Sunday, May 5, 2024

    குவியமிடும் நேசம்

    இவளின் மென் குரலிலும் இலகுவான நிலையிலும் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் முன் அமர்ந்தான்.  “ஏங்க இப்போ எப்படி இருக்கு? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் தன்மையாக.  மறுப்பாய் தலை அசையத்தவள், “நோ நீட் டு வொரி, ஐம் ஆல்ரெட்” என்றவள், கையூன்றி தலை குனிந்து, உள்ளங்கைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள். “ஏங்க...
    அத்தியாயம் 08 நிமிர்ந்து நான்கு புறமும் விழிகளைச் சுழற்றிய ஷிவன்யா, வடமேற்கு மூலையில் சுவரோரம் நின்ற மனோவையும் கண்டுகொண்டாள்.  “என்னை ஏங்க பார்க்குறீங்க? இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க” அவள் ஒரு பார்வைக்கே இவன் பிதற்றிக் கொண்டிருந்தான். அவளோ எப்போதும் போல அலட்சியப்படுத்தி விட்டு, இது அது என்று இல்லாது அனைத்து பொத்தான்களையும் விசை கொண்டு அழுத்தினாள்....
    அத்தியாயம் 07 முன்பெல்லாம் ஷிவி தனது வேலைகளில் குறை கூறினாலே வார்த்தைக்கு வார்த்தை வாதாடுவான். அவள் குற்றச்சாட்டுகளைக் கேட்காது அலட்சியப்படுத்துவான் மனோகர்.   ஆனால் இப்போதெல்லாம் காது கொடுத்துக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அந்தஸ்திற்கும் அனுபவத்திற்கும் தன் வேலையைக் குறை கூறுவது நெருடியது. முன்பெல்லாம் கோபம் வரும், இப்போதெல்லாம் துவண்டு ஒருநொடி சோர்வை உணர்ந்தாலும் சரியாகச் செய்கிறேன் பாரென...
    கூட்டுக்குடும்பத்தில் உறவுகளின் கதகதப்பிலே வளர்ந்து விட்ட  மனோவால் தனிமை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  இவனுக்கும் கல்லூரிக்காலம் விடுதி வாசம்தான். ஆனாலும் அப்போதும் இவனைச் சுற்றி பெரியதொரு நண்பர் பட்டாளமே இருந்தது. விடுதி அறையில் கூட ஆறு நண்பர்களுடன் அட்டகாசமாக வாழ்ந்தவன்.  இப்போது இங்கு அத்தை வீட்டில் இரண்டு தனி அறைகள் வெறுமையாக இருந்தபோதும் அதையெல்லாம் விடுத்து...
    அத்தியாயம் 06  மனோவிற்குப் பெரிதும் ஆச்சரியமாக இருந்தது. தனுஜாவுக்கு திருமணம் முடிந்து இரண்டாவது பிள்ளை வர இருக்கும் நிலை, தர்ஷனுக்குத் திருமணமாக உள்ளது இவர்கள் வயது ஷிவன்யாவிற்குத் திருமணம் ஆகவில்லையா!  "ஏன் கல்யாணம் செய்யலை?" வியப்போடு தர்ஷனை நோக்கி வினவ, "மனோ" கண்டித்தான்.  "இல்லைடா நம்ம மலருக்கே முறைப்பையன்னு நீ இருந்தும் இன்னும் ஏன் கல்யாணம் ஆகலைன்னு சொந்தத்துல சோசைட்டில...
    அத்தியாயம் 05 புதிய விடியலில் புத்துணர்ச்சியோடு வேலைக்கு வந்திருந்தான் மனோகர். "ஹாய் சேச்சி வந்தாச்சா ஓ பேபி?" எனக் கேலியாக கேட்க, யாரைக் கேட்கிறான்? எனப் புரியாது முழித்தார் மாதவி. அதன் பின்பே ஸ்டைலாக தலை கோதி நடித்துக் காட்ட, அது ஷிவன்யா எனப் புரிபட, சிரிப்புடனே தலையாட்டினார். ஷிவன்யா காலை எட்டுமணிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்குதான் வீடு...
    குழந்தை நன்றாக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க, சோஃபாவில் படுக்க வைத்தவள், தன்னிடம் இருக்கும் மிருதுவான வெள்ளை நிற பஞ்சுத் துணியில் குழந்தையைச் சுற்றத் தொடங்கினாள் ஷிவி.  "என்னடா இது? பேபியை துணி மூட்டையை மாதிரி கட்டுறா? சின்ன குழந்தை பாவம் இல்லையா?" பதறிய மனோ அருகே இருந்த சாஹரின் காதில் முணுமுணுத்தான்.  “ப்ரோ இது ஒன்னும் தப்பு...
    அத்தியாயம் 04 செவ்வரி உதடுகள் துளித் துளியாக கசந்த காஃபியை உள்ளிழுக்க, தொண்டை வழி இறங்கிய இதமான இளஞ்சூடு நெஞ்சத்தின் சூட்டைத் தணிக்க, மெல்ல உடல் தளர்ந்தாள். மூளையின் ஒவ்வொரு செல்லிலும் சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறந்தது. “சாஹர், ஜெனி” உரத்த குரலில் ஓங்கி அழைக்க, அடுத்த நொடி, மந்திரவாதியின் அழைப்பிற்கு வரும் பூதம் போல இருவரும்...
    அத்தியாயம் 03 கதிரேசன் ஊரை விட்டு விரட்டியதால் மட்டும் தலையசைத்து வந்து விடவில்லை மனோகர். அப்படியொன்றும் இவன் தந்தை கிழித்த கோட்டை தாண்டாத தனயனுமில்லை. இவனுக்கு இவன் கேமராவைச் சரி செய்ய வேண்டி முக்கிய தேவை இருந்தது. ஆகையால் தான் உற்சாகமாக ஊரை விட்டு வந்துவிட்டான்.  இப்போதோ அது முடியாது என்றான பின், புதிதாக ஒன்றை வாங்கும் திட்டம்...
    சட்டென விளையாட்டைக் கைவிட்டு, தர்ஷனுக்கு அழைத்தபடி எழுந்து சென்றான். வேலையின் பரபரப்பிற்கு மத்தியில் தர்ஷன் அழைப்பை எடுத்ததுமே, “உன் ஃப்ரண்ட் ஷிவா ஷிவான்னு சொன்னியே அது பொண்ணுன்னு ஏம்லே சொல்லலை?” காய்ந்தான். “டேய் அவ பெயர் ஷிவன்யா! நாங்க ஷிவான்னு தான் கூப்பிடுவோம்” மறுமுனையில் தர்ஷன் பெயர்க் காரணம் கூறிக்கொண்டிருக்க, பொறுமை இழந்திருந்த மனோ, “நல்லா வாயில...
    அத்தியாயம் 02  மாநகரின் காலை நேரப் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் இருந்தது மனோவின் அத்தை வீடு.  அத்தை காயத்ரி தலைமை தபால் துறையில் அரசு வேலையில் இருக்க, மாமா செந்தில்நாதன் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருக்கிறார்.  செந்தில்நாதனும் இவர்களுக்கு நெருங்கிய சொந்தம். ஆகையால் மனைவியின் உறவுகள் தன் உறவுகள் என்ற வேறுபாடெல்லாம் இவர்கள் வீட்டிலில்லை. மேல்தட்டு வர்க்கம் இருக்கும் லக்ஸூரி...
    குவியமிடும் நேசம் - மித்ரா அத்தியாயம் 01  பறந்து விரிந்த எல்லையில்லாத வானத்தில், ராஜ ராசாளியாக வலம் வந்தவனின் சிறகுகளைக் கட்டிச் சுருட்டி, சிறை வைத்து விட்டார் தந்தை. அனல் பெருமூச்சோடு தலை கவிழ, குனிந்து நின்றிருந்தான் மனோகர். கண்ணீர் தேங்கிய கண்களின் பார்வை மங்கலானது, காலுக்குக் கீழே உடைந்து பல துண்டுகளாக கிடந்தது சிறிய புகைப்படக்கருவி. இந்த...
    error: Content is protected !!