Advertisement

கூட்டுக்குடும்பத்தில் உறவுகளின் கதகதப்பிலே வளர்ந்து விட்ட 

மனோவால் தனிமை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

இவனுக்கும் கல்லூரிக்காலம் விடுதி வாசம்தான். ஆனாலும் அப்போதும் இவனைச் சுற்றி பெரியதொரு நண்பர் பட்டாளமே இருந்தது. விடுதி அறையில் கூட ஆறு நண்பர்களுடன் அட்டகாசமாக வாழ்ந்தவன். 

இப்போது இங்கு அத்தை வீட்டில் இரண்டு தனி அறைகள் வெறுமையாக இருந்தபோதும் அதையெல்லாம் விடுத்து தர்ஷன் அறையில் தஞ்சமடைந்துள்ளான். மலருக்கும் தர்க்ஷனுக்கும் இடையில் கரடியாக இருப்போம் என்று அறிந்தும் கண்டுகொள்ளவில்லை.  

மனோகரின் வாழ்க்கை வரலாற்றில் சுற்றி மனிதர்களே இல்லாத தனிமை என்பது எங்குமில்லை. தனிமை என்பதை ஒருநொடி யோசித்தாலும் மூச்சடைக்கும் உணர்வுதான்.

ஒருமணி நேரப் பேருந்து பயணம் என்றாலும் பக்கத்து இருக்கையில் இருப்பவர்களோடு நட்பை வளர்த்து இருப்பான்.  

மனித இனமே அப்படித்தானே? இன்னும் இனக்குழுவாக வாழும் நாகரீக ஜீவராசிகள் தானே நாம்

சரியான தூக்கமில்லாது அதிகாலையிலே எழுந்து கொண்டதால், விரைவாகக் கிளம்பி ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டான் மனோ.  

மாதவி கூட இன்னும் வந்திருக்கவில்லை. ஸ்டுடியோ திறந்திருப்பதால் எப்படியும் ஷிவன்யா இருப்பாள் என்ற எண்ணத்திலே உள்ளே வந்தான். 

உண்மையில் நேற்று அடைந்த ஆச்சரியம் அகத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட இன்னும் குறையவில்லை.

தனி ஒரு பெண்ணாய் தொழில் தொடங்கி, உழைத்து, உயர்ந்து சிம்மாசனத்தில் அல்லவா வீற்றிருக்கிறாள்! 

இந்த இடத்தை அடைவதற்கு எத்தனை இடையூறுகளை இன்னல்களைத் தாண்டி வந்திருப்பாள்? அவள் துணிச்சலையும் தைரியத்தையும்  மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. 

சொந்தமாக வீடு, கார், ஸ்டுடியோ, நவீன புகைப்படக் கருவிகள் என அனைத்தும் அவள் கடின உழைப்பின் அடையாளங்களாகக் கண் முன் நிற்கின்றனவே!  

தான் என்ன சொந்தமாக ஒரு அடிப்படை வசதிகளைக் கொண்ட சாதாரண புகைப்படக்கருவியைக் கூட வாங்க இயலாது இருக்கிறேன்?’ காரணமின்றி அவளோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கவே கீழாக உணர்ந்தான். 

உள்ளே வந்ததுமே ஷிவியின் அறை நோக்கி விழிகள் அலைபாய அங்கோ அவளில்லை. எங்கே அவள் என்ற யோசனையில் இருக்க, இவனுக்குப் பின்புறம் கேட்டது, “ம்கும்தொண்டையைச் செருமி அழைக்கும் மென்குரல்.  

சட்டெனத் திரும்ப, மேக்கப் அறையின் வாசலில் கையில் புதிதாக வாங்கியிருக்கும் நவீன கேமராவோடு ஷிவி நின்றிருந்தாள். 

‘சமூகம் பெரிய இடம் போல’ மனதில் நினைத்தபடி கீழ் உதட்டைப் பிதுக்கி, புருவம் உயர்த்தினான்.

அவளுக்கு வழி விடாது பாதையை மறித்தபடி, நிற்பவனைச் சுடர்விழியால் சுட்டிக் காட்டினாள் சுந்தரி.  

அப்போதே உணர்ந்து வழி விட்டவன், “குட் மார்னிங் மேம்என்றான்.

பளிச்சென்று மின்னும் புன்னகை முகத்தையும் புதிதாக மலர்ந்திருக்கும் மரியாதையையும் சரியாக அடையாளம் கண்டுகொண்டாள் ஷிவி. 

எப்போதும் அலட்சியமாகச் செல்பவன் என்றும் இல்லாத திருநாளாக இன்று காலை வணக்கம் கூறுவது அதிசயமாகத் தெரிந்தது.  

ஏன் இந்த திடீர் மாற்றம்?’ யோசனை உதித்த போதும் புறம் தள்ளியவள் வழக்கமான தலையசைப்போடு தாண்டிச் சென்றாள். 

இது, இந்த இறுக்கம் தானே இவளிடத்தில் பிடிக்கவில்லை. சிறு சிரிப்பிற்கு ஏன் கஞ்சமோ?’ கனல் மூச்சோடு பற்களைக் கடித்தான்.

மீட்டிங்கென அனைவரையும் அழைத்திருந்தாள் ஷிவி. எடிட்டிங் அறையில் மற்ற மூவரும் அமர்ந்திருக்க, உள்ளே வந்தாள் ஷிவி.  

அந்த வார இறுதியிலும் அடுத்த வாரத்திலும் இரண்டு நாட்கள்  முக்கியமான ஃபோட்டோசூட் இருந்தது. 

அதிதிதேவ் பிரபலமான  பின்னணிப் பாடகி. அவள் குடும்பத்தில் அனைவருமே  சினிமாத்துறைச் சார்ந்த பிரபலங்கள் தான்.  

அதிதியின் மகளிற்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் நெருங்கியுள்ளது. அதற்கு முன் நிகழ்த்த வேண்டிய ஃபோட்டோ சூட்களுக்காக கலந்தாலோசிக்க அழைத்திருந்தாள் ஷிவி. 

பிரோஜக்டரில் அதுவரையிலும் எடுத்திருந்த புகைப்படங்கள் அனைத்தையும் காட்டி, இது தவிரப் புதிதாக எந்த மாதிரியான புகைப்படங்களை எடுக்கலாம் என்றாள். 

சாஹரும் ஜெனியும் ஆளுக்கு ஒரு யோசனை கூற, அதில் கேக் ஸ்மாஷ் (Cake smash) மற்றும் முதல் வயதைக் குறிக்கும் ஒன்று என்ற நம்பர் அட்டை, பலூன்களோடு எடுக்கும் புகைப்படங்கள் நிச்சயம் இருக்க வேண்டுமெனத் தேர்வு செய்து கொண்டாள். 

பேமிலி சூட்க்கு எந்த மாதிரி?எனக் கேட்டு மூவரின் முகத்தையும் உற்று நோக்கினாள்.

எப்போதும் போல மனோகர் இலகுவாக அமர்ந்திருக்க, “மனோ ஆர் யூ கெட்டிங் மீ?” மென்குரலில் அதட்டிக் கேட்டாள். 

ம்ம்தலையைத்தவன் பிடரியை கோதிக் கொண்டான். 

‘தான் கூறினால் இவள் என்ன கேட்கவா போகிறாள்?என்ற அலட்சியத்தில் இருந்தான். 

உன்னை இங்க வேடிக்கை பார்க்கக் கூப்பிடலை ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு இல்லை எழுந்து போய் வேலையைப் பார்என்றாள் காட்டமாக. 

முகம் இறுக, மெல்லியதாக மூச்சை விட்டுக் கொண்டவள், “ஏங்க எல்லா ஃபோட்டோஸூம் என்னவோ ஃபாரின் பேபி மாதிரி அவங்க ஸ்டைல்லையே எடுத்து வைச்சிருக்கீங்க? ஒன்னாவது நம்ம ட்ரெடிஸ்னல் லுக்ல செய்திருக்கலாம்மனதில் தோன்றியதை, ஷிவியின் விழி பார்த்து நேருக்கு நேராக கூறினான். 

யோசனை கேட்டால் இவள் செய்து முடிந்திருந்த சூட்களில் குறை கூற உள்ளே நெருப்பின்றி புகைந்தது.

அதே நேரம் ஷிவியின் உதடுகள் என்னவோ ஓசையின்றி முணுமுணுக்க, ‘ஊர் நாட்டான்இதழ் அசைவுகளை உற்றுப்பார்த்து வாசித்து விட்டான். 

முகம் இளக, ரசித்து சிரித்தபடியே எழுந்த மனோகர் அவள் அனுமதியின்றி வெளியே சென்றான். 

சாஹர், ஜெனி அமர்ந்திருக்க ஒருநொடி கண்மூடி யோசித்தாள் ஷிவன்யா.

மனோ கூறிய குற்றச்சாட்டை யோசிக்க, அதில் அவன் கூறிச்சென்ற யோசனையும் கண்டுகொண்டாள்.

கண் திறந்தவள், மற்ற இருவரையும் கிளம்பும்படி கூறினாள்.

பின் அதிதிக்கு அழைத்து மனோவின் யோசனையை முன் வைத்து அவளின் விருப்பம் வினவினாள். ட்ரெடிஸ்னல் வேர் தன் கணவருக்கு பிடிக்கும் என்றவள் உற்சாகமாக சம்மதம் கூறினாள்.

உடை பற்றிய மற்ற விவரங்களுக்கு எல்லாம் தங்களின் உடை வடிவமைப்பாளர் தொடர்பு கொள்ளுவார்  என்றும் உரைத்தாள். நிறைந்த நிம்மதியுடன் அழைப்பைத் துண்டித்தாள் ஷிவி.

மனோ வெளியில் வரவுமே அவனைத் தொடர்ந்து பின்னே வந்தனர் ஜெனியும் சாஹரும். 

தனக்கு ஒரு கோப்பை காஃபியை எடுத்தவன் பின் வருபவர்களை கண்டிவிட்டு அவர்களுக்கும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொடுத்தான். 

நன்றியோடு வாங்கிக் கொண்ட ஜெனி, “ஏன் இந்த பனிப்போர்? என்ன மனோ உனக்கு பாஸோட பிரச்சனை?” புரியாது கேட்டாள். 

ஆமாம் அவளோடு என்ன பிரச்சனை?’ மனோ சிந்தனையில் மனதைக் குடைந்தான். 

தனியாகப் பிரச்சனை எனக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. தங்களோடு கலந்து சிரித்து, பேசித் தட்டிக்கொடுத்து வேலைவாங்காது, இதென்ன அதிகாரம்? ஏன் இந்த இறுக்கம்? அவள் சிரிக்காததுதான் இங்கே இவனுக்குப் பிரச்சனை. 

ஜெனி பனிப்போர் இல்லைங்க, பணிப்போர் நடக்குதுநக்கலோடு நடப்பதை விவரித்தான் சாஹர். 

ஹேய் மனோ, எனக்குத் தெரிஞ்சி ஷிவி உனக்கு டெஸ்டதான் வைக்கிறாங்க பாஸ் ஆகிடு மேன். அவங்க குறை சொல்லாதபடி கிராஃப்ட் வொர்க் எல்லாம் முடிச்சிட்டு என்னோட டெக்ஸ்க்கு வந்திடுஃபோட்டோஷாப்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன். 

அடிப்படையில இருந்து கற்றுத்தராங்கன்னா பொறுமையா எல்லாமே கத்துக்கோ மனோ, இட்’ஸ் யூஸ்புல் ஃபார் யூ” 

ஆமாம் ப்ரோ இதுவரைக்கும் மேம்கிட்ட ஒர்க் கத்துகிட்டு  வெளிய போய் மூனு பேர் வோன் ஸ்டுடியோ வைச்சு இருக்காங்க. ஒருத்தர் பெரிய சினிமா டைரக்டர்கிட்ட அசோசியட் ஆகி இருக்காங்க. இன்னொருத்தர் பிரபலமான நியூஸ் சேனல்ல ஃபோட்டோகிரபரா போயிருக்காங்கஎன எப்போதும் போல ஷிவியின் சாதனைகளைப் பட்டியலிட்டான் சாஹர். 

ஷிவியோடு பகையை வளர்த்துகாம அவங்களை இம்ப்ரெஸ் செய் மேன், கைக்கு கேமரா வரும் ஜெனியும் இறுதியாக கூறிவிட்டு, ஆறுதலாகத்  தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

ஷிவி எடிட்டிங் அறையில் இருந்து படாரெனக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, நிமிர்ந்த மனோவின் பார்வை அவள் விழியோடு மோதியது. 

இவன் ஐடியாவை அதிதி ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில் ஷிவியின் விழிகளும் ஒருமுறை மனோவை தீண்டித் திரும்பியிருந்தது.

அவளின் அடர் கருவிழிகள் எப்போதும் இறுக்கம் தளர்ந்து ஒரு பாராட்டை பரிசளிப்பதில்லை.

அவள் சென்ற பின்பும் அவ்விடத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.

இவளை இம்ப்ரெஸ் செய்வதா?’ என்னவோ மலையை பிரட்டிப் போடுவது போல் மலைப்பாக உணர்ந்தான். 

பத்துநாள் குழந்தையில் இருந்து பல்லுப்போன பாட்டி வரையிலும் கவர இயலும். ஆனால் இவளை கவர முடியும் என்ற நம்பிக்கை இல்லை’

உள் மனமோ, ‘முயற்சி செய்துதான் பார் என்றும் தூண்டி விட்டது.

மறுப்பாகத் தலை அசைத்தவன் அழுத்தி தலைக் கோதினான். நினைத்து பார்க்க வேம்பாகக் கசந்தது.

கரங்களுக்கு கேமராவரவில்லை என்றாலும் பரவாயில்லை. வேலை பறி போனாலும் கவலையில்லை. ஆனால் இந்த முயற்சி வேண்டவே வேண்டாமென்று ஏனோ தோன்ற, உறுதியாக இருந்தான்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் ஊரில் இருக்கும் நண்பர்களுடன் சிறிது நேரம் அரட்டை அடித்தான்.

பின் அறையில் இருந்து வெளியே வர, வாசலில் தர்ஷன், அலுவலகத்தில் இருந்து வந்திருந்தான். இரண்டு கையிலும் இரண்டு பார்சல்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நேற்று ஷிவியைப் பற்றிய பேச்சுவார்த்தை வரவும் பேசாமல் சென்றதுதான் முழுதாக ஒருநாள் முடிந்திருந்தது.

இதற்கு மேல் ஒரே வீட்டில் பேசாமல் கோபத்தை இழுத்துப் பிடிக்க இருவராலும் முடியவில்லை.

சாப்பிட வா அழைத்த தர்ஷன் உணவு மேசையில் அனைத்தையும் வைத்தான்.

அவனாக முதலில் பேசாவிட்டாலும் மனோவாகப் பேசியிருப்பான்.

மனோ பெரியவர்களை அழைத்து வர, தர்ஷன் உடைமாற்றி வர அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.

அனைத்தும் மனோவிற்குப் பிடித்த உணவு பதார்த்தங்களே நிறைந்து இருக்க, மனோ இதழோரம் இளநகையோடு தர்ஷனின் தோளில் இடித்தான்.

தனக்காகத் தன்னைச் சமாதானம் செய்யத்தான் எனப் புரிந்ததில் பூத்தது புன்னகை.

என்ன?” அதட்டிக் கேட்ட தர்ஷன், “மூடிட்டு சாப்பிடுஎன்றான்.

மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு, “கோபிச்சிக்கிட்டு போன நீயே வந்து என்னை சமாதானம் செய்ற பார்த்தியா நீ தெய்வம்யா! இதுக்காவே மாமா எங்க அக்கா சொர்ணாக்காகிட்ட இருந்து உன்னைக் காப்பாத்துறேன்எனச் சீண்டிவிட்டு, தர்ஷனிடமிருந்து இரண்டு அடிகளைத் திருப்தியுடன் பரிசாக வாங்கிக் கொண்டான் மனோகர்.

Advertisement