அவளுக்குள் தோன்றிய உணர்விற்கு பெயர் தெரியாமல் அப்படியே முழித்துக் கொண்டு நின்றாள்.

“மது என்ன ஆச்சு, ஒன்னே ஒன்னு தானே மது கொடுத்தேன், அதுக்கே இவ்வளவு ஷாக் ஆகுற” என்று கேட்டான்.

  தொண்டை குழி ஏறி இறங்க,  பதட்டத்தோடு “இல்ல நீங்க மாத்தி பேசுறீங்க” என்று லேசாக கலங்கிய குரலோடு சொன்னாள்.

அவனும் “நிஜம்மா மது நீ சொன்னதுக்கு ஓகே சொன்னேன், பாத்துக்கலாம் சொன்னேன், அப்படி தானே சொன்னேன்,  இப்போவும் அதே தான் சொல்றேன்,  நான் பேச்செல்லாம் மாற மாட்டேன், ஆனா உன்ன ஹக் பண்ண கூடாது,  கிஸ் பண்ண கூடாது ன்னு நீ எதுவுமே சொல்லலையே,  இல்லை என்னை தொடவே கூடாது அப்படின்னு நீ எதுவும் சொல்லலையே”,என்றான்.

    ‘ஐயோ ஜாடை மாடையா சொல்ல நினைத்தது, இப்படி போய் முடியுமா’ என்று நினைக்கும் போதே அவன் அணைத்து இருந்த அணைப்பு இறுக்கமாக மாறியது,

      “இப்பவும் அப்படித்தான் பண்றீங்க” என்று தயங்கி சொன்னாள்.

    அவனோ “மது நீ கொஞ்சம் கொஞ்சமா என்னை பழகிக்கோ,  அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன் சரியா., அதுக்காக உன்கிட்ட இருந்து தள்ளி எல்லாம் இருக்க மாட்டேன், உன் பெர்மிஷன் இல்லாமல் எதுவும் நடக்காது சரியா”,என்றான்.

     “என் பெர்மிஷன் இல்லாம தான் கிஸ் பண்ணுனீங்க” என்று சொன்னாள்.

   “அதெல்லாம் நான் கணக்கில் சேர்க்கவில்லை, ஹக் பண்றது, கிஸ் பண்றது, எல்லாம் எனக்கான ரைட்ஸ் ஓகே, நான் கொஞ்சம் கொஞ்சமா உன்னை எனக்கு பழக்கணும், நான் உனக்கு பழகனும், உன் பக்கத்திலேயே வராமல் தள்ளியே நின்னா, அப்புறம் நீ எப்படி என்னை பழகிக்குவ, அப்பவும் பயமா இருக்குன்னு தான் சொல்லுவ, எத்தனை வருஷம் ஆனாலும் இப்படியே தள்ளி தான் நிப்ப, அதனால என்ன பண்ணலாம் நம்ம கொஞ்சம் கொஞ்சமா  பழகிக்கலாம்.,  டென்ஷனாகாத ரிலாக்ஸ் ஆகு, என்று சொல்லி அவளை அணைத்து பிடித்தபடியே மீண்டும் படுக்கையில் அமர வைத்தான்.

பின்பு தோளில் கை போட்ட வண்ணம் அவளிடம் சில விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, அவளும்  அவனுடைய பேச்சில் கவனமாக தொடங்கினாள்.

      தன் வேலை தனது இருப்பிடம் பற்றி சொன்னவன், அங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தான்.

   அவனை உறுத்துப் பார்க்க தொடங்கினாள்.

      “என்ன பார்வை இது?”, என்றான்.

      “பயங்காட்டுறீங்க”, என்றாள் மெதுவாக,

    “பயங்காட்டலை ஜஸ்ட் சொன்னேன், இப்போ கொஞ்சம் தைரியமா இருக்க கத்துக்கணும், யார்ட்டையும் ரொம்ப சிரிச்சு பேச கூடாது, யார்கிட்டயும் மீன்ஸ் எனக்கு கீழே அசிஸ்டென்டா இருக்குறவங்க கிட்ட.,  யார்கிட்டயும் பேசினா உன்னை வச்சு என்கிட்ட காரியம் சாதிக்கலாம் ன்னு நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க, அதுக்காக சொன்னேன் புரியுதா”, என்று சொன்னான்.

      மெதுவாக தலையை ஆட்டிக்கொண்டு “இதிலெல்லாம் ஒழுங்கு தான்” என்று நினைக்கவும்,

    “வேற எதுல சரியில்லை” என்ற கேள்வி வரவும் ,

“நினைக்க கூட முடியலையே” என்று நினைத்தவள். அவனையே பார்க்க,

“என்ன” என்றான்.

      “இல்ல நீங்க நியாயமான ஜட்ஜ்  ன்னு நினைச்சேன், ஆனா நீங்க கேடி ஜட்ஜ்”, என்று சொன்னாள்.

    அவனும் சிரித்துக் கொண்டே  லா  படிக்கிற எல்லார்மே  ஒரு வகையில் கேடி தான்.,  உனக்கு தெரியாது  அங்கே இருக்குற சூழல், அது நல்ல பிள்ளைங்களா படிக்கப் போனா கூட அங்க போன பிறகு கேடியா மாற கூடியவங்க இருக்காங்க சரியா, பல குற்றவாளிகளை பார்க்கிற சூழல், எல்லாமே மாற்றம்  வரும், அப்ப பழக்கம் அப்படி தான் இருக்கும்., அது மட்டுமில்லாம இப்ப என் இடத்தில் இருக்கும் போது நான் எல்லாத்தையும் யோசிக்கணும்,  உள்ள இருக்க கூடிய சாதக பாதகங்கள் எல்லாம் யோசிச்சு முடி பண்ண வேண்டாமா,  அதனால தான்”, என்று சொன்னான்.

அவனையே பார்க்க.,  “என்ன இப்ப பயம் போயிருச்சு போல” என்று அவள் முறைப்பை பார்த்து கிண்டலாக சொன்னான் .

     “நீங்க பேச்சு  மாறிட்டீங்க” என்றாள்.

       “நான் மாறமாட்டேன் எதுவாக இருந்தாலும்  இனிமேல் தெளிவா பேசு, அப்படின்னா பேச்சு மாறாது இல்ல”, என்றான்.

    ‘அது சரி’ என்று தனக்குள் முணங்கி தலையாட்டிக்கொண்டு  அவனிடம் இருந்து தள்ளி நகர்ந்தாள் .

     “என்ன ஆச்சு” என்றான்.

      “எனக்கு தூக்கம் வருது” என்றாள் ,

    “தூங்கு” என்று சொல்லவும்,

  “என்னோட பேக் இங்க தந்துட்டு போனாங்க, எங்கே?”, என்றாள் .

    “அது அந்த டேபிள்ல இருக்கு பாரு”, என்று சொல்லி விட்டு அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

பேக்கை திறந்து ஆராய்ச்சி செய்தவள், திருதிருவென்று முழித்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

   “என்ன” என்றான்.

     “என் போன் கொஞ்சம் தாங்க” என்று அவனருகில் இருந்த போனை கேட்டாள்.

     “இப்ப எதுக்கு போன்” என்றான்.

    “அம்மாவுக்கு போன் பண்ணி நைட் டிரஸ் கேட்கணும், நைட் டிரஸ் இல்ல”,என்று சொன்னாள்.

   “இந்த நேரத்துல போன் பண்ணி, நைட் டிரஸ் கேப்பியா”, என்று கேட்டான்.

  “சாரிஸ் தான் வச்சிருக்காங்க, பேக்ல நைட் டிரஸ் இல்ல, அப்படி இல்லைனா,  இப்படி மாடி பக்கம் ஏறிப்போய்,  அந்த பக்கம் டிரஸ்ஸ எடுத்துட்டு வந்துறட்டுமா”,  என்றாள்.

     “அடி வாங்குவ, முன்னாடி மாதிரி சுவர் ஏறி குதிக்குற வேலை, இந்த மாடியிலிருந்து அந்த  மாடிக்கு தாவுற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது”, என்று சொன்னான்.

    “பின்ன இப்ப நான் நைட் டிரஸ்  க்கு எங்க போவேன்”,என்று அவனிடம் இறக்கி போன குரலில் கேட்டாள்.

    அவனோ “நான் என்ன பண்ணுவேன், எனக்குலாம் ஒன்னும் இல்லை”, என்று சொன்னவன்,

     “ஒன்னு பண்ணு சாரியை கலட்டி வச்சிட்டு படுத்துதூங்கு”, என்று சொன்னான்.

திருதிருவென முழித்தவள் பின்பு “கேடி” என்று சொல்லிவிட்டு யோசனையோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.

அவனோ “என்னதான் பண்ணப் போற, தூங்குற ஐடியா இருக்கா இல்லையா”, என்று கேட்டான்.

   “தூங்கணும் ஆனா இந்த சாரி யோட படுத்தா தூக்கம் வராது” என்று பார்த்துக் கொண்டே நின்றாள்.

அவனும் சிரித்தபடி ‘என்ன தான் செய்வா ன்னு பார்ப்போம்’ என்று யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

     இவளோ இரண்டு முறை அந்த அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள், பின்பு மெதுவாக அவனிடம் “உங்க டி-ஷர்ட் இருக்கா”, என்றாள்.

     ‘டி-ஷர்ட் எதுக்கு கேட்குறா’ என்ற யோசனையோடு “இருக்கு” என்றான்.

    “ஒரு டீ சர்ட் தாங்க”என்றாள்.

    “ஏன்” என்று கேட்டவன், “நான் என் டீ ஷர்டை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்றான்.

     “ப்ளீஸ் ப்ளீஸ்,  இன்னைக்கு ஒரே ஒரு  டி-ஷர்ட் தாங்க” என்று அவனிடம் கேட்டாள்.

“என்ன விஷயம்”,என்று கேட்டான்.

    “என்னால் அப்படி சாரி யோடு தூங்க முடியாது, நான் சாரியை எடுத்துட்டு அந்த டிஷர்ட்டைப் போட்டுக்குவேன்”, என்று சொன்னாள்.

    சிரித்தபடியே தன்னுடைய கபோர்டை திறந்து ஒரு டிஷர்ட் எடுத்து கொடுத்தான்.

    “இல்ல எனக்கு சாதாரண வீட்டிற்கு  போடுற மாதிரி டீ சர்ட் கொடுங்க, இது வெளியே போடுற மாதிரி இருக்கு”, என்று சொன்னாள்.

     சிரித்தபடி கபோர்ட்டை விட்டு நகர்ந்தவன்,  “நீயே எடுத்துக்கோ” என்றான் .

      அவனிடமிருந்து ஒரு கிரே கலர் டீ சர்ட்டை உருவினாள்.

          “நீங்க கொஞ்சம் வெளியே இருந்தா,  நான் மாத்திக்கிறேன்” என்று சொன்னாள்.

     “நான் எதுக்கு வெளியே போகனும், அதெல்லாம் போக முடியாது,  நீ மாத்து” என்றான்.

    “அச்சச்சோ” என்று மனதிற்குள் புலம்பிவள் திரும்பி நின்று கொண்டாள்.

    ‘அவன்  முகத்தை பார்த்தே  கண்டுபிடித்து விடுவானே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,  எப்படி மாற்றுவது என்று யோசித்தவள், அதே யோசனையோடு  குளியல் அறைக்குள் உடையை மாற்றியவள், வெளியே வந்து

எடுத்து வந்த உடைகளை மடித்து எடுத்து அருகில் இருந்த சேரில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் சிரித்தபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

   “ஏன் இவ்வளவு பயம், நான் தான் சொன்னேன்ல உன் பெர்மிஷன் இல்லாம வேற எதுவும் கிடையாது ன்னு , அப்புறம் எதுக்கு இப்படி பயப்படற, என்ன பாத்தா அந்த காஞ்ச மாடு கம்பத்தில் பாயுற மாதிரி இருக்கா”,  என்றான்.

     அவளை பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.,

  “என் டி ஷர்ட்  உனக்கு பெருசா இருக்கு”,என்று சொன்னான்.

‘அப்படித்தான் இருக்கும் போல’ என்று நினைத்துக் கொண்டே வந்து கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து மூடினாள்.