Advertisement

டேய் எரும நான் எப்படா அப்படிசொன்னேன்“., என்று அடிக்க போக அவனோ வேகமாக தள்ளி நின்றான்.,

          “டேய் இங்க என்ன  நடந்துட்டுருக்கு.,  உங்க ரெண்டு பேர்ட்ட தான் கேள்வி கேட்டுட்டு இருக்கோம்., அவ தூங்கணும் சீக்கிரம் அனுப்பு ன்னு நீ கத்துற., அவ என்னனா.,  இதான் சாக்குன்னு உன் பின்னாடி வந்து இன்னும் என்னமோ சொல்லிட்டே இருக்கா.,  என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்“.,  என்று கேட்டார்.

  “சத்தியமா ஒன்னயும் நினைக்கல“., என்று ரெண்டு பேரும் ஒன்று போல சொன்னார்கள்.

          மதுவின் அம்மாவும்., சிவாவின் அம்மாவும் தான்உங்க ரெண்டு பேத்துக்கும் எத்தனை எத்தனை தான் அட்வைஸ் கொடுப்பது.,  எத்தனை முறை எப்படி எப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்தாச்சு., இரண்டு பேரும் அடங்கவே மாட்டீங்களா“., என்று கேட்டனர்.

       இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிரித்து கொண்டே., “ரொம்ப சிரமம் ட்ரை பண்ணாதீங்க., நாங்க தான் சொல்லிட்டோமே., இனி உங்ககிட்ட சொல்லாமல் வெளியே போகலை போதுமா“.,  என்று இருவரும் சொல்லிவிட்டு,

             “ஷ்ஷ்., உங்க பஞ்சாயத்து முடிஞ்சிச்சா.,  ஓடுங்க ஓடுங்க“.,  என்று சொல்லிவிட்டு இருவரும் நகர போகவும்.,

         சரண் தான் இருவரையும்ரெண்டு பேரும் நில்லுங்க“., என்று சொன்னான்.

      “டேய் பஞ்சாயத்து தலைவர் சொல்லாம போறோம் ன்னு பிடிச்சி நிப்பாட்டுறாங்க“., என்று சொன்னாள்.

            “வாயை மூடு எரும., அவன் கிட்ட தான் இப்போ பிரச்சனையே  பெருசா வந்து  நிக்குது“., என்று அவன் பதற.,

        “ரெண்டு பேரும் நாளைக்கு எழுதிக் கொடுங்க.,  இனிமேல் இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு போக மாட்டோம் அப்படின்னு சொல்லி எழுதிக் கொடுங்க., ரெண்டு பேரும் சின்னப் பிள்ளையிலிருந்து பழகுறவங்க தான்., உங்களை யாரும் தப்பா நினைக்கல.,

       நீங்க அடுத்த டயலாக் அது தான் சொல்லுவீங்க.,  என்ன எங்க  இரண்டு பேரையும் நம்பலையா.,  நாங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்., நாங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளையில் இருந்து ஒன்னாவே இருக்கோம்., எங்க ரெண்டு பேரையும் தப்பா நினைக்க கூடாது., நாங்க ரெண்டு பேரும் நகமும் சதையும் அப்படின்னு டயலாக் விடுவீங்க அதுதானே..,  பாருங்க இப்பவும் உங்களை யாரும் எதுவும் சொல்ல போறது கிடையாது.., 

       இனிமேல் இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு போக மாட்டோம் ன்னு.,  ப்ராமிஸ் பண்ணி கொடுங்க..,  எதுவா இருந்தாலும் வீட்டுக்கு தெரிஞ்சி தான் போகணும்.,  சிவா உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னிங்.,  இன்னொரு தடவை இந்த மாதிரி எங்கேயாவது அவளை கூட்டிட்டு போனேன்னு தெரிஞ்சது., அப்புறம்  நடக்கிறதே வேற உனக்கு“., என்று சொன்னான்.

             அவன் சொன்ன விதம் அங்கு உள்ளவர்களுக்கு சற்று பயத்தை கொடுத்தது.,  ஆம் காலம் கிடைக்கும் கிடப்பில் ஒரு பெண்ணை தனியாக ஒரு ஒரு ஆண் கூட்டி செல்வது எவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே.,  அதனால் அனைவரும் பயத்தோடு இருவரையும் பார்க்க இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.

       பின்பு  சிவாதான்இல்ல எனக்கு அவளோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்., நான் அப்படி எல்லாம்  இனிமேல் எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேன்.,  இது அவளோட சின்ன வயசு ஆசை இந்த மாதிரி போகணும் அப்படின்னு சொல்லி அதனாலதான் கூட்டிட்டு போனேன்“., என்று சொன்னான்.

          இனி அப்படி பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போக மாட்டேன் என்று உறுதி கொடுக்கும் போது.,

      மதுவோ வாயை திறக்காமல் அமைதியாக இருந்தாள்.  “வாயை திறக்குறாளா பாருங்க“.,  என்று மதுவின் அம்மா திட்டினார்.

        “சரி சரி.,  அதான் சிவா சொல்லிட்டான் இல்ல.,  அவன் தானே கூட்டிட்டு போகனும்.,  நீங்க யார் இங்க எல்லாம் கூட்டிட்டு போக போறீங்க.,  ஒருத்தரும் தான் கூட்டிட்டு போக மாட்டீங்க இல்ல.,  அப்புறம் என்ன போங்க“.,  என்று சொல்லிவிட்டு அவள் நேராக சிவா விட்டு கிச்சனுக்குள் சிவாவை இழுத்துகொண்டு சென்றாள்.

        “தூக்கம் போயிருச்சு டா., இப்ப பசிக்குது வா“., என்று சிவாவிடம் சொல்லிக்கொண்டே செல்வது கேட்டது.,

          “திட்டுறோமே கொஞ்சமாவது அறிவு இருக்காஎன்று மதுவின் அம்மா  சிவாவின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்., 

       அதே நேரத்தில் சரணிடம் அப்பா இருவரும்என்ன பண்ண இருவரையும்என்று கேட்டு கொண்டு இருந்தனர்.

       “ரொம்ப இழுத்து பிடிக்காதீங்க., அதே நேரம் எப்படி எல்லாம் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு ன்னு கொஞ்சம் சொல்லி வைங்க., நான் சொன்னா இரண்டு பேருமே கேட்க மாட்டாங்க., ஆனால் கவனமா பாருங்க., அவங்களுக்கு இப்ப பயம் தெரியாது., பிரச்சனை வர்றதுக்கு முன்னாடியே பாதுகாப்பாஇருக்குறது நல்லது., இந்த வயசுல அட்வைஸ் பண்ணுறவங்கள பார்த்தா வில்லன் மாதிரி தான் தெரியும்., அதே மாதிரி இதுக்கு மேல நான் சொன்னாலும் நல்லா இருக்காது“., என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த செய்தி தாளை புரட்டி பார்க்க தொடங்கினான்.

        “இப்ப அங்க போய்  என்ன செய்றாங்க ன்னு பாருஎன்று மது அப்பா சொன்னார்.

          மதுவின் அம்மாவும் சிவாவின் அம்மாவும் கிச்சனுக்குள் நுழைய., அங்கோ  இரண்டு பேரும் கிச்சனை உருட்டிக் கொண்டே இருந்தனர்.

         “ரெண்டு பேரும் என்னடா செய்றீங்க“.,  என்று கேட்டனர்.

            மது தான்நீங்க உங்க புள்ள பஞ்சாயத்து தலைவர் வந்திருக்கிறார் ன்னு.,  ஏதாவது விதவிதமா செஞ்சு வச்சு இருப்பீங்க இல்ல., அது தான் பாக்க வந்தேன்“., என்று சொன்னாள்.

           சிவாவும்இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் தலைவர் வர்ற அன்னைக்கு எனக்கு கிடைத்தா தான் உண்டு“.,  என்று சொன்னான்.,

               “ஏன் அத்த  உங்களுக்கு இது கொஞ்சம் ஓர வஞ்சனையா தெரியல.,  இப்படியா ஒரு பிள்ளை வந்தா நல்ல சாப்பாடும்., வீட்டில் இருக்குற பிள்ளைக்கு ஒன்றுமில்லாத சாப்பாடு செஞ்சு கொடுக்குறீங்க“., என்று சொன்னபடியே உணவை எடுத்து ஒரு கை பார்த்து கொண்டு இருந்தாள்.

           அவனே  என்னைக்காவது தான் வர்றான்., அவனுக்கு நல்ல சாப்பாடு செஞ்சி கொடுத்து.,  அவனுக்கு பிடிச்சத  பார்த்து செய்ய விட மாட்டீங்களே., இவன்  என்ன அப்படியா  இருக்குறான்., அப்பா ட்ட அதை வாங்கிட்டு வா., இத வாங்கிட்டு வானு சொல்லி வாங்கி சாப்பிட்டுக்கிறான்., 

பாத்ததிற்க்கு உங்க வீட்ல வந்து மொக்குறான்., காலேஜ் கேண்டீனில் திங்கறான்., ப்ரண்ட்ஸோட வெளியே திங்கறான்., என்னமோ இவனுக்கு நான் ஒன்னுமே கொடுக்காத மாதிரி நீ அவனுக்கு பில்டப் பண்ணி ஏற்றி விட்டுட்டு இருக்க“.,  என்று  சிவாவின் அம்மா கேட்டுக் கொண்டிருந்தார்.

          போங்கத்த இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்., சிவா நீ ரொம்ப பாவம் டா., உன்னை யாருமே கண்டுக்க மாட்டாங்க.,  ஒருவேளை உன்னை அத்தை தத்தெடுத்து இருப்பாங்களோ.,

        அதனால தான் அத்தை உனக்கு செஞ்சு கொடுக்காம.,  அந்த பஞ்சாயத்து தலைவருக்கு  செய்து கொடுத்துட்டு இருக்காங்களோ“., என்று சொன்னாள்.

        “அடியே நீ இப்ப என்ட்ட அடி வாங்க போறஎன்று மதுவின் அம்மா சொன்னார்.,

         “ஆனாலும் நீங்களும் ரொம்ப மோசம் ம்மா., ஓரே புள்ள பெத்து வச்சிருக்கீங்க.,  எனக்கு இந்த மாதிரி செஞ்சு போட்டு இருக்கீங்களா“., என்று கேட்டாள்.

        ” பண்றதெல்லாம் பண்ணிட்டு ரெண்டு பேரு இங்க வந்து வாயா அடிக்கிறீங்க“., என்று சிவாவின் அப்பாவும் மதுவின் அப்பாவும் வந்து சத்தம் போட்டனர்.,

              அவளோ அவள் சாப்பிடும் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தாள்., அதுவும் ஒரே தட்டில் வைத்து கொண்டு இரண்டும் பேரும்டேய் என்னோட பங்கு., நீ எடுக்காத டாஎன்று இவள் ஒரு பக்கம் இழுக்க.,

        அவனும்நான் ஏன் உன்னோடத  எடுக்கணும் பாரு.,  என்னோடத தான்  கொஞ்சம் காணும்., அத தான் தேடிட்டு இருக்கேன்“., என்று சொல்லி அங்கு உணவிற்கான அடுத்த பஞ்சாயத்தை இருவரும் தொடங்கினர்.

         மதுவின் அம்மா தான்ஏன்டி இப்ப தானே வீட்ல தின்ன“., என்று கேட்டார்.

       “இன்னும் கொஞ்சம் சாப்பிட்டா என்ன.,  இவ்வளவு நேரம் நின்னதுல தூக்கம் போய் பசிவந்துருச்சு., இதை சாப்பிட்டு வந்தால் தூக்கம் நல்லா வரும்“.,என்று சொன்னாள்.

            “இவளையெல்லாம் என்ன பண்ணப் போறேன்னு தெரியல., காலேஜ் போயாச்சு., ஆனால் அறிவு இருக்கா பாரு“., என்று சொன்னார்.

              “காலேஜ் போனா அறிவு வரும் அப்படின்னு உங்களுக்கு யாரு ம்மா சொல்லிக் கொடுத்தா“., என்று கேட்டாள்.

         மதுவின் அப்பாவோ., “இவ திருந்தவே மாட்டா., நீ வா நம்ம வீட்டுக்கு போவோம்“., என்று மதுவின் அம்மாவை அழைத்தார்.

      ” ஐயோ அப்பா விட்டுட்டு போயிடாதீங்க., எனக்கு பயமா இருக்கும்., இருங்க நானும் வரேன்“., என்று சொன்னாள்.

       சிவாவின் அம்மா தான்யாரு உனக்கு பயமா இருக்கும்.,  இதை நம்ப சொல்ற சுவர் ஏறி குதித்து ஓடுவது., கேட் ஏறி குதிச்சு போறது இதெல்லாம் செஞ்சிட்டு., இப்ப நல்ல பிள்ளை மாதிரி உனக்கு பயமா இருக்குமா“.,  என்று கேட்டார்.,

            சாப்பிட்ட கையை விரலை சப்பிக் கொண்டேசரி அத்தை கிளம்புறேன்“., என்று சொன்னாள்.

       “அடியே கையை கழுவிட்டு போடி“., என்று சொன்னார்.

         “டேய் சிவா., தட்டை அத்தை கழுவி வைப்பாங்க., நீ வழிச்சி சாப்பிட்டு சுத்தம் பண்ணாதஎன்று அவனிடம் வம்பு வளர்த்த படி வெளியே சென்றாள்.

             அவள் அம்மாவின் பின்னே செல்ல.,  ஹாலில் அமர்ந்திருந்த சரணிடம் மதுவின் அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொண்டு கிளம்ப.,  இவளோ.,  அங்கு ஒருவன் இருப்பதை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு முன் அங்கிருந்து இறங்கி ஓடினாள்.,

         நீ அறிந்து கொள்ளாதவையும்..நீ புரிந்து கொள்ளாதவையும்உனக்கானது அல்ல..!

Advertisement