Saturday, May 4, 2024

    மதிப்பு.

    மதிப்பு 7

    அத்தியாயம் - 07 இருளின் கடைசி வெளிச்சம். இரைச்சலின் கடைசி அமைதி. புழுக்கத்தின் கடைசி மழை. பொறுமையின் (patience) கடைசி சகிப்பு (tolerance). சகிப்பின் கடைசி வெடிப்பு (cleft, crack). பாசமானது சிறிது மாசடையும் போது, நியாயமானது லேசாக சாயும் போது அதில் சம்மந்தப்பட்டிருப்பவர்கள் அறியாமல் பொறுமையின் தன்மையானது சிறிது சிறிதாக சகிப்புதன்மையாக மாறிப் போகிறது. அந்தத்...
    “ஆதவன் எங்கே?” என்று அவருடைய அண்ணன் மகள் கேட்ட போது வள்ளியினால் அதை ஒதுக்கி தள்ள முடியவில்லை. பூஜை அறையில் வனஜாவோடு அமர்ந்திருந்தனர் ஆறுமுகமும் வள்ளியும். சவீதாவும் உதயனும் ஒரு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருக்க அவளது குடும்பத்தினர் இன்னொரு படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். வனஜாவின் கணவனும் குழந்தைகளும் வரவேற்பறையில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். வனஜாவின் கேள்விக்குப்...
    அத்தியாயம் - 6 மொழி, உடை, மருத்துவம், பலவகை வாகனம், தொலைத்தொடர்புச் சாதனம் என்று பல கண்டுபிடிப்புகள் மூலம் மனிதனின் வாழ்க்கை முறை மேம்பட்டிருந்தாலும் அத்தனை கண்டுபிடிப்புகளும் உபயோகமற்று போகும் சூழ்நிலைகளைக் கொண்டது தான் மனித வாழ்க்கை. அவமரியாதை, அலட்சியம், அவதூறு, இகழ்ச்சி, பரிகாசம், புறக்கணிப்பு, ஏளனம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு என்று...

    மதிப்பு 5

    அத்தியாயம் - 5 அவர்களைப் போல் உடல் உழைப்பை மட்டும் நம்பி இருக்காமல், ஆதவனைப் போல சொந்த ஊரிலேயே உழன்று கொண்டிருக்காமல், பெரிய படிப்பு படித்து, வெளியூருக்குச் சென்று, பெரிய வேலையில் அமர்ந்து,  பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து. சொந்த வீடு கட்டி சமூகம் மெச்சும்படி அவனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த உதயனை நினைத்து பெருமையாக...
    அத்தியாயம் - 4 வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த ஆறுமுகம் அவரது கைப்பேசியைப் பார்த்தபடி,“என்ன டா அப்போவே அனுப்பி வைக்கறேன்னு உதயன் சொன்னான்..இன்னும் வண்டியைக் காணும்..பரிசுப் பொருளையெல்லாம் ஏத்திட்டுப் போகணும்….ஏற்கனவே பூஜைக்கு லேட்டாகிடுச்சே டா.” என்றார். வாசல் கதவருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆதவனிடமிருந்து அதற்கு பதில் வரவில்லை.  அவனருகே நின்றபடி  ஜன்னல் வழியாக சாலையை வேடிக்கை பார்த்துக்...
    வள்ளி சொன்னது போல் நேரமில்லை என்று ஆதவன் சொல்லவில்லை.  நேரம் அமையவில்லை என்று தான் சொல்லியிருந்தான். தொட்டியத்தில் வசிக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு மதுரகாளியம்மன் கோவிலில் பிரார்த்த்னையை முடிக்க எப்படியும் ஒரு நாள் முழுக்க தேவைப்படும்.  அதைச் செயல்படுத்த இரண்டு முறை திட்டமிட்டான் ஆதவன். இரண்டு முறையும் வேறு வேலைகள் வந்து விட, அவன்...
    அத்தியாயம் - 3 திருமணம் என்னும் நிகழ்வு விச்சிதிரமானது. சிலரின் லாபக் கணக்கின் ஆரம்பம். மீள முடியாத நஷ்டத்தில் தள்ளப்படுகிறார்கள் சிலர். சிலருக்கு அடக்குமுறையிலிருந்து விடுதலை. சிலருக்கு ஆயுள் சிறை. சுயத்தை இழக்கிறார்கள் சிலர். மீட்டெடுக்கிறார்கள் சிலர். சில சமயங்களில் சுயமரியாதையானது தலை நிமிர்ந்து நிற்கிறது. சில சமயங்களில் இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்து...
    அவருடைய பேச்சைக் கேட்டபடி அவருடைய தயவில் மெயின் ரோட்டிற்கு வந்த ஆதவன் அவர் சொன்னபடி அங்கேயிருந்து இரண்டு பேருந்து மாறி உதயனின் ஃபிளாட்டிற்கு வந்த போது நள்ளிரவாகி இருந்தது. சின்ன ஃபிளாட் என்பதால் வாசல் கதவருகே அடுத்த மாடிக்கு செல்லும் வழியில் விருந்தினர்களுக்காக இரண்டு மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்...
    அத்தியாயம் - 2 இருபதாயிரம் ரூபாயைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையானாள் அருந்ததி. கல்யாணத் தரகர், வீட்டுத் தரகர் தொழில் இரண்டும் ஸீஸ்னைப் பொறுத்து தான். அதே போல் இடைத்தரகனான அவளுடைய கணவனின் தொழிலும் ஸீஸ்னைப் பொறுத்து என்று அவளுக்குப் தெரியும். அவன் கொடுத்த பணத்தை வைத்து எத்தனை மாதங்களை ஓட்ட முடியுமென்று எண்ணலானாள்...

    மதிப்பு 1

    மதிப்பு அத்தியாயம் - 1 இருட்டில், டெம்போவின் ஹெட்லைட் வெளிச்சத்தின் உதவியோடு,”இங்கே..இந்தப் பக்கம் அண்ணே..கொஞ்சமா இடதுப் பக்கம் ஒடிங்க..பார்த்து பார்த்து பக்கதிலே பள்ளமிருக்கு..பார்த்து” என்று சமையல் சாமான்களை ஏற்றி வந்த டெம்போவை கேட்டருகே நிறுத்த வழி காட்டிக் கொண்டிருந்தான் ஆதவன். அவன் சொன்னபடி இடதுப் பக்கத்தில் ஒடித்து, லாவகமாக சுற்றுச் சுவரருகே வண்டியை நிறுத்திய போது ‘நச்’ என்று...
    error: Content is protected !!