Advertisement

      அருகில் அமர்ந்திருந்த நந்தினி தான்., அவள் கையை பிடித்துக் கொண்டு, “லூசு மாதிரி பேசாத மது., உன்னோட லைஃப்ல பின்னாடி யோசிச்சி பார்ப்ப., கண்டிப்பா நீ அந்த  அண்ணாவோட சந்தோஷமா இருப்ப., அத மட்டும் உறுதியா இல்லசொல்லுறேன்., உனக்கு இதைவிட நல்ல  குடும்பம்., உன்ன புரிஞ்சிக்கிட்ட அத்த மாமா எங்க கிடைப்பாங்க சொல்லு.வெளியே போய் பாரு பொண்ணுங்களுக்கு எவ்ளோ பிரச்சனை இருக்கு தெரியுமா.மாமியார் பிரச்சனை.மாமனார் பிரச்சினை.நாத்தனார் பிரச்சனை., குடும்ப உறவுகளில் பிரச்சனை ன்னு  எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா..,

     இங்க உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.உங்க அம்மா அப்பாவும்.நிம்மதியா இருப்பாங்க பார்த்துக்கோ.பக்கத்து பக்கத்து வீடு.நாளைக்கு நீ உங்க அம்மா அப்பாவ விட்டு பிரியனும் ன்னு அவசியமில்லை.பக்கத்துல தான் இருப்ப.எப்ப வேணும்னாலும்  உங்க அம்மா அப்பாவ பாத்துக்கலாம்., நீ ஊர்ல இல்லனா  கூட பக்கத்துல இருப்பதால.சிவாவோட அம்மா அப்பாவும் உங்க அம்மா அப்பா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்பாங்க., அதெல்லாம் யோசிக்க மாட்டியா”.என்று சொன்னாள்.

      அமைதியாக குனிந்து கொண்டே இருக்க.அவளும் “ரொம்ப செல்பீஷா  யோசிக்காத எல்லாத்தையும் மாற்றி யோசி., நான் எங்க அக்கா லைஃப்ல எவ்வளவு பிரச்சினை பார்த்துட்டேன் தெரியுமா., இப்ப தோணுது எங்க சொந்தத்திலேயே யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கலாம் ன்னு, அப்பா இப்ப ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க.என்ன பண்ண.., அடிக்கடி சண்டை போட்டுட்டு வீட்டுக்கு வர்றா.திருப்பி சமாதானம் பண்ணி  அனுப்பி கொண்டே இருக்கிறாங்க., அந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன் வரக்கூடாது ன்னு தான்., நான் உனக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.,

        என்ன சொல்லுறது புரியுதா., லூசு மாதிரி யோசிக்காமல் சரின்னு சொல்லு”., என்று சொன்னாள்.

          “அதான் அவங்க இஷ்டத்துக்கு முடிவு  பண்ணிட்டாங்களே.இனிமேல் நான் என்ன சம்மதம் சொல்றது” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

       அப்போது அறை வாசலுக்கு வந்த மதுவின் அம்மா தான்., “அவளை குளிச்சிட்டு சாப்பிட சொல்லுமா., காபி குடிச்சதோட உட்காந்துட்டு இருக்கா., மாத்திரை போடணும்”என்று சொன்னார்.

      “போய் குளிச்சிட்டு வா., நான் உட்கார்ந்து இருக்கேன்” என்று சொன்னாள் நந்தினி.

           அவளும் வேறு வழியில்லாமல் துணிகளை எடுத்துக்கொண்டு சென்றாள். “மது வெந்நீர் ல குளி.இந்த குளிர்ல பச்சதண்ணீய ஊத்திக்காத.மறுபடியும் காய்ச்சல் வந்துரும்”என்று சொன்னார்.

           வெந்நீர் வைத்து குளித்துவிட்டு  உடை மாற்றி  அமர்ந்திருந்தவளிடம்  “மனசை போட்டு குழப்பிக்காத., ரிலாக்ஸா இரு சரியா., இனிமேலாவது ஒழுங்கா படி செமஸ்டர் முடிச்சிட்டு கல்யாணத்தை பண்ணிட்டு போ”., என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பெரியவர்கள் ஜோசியரிடம் செல்வதற்காக கிளம்பி கொண்டிருப்பது தெரிந்தது.,

    மது உணவு முடிக்கவும்., வீட்டுப் பெரியவர்கள் வெளியே சென்றவர்கள்  அனைவரும் வரவும் சரியாக இருந்தது.

          ஒரு மாதத்திற்குள் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்பது போல தேதி குறிக்கப்பட்டிருந்தது.

      அவளோ ஒரு இயலா தன்மையோடு நந்தினியை திரும்பிப் பார்க்க., அவளோ “இப்ப என்ன அவசரம் கல்யாணம் பண்ணி போயிட்டு மெதுவா வந்து எக்ஸாம் எழுது., இப்ப என்ன வந்து நீ படிச்சு முடிச்சதெல்லாம் போதும்” என்று நந்தினி கிண்டல் செய்தாள்.

அவளோ “என்னால் தாண்டி நீயே படிக்க வந்த” என்று நந்தினியிடம் சொன்னாள்.

ஆமா உன்னால தான் பி.ஜி பண்ண வந்தேன்., இல்லனா கோச்சிங் கிளாஸ் போய் எக்ஸாம் எழுதி. வேலைக்கு சேர்ந்து இருப்பேன்”., என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

வெளி வார்த்தையாக வாய் பேசிக் கொண்டிருந்தாலும் மனமோ சரணை நினைத்து சற்று பதட்டமாகவே இருந்தது.

அதற்குள் அவள் அத்தை தான் “என்ன மது தலைய கட்டாமல் உட்கார்ந்திருக்க” என்று சொல்லி அப்பாவின் உடன் பிறந்தவள் வர., கூடவே தாய்மாமன் மனைவியும் வந்தார்.

அவளோ “இருக்கட்டும் அத்த கட்டிக்கிறேன்” என்று சொல்லும் போதே.,

இனிமேல் அப்படி இருக்கக்கூடாது., பொறுப்பாக இருக்க கற்றுக் கொள்”., என்று சொல்லி விட்டு அவளுக்கு முடியை பிரித்து விட்டுக் சிக்கெடுக்கத் தொடங்கினார்.

நேற்று இரவு மழையில் நனைந்து தலையை அப்படியே விரித்து விட்டது தான் அதனால் இப்போது சிக்கெடுத்து அவளுக்கு அவளத்தை தலையைப் பின்னி விட., இவளோ எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

தாய் மாமாவின் மனைவி தான், “உனக்கு இதைவிட என்ன வேணும் ங்கிற, சின்ன வயசுல எக்ஸாம் எழுதுறதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா., பொறுப்பான பையன் இதுக்கு மேல என்ன வேணும்., உனக்கு தெரிஞ்ச குடும்பம் ஏற்கனவே அத்தை மாமா ன்னு பழகியிருக்கிற., அவங்க வீட்டு சின்ன பையனும் நீயும் பிரெண்ட் வேற., சின்னதிலிருந்து பிரெண்ட்ஸ் பழக்கம், உனக்கு எந்த பிக்கல் பிடுங்கல் பிரச்சினை எதுவும் கிடையாது, ஒவ்வொரு வீட்ல போய் பாரு அப்ப தெரியும், வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு அப்படியே வெளியே உள்ள பிரச்சினையும் தெரியாமல் வளர்ந்தா இப்படித்தான்., வெளியே போய் பிரச்சினை பார்க்கும் போது தான் நம்ம எவ்வளவு சிறப்பான இடத்தில் இருக்கோம் அப்படிங்கிறது புரியும்., உனக்கு இப்ப புரியாது கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் புரியும்”., என்று சொன்னார்.

எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தாள் மது., “இவ வாயை திறந்து பேசவே மாட்டேங்கிறா., சரியான அமுக்கினி” என்று அவள் அத்தை சொன்னார்.

மனதிற்குள் அவளோ இனிமேல் எல்லாம் பேசவே முடியாது, முக்கியமா சரண் முன்னாடி‘., என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

நந்தினி அவளோடு இருக்க வீட்டுக்கு வந்தவர்கள் அவளுக்கு அறிவுரை வழங்கி விட்டு சென்றனர்.

இவ்வளவு அட்வைஸ் கேக்குறதுக்கு அவனையே கல்யாணம் பண்ணிட்டு போயிருக்கலாம் என்னும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருந்தாள்.

இனி எதுவும் சொல்வதற்கு இல்லை எனும் சூழ்நிலையில் சிவாவின் அம்மாவும் அப்பாவும் வந்து “ரொம்ப யோசிக்காத மது, எல்லாம் சரியாக நடக்கும், நீ உன்னையே குழப்பிக் கொண்டிருந்த ன்னு எங்களுக்கு தோணுச்சு., அதுக்கு தான் உனக்கு டைம் கொடுக்கலாம் ன்னு நினைச்சோம்., ஆனா எல்லாம் தலைகீழா மாறிடுச்சு., ஒன்னுமில்ல யோசிக்காமல் இரு, கல்யாணத்துக்கப்புறம் படிச்சுக்கோ” என்று சொல்ல எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் ஆட்டினாள்.

வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை சிவாவின் அம்மாவிற்கு இவள் அமைதியாக இருப்பது ஒருபுறம் வருத்தம் அளித்தாலும், எல்லாம் தன்னால சரியாகி விடும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சென்றனர்.

மதுவின் அப்பாவும் அம்மாவும் கடைசியாக வந்து நின்றனர், “நீ எங்களுக்கு ஒரே பொண்ணு டா., உனக்கு அப்படி எதுவும் நாங்க கெடுதல் செய்ய மாட்டோம், நம்பு எங்க புள்ள நல்லா இருக்கணும்னு தான் நாங்க நினைப்போம், அதை தான் இப்பவும் யோசிச்சோம், மற்றபடி எதுவும் கிடையாது, உன்னை விட எங்களுக்கு சரணைப் பத்தி நல்லா தெரியும், நீ சிவா கூட மட்டும் தான் பேசுவ பழகுவ., அத்தை மாமா ன்னு அவங்ககிட்ட பேசினாலும், சிவா கூட இருந்த அளவுக்கு மற்ற யாரிடமும் பேசுவது பழகுவது கிடையாது, அதனால தான் சொல்றேன் எங்களுக்கு தெரியும் உனக்கு எல்லா விதத்திலயும் சரியா இருப்பாரு, புரிஞ்சதா” என்று சொல்ல அமைதியாக தலையை ஆட்டவும்.

அவள் அம்மாதான் “வாயைத் திறந்து பதில் சொல்லுடி, எல்லாரும் பேசும் போதும் இப்படித்தான் தலையாட்டினயா” என்று சொல்ல அதற்கும் தலையை மட்டும் ஆட்டினாள்.

மது அம்மாவோ அப்பாவிடம் “உங்க புள்ளைக்கு ஓவரா செல்லம் கொடுத்து நீங்கதான்., எப்படி கெடுத்து வச்சிருக்கீங்க”., என்று சொல்ல

மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள் அம்மாவை முறைத்துக் கொண்டே தலையை குனிந்து கொண்டாள்.

அதே நேரம் வெளியே வாங்க தம்பி என்று மரியாதையோடு பேசும் சத்தம் கேட்கவும்., ‘வந்துட்டான் போலியேஎன்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டிருக்க.,

எல்லாரும் மரியாதை நிமித்தம் பேசிக்கொண்டிருக்க., தாத்தா தான் வீட்டினரிடம் “தம்பி ன்னு கூப்பிடாதீங்க., இனிமே மாப்பிள்ளை ன்னு கூப்பிடுங்க” என்று சொன்னார்.

அதற்கு சரணோ “இல்ல இல்ல,எப்பவும் போலவே இருங்க, இப்படி எல்லாம் மாத்தாதீங்க” என்று சொல்லிவிட்டு மது சாப்பிடலா என்று அவனின் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

சாப்பிட்டா கம்மியா தான் சாப்பிட்டா., என்று சொன்னார்.

நான் அவ கூட பேசணும்” என்று வெளியே சரண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவா உள்ளே வர.,

அவனைப் பார்த்த மதுவோ கையில் கிடைத்ததை தூக்கி அவன் மேல் ஏறிய, அவனோ அதை கேட்ச் பிடித்த படி விலகியவன்.

பாவி ஜட்ஜ் அ கல்யாணம் பண்ணினா., நீ கொலை பண்ணி தப்பிச்சிறலாம் ன்னு நினைக்காதே., அதுவும் என்னையே கொலை பண்ண ட்ரை பண்ணுவியா” என்று கையில் இருந்த புத்தகத்தை தூக்கி பார்த்து “அம்மாடியோ இவ்வளவு பெரிய வெயிட்டு., இந்த புக்கை அவ என் மேல வீசும் பக்கத்தில் இருந்து பார்த்து விட்டு இருக்கியே” என்று நந்தினியிடம் பேச.,

அவளோ “சும்மா இரு அவ டென்ஷன் ல இருக்கா”., என்று மெதுவான குரலில் சொல்லி அவனுக்கு செய்கை காட்ட.,

அதே நேரம் சரண் வந்து விட நந்தினி எழ போனாள்.,

Advertisement