கு திமிரு., வேணும்னா வந்து குடிப்பா., கையில் தூக்கி கொடுக்கிற வேலை எல்லாம் இனி மேல் வைக்க மாட்டேன்., நீங்களும் பழக்காதீங்க”., என்று சொன்னார்.

         “சரி கைல கொடுக்கலை அவ என்ன செய்தா ன்னு பாரு”., என்று ஒரு அப்பாவாக அவர் தன் மகள் மேல் இருக்கும் பிரியத்தை விடாமல் சொன்னார்.,

         “வருவா வந்து குடிப்பா”., என்று சொல்லிவிட்டு மீண்டும் மழையைப் பார்த்துக் கொண்டே  இரவுக்கு என்ன உணவு செய்யலாம் என்று யோசனையோடு அமர்ந்திருந்தார்.

           மதுவின் அப்பாதான் “அவ ரூம் லைட் கூட போடல., என்ன செய்றா ன்னு பாரு”.,  என்று சொன்னார்.

        மதுவின் அம்மா “உங்களுக்கு வேற வேலையே இல்ல., அவளை தாங்கிக்கிட்டு இருக்கிறதே  நீங்கதான்., உங்களை சொன்னா மட்டும் கோவம் வருது”., என்று சொல்லி விட்டு அறையை திறக்க அறையில் வெளிச்சம் எதுவும் இல்லாததால் லைட்டைப் போட்டுவிட்டு..,

       “எங்கடி இருக்க திமிரு பிடிச்சவளே”.,  என்று சத்தம் கொடுத்தார்.

       அங்கு எந்த சத்தமும் இல்லாமல் இருக்க., சுத்தி முத்தி பார்த்தவர்.,  ஒருவேளை பாத்ரூமில் இருக்கிறாளோ.,  என்று அறையோடு இணைந்து இருந்த பாத்ரூமை திறந்து பார்த்தார்.

            கதவு திறந்தே இருக்க அங்கேயும் இல்லை என்றவுடன்.,  “இவ எங்க போனா ரூம்ல இல்லை”., என்று அறையில் இருந்து சத்தம் கொடுத்தார்.

          “என்ன சொல்ற ரூம்ல இல்லாம எங்கே போயிருப்பா”., என்று சொல்லிவிட்டு அவசரமாக அவரும் உள்ளே வந்து பார்க்க அங்கு இல்லை எனும் போது தான்.,

     டேபிளில் இருந்த புத்தகத்தின் அடியிலிருந்த பேப்பரில் என்னை தேட வேண்டாம் என்று எழுதியிருந்தது., அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.,

      “இவ என்ன பண்ணி வச்சிருக்கா பாரு.,  என்னை தேட வேண்டாம் ன்னு எழுதி வச்சிருக்கா., ரொம்ப முகம் காட்டாதே ன்னு சொன்னேன் இல்ல”.,  என்று சொன்னார்.

      “நான் மட்டும் தான் முகம் காட்டினேன் பாருங்க.,  நீங்க முகம் காட்டவே இல்ல பாத்திங்களா., உங்களுக்கு உடனே என்ன குறை சொல்லணும்.,  பண்றதெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு இப்ப மட்டும் என் மேலேயே பழியை போடுங்க”., என்று சொன்னார்.

      “சரி விடு அவ எங்கே போனா பாரு” என்று சொல்லி விட்டு “சிவா வீட்டுக்கு” என்று சொல்ல வந்தவர் “இல்ல இல்ல அவங்க வீட்ல ஊருக்கு போய்ட்டாங்களே”., என்று சொன்னார்.

         “ஆமா எல்லாம் இவளால் தான்., சம்மதம் சொல்லலை இல்ல., அதனால தான் சிவா அம்மாவும் வாராவாரம் சரணை பார்க்க அங்கே போயிடுவாங்க.,  இல்லனா அந்த பையன் இங்க வந்தா இவ எதுவும் பிரச்சினை பண்ணிடக் கூடாது ன்னு பயந்து போய் தான் இவங்க அங்க போயிட்டு இருக்காங்க”., என்று சொன்னார்.

          “இப்ப என்ன செய்ய., இந்த நேரத்தில் எங்கேயும் போய் இருக்க வாய்ப்பு இல்லை., பக்கத்து வீடு பூட்டி இருக்கு”என்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு “நந்தினி வீட்டுக்கு போன் பண்ணி கேளு”., என்று சொன்னார்.,

      “ஸ்கூட்டி வெளியே தான் இருக்கு.,  அவ அப்படி நந்தினி வீட்டுக்கு போறதா இருந்தா வண்டி எடுத்துட்டு தானே போயிருப்பா”., என்று யோசனையோடு சொன்னார். பின் அவரே

     “சரி அக்கம் பக்கத்து வீட்டில்  இன்னொரு ஸ்கூல் ப்ரண்ட் இருக்கா இல்ல அங்க இருக்காளா ன்னு பார்த்துட்டு வரேன்”., என்று சொன்னார்.

        மதுவின் அப்பாவோ “யார் வீட்ல என்ன ன்னு போய் கேட்க முடியும்., என் பிள்ளைய காணும் உங்க வீட்டுக்கு வந்தாலானா கேட்க முடியும்”., என்று கோபத்துடன் சொல்லிவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக தேடத் தொடங்கினர்.

       மதுவின் அம்மா குடையை எடுத்துக் கொண்டு வீட்டை சுற்றி தேடி வர.,  மதுவின் அப்பாவோ ஒரு குடையை எடுத்துக்கொண்டு சற்று தூரங்களுக்கு சென்று தேடி வந்தார்.,

Advertisement