Advertisement

சிவாவின் அம்மாவும் பின்னாடியே செல்ல.,  சிவா வந்து பார்த்தவுடன்., அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும்., மது என்று அவன் கூப்பிட அவளோ அவனின் அழைப்பிற்கு திரும்பியும் பார்க்கவில்லை.,

    சிவா அமைதியாக காத்து நிற்பதை பார்த்தவுடன்., சரண் தான் பதில் சொன்னான்.

           “சரி நீ போ., அப்புறம் அவட்ட பேசு”., என்றான்.

        “போகும் போது கதவை சாத்திட்டு போ., நான் அவட்ட பேசணும்., அவங்கள அப்புறமா பால் கொண்டு வரச் சொல்லு”., என்று சொல்லவும்.,  கதவை சாத்திவிட்டு சிவா சென்றான்.

        “இப்போ உனக்கு என்ன பிரச்சனை., மொட்டை மாடியில் போய் உட்கார்ந்திருந்த.,  எதுக்கு என்னை யாரும் தேட வேண்டாம் எழுதிட்டு போன”., என்று வரிசையாக கேள்வி கேட்டான்.

    “இது ஒன்னும் உங்க கோர்ட் இல்ல.,  இங்கே நீங்க ஒன்னும் ஜட்ஜ் இல்லை” என்றாள் கோபமாக

      அவனுக்கோ சிரிப்புதான் வந்தது., “இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல., என்ன பிரச்சினை உனக்கு, இப்போ எதுக்காக இப்படி பண்ணின”., என்று கேட்டான்.

        “எல்லாரும் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப் படுத்தினாங்க”., என்று சொன்னாள்.

“சரி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப் படுத்தினாங்க., அப்ப அதை நீ என் கிட்ட தானே சொல்லணும்., என்னை கட்டாயப்படுத்துறாங்க  அப்படின்னு.,  நீ என்கிட்ட தானே சொல்லி இருக்கணும்.,  அத விட்டுட்டு நீயே முடிவு பண்ணுவியா”., என்று கேட்டான்.

       “எனக்கு கல்யாணம் வேண்டாம்”என்றாள்.

      “சரி கல்யாணம் வேண்டாம்., அப்படின்னா அதை என் கிட்ட தானே சொல்லணும்., அதை விட்டுட்டு ஏன் மொட்டை மாடிக்குப் போன”., என்று கேட்டான்.,

     “யாருமே என்கிட்ட பேசல., முகம் காட்டினாங்க”என்றாள்.

       “திரும்பத் திரும்ப  அதை  தான் நான் கேட்கிறேன் உன்கிட்ட.,   எல்லாரும் பேசல உன்கிட்ட கோபப்பட்டாங்க.,  எல்லாம் செஞ்சாங்க தானே நீ அதை என்கிட்ட  சொல்லணுமா இல்லையா”., என்று கேட்டான்.

     அமைதியாக குனிந்திருந்தவளைப் பார்த்தவன்.,

     “மது என்னை பார்த்து பேசு.,  நிமிந்து பார்த்து பேசு” என்று சொன்னான்.

       அவளோ “இல்ல நீங்க திட்டுவீங்க”., என்றாள்.

       “சரி திட்டல சொல்லு., கல்யாணம் பிடிக்கலயா., இல்ல என்னைய புடிக்கலையா., இல்லனா  ஏன் கல்யாணம் பிடிக்கலை”., என்று கேட்டான்.

      “எனக்கு கல்யாணமே வேண்டாம்”., என்றான்.

       “அது தான் கேட்கிறேன், என்னன்னு சொல்லு” என்று கேட்டான்.

       ‘இவங்ககிட்ட போய் நான் எப்படி சொல்லுவேன்’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு மண்டையை பிய்த்துக் கொண்டவள்.,   ‘வசமா மாட்டி விட்டுட்டீங்களே.,  இப்ப பார்த்து யாரும் வரமாட்டாங்களே’என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே குனிந்து கொண்டிருந்தாள்.

   “மது நீ பதில் சொல்லாமல் நான் இங்கிருந்து நகர மாட்டேன்., எந்த பதிலா இருந்தாலும் நீ தான்  இப்ப சொல்லனும்., ஏன்னா அவங்க யாரும் உன்கிட்ட இனிமேல் இதைப் பத்திப் பேச மாட்டாங்க., இப்ப நான் தான் பேசியே ஆகணும் சொல்லு., என்ன விஷயம் உனக்கு என்ன பிரச்சனை”., என்று கேட்டான்.,

      அழுகுரல் தொண்டையை அடைக்க  “எனக்கு கல்யாணம் பிடிக்கலை” என்றாள்.

      கிளிப்பிள்ளை போல அதையே மீண்டும் சொன்னாள்.

        “சரி கல்யாணம் பிடிக்கல.,  கல்யாணம் பிடிக்கலைன்னா ஏன் பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே”., என்றான்.,

    “சொன்னேன்., அம்மா புரிஞ்சுக்காம வேற மாப்பிள்ளை பார்ப்பேன்னு சொன்னாங்க”., என்றாள்.

      “சரி உனக்கு என்னைய பிடிக்கலைன்னா., வேற மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வேண்டியது தானே”., என்றான்.,

        அவனை நிமிர்ந்து பார்த்தவள்., “எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்றேன் இல்ல”.,  என்று சத்தமாக சொன்னாள்.

     “சத்தம் போட்டு பேசக்கூடாது” என்றான்.

      “நானும் அதையே தான் சொல்றேன்., இது ஒன்னும் உங்க கோர்ட் இல்ல.,  இங்க ஒன்னும் நீங்க ஜட்ஜ் இல்லை.,  மறுபடியும் மறுபடியும் நீங்க  திட்டி பேசுறீங்க”., என்று சொன்னாள்.

       “உன்ன அதட்டி பேசறது உனக்கு பிடிக்காது அப்படியா” என்றான்.

    ” எனக்கு நிறைய பிடிக்காது அதுக்கு என்ன பண்ண”., என்று சொன்னாள்.

       “சரி என்ன எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லு நான் முடிஞ்சா மாத்திக்கிறேன்” என்று சொன்னாள்.

      “நீங்க ஒன்னும் மாத்திக்க வேண்டாம்”., என்றாள்.

       “ஏன் மாத்திக்க வேண்டாம் மாத்திக்கிட்டா என்னைய கல்யாணம் பண்ணிக்க வேண்டியது வரும் னா”., என்று கேட்டான்.

     ‘மீண்டும் மீண்டும் இதையே திருப்பி  என்ட்ட கேட்டா எப்படி பதில் சொல்ல’ என்று மானசீகமாக புலம்பியவள்.

     “எனக்கு யோசிக்கணும் விடுங்க” என்றாள்.

    “சரி யோசி நல்ல யோசி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தினி கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள்.

         வந்தவள் “எருமமாடு சொல்லிட்டு போய் தொலைய வேண்டியது தானே எருமமாடே.,  நீ மாடிக்கு போறதா இருந்தாலும் என்கிட்ட மாடி போறேன்டி மொட்டை மாடியில் போய் மழையில்  நனைய போறேன்டி அப்படின்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.,

      எல்லாரையும் பயங்காட்டி எத்தனை தடவை தேடி  அலைய வைக்குற”., என்று சொல்லி அருகில் வந்தவள் அடிக்கப் போகவும்.,

       “ஹலோ ஹலோ உங்க கோவம் தான் எங்க எல்லாருக்கும்., கோபத்தை எல்லாம் நாளைக்கு காட்டுங்க.,  இன்னைக்கு விடுங்க அவளை”., என்று சொன்னாள்.

    “நீங்க இப்படியே சப்போர்ட் பண்ணிட்டே இருங்க” என்று சொல்லிவிட்டு “நீங்க சப்போர்ட் பண்ண மட்டும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுவா ன்னு நினைக்காதீங்க., அதெல்லாம் சம்மதிக்க மாட்டா.,  சரியான ராங்கி புடிச்சவ”.,  என்று சொல்லிவிட்டு

      “இருடி உனக்கு நாளைக்கு வந்து வச்சுக்கிறேன்”., என்று சொல்லிவிட்டு காணுமே ன்னு எனக்கு டென்ஷனா இருந்துச்சு., இப்போ போன் பண்ணி உங்க அம்மா சொல்லவும்  உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன்.,  நாளைக்கு காலைல வந்து உனக்கு இருக்கு.,  ஒரு நாளைக்கு காலேஜுக்கு லீவு  போடுறேன்.,  வந்து உன்ன  அடிச்சா தான் எனக்கு நிம்மதி”., எனக்கவும் அவளை நிமிர்ந்து பார்த்த மதுவை பார்த்தவள்., உனக்காக ஒரு நாள் காலேஜ்  போகாட்டி ஒன்னும் கெட்டுப் போகாது.,  நாளைக்கு இருக்கு உனக்கு” என்று சொல்லிவிட்டு “நான் கிளம்புறேன்”., என்று சொல்லி விட்டு வெளியே சென்றவள்

     வீட்டினரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

       இங்கோ அவள் அமைதி காக்க ., சரண் மெதுவாக  அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் “நல்ல யோசிச்சு வை நாளைக்கு நான் வந்து பேச வரேன்.,  நாளைக்கு நீ எனக்கு பதில் சொல்லணும்.,  ஏன்னா இன்னைக்கு நீ எதுவும் சொல்ல மாட்ட ன்னு எனக்கு தெரியும்., இப்ப மாத்திரை போட்டுட்டு தூங்கு.,  எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது., வேற ஏதாவது அப்படி இப்படின்னு ஏதாவது இந்த மாதிரி எழுதி வைக்கிற அது இதுன்னு சொன்னா.,  நாளைக்கு வந்து உனக்கு பேசிக்கிறேன்”., என்று சொல்லி விட்டு அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்தான்.,

      அவனைப் பார்த்தவள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பார்க்க.,  “என்ன” என்று கேட்டான்.

      “இப்படி தான் நீங்க எப்போவும் அதட்டி அதட்டி பேசுறீங்க., உங்களை போய் கல்யாணம் பண்ணிட்டு உங்க கூட எப்படி இருக்க முடியும்”.,  என்று கேட்டான்.

        அவனுக்கு ஒரு புறம் சிரிப்பு தான் வந்தது., ‘இவ என்னைய  என்ன நினைச்சுக்கிட்டா.,  கல்யாணம் ஆனா கூட நான் எப்பவும் அதட்டிட்டே இருப்பேனா., ஐயோ இவள” என்று யோசித்தவன்.

     “அதை நாளைக்கு வந்து சொல்றேன் சரியா., இப்போ மாத்திரை போட்டுட்டு தூங்கு” என்று சொல்லி வெளியே பார்த்து சத்தம் கொடுத்தான்.

       பாலும் மாத்திரையும் எடுத்துக் கொண்டு இருவரின் அம்மாவும் வர.,

          “கொடுங்க தூங்கட்டும் காலையில நான் இவகிட்ட பேசுறேன்.,  எனக்கு அவ கிட்ட கொஞ்சம் நிறையவே பேசணும்”., என்று சொல்லிவிட்டு “ஒழுங்கா தூங்கு.,  அங்கே இங்கே நகரக்கூடாது பாத்துக்கோ” என்று மிரட்டி விட்டு தான் சென்றான்.,

     “ஏன்டா இப்படி மிரட்டிட்டே இருக்க”., என்று அவன் அம்மா கேட்டார்.

       “பேசாம இருங்க.,  நான் பார்த்துக்கிறேன்”., என்று சொன்னவன் “தூங்கு மாத்திரை போட்டுட்ட தானே” என்று அதட்டலாக சொல்லி விட்டே வெளியே சென்றான்.

       அவளோ மதுவின் அம்மாவும்., சிவாவின் அம்மாவும் இருக்க.,  “இப்படி அதட்டிட்டே இருக்கிறவரை தான் ., நீங்க கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு  இருக்கீங்க., எப்பவும் இப்படி ஏதாவது என்னைய தப்பு சொல்லிட்டே இருப்பாங்க”., என்று சொன்னாள்.

   “வாயமூடிட்டு தூங்கு”  என்று சொல்லி மதுவின் அம்மா அதட்டி  மீதி பாலைக் கொடுக்க வாங்கி குடித்தவள்.,  மீண்டும் போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.

சில இடத்தில் நீ வாய் திறந்தால்மாட்டிக் கொள்வாய் அமைதியாகஇருக்க பழகி கொள்..!

Advertisement