என் இதயாளே இதழினியே
“வேற யாருடா எல்லாம் என் தங்கச்சி தான்”
“அதான் யாருடா??”
“ஏன்டா உனக்கு கல்யாணம் ஆனா எல்லாம் மறந்திடுமா. உன் பொண்டாட்டி தானே என்னோட தங்கச்சி, இன்ஸ்டன்ட் தங்கச்சி”
“இது எப்போடா நடந்துச்சு?? அந்தளவுக்கு ஆகிப்போச்சா...”
“அதெல்லாம் அப்படித்தான்...” என்றவன் “ஹலோ சொல்லும்மா” என்றான் பாசமாக.
‘என்னைய விட்டு இவனுக்கு எதுக்கு போன் பண்ணுறா’ என்று தான் பார்த்தான் விதுரன். அவனுக்கு...
16
விதுரன் வேலையாக வெளியூர் செல்லும் தருணம் தவிர்த்து எப்போதும் சனி, ஞாயிறு வீட்டிற்கு வந்துவிடுவான். அந்த வாரம் இடையில் தான் விதுரன் அலுவலகம் செல்லவாரம்பித்திருந்ததால் அதையடுத்து வந்த சனி, ஞாயிறு அவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.
மகளைப் பார்க்கவென இதழினியின் குடும்பம் தான் வந்திருந்தது அன்று. “ஹேய் மகிழ் எப்படிடி இருக்க??”
“ம்மா பாருங்கம்மா இவளை புதன்கிழமை தானேம்மா...
15
“எனக்கு எதுக்கு அத்தை நன்றி எல்லாம்??”
“நான் சொன்னதுனால எல்லாம் அவர் பேசலை அத்தை. அவருக்கா தோணியிருக்கும் அதான் பேசியிருக்கார்...”
“நான் சொன்னதும் பேசணும்ன்னு நினைச்சிருந்தா நான் சொன்ன அன்னைக்கே பேசியிருப்பாரு. இதுல நான் எதுவுமே செய்யலை அத்தை. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போலத்தான் இது...”
“நீ சொல்றது உனக்கே ஓவரா இல்லையா...” என்றார் அவர்.
“கொஞ்சம்...
14
“நீங்க அப்போ என்கிட்ட போன்ல பேசினப்பவும் ஆஹோ ஓஹோன்னு பேசிடலை தான். ஆனா நீங்களா ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசவாச்சும் செஞ்சீங்க... இப்போ அது சுத்தமா இல்லை...”
“ஏதோ கடமையா பீல் பண்றீங்களோன்னு தோணுது. ஓகே எதையும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்கிட்ட இயல்பா...
13
“உள்ள வாங்க” என்றுவிட்டு அவள் தன் கணவனை அழைத்துக்கொண்டு அவளும் மகிழினியும் இருந்த அறைக்குள் நுழைய “ஏய் இதழ் எப்போ வந்தே நான் கவனிக்கலை. ஹாய் மாம்ஸ்” என்றாள் மகிழினி.
“நீ இங்க என்னடி பண்றே??”
“புக்ஸ் எடுக்க வந்தேன் இதழ் எடுத்திட்டேன் கிளம்பறேன்” என்றவள் வெளியே சென்றிருந்தாள்.
“இந்த ரூம் அவளோடதா”
“நானும் அவளும் ஒண்ணா தான் யூஸ்...
12
மறுநாள் விதுரன் வீட்டினர் இதழினியின் வீட்டிற்கு மறுவீட்டு விருந்திற்கு சென்றனர். காலையிலேயே யாழினி தன் கணவனுடன் அழைக்க வந்திருந்தாள் அவர்களை.
இதழினியின் வீட்டின் முன் பந்தல் போடப்பட்டிருந்தது. விருந்திற்கு விதவிதமான உணவுகள் ஆட்களை வைத்து செய்திருந்தனர்.
விதுரன் வீட்டினர் காலை உணவு முடிந்து தான் கிளம்பியிருந்தனர். பதினோரு மணி வாக்கில் அவர்கள் வர வேணியும் வெங்கட்ராமனும் இன்னும்...
11
‘அவர் பேசலைன்னா என்ன நான் தான் பேசறேனே. அவரை பேச வைக்க முடியாதா என்னால இதுக்கு முன்னாடி பேசினாரு தானே...’
‘இந்த நிமிஷத்துல இருந்து ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் அனுபவிச்சு வாழப்போறேன். அவரோட இருக்கற அந்த தருணங்களை மறக்க முடியாததா மாத்திக்க போறேன்’ என்று அவளுக்குள் முடிவெடுத்த பிறகு மனதில் ஏறியிருந்த பாரம் விலகியிருந்தது.
தெளிவான முகத்துடன்...
10
நிச்சயம் முடிந்ததும் ரிசப்ஷன் வைத்திருந்தனர். சைலேஷ் விதுரனின் அருகிலேயே நின்றிருந்தான் அவனுக்கு துணையாய்.
விதுரன் மற்றவகளிடம் சிரித்தானே தவிர இதழினியிடம் கொஞ்சம் கூட சிரிப்பை காட்டவில்லை. ‘காட்டுங்க காட்டுங்க எல்லாருக்கும் ஈன்னு பல்லைக் காட்டுங்க யாரு வேணாம்ன்னு சொன்னது, கடைசில என்கிட்ட தானே நீங்க வரணும்’ என்ற பொருமல் தான் அவளுக்கு.
“விது...” என்று காதைக் கடித்தான்...
9
“அச்சோ போதும் விடுங்க” என்று அவள் வாய்விட்டு சொல்லிவிட “இப்போ உன்னை யாரும்மா பிடிச்சு வைச்சிருக்கா விடச்சொல்றே” என்றான் சைலேஷ்.
அவள் கண்திறந்து பார்க்க சைலேஷ் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னம்மா??”
“இல்லைண்ணா ஒண்ணுமில்லைண்ணா சாரிண்ணா” என்று அவள் பாட்டுக்கு உளறிக்கொட்டினாள்.
“ஹ்ம்ம்” என்று ஒரு பெருமூச்சுடன் அவன் திரும்பிக் கொண்டான். விதுரனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதழினியோ...
8
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??”
“எனக்கு அண்ணனா தான் தெரியுது”
“அய்யோ காலங்காத்தால என் உயிரை வாங்குறாலே” என்று வாய்விட்டு புலம்பினான் அவன்.
“அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தானே”
“அதுக்கென்ன இப்போ”
“உங்க வைப் பேரு பாரதி தானே”
“அதெப்படி உனக்கு தெரியும்”
“பேஸ்புக்ல தான் பேமிலி போட்டோ போட்டு இருக்கீங்களே”
“தெரியாம போட்டுட்டேன்”
“அதுக்கு அப்புறம் கவலைப்படுங்க. உங்க வைப் யாருன்னு தெரியுமா”
“அவன்...
7
“நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் பேசறியா??”
“ஹ்ம்ம் புரிஞ்சு தான் பேசறேன்”
“அப்போ வேணாம்ன்னு ஏன் சொன்ன”
“அப்போ எனக்கு பயமா இருந்துச்சு”
“எதைப்பார்த்து”
“அவரோட வேலை”
“இப்போ மட்டும் பயமாயில்லையா”
“இருக்கு” என்று அவள் ஒளியாமல் சொல்ல திரும்பி அவள் முகம் பார்த்தான்.
“புரியலை...”
“இப்பவும் பயம் இருக்கு தான்...”
“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு, முதல்ல பிடிச்சிருக்குன்னு பேச்சு வார்த்தை ஆரம்பிச்சீங்க. கொஞ்ச நாள்...
6
“நான் ரெடி போகலாம்” என்றாள்.
“நிஜமா தான் சொல்றீங்களா??”
“நான் ஏன் விளையாட போறேன். எனக்கு வீட்டுக்கு போகணும், எங்கம்மாவை பார்க்கணும். அவங்ககிட்ட பேசி ரெண்டு நாளாச்சு…” என்றவள் வெகு சீரியசாக பேசுவது தெரிந்தது.
“என் போன் இருந்து பேசுங்க” என்றவன் போனை அவளிடம் கொடுத்தான்.
“தேங்க்ஸ் நான் என் தங்கச்சிக்கிட்ட பேசிட்டு தரேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.
“அம்மாகிட்ட...
5
“உங்க பிரண்ட்ஸ்க்கு லைன் போச்சா திரும்ப டிரை பண்ணீங்களா??”
“வை பை வேலை செய்யலையே” என்றாள்.
“போன் போகலையா??”
“சிக்னல் இல்லை...”
“இங்க வரும் போது அதெல்லாம் தெரியாதா உங்களுக்கு...”
அவள் தலை இல்லையென்பதாய் ஆட்ட விதுரன் குடித்து முடித்திருந்த காலி கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிச் சென்றான்.
திரும்பி வந்தவன் பேட்டரி ஏறி இருக்கிறதா என்று பார்த்து அவன் நண்பனுக்கு முயற்சி...
4
இயற்கை எழில் மிகுந்த மூணாரின் மலைப்பாதையில் மேலேறிக் கொண்டிருக்கின்றது இதழினியின் குழுவினர் சென்றுக் கொண்டிருந்த வண்டி.
சன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருந்தவள் பச்சைப்பசேலென்றிருந்த அவ்விடத்தை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.
பஞ்சு பொதிகளாய் பனி சூழ்ந்த மேகங்கள் மலைமகளின் மடி மீது தவழ்ந்து கொஞ்சி விளையாடி அங்குமிங்கும் ஓடி மறைந்துக் கொண்டிருந்தது பார்க்க கொள்ளையழகாய் இருந்தது அவளுக்கு.
இடையிடையே சிற்றருவி...
3
பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிய கற்பகத்தின் தங்கை மகள் பெண்ணிற்கு பூவைத்துவிட கிட்டத்தட்ட அந்த திருமணம் உறுதி செய்யப்பட்டது.
தை மாத இறுதியில் நிச்சயத்தை முடித்துவிட்டு மாசியில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று பேசினர்.
கிளம்பும் முன் விதுரனின் எண்ணை திருநாவுக்கரசு வெங்கட்ராமனிடம் கொடுத்துவிட்டு செல்ல நிறைவாய் இருந்தது பெண் வீட்டினருக்கு.
அவர்கள் சென்றதும் சந்துருவும் கிளம்பிவிட...
2
“விது” என்றழைத்தான் சைலேஷ்.
“சொல்லுடா” என்றவன் தன் நண்பனால் விது என்றழைக்கப்பட்ட விதுரன் நம் நாயகன்.
“அங்க என்ன பண்ணிட்டு இருக்க??”
“தமிழ்நாடு வெதர்மேன் பேஜ் பார்த்திட்டு இருக்கேன்”
“என்னவாம்...”
“சவுத் சைட் நல்ல மழை இருக்கும் போல. புயல் கூட இருக்குன்னு சொல்லியிருக்கார், மே பீ ஹெவி ரெயின் ஆல்சோ...”
“சரி...”
“என்ன சரி...”
“அதுக்கு நாம என்னடா பண்ணுறது...”
“இப்படி சொல்றதுக்கு எதுக்கு நீ...
1
மார்கழி முடிந்து தை மாதம் பிறந்து சில நாட்களே ஆகி இருந்தாலும் குளிர் இன்னும் விலகாதிருந்தது. குளிர் உடலை துளைக்க தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு காலைக் குறுக்கி படுத்திருந்தாள் நம் நாயகி இதழினி.
இன்னமும் இவளுக்கு திருப்பள்ளியெழுச்சி ஆரம்பித்திருக்கவில்லை அவள் அன்னை. அவர் முக்கிய பணியாய் ஆண்டாள் திருப்பாவை சொல்லிக் கொண்டு காலை...