குவியமிடும் நேசம்
அத்தியாயம் 17
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி விடாது இசைக்க, சோர்வுடன் பதறி வந்த ஷிவன்யா கதவைத் திறந்தாள்.
ஷிவி வந்து கதவைத் திறக்க, வாசலில் மனோகர். இந்த நேரம் அதுவும் இவனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“என்ன விஷயம்?” கோபமுகம் காட்டாது சோர்ந்துபோய் வினவ, இவன் இதழ்களில் இளநகை அரும்பியது. அதே நேரம் மனோகரின் விழிகள் ஷிவன்யாவை...
அத்தியாயம் 18
கருவிழிகள் சிவக்க, கண்கள் இடுக்க மனோவை பார்த்தாள். தன்னை சுற்றியிருக்கும் யாருக்கும் தன் பெற்றவர்களைப் பற்றிய உண்மைத் தெரியாது. தர்ஷன், தனு கூட ஷிவிக்கு அன்னை, தந்தை இருவரும் இல்லை என்று தான் நினைத்திருந்தனர்.
“என்ன சொன்ன நீ? சொல்லு” அதட்டிக் கேட்டாள். மனோ சிறிதும் அசரவில்லை. அவளைப் பற்றிய அனைத்தும் அறிந்தவனாக தான்...
அத்தியாயம் 20
திருநெல்வேலியில் மிகப் பெரிய திருமணமண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது தர்ஷன், மலரின் திருமணம். சொந்த பந்தத்தோடு ஊரே கூடி வர மண்டபம் நிறைந்து காணப்பட்டது. தொழில் வகை நண்பர்கள், அரசியல் பிரபலங்கள் நண்பர்கள் கூட்டமென அலைமோதிக் குவிந்து இருந்தது மண்டபம்.
வெகு எளிமையான பச்சை நிறத்தில் சிவப்பு பாடர் கொண்ட பட்டில் தேவதையாக இருந்தாள்...
அத்தியாயம் 16
ஷிவன்யாவின் தந்தை சிவராம் குடும்பத்தின் மூத்தமகன். இளம் வயதிலையே தாய் தந்தையை இழந்தவர். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் என மூவரையும் வளர்க்கும் பொறுப்பு சிறு வயதிலே அவரிடம் வந்து சேர்ந்தது. கடுமையான உழைப்பாளி சிவராம். சிறிதாக தொடங்கிய தொழிலில் தன் முழுநேர உழைப்பைக் கொட்டி, கடுமையாக உழைத்தார். அவரின் உழைப்பிற்கான பலனும்...
அத்தியாயம் 09
மனோகருக்கு அன்றும் ஷிவான்யாவால் சிவராத்திரியாகிப் போனது.
மாலை வீட்டிற்குள் வந்ததும் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டான்.
அவளுக்கு மூச்சு கொடுத்ததில் இருந்து இவன் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் சுயநினைவில் இல்லை, ஆனால் இவன் பரிபூரணமாகத் தெளிவுடன் இருந்தான் தானே? அவள் இயல்பாக நொடியில் கடந்து சென்றுவிட, மனோவால் உண்மையில் முடியவில்லை.
அவள் பழைய பத்திரகாளியாகவே...
அத்தியாயம் 05
புதிய விடியலில் புத்துணர்ச்சியோடு வேலைக்கு வந்திருந்தான் மனோகர்.
"ஹாய் சேச்சி வந்தாச்சா ஓ பேபி?" எனக் கேலியாக கேட்க, யாரைக் கேட்கிறான்? எனப் புரியாது முழித்தார் மாதவி.
அதன் பின்பே ஸ்டைலாக தலை கோதி நடித்துக் காட்ட, அது ஷிவன்யா எனப் புரிபட, சிரிப்புடனே தலையாட்டினார்.
ஷிவன்யா காலை எட்டுமணிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்குதான் வீடு...
கிட்டத்தட்ட நாற்பது நிமிட பயணத்திற்குப் பின் ஒரு தேவாலயத்தின் முன் வந்து இறங்கினர். மனோவின் முகம் அப்படியே காற்றுப் போன பலூனாகிப் போனது. பப், பார்டி, ஹோட்டல், திரையரங்கம் எங்கவாது அழைத்துச் செல்வாள் என கொண்டாட்டமான மனநிலையில் இருக்க, மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாள் ஷிவி.
கொச்சியில் இருக்கும் பழமையான புனித பிரான்சிஸ் தேவாலையத்திற்கு...
கூட்டுக்குடும்பத்தில் உறவுகளின் கதகதப்பிலே வளர்ந்து விட்ட
மனோவால் தனிமை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இவனுக்கும் கல்லூரிக்காலம் விடுதி வாசம்தான். ஆனாலும் அப்போதும் இவனைச் சுற்றி பெரியதொரு நண்பர் பட்டாளமே இருந்தது. விடுதி அறையில் கூட ஆறு நண்பர்களுடன் அட்டகாசமாக வாழ்ந்தவன்.
இப்போது இங்கு அத்தை வீட்டில் இரண்டு தனி அறைகள் வெறுமையாக இருந்தபோதும் அதையெல்லாம் விடுத்து...
அத்தியாயம் 14
மனோகரின் கோபம் ஆத்திரம் எல்லாம் கையில் இருக்கும் ஸ்டேரிங்கில் காட்டினான்.
அத்தனை வேகம், அலுங்கி குலுங்கிய போதும், அசராது அழுத்தமுடன் அமர்ந்திருந்தாள் ஷிவி.
'கொஞ்சமும் பயமில்லை' மனத்தில் நினைத்தவன் உஷ்ணப் பெருமூச்சு விட்டான்.
இவன் பக்கம் அவள் பார்வை கூடத் திரும்பவில்லை. அவள் அலட்சியம் மனோவை மேலும் மேலும் சீண்டிப் பார்த்தது.
அவன் கோபம் அனைத்தையும் அவன் கரங்களில்...
சட்டென விளையாட்டைக் கைவிட்டு, தர்ஷனுக்கு அழைத்தபடி எழுந்து சென்றான்.
வேலையின் பரபரப்பிற்கு மத்தியில் தர்ஷன் அழைப்பை எடுத்ததுமே, “உன் ஃப்ரண்ட் ஷிவா ஷிவான்னு சொன்னியே அது பொண்ணுன்னு ஏம்லே சொல்லலை?” காய்ந்தான்.
“டேய் அவ பெயர் ஷிவன்யா! நாங்க ஷிவான்னு தான் கூப்பிடுவோம்” மறுமுனையில் தர்ஷன் பெயர்க் காரணம் கூறிக்கொண்டிருக்க, பொறுமை இழந்திருந்த மனோ, “நல்லா வாயில...
அத்தியாயம் 12
அன்றைய இரவு மனோகரை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்ட தர்ஷன் மீண்டும் விசாரித்தான்.
ஷிவன்யாவிடம் தன்னைப் புரிய வைக்க முடியாத இயலாமையில் வந்திருந்த மனோகரை தர்ஷனின் கேள்விகள் உலுக்கி எடுக்க, அப்படியே சோர்ந்து போய் அவன் தோளில் சாய்ந்து கொண்டான்.
இதற்கு முன் இருவருக்கும் இடையிலிருந்த ஒட்டல், உரசல் எதையும் தெரிவிக்காது, கொச்சியில் நடந்த நிகழ்வை...
அத்தியாயம் 19
இருளில் மூழ்கியிருக்கும் தர்ஷனின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷிவன்யா. ஒரு யூகமாக அவன் அறை நோக்கிச் சென்றவள் அறைக்குள் நுழைய, திடீரென ஒரு வலிய கரம் கதவின் பின் இருந்து நீண்டு அவளின் கழுத்தை வளைத்து இறுக்கிப் பிடித்து நெரித்தது.
சற்றும் எதிர்பாராத ஷிவி திடுக்கிட்டுப் பயந்தே போனாள். தனக்கு பழக்கமான வாசனையை நாசி நுகர்ந்த...
அத்தியாயம் 04
செவ்வரி உதடுகள் துளித் துளியாக கசந்த காஃபியை உள்ளிழுக்க, தொண்டை வழி இறங்கிய இதமான இளஞ்சூடு நெஞ்சத்தின் சூட்டைத் தணிக்க, மெல்ல உடல் தளர்ந்தாள். மூளையின் ஒவ்வொரு செல்லிலும் சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறந்தது.
“சாஹர், ஜெனி” உரத்த குரலில் ஓங்கி அழைக்க, அடுத்த நொடி, மந்திரவாதியின் அழைப்பிற்கு வரும் பூதம் போல இருவரும்...
குழந்தை நன்றாக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க, சோஃபாவில் படுக்க வைத்தவள், தன்னிடம் இருக்கும் மிருதுவான வெள்ளை நிற பஞ்சுத் துணியில் குழந்தையைச் சுற்றத் தொடங்கினாள் ஷிவி.
"என்னடா இது? பேபியை துணி மூட்டையை மாதிரி கட்டுறா? சின்ன குழந்தை பாவம் இல்லையா?" பதறிய மனோ அருகே இருந்த சாஹரின் காதில் முணுமுணுத்தான்.
“ப்ரோ இது ஒன்னும் தப்பு...
அத்தியாயம் 13
ஷிவன்யாவின் அறை தாண்டிச் செல்லும் போதே ஒரு பார்வை வீசிச் சென்றான் மனோகர்.நெற்றியோர சுருள் முடிகளுக்குள் சுட்டுவிரலை விட்டு சுழற்றி விரித்து விளையாட்டு கொண்டே இருந்தாள். பார்வையும் சிந்தனையும் தீவிரமாக எதிரே இருக்கும் கணினி திரையில் பாய்ந்து இருந்தது.
என்ன வேலையாக இருந்தாலும் இப்பொதெல்லாம் மனோவின் பார்வை அவள் மீது இருந்து கொண்டே இருக்கும்....
குவியமிடும் நேசம் - மித்ரா
அத்தியாயம் 01
பறந்து விரிந்த எல்லையில்லாத வானத்தில், ராஜ ராசாளியாக வலம் வந்தவனின் சிறகுகளைக் கட்டிச் சுருட்டி, சிறை வைத்து விட்டார் தந்தை.
அனல் பெருமூச்சோடு தலை கவிழ, குனிந்து நின்றிருந்தான் மனோகர். கண்ணீர் தேங்கிய கண்களின் பார்வை மங்கலானது, காலுக்குக் கீழே உடைந்து பல துண்டுகளாக கிடந்தது சிறிய புகைப்படக்கருவி.
இந்த...
அத்தியாயம் 15
காதலும் அவளை காணும் ஆசையும் புதுவெள்ளமாகப் பொங்கி வழிய, உற்சாகமாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் மனோகர். அனைவரும் இருக்க, அவ்விடம் முழுவதும் சுற்றி வந்துவிட்ட, மனோவின் கழுகுக் கண்களுக்கு காதலி காட்சியாகவில்லை.
மெல்லச் சென்று மாதவியிடம் விசாரித்துப் பார்க்க, ஷிவி அன்று விடுமுறை என்ற சேதியை தவிர, வேறு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அன்றைய நாள்...
அத்தியாயம் 10
கருப்பு நிறத்தில் ஜீன், ஊதா, வெள்ளை வர்ணங்கள் நிறைந்த டீசர்ட், கண்களை மறைத்தபடி கருப்புக் கண்ணாடி, கொஞ்சமாக வளர்ந்து தாடை, கன்னங்களை நிறைத்திருக்கும் தாடி என கையில் ஒரு பெட்டியை இழுத்தபடி படு அசத்தலாக வந்து நின்றபவனின் வரவு வல்வரவு தான் ஷிவன்யாவிற்கு.
மலர்ந்த முகத்துடன் அருகில் வந்த மனோகரை நோக்கி, "நீ...
அத்தியாயம் 03
கதிரேசன் ஊரை விட்டு விரட்டியதால் மட்டும் தலையசைத்து வந்து விடவில்லை மனோகர். அப்படியொன்றும் இவன் தந்தை கிழித்த கோட்டை தாண்டாத தனயனுமில்லை.
இவனுக்கு இவன் கேமராவைச் சரி செய்ய வேண்டி முக்கிய தேவை இருந்தது. ஆகையால் தான் உற்சாகமாக ஊரை விட்டு வந்துவிட்டான்.
இப்போதோ அது முடியாது என்றான பின், புதிதாக ஒன்றை வாங்கும் திட்டம்...
அத்தியாயம் 13
பளிச்சென்று மின் விளக்குகளின் ஒளி கண்ணாடி அறைகள் எங்கும் நிறைந்து இரவையும் பகலாக்கி இருந்தது.
பிரிண்டிங் லேப் சென்ற மனோ சரியாக ஒருமணி நேரத்தில் வேலையை முடித்து திரும்பி வந்திருந்தான். அனைத்து அறைகளிலும் மின் விளக்குகள் ஒளிர, ஷிவியைத் தேடிய விழிகளோடு அவளறைக்குள் நுழைத்தான்.
மெத்தென்ற பஞ்சு சோஃபாவில் களைத்துப் போய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்...