Advertisement

உதறி தள்ள நினைக்கும்
போது தான்.,
சுழட்டி அடிக்கும்
சுறாவளியாக இன்னும்
இன்னும் உள்வாங்கிக்
கொள்கிறது நினைவு.,

    அன்று கல்லூரியில் இன்டர்னல் மார்க்  ரிசல்ட் வர., எப்போதும் போல நந்தினி மதுவை திட்டிக் கொண்டிருந்தாள்.,

   “ஏன்டி வீட்டில படிக்கிறியா இல்லையா., இது என்ன மார்க்கு.,  எப்பவும் எப்படி மார்க் வாங்குவ.,  இந்த மார்க் வாங்க  தான் நீ கஷ்டப்பட்டு சண்டை போட்டு காலேஜ்ல ஜாயிண்ட் பண்ணுனீயா., இதுக்கு நீ படிக்க வராமலே இருந்திருக்கலாம்”., என்றாள்.

       “அட போ நந்தி படிக்கிற மூட்  இல்லாம போயிருச்சு., எப்ப பாரு வீட்ல யாரும் முகம் கொடுத்து கூட பேச மாட்டீக்காங்க., ஆளுக்கு ஒரு திசையில் இருக்காங்க., என்னால முடியல இப்படி எல்லாம் இருந்து பழக்கமே இல்லை.,

       இதுக்கு நான் வேற ஏதாவது ஊர்ல ஹாஸ்டலில் சேர்ந்து படித்திருந்தா கூட ஏதோ படிச்சிகிட்டு இருந்திருப்பேனா இருக்கும்.,  இங்க என்னால முடியவே இல்லை., எரிச்சல் கோபம் அழுகை எல்லாம் வருது., யார்கிட்ட போய் சண்டை போட.,

     நான் எதுவும் கேட்க போனாலே அம்மா மூஞ்சி திருப்பிட்டு போயிருவாங்க., அப்பா வந்த உடனே டிவி ஆன் பண்ணிட்டு உட்கார்ந்துருவாங்க.,  இல்லாட்டி அப்பாவும் வெளியே போயிருவாங்க., அம்மா  அடிக்கடி கோயில் கோயில் ன்னு போறாங்க ஓழிய.,  வீட்ல நான் இருக்கிற நேரம் என் கூட இருக்கலாம் என்ற எண்ணம் கூட அவங்களுக்கெல்லாம் இல்ல.,

        அப்புறம் எப்படி மைண்ட்ல படிக்கணும்னு எண்ணம் வரும்., எப்பவும் பழைய விஷயங்களை போட்டு கிளறி கிளறி யோசிக்க தோணுது., படிக்க வர மாட்டேங்குது”., என்றாள்.

           “மது உன்னை நீயே ரொம்ப குழப்பிக்காத விடு.,  அவங்க சொல்லும் போது எதைப்பற்றியும் யோசிக்காமல் படிக்க ஆரம்பித்து விட்டு இப்ப இப்படி சொல்லிட்டு இருந்தேனா.,  செமஸ்டரில் அரியர் போட்டுருவ.,  அதை நியாபகம் வச்சுக்கோ., இதுவரைக்கும் அரியர் இல்லாமல் கிளியர் பண்ணி இருக்க.,  அதைப் யோசிச்சிட்டு படிக்க உட்காரு,  வேற எதை பத்தியும் யோசிக்காதே”.,  என்று தன் தோழிக்கு ஆறுதல் சொன்னாள்.,

       தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு., ‘இந்த சிவாவுக்கு போன் போடணும்., என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க.,  இந்தப் பிள்ளையை இப்படி எல்லாருமா சேர்ந்து டார்ச்சர் பண்ணுவதற்கு பதிலா அவளை 4 அடி அடித்து கல்யாணத்தை பண்ணி வைத்து இருக்கலாம்., இல்லனா ஏதாவது மிரட்டினாலும் கல்யாணத்தை பண்ணி வச்சி இருக்கலாம்., அதை விட்டுட்டு அவள் சம்மதித்த அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும் ன்னு.,  எல்லாரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு வகையில டார்ச்சர் கொடுத்து.,  நல்லா இருக்குற பிள்ளையைக் கெடுத்துட்டு இருக்கிறாங்க’., என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.

       வகுப்பில் ஏனோதானோவென்று பாடத்தை கவனித்தவள் மாலை சற்று சோர்வாகவே வீட்டிற்கு வந்தாள்., அன்று கல்லூரி சற்று சீக்கிரமாகவே முடிய வீட்டிற்கு வந்தவளுக்கு கோபம் தான் வந்தது.,  தன் அம்மாவிடம் பேச தொடங்க வேண்டும் என்று நினைக்கும் போதே அம்மாவும் எங்கேயோ கிளம்பி கொண்டு இருப்பதை பார்த்தவள்.,

    “என்ன இன்னைக்கும் கோவிலுக்கு போறிங்களா”., என்றாள் கோபமாக.,

       “ஏன்டி நான் எங்க போனா என்ன., நீ என்ன என் பேச்சையா கேட்குற.,  எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு செய்ய”., என்று கேட்டார்.

             “ஒஒ…, சொல்லிட்டு போக வேண்டாமா., நான் வீட்லதானே இருக்கேன்., என்னைய விட்டுட்டு நீங்க பேசாம போறீங்க., நானும் உங்ககிட்ட சொல்லாம போகட்டுமா”., என்றாள்.

       “நீ வீட்லயே இரு., இல்லாமல் போ எனக்கென்ன போச்சு.., எங்க பேச்ச நீ கேட்குற வரைக்கும் நான் எதுக்கு உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்”.,  என்று அவரும் கோபமாக பேசினார்.

       அதே நேரம் அவள் அப்பாவும் வர.,  “இன்னைக்கு நீங்களும் சீக்கிரம் வந்தாச்சா ப்பா., ரெண்டு பேரும் சேர்ந்தா வெளியே போக போறீங்க”., என்றாள்.

     “ஆமாடி அப்படித்தான் போவோம்”.,  என்று சொன்னார் மதுவின் அம்மா.

           “நீ பேசாம இரு”.,என்றவர்.,  “நீ ஏன் மதும்மா இப்படி இருக்க., உன் ஆசைப்படியே படிக்க வச்சாச்சு.,  இதுக்கு மேல நீ எதுக்கு கோபப்படுற”.,  என்று அவள் அப்பா சமாதானமாக பேசுவது போல பேசினாலும்., அதில் உன்னுடைய ஆசையை நிறைவேற்றி விட்டோமே பிறகு நீ  ஏன் எங்களை கேட்கிறாய் என்பதுபோல கேள்வி தொக்கி நின்றது.

          “அப்ப நான் உங்கள கேட்கக்கூடாது அப்படித்தானே அப்பா சரி கேட்கல.,  ஆனா ரெண்டு பேரும் வீட்டிலேயே இருக்க மாட்டீக்கீங்க.,  என்னைக்காவது நான் எங்கேயாவது போயிட்டா., அப்புறம் நீங்கதான் தேடுவீங்க”.,

      “நீ எங்கடி போக போற., இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்ட., உன்ன கல்யாணம் கட்டிக் கொடுக்கலாம் ன்னு தான் நாங்க எவ்வளவோ ட்ரை பண்றோம்., அதுக்கே மாட்டேன் மாட்டேங்குற”., என்று கோபமாக சொல்லும் போதே.,

       அவள் அப்பாவோ., “தேவையில்லாம பேசாதே கிளம்பு ஜோசியர் கிளம்பிற போறாரு., மழை வரதுக்குள்ள போயிட்டு வருவோம்.,  இன்னைக்கு என்னன்னு தெரில இப்படி இருட்டிட்டு இருக்கு.,  சீக்கிரமா வா”., என்று சொன்னார்.

      இருவரும் வெளியே கிளம்புவதை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டே இருந்தாள்.,

        அவள் அம்மாவோ  “பிரிட்ஜில் பால் இருக்கு.,  எடுத்து சூடு பண்ணி நீயே காபி கலந்து குடி”.  என்று சொல்லி விட்டு சென்றார்.

       இருவரும் வெளியே செல்வதை பார்த்தவள்., “இங்க பாருங்க நீங்க என்ன மனுஷியா கூட மதிக்க மாட்டேங்கிறீங்க., உங்க பேச்சை கேட்டா மட்டும் தான் உங்க பிள்ளையா என்ன.? என்னைய உங்க பிள்ளை மாதிரி நடத்தலை னா., என்னை பெத்ததிற்கு அர்த்தம் இல்லைங்கிற மாதிரி நடக்குறீங்க.,  எனக்குனு ஒரு மனசு இருக்கும்.,  எனக்குனு ஒரு பிடித்தம் இருக்கும்., நீங்க யோசிக்கவே மாட்டேங்கிறீங்க.,  ஸோ நான் உங்க பேச்சை கேட்டா மட்டும் தான் நீங்க எல்லாமே செய்வீங்க இல்லை., நான் எங்கேயாவது போறேன் நீங்க போங்க., நான் எங்காவது போறேன்..,  எனக்கு ஒன்னும் நீங்க யாரும் தேவை இல்லை”., என்று கத்தினாள்.,

        “அது தாண்டி சொல்றேன்., சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு போ ன்னு தானே சொல்றேன்”., என்று அவள் அம்மாவும் பேசிக் கொண்டே வெளியில் சென்று செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்ப தயாரானார்.,

     அவள் எதுவும் சொல்லாமல் ஹாலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அவர்களது உதாசீணத்தின் பலனாக கோபம் அவளது பார்வையில் தெரிந்தது., கோப பெருமூச்சுகளோடு நந்தினிக்கு அழைத்தவள்.,

        “என்னடி நினைச்சிட்டு இருக்காங்க.,  இப்படி பண்ணிட்டுப் போறாங்க”., என்று வீட்டில் நடந்தவற்றை புலம்பினாள்.

        அவளோ., “லூசு அவங்க வெளியே போனா  போயிட்டு வருவாங்க.,  கிளைமேட் செமையா இருக்கு., ஒரு காபி போட்டுக் குடித்துவிட்டு உட்கார்ந்து படிக்கிற வழியைப்பாரு.,  எப்ப பாரு அவங்க அதை சொல்லிட்டாங்க., இவங்க இதை சொல்லிட்டாங்க ன்னு மத்தவங்களை பற்றி யோசிக்காத.,  உன் வேலை எது உண்டோ அத பாரு.,  அவங்க முன்னாடி படிக்கணும்னு ஆசை பட்ட இல்ல., பின்ன என்ன படிக்கனும்னு ஆசைப் பட்டதை படிக்க வேண்டியது தானே”., என்று சொன்னாள்.

      “அப்போ இவங்களோட உதாசீனத்த பரவால்ல ன்னு ஒதுக்கீடு போக சொல்றியா.,  ஒரே பொண்ணு  நானு எப்படி பார்த்துக்குவாங்க தெரியுமா.,  இப்ப எப்படி அவாய்ட் பண்ணுறாங்க தெரியுமா., அப்படி சரண் முக்கியமா இவங்களுக்கு”.,  என்று கேட்டாள்.

      “இங்க பாரு எனக்கு தெரிஞ்சி நான் உன்கிட்ட ஒரே வார்த்தை தான் சொல்லுவேன்., உடனே உங்க அம்மாக்கு சப்போர்ட் பண்ணி பேசுறேன் ன்னு நீ சொல்லுவ.,  அதனால தான் நான் இப்போதைக்கு உன்ட்ட எதுவும் சொல்லுறது இல்ல.,   நான் சொல்றதை நல்லா கேளு.,  எனக்கு தெரிஞ்சு சரண் உனக்கு பெஸ்ட் சாய்ஸ் தான்.,  நீ நல்ல யோசிச்சிப் பாரேன் யாருனே தெரியாத ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு அவன் வீட்ல போய் கஷ்டப்பட்டுவதற்கு தெரிஞ்சவங்கள கல்யாணம் பண்ணிட்டு என்ன பிரச்சனை வந்தாலும் ஃபேஸ் பண்ணிட்டு போயிரலாமே”., என்றாள்.,

“நம்ம மேல தப்பு இல்ல னா., யாரை கல்யாணம் பண்ணினாலும்  ஓங்கி பேசலாமே.,நானா இவங்க ட்ட கல்யாணம் பண்ணுங்க ன்னு  சொன்னேன்”.,என்று சொன்னாள்.

      “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னைய சொல்லனும்., உனக்கெல்லாம் தெரியாத இடத்தில் போய் வாங்கும் போது தான் தெரியும்., தெரியாத பிசாசை விட தெரிந்த பேயே மேல் ன்னு”., என்றாள் நந்தினி.

Advertisement