சரண் இறங்கி வரவும் சரியாக இருந்தது.

   அவனுக்கோ தூங்கி எழுந்த பிறகு தான், அவள் தன்னிடம் சண்டை போட்டதே நினைவு வர, ‘அச்சச்சோ இவ என்ன பண்ணி இருக்கான்னு தெரியலையே’, என்று யோசனையோடு இறங்கி வர,

அவளோ சிவாவுடன் வெளியே கிளம்பி கொண்டிருந்தாள்.

   சிவாவை பார்த்து “டேய் காலங்காத்தால ரெண்டு பேரும் எங்க டா போறீங்க”,  என்று கேட்டான்.

    “அது” என்று. அவன் தயங்கும் போதே,

    இவளோ “இப்ப என் கூட வாரியா இல்லையாடா”, என்று அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

    அவன் தயங்க, அவன் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டே வெளியே சென்று,

     “வண்டி எடு”, என்று சொன்னான்.

       சரணும் “போய் தொலையறது தான் தொலையுறீங்க, ரெண்டு பேரும் கார்ல போங்க ,வண்டி வேண்டாம்”, என்று சொன்னாள்.

   இவளோ “காரை எடுத்த உன்ன கொலை பண்ணிடுவேன், வா வண்டில போவோம்”, என்று கூப்பிட அவனும் இருதலைக்கொல்லி எறும்பாக திருத்திருத்தவன்.,

   வேறு வழி இன்றி வண்டியை எடுத்துக்கொண்டு செல்ல, இடுப்பில் கையை வைத்த படி அவன் அம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    “ஏன்டா என்ன முறைக்கிற, நீயும் உன் பொண்டாட்டி கிட்ட பேச தெரியாம பேசின, அவ  உன்கிட்ட கோவத்த காமிக்கிறதுக்கு எல்லாரையும் டென்ஷனாக்கி விட்டுட்டு சுத்துறா,  இப்ப எங்க போறேன்னு நானே கேட்கல, நீ எதுக்கு வந்து கேட்ட”, என்றார்.

     “நீங்க கேட்க மாட்டீங்களா” என்றான்.

     “என்ன கேட்க சொல்ற, வெளியே போறேன் ன்னு சொல்லுறா, எங்க போற ன்னு கேட்டா நல்லவா இருக்கும், வந்து சொல்லுவா பேசாம இரு”, என்றார்.

      “அப்படி என்ன முக்கியமான வேலை”, என்றான்.

         “அவ ஏதோ முக்கியமான வேலை இருக்குமா இருக்கும்,  பேசாம இரு, என்னமோ பண்ணிட்டு போறா, நீ பேசின பேச்சுக்கு  நீ கிடந்து அல்லாடுற, இப்ப என்னையும் அவகிட்ட எங்க போறன்னு கேட்டுட்டு என்னையும் டென்ஷன் ஆக சொல்றியா”, என்றார்.

     சரணிடம் காஃபி கொடுத்தவர், “காபி குடிச்சிட்டு உட்கார்ந்து, உன் பேப்பர் படிக்கிற வேலையை பாரு, வருவா இன்னும் கொஞ்ச நேரத்துல”, என்று சொன்னார்.

    “ஏம்மா இப்படி இருக்கீங்க, எதுவும் கேக்க மாட்டீங்களா”, என்றான்.

       “டேய் அவ சின்ன புள்ளடா, நீ ஏதாவது சொல்லி அவ கோபப்பட்டு சுத்துறா, அந்த கோபத்துல போய் ஏதாவது நான் சொன்னேன் னா, உங்க பையனுக்காக என்கிட்ட பேசுறீங்க ன்னு  சொல்லுவா, இது தேவையா”, என்றார்.

     “சிவா கிட்ட போன் பண்ணி எங்க போறன்னு கேளுங்க, அவ எங்க போறான்னு எனக்கு தெரியணும்”, என்று டென்ஷன் ஆக கேட்டான்.

     “நீயும் உன் டென்ஷனும்”, என்று சொன்னவர், சிவாவிற்கு ஃபோன் செய்ய எடுத்தது மது,

      “மது சிவா ட்ட போன குடு”, என்றார்.

“என்னத்த கேட்கணும், கேளுங்க” என்றாள்.

    “நீ எங்க போற”, என்று கேட்டார்.

    “அப்பவே கேட்காம இப்ப கேக்குறீங்க”, என்றவள் “கண்டிப்பா சொல்லிட்டு போகனுமா”, என்று கேட்டவள்,

     “உங்க பெரிய பையனுக்கு உங்க சொந்தத்துல பொண்ணு பாக்க போறேன், காலையில ஒரு அலைன்ஸ் மெசேஜ் வந்துச்சு, அதான் சிவாவை துணைக்கு கூட்டிட்டு போய் பாத்துட்டு வரேன், உங்க பையன ரெடியாக இருக்க சொல்லுங்க,  பொண்ணு ஓகேவா இருந்துச்சின்னா, கல்யாணம் பண்ணி வச்சுருவோம்”, என்று சொல்லி விட்டு போனை கட் செய்தாள்.

    சிவாவோ “ஏய் லூசு என்ன செஞ்சுகிட்டு இருக்க”, என்று கேட்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை,

     “உங்க அண்ணன் கொஞ்ச நேரத்துக்கு டென்ஷனாவே சுத்தட்டும்”, என்று சொன்னாள்.

      அவனும் “நீ டென்ஷன் பண்றேன் ன்னு சொல்லுற, ஆனால்  இப்போ நீ சொல்றத பார்த்தா, எங்க அண்ணன் கொஞ்ச நேரத்துல குஷி ஆயிடுவான் போலயே, பரவாயில்ல பொண்டாட்டியே நமக்கு பொண்ணு பாக்குறாளே நினைச்சிருவான் போலயே”, என்று சொன்னான்.

    “ஓஹோ அப்படி மட்டும் உங்க அண்ணன் நினைக்கட்டும், அதுக்கப்புறம் பாரேன் என்ன நடக்குதுன்னு”, என்று சொன்னவள்,

    “அதுக்கப்புறம் உங்க அண்ணனுக்கு வீட்ல சாப்பாடு கிடையாது, ஒன்னும் கிடையாது, எப்படி கோர்ட்டுக்கு போறாருன்னு மட்டும் பாரு”, என்று சொன்னவள்,

    “இருக்கட்டும் போய் பார்த்துகிறேன்” என்று சொன்னபடி அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.,

      அதே நேரம் நந்தினி வந்து சேரவும் சரியாக இருந்தது.

    இருவரையும் ஒன்றாக வைத்துக் கொண்டு, “இங்க பாருங்க, நீ ப்ரொபோஸ் பண்றதா இருந்தா நீ நேர்ல பண்ணு, உனக்கு புடிச்சிருக்கா பிடிக்கலையா என்பதை நீ பதில் சொல்லு, நாள பின்ன லவ் பண்ணாம போயிட்டோமே, அப்படின்னு நீங்க ஃபீல் பண்ண கூடாது பார்த்தியா அதுக்காக தான் இப்ப ரெண்டு பேரையும் ஒரே இடத்தில் மீட் பண்ண வச்சிருக்கேன், சீக்கிரம் பேசி முடிச்சுட்டு வந்து சேருங்க, நான் அங்க போய் இருக்கிறேன்”, என்று சொல்லி விட்டு அந்த பார்க்கில் தள்ளி இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு சரணைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

     ‘உண்மை தானே, சரண் தன்னை விரும்புவதாக தெரிந்த நேரத்தில் இவன் சொல்லி இருந்தால் நல்லா இருக்குமே, என்று நினைத்த நேரங்களும் உண்டு, சில நேரம் நம் சொதப்பி இருப்போம் என்றாலும், நிச்சயமாக கொஞ்ச நாளில் சம்மதம் தெரிவித்திருப்போமோ’, என்ற எண்ணமும் இவளுக்கு அடிக்கடி வர தான் செய்தது.

  அதற்காக தான் இருவரையும் இப்போது சந்திக்க செய்தது. எப்படியும் அவளுக்கு வேலை கிடைக்கும் வரை அவர்கள் அவள் வீட்டில் திருமணம் பேச மாட்டார்கள், வேறு யாரையும் பார்க்க மாட்டார்கள், இங்கு முதலில் சரணிடம் சம்மதம் வாங்கினால் தான் அவன் அம்மாவும் அப்பாவும் சம்மதிப்பார்கள் என்பது தெரியும்.

    அதற்காகவே இவர்கள் இருவரையும் முதலில் பேச வைத்து விடுவோம், இவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும், அதற்குள் வீட்டில் பேசி சம்மதத்தை வாங்கலாம் என்ற எண்ணத்தோடு தான் இருவரையும் சந்திக்க செய்வது என முடிவு செய்து அழைத்து வந்திருந்தாள்.

   அரை மணி நேரம் சென்று இருவரும் வரும் போது இருவர் முகமும் சற்று தெளிந்திருப்பதை கண்டவள்,

    சிரித்தபடி “என்ன பேசி முடிவு பண்ணிட்டீங்களா”, என்று கேட்டாள்.

        “நீ எப்ப இந்த வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்ச”, என்று கேட்டாள்.

    “என்ன பண்ண ரெண்டு பேரும் ஃபிரண்டா போய் தொலைச்சிட்டீங்களே, அதனால தான்”, என்று சொன்னவள்.

   “அதெல்லாம் வேற ஒரு ரீசன், அதெல்லாம் உங்களுக்கு புரியாது”, என்று சொன்னவள்.

    “சீக்கிரம் நீ எக்ஸாம் கிளியர் பண்ற வழிய பாரு, சிவா நீ சீக்கிரம் வீட்ல மெதுவா ஓபன் பண்ற விஷயத்தை பாரு, அதுக்குள்ள நான் உங்க அண்ணன் ட்ட பேசி சரிகட்டுற வழியை பார்க்கிறேன், என்னால முடிஞ்சது இவ்வளவு தாம்பா மீதி நீங்க தான் பாத்துக்கணும்”, என்று சொன்னபடி ,

    “சரி நாங்க கிளம்புறோம், நீ சீக்கிரம் முடிவுக்கு வா”, என்று சொன்னாள்.

        அவளோ “நான் எங்க முடிவுக்கு வர, நீயும் உன் ப்ரண்ட் சேர்ந்து தான் என் முடிவு இதுதான் அப்படிங்கற மாதிரி டிசைட் பண்றீங்களே”, என்று சொன்னாள்.

     “ஏய் இந்த வார்த்தை மட்டும் சொல்லக்கூடாது, உனக்கும் ஓகேவா இருக்கணும், அவனுக்கும் ஓகேவா இருக்கணும், அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாங்க, இப்ப எல்லாம் பேசுறதுக்கு நிறைய டைம் கிடைக்கும் பேசுங்க, ஆனா எக்ஸாம்ல கான்சன்ட்ரேட் பண்ணுறத விட்டுறாத”, என்று சொன்னாள்.

     நந்தினியோ அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “சாரிடி நானும் உன் ப்ரண்ட்ம் சேர்ந்து தான் உன் படிப்பை கெடுத்துட்டோம், இல்லாட்டி நீ நல்ல படிச்சிருப்ப, நீ தான் பிஜி பண்ணனும்னு ஆசைப்பட்ட, இப்ப நீ பிஜி பண்ண முடியாம இருக்க”, என்று சொன்னாள்.

     “நல்லவேளை ஞாபகப்படுத்தின, இதையும் போய் உங்க அண்ணனை பிடிச்சு, இன்னைக்கு ஒரு வழி பண்றேன்”, என்று சொன்னாள்.

     “ஏமா அவனே உன்னை மலை இறக்குவதிற்கு படாத பாடு பட்டுட்டு இருக்கான், நீ மறுபடியும் மலை ஏறினா எப்படிமா”, என்று சிவா கேட்டான்.

     “வாடா வந்து சேரு , உங்க அண்ணனுக்காக உங்க அண்ணன் மலை இறக்க வைக்கிறதுக்காக போராடுவதை பார்த்து நானும் இறங்குகலாம்  ன்னு முடிவு பண்ணிக்கிறேன், வா வா”, என்று சொன்னாள்.

     “சரி ஓகே, ரெண்டு பேரும் பேசிக்கோங்க, ஏன்னா இந்த நாட்கள மிஸ் பண்ண கூடாது, மிஸ் பண்ணுனா பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவோம்”, என்று சொல்லி விட்டு சந்தோஷத்தோடு நந்தினியை அணைத்து பிடித்தவள் மகிழ்வோடு அவளிடம் விடைபெற்றாள்.

    இருவரும் வீடு வந்து சேரும் போது ஹாலிலேயே அமர்ந்திருந்தான் சரண்.

  வெற்றி பெறுவதற்கான
முதல் ரசியம்
உற்சாகத்துடனும்
நம்பிக்கையுடனும்
இருப்பதே..!