Advertisement

வள்ளி சொன்னது போல் நேரமில்லை என்று ஆதவன் சொல்லவில்லைநேரம் அமையவில்லை என்று தான் சொல்லியிருந்தான். தொட்டியத்தில் வசிக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு மதுரகாளியம்மன் கோவிலில் பிரார்த்த்னையை முடிக்க எப்படியும் ஒரு நாள் முழுக்க தேவைப்படும்அதைச் செயல்படுத்த இரண்டு முறை திட்டமிட்டான் ஆதவன். இரண்டு முறையும் வேறு வேலைகள் வந்து விட, அவன் நிதி நிலையில் எந்த வேலையையும் வேண்டாம் சொல்ல முடியவில்லை. எனவே அதை சிறிது காலத்திற்கு ஒத்திப் போட்டிருந்தான்.

உறவுக்கார பெண்மணிகளுடன் சாதாரணமாக பேசியபடி வேலை செய்து கொண்டிருந்த வள்ளிக்கு மூத்த மகன், மருமகள் இருவரும் வீட்டிலிருந்து  வெளியே சென்றது சங்கடமாக இருந்ததா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் பேச்சை கேட்டபடி அமர்ந்திருந்த சவீதாவின் அம்மாவிற்குச் சங்கடமாக இருந்தது. சவீதா ஓர் அதிசயப் பிறவி. சென்னையில் வீடிருந்தும் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்றாள். அலுவலகம் அருகில் விடுதி இருந்ததால் அங்கேயிருந்து வேலைக்குச் செல்வது தான் வசதி என்று ஒப்புக் கொள்ளும்படியான காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் அதில்லை என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்வீட்டினரோடு கூட அளவாக தான் பழுகுவாள் சவீதா. தராதரம் பார்க்கக்கூடிய மகள் எப்படி காதல் வயப்பட்டாள் என்று இன்று வரை சவீதாவின் அன்னைக்கு ஆச்சரியம் தான். மாமியாருடன் ஒரே வீட்டில் மகள் குடித்தனம் நடத்துவது அதைவிட மிகப் பெரிய ஆச்சிர்யம். வள்ளியின் பங்குப் பணத்தை மகள் விழுங்கிய விவரம் அவருக்குத் தெரியாது.

ஊரில் இருக்கும் பூர்வீக வீட்டை விற்று அவனது பங்கை புது வீட்டில் போடத் தான் திட்டமிட்டிருந்தான் உதயன். நாமக்கலில் வாடகைக்கு வீடு பார்க்க சொல்லியிருந்தான் வள்ளியிடம். அவர்களது வீடு பழைய வீடாக இருந்தாலும் தொட்டியம் நாமக்கல் நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால் அதன் மதிப்பு  அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. எனவே அதை வெளி ஆள்களுக்கு விலை பேச அவகாசம் தேவைப்பட்டது. காத்திருக்க உதயனிடம் அவகாசமிருக்கவில்லை, அவனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் உடனடியாக ஆதவனின் பெயருக்கு மாற்றிக் கொடுத்தி விட்டு அவனது சேமிப்பு, சுழற்ச்சியில் இருந்தது, கடன், வசூல் என்று அத்தனை பணத்தையும் திரட்டச் சொல்லி இரண்டு தவனைகளில் பெற்றுக் கொண்டு விட்டான். அதில் பெற்றோரின் பங்கும் கணிசமாக இருக்க, அவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறி அவர்களை அவனோடு அழைத்து வந்து விட்டான். மாமியார், மாமனாரின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு அவர்களை வேலையாள்கள் போல் நடத்திக் கொண்டிருந்தாள் சவீதா. வள்ளியின் கண்களுக்கு எல்லாமே உதயனாகத் தெரிவதால் சவீதாவின் செயல்களை தனியாகப் பிரித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு அமையவில்லை.

சின்ன மகனும் மருமகளும் வங்கியில் வாங்கியிருக்கும் வீட்டுக் கடனை அடைக்க கிட்டதட்ட இருபது வருடங்களாகுமென்ற விவரம் தெரிந்திருந்தால் வள்ளிக்கு மாரடைப்பு வந்திருக்கும். விசேஷத்தில் கலந்து கொள்ள வந்திருந்த உறவினர்களுக்கு தெரிய வந்திருந்தால் அவர்களுக்கு மயக்கம் வந்திருக்கும். கடன் பத்திரத்தில் கையொப்பம் போட்டிருந்த இருவருக்கும் அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. கணவன், மனைவி இருவரும் லட்சக் கணக்கில் சம்பாதிப்பதால் ப்ரீபேமண்ட் பெனல்டி (prepayment penalty) காலம் முடிந்தவுடன் கடனை ப்ரீக்ளோஸ் (preclose) செய்து விடலாமென்று திட்டம் போட்டிருந்தனர்

காதல், திருமணம், ஆதவனின் தலையில் பூர்வீக வீடு, மாமனாரின் பங்கை அபகரித்து அவர்களின் சொந்த வீடு என்று அனைத்துமே அவர்களுக்கு சாதகமாக இம்மி பிசகாமல் நடந்தேறியிருந்ததால் அவர்களின் திட்டத்திற்கு இடையூறு வரும் என்று அவர்கள் எண்ணவில்லை. மாற்று திட்டம் எதையும் யோசித்து வைத்திருக்கவில்லை. எண்ணிய எண்ணம் எண்ணியது போலவே நிறைவேறிய இறுமாப்பில் தம்பதியரின் குணம் மொத்தமாக மாறிப் போயிருந்தது. வெளிப்படையான கிண்டல் பேச்சும் உதாசீனமான நடத்தையும் அதிகரித்திருந்தது.

அதை உணர்ந்திருந்தால் தான் அவரது மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள வாயை மூடி அமர்ந்திருந்தார் சவீதாவின் அன்னை. சொந்த அண்ணன் திருமணமாகாமல் இருக்க மகளைத் தம்பி திருமணம் செய்து கொள்வது அவருக்கு உறுத்தலாக தான் இருந்தது. நிச்சயத்தை மட்டும் முடித்துக் கொள்ளலாமென்று மகளுக்கு அறிவுரை சொல்ல அச்சமாக இருந்தது. அவருடைய மகளாக இருந்தாலும் எப்போது, என்ன பேசுவாள், எப்படி நடந்து கொள்வாள் என்று அவரால் கணிக்க முடியாது. அப்படியும் மறைமுகமாக ஆதவனுக்குத் திருமணம் முடியட்டுமென்று அவர் சொன்ன அறிவுரைகளை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவளின் திருமணத்தை சீக்கிரமாக முடிக்க தீவிரமாக இருந்தாள் சவீதா. அதே போல் இந்த வீட்டைக் கட்டி முடிக்க வெகு தீவிரமாக செயல்பட்டு இருந்தாள்

எப்படிப் பணத்தைப் புரட்டினாள், எத்தனை கடன், எவ்வளவு வட்டி என்று எந்த விவரத்தையும் பிறந்த வீட்டினரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அவளுடைய மாமியார் வீட்டைப் பற்றிய பேச்சை ஒரு நாளும் அவள் அனுமதித்தில்லை. அவர்களை நிரந்தரமாக சென்னைக்கு அழைத்து வந்த பின் ஒருமுறை கூட பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை. மாப்பிள்ளையை சந்திக்கும் போதெல்லம் மரியாதைக்காக உதயனிடம் அவன் பெற்றோரைப் பற்றி விசாரிப்பதோடு நிறுத்துக் கொள்வார் சவீதாவின் அன்னை. அவனும் ஒரு வார்த்தையில் பதில் அளித்து உரையாடலை முடித்து விடுவான். ஆதவனைப் பற்றி எப்போதுமே விசாரித்ததில்லை. அவனுக்கு திருமணம் நடக்காமல் இருந்தது அவரை உறுத்திக் கொண்டிருந்ததால் அவனது நலனைப் பற்றி விசாரிக்க தயக்கமாக இருந்தது. அவனது திருமணம் முடிந்த இந்த மூன்று மாதத்தில் தான் நிம்மதியாக உணர்ந்து கொண்டிருக்கிறார். இப்போது அந்த நிம்மதி மறைந்து மீண்டும் அந்த இடத்தில் உறுத்தல் வந்து அமர்ந்து கொண்டது. அதை அகற்ற என்ன செய்வதென்று யோசிக்கலானார் சவீதாவின் தாயார்.

அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டிருந்த அருந்ததி ஒரு முடிவிற்கு வந்து, ஆதவனிடம் தீர்மானமாக,”இனி என்னை இங்கே கூட்டிட்டு வராதீங்க.” என்றாள்.

என்னை அழைச்சிட்டு வராதே..நீ உன் தம்பி வீட்டுக்கு வந்து போ எனக்கு ஒண்ணுமில்லை.’ என்ற அவளது முடிவு அவனிடம் தெளிவாகப் போய்ச் சேரந்தது.

அவனுடைய தம்பியின் சொற்களை செயல்களைப் பொறுத்துப் போக வேண்டிய அவசியம் அவளுக்கில்லை என்பதால் ஆதவனுமே அந்த முடிவுக்கு தான் வந்திருந்தான். இப்போதே அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய அண்ணன் வீட்டிற்கு செல்ல அவனது மனம் பரபரத்தது. ஆனால் அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தான் அவன். கிருஹப்பிரவேசத்திற்கு அவள் வீட்டினரை உதயன் அழைக்கவில்லை. அவர்கள் இருவரும் சென்னை வந்திருப்பது அவளுடைய அண்ணனுக்குத் தெரியாது.  

சவீதாவின் குடும்பத்தினரிடம் அவன் காட்டும் மரியாதையை அவன் மனைவியிடம் சவீதா காட்டவில்லை. உதயனும் அவளும் விரும்பிய அனைத்தையும் நடத்திக் கொள்ள முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறான் ஆதவன். அப்பா, அம்மா பங்கை மொத்தமாக விட்டுக் கொடுத்திருக்கிறான். மூத்தவனாக இருந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அனைவரின் விருப்பத்திற்கும் தலையசைப்பதால் தான் இது போல் மரியாதை இல்லாமல் அவனை நடத்துக்கிறார்கள் என்று இப்போது தான் அவனுக்குப் புரிந்தது. அவனைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும் தம்பிக்காகவே யோசிக்கும் அன்னையின் மீது கோபம் கோபமாக வந்தது. வீட்டில் நடப்பது எதுவும் தெரியாமல் நிம்மதியாக அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய அப்பா மீது ஆத்திரமாக வந்தது. அது எதையும் வெளியிட முடியாத அவனது அவல நிலையை நினைத்து வேதனையானது. ‘இப்போவே ஊருக்குப் புறப்பட்டு போனா என்ன?’ என்ற எண்ணம் தீவிரமான போது,

அம்மாடி, எதுக்கு வெளியே படிலே உட்கார்ந்திருக்க..உள்ளே வந்து படு ம்மா.” என்று அருந்ததியிடம் சொன்னார் வீட்டு வாயிலில் நின்றிருந்த சவீதாவின் தாயார்.

அதைக் கேட்டு சட்டென்று அவனது எண்ணப் போக்கை மாற்றிக் கொண்ட ஆதவன்,”கூப்பிடறாங்க பாரு..நீ உள்ளே போய் படு.” என்றான் அருந்ததியிடம்.

அவளை அழைத்தது சவீதாவின் அன்னை தான் என்றாலும் வீட்டினுள்ளே செல்ல அருந்ததிக்கு விருப்பமில்லை. வீம்புடன் வெளியே அமர்ந்திருக்க அவளது உடல் நிலை அனுமதிக்கவில்லை என்றாலும்

நீங்க?” என்று ஆதவனிடம் கேட்டாள்.

இன்னும் கொஞ்ச நேரம் தானே..இங்கேயே இருக்கேன்.” என்றான்.

கணவன், மனைவி இருவரும் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவர், என்னாவாக இருக்குமென்று சரியாக யுகித்து,”நீயும் உள்ளே வந்து உங்கப்பாவோட படுத்துக்க ப்பா.” என்றார் சவீதாவின் தாயார்.

அவனுடைய அன்னை சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை அவர் செய்ய, அவரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து,”பரவாயில்லை அத்தை..கொஞ்சம் நேரம் தானே..அப்புறம் எப்படியும் புது வீட்டுக்குக் கிளம்பணும்..இவளை உங்களோட படுக்க வைச்சுக்கோங்க.” என்று அருந்ததியை அவருடன் அனுப்பி வைத்தான்.

Advertisement